விழுப்புரம் – புதுச்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இன்று முதல் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிப்பு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ரயில்வே கிராசிங்கில் உயர்மட்ட மேம்பாலம் பணி

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரையிலான 194 கிமீ தூரத்திற்கு ரூ.6,500 கோடி செலவில் 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கண்டமங்கலம் ரயில்வே கிராசிங்கில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதால் அவ்வழியாக இன்று முதல் வாகனங்கள் செல்ல தடை விதிப்பு.

போக்குவரத்து மாற்றம்

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருவாண்டார்கோவில், கொத்தம்புரிநத்தம், வணத்தம்பாளையம், சின்னபாபு சமுத்திரம், கெண்டியாங்குப்பம், அரியூர் வழியாக மாற்றுப்பாதையில் புதுச்சேரி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அரியூர், சிவராந்தகம், கீழூர், மண்டகப்பட்டு, பள்ளிநெளியனூர், திருபுவனை வழியாக மாற்றுப்பதையில் விழுப்புரம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையில் 10 கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
аренда премиум авто пхукет пхукет аренда авто отзывы
лицензирани букмейкъри българия my web page спортни резултати
Pronosticador Apuestas Futbol futbol argentino
giocare immersive roulette my webpage :: carte burraco quante (Cherie)
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

ரேஷன் அட்டை eKYC: அக்டோபர் 29-ல் சிறப்பு முகாம்|Missed Ration Card eKYC? TN Announces Special Camp on Oct 29 | ACTPnews.com

தேனி: ஆக்கிரமிப்பு பட்டியலில் பழங்குடி மக்கள்; நீதிமன்றத்தை ஏமாற்றியதாக வனத்துறை மீது குற்றச்சாட்டு? | Theni: Tribal people in encroachment list; Forest Department accused of misleading court | ACTPnews.com

புதிய மின் இணைப்புக்கு இனி கள ஆய்வு இல்லையா? ஆகஸ்ட் 28 முதல் என்ன மாற்றம்?|No More Field Visits! New TN Power Connection Rule From Aug 28 | ACTPnews.com

“சோஃபா செட் இல்ல, லாக்கரே வந்தாலும்கூட தேமுதிக தன்னுடைய..!”- கூட்டணி மாறுவது குறித்து பிரேமலதா | ACTPnews.com

где купить масло в редуктор масло в редуктор