Watch Video : போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான்போல் ஷஷாங்க் சிங் செய்த செயல்! வைரல் வீடியோ!

ஐ.பி.எல் சீசன் 17:

கடந்த மார்ச் 22-ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 42 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அந்தவகையில் இன்று (ஏப்ரல் 27) டெல்லியில் நடைபெற்று வரும் 43-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

கே.கே.ஆர் – பஞ்சாப் கிங்ஸ்:

முன்னதாக நேற்று அதாவது ஏப்ரல் 26-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிட கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 261 ரன்களை குவித்தது. பின்னர் 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

கலக்கிய ஷஷாங்க் சிங்:

இந்த போட்டியில் வெற்றியும் பெற்று டி20 போட்டிகளில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற பெருமையை பெற்றது பஞ்சாப் அணி. அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரன் சேஸில் ஷஷாங்க் சிங் முக்கிய பங்காற்றினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அவர் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் என மொத்தம் 68 ரன்களை குவித்தார்.

வைரல் வீடியோ:

இந்நிலையில்தான் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியை ட்ரெஸ்ஸிங் ரூமில் ஷஷாங்க் சிங் கொண்டாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கானின் பிரபலமான போஸ் ஒன்றை நடித்து காட்டி அசத்தி இருக்கிறார் ஷஷாங்க் சிங்.

🫲 Sssshhhh…. Shaaaaashaaaaa… Shashankkkkkk! 🫱#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi #TATAIPL2024 #KKRvPBKS | @shashank2191 pic.twitter.com/zk9kTOPZQr

— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2024

இது தொடர்பான வீடியோவை பஞ்சாப் கிங்ஸ் அணியும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது பெயர் குழப்பத்தால் ஷஷாங்க் சிங்கை எடுத்ததாக வெளிப்படையாக அறிவித்திருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் இரண்டு முக்கியமான போட்டிகளில் ஷஷாங்க் சிங் சிறப்பாக விளையாடி அனைவரின் மனதிலும் இடம்பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Krunal Pandya: க்ருணல் பாண்டியா வீட்டில் மீண்டும் குவா குவா சத்தம்! என்ன பெயர் தெரியுமா?

மேலும் படிக்க: IPL 2024: தோனிதான் உலகிலேயே அதிரடி பேட்ஸ்மேன்..CSK பயிற்சியாளர் ஓபன் டாக்!

Source link