Villupuram pmk vck clash at MayanaKolai festival in Dindivanam Police batoned – TNN | திண்டிவனத்தில் பதற்றம்… மயானக் கொள்ளை திருவிழாவில் பாமக


விழுப்புரம்: திண்டிவனம் மயான கொள்ளை திருவிழாவில் பாமக – விசிகவினர் மோதலில் ஈடுபடும் முயன்றதால் போலீசார் தடியடி நடத்தியதில் இளைஞர் ஒருவர் காயம் அடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் – செஞ்சி சாலையில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெறும், இந்த வருடமும் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தும் விதமாக அம்மன், காலி வேடம் அணிந்து அங்காளம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக திண்டிவனம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மயான கொள்ளை இடத்தை அடைந்தனர். இந்த நிலையில் ஊர்வலமாக செல்லும் போது காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் இல்லம் இருக்கும் இடத்தின் வழியாக சென்ற விசிகவை சேர்ந்த சிலர் விசிக கொடி கட்டிக் கொண்டு நடனம் ஆடினர்.
அப்போது அங்கு இருந்த பாமகவினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் இரு தரப்பினரிடம் பேசுவார்த்தை நடத்தினார். இருப்பினும் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
அப்போது தடியடி நடத்திய போது தப்பியோடிய இளைஞர்கள் சிலர் போலீசார் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மரக்காணம் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் மண்டையில் பலத்த காயம் அடைந்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார் நடத்திய தடியால் திண்டிவனம் மயானக் கொள்ளை திருவிழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண

Source link