Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
”நீ மட்டும் ஸ்ருதியோட ரூமுக்கு போய் அங்க செயின் எடுக்காம இருந்தா இவ்வளவும் நடந்து இருக்காது” என விஜயா மீனாவை பார்த்து சொல்கிறார். ’இந்த வீட்ல கொஞ்சம் கூட யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டியா?” என அண்ணாமலை கேட்கிறார். ”ஸ்ருதிய வர வைக்க நீங்க என்ன பண்ணிங்க? ஆனா நான் ஸ்ருதிய நேர்ல போய் பார்த்து பேசிட்டு வந்தேன்” என மீனா சொல்கிறார். ’மண்டபத்துல என்ன நடந்துதுனு அவங்களுக்கு சொல்லி புரிய வச்சி இருக்கேன் மாமா. அதெல்லாம் யோசிச்சு அவங்க கண்டிப்பா வீட்டுக்கு வருவாங்க” என மீனா சொல்கிறார்.
”நம்ம என்ன ஆயுதம் எடுக்கணும்ன்றத நம்ம எதிராளி தான் முடிவு பண்ணனும்” என்று முத்து சொல்கிறார். ”இப்போ என்னடா என்னை அடிக்க போறியா?” என விஜயா கேட்கிறார். ”நான் அவ்ளோ மட்டமானவன் இல்ல” என முத்து சொல்கிறார். ”அத்தை மத்தவங்க பண்ண தப்ப யாரும் எப்பவும் ஒத்துக்கப் போறது இல்லை விடுங்க” என ரோகிணி சொல்கிறார். ”இது ஒரிஜினல் அக்கறையா? இல்லை உன்னை கேள்வி கேட்டுட கூடாதுனு வர அக்கறையா?” என முத்து கேட்கிறார்.
”அங்கிள் இவரு இருக்குற வீட்ல எப்டி நாங்க இருக்க முடியும். எனக்கென்னவோ ஸ்ருதி எடுத்த முடிவு தான் கரெக்டுனு தோணுது அங்கிள்” என ரோகிணி சொல்கிறார். பி.ஏ ரோகிணியை தேடி பார்லருக்கு வருகிறார். ”நீ எதுக்கு இங்க வந்த” என ரோகிணி கேட்கிறார். நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அதுக்கு ஒரு லட்சம் தேவைப்படுது என பி.ஏ கேட்கிறார். ”என் கிட்ட இப்போ அந்த அளவுக்கு பணம் இல்லை” என ரோகிணி சொல்கிறார். ”இல்லனா உன்னோடா பயோகிராஃபிய உன் புருஷன் மாமியாரு எல்லாரு கிட்டயும் சொல்லிடுவேன்” என மிரட்டுகிறார்.
”உங்க அப்பா மூலமா பணம் ரெடி பண்ண முடியுமா?” என மனோஜ் கேட்கிறார். ”ஏன் மனோஜ் நீயும் என்னை டார்ச்சர் பண்ற பணம் பணம், பணம் நான் என்ன பணம் காய்க்குற மெஷினா? எல்லோரும் பணத்தை கேட்டு ஏன் இப்டி சாவடிக்கிறிங்க” என ரோகினி ஆக்ரோஷமாக கேட்கிறார். ”உனக்கு பணம் வேணும்னா உங்க அம்மா அப்பா கிட்ட போய் கேளு. அந்த பத்தரத்த வச்சி அங்கிள் முத்துவுக்கு கார் வாங்கினாரு இல்ல அதே பணத்தை வச்சி உனக்கு 14 லட்சம் கொடுக்க முடியாதா?” என ரோகிணி கேட்கிறார். பின் மனோஜ் வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் காண