சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
விஜயா ரோகிணியிடம் கடுமையாக பேசுகிறார். ”ஆண்டி இப்போ எதுக்கு கத்துறிங்க, நான் தான் எங்க அப்பா கிட்ட இருந்து பணம் வாங்கி கொடுத்தேன் இல்ல அதை வச்சி தானே பத்திரத்த மீட்டோம்” என்கிறார் ரோகிணி. ”என்ன குரல உசத்துர, எப்பவும் இவ சிரிச்சி சிரிச்சி பேசுறாளே என்ன பண்ணாலும் இவ சும்மா இருப்பானு நெனச்சியா? விஜயா எல்லா நேரத்துலயும் ஒரே மாதிரி இருக்க மாட்டா” என்கிறார் விஜயா.
”அந்த பணத்தை நான் உன்கிட்ட கொடுத்துட்டு வட்டிக்காரன் கிட்டயும் இந்த வீட்லயும் நான் எவ்ளோ அசிங்கப்பட்டேனு உனக்கு மறந்துடுச்சா?” என்கிறார் விஜயா. ”இது ஒன்னும் அந்த அளவுக்கு பெரிய தப்பு இல்ல” என ரோகினி சொல்கிறார். அதற்கு விஜயா? ”அடியே தப்பு இல்லனு அவ்ளோ ஈசியா சொல்ற எவ்ளோ செஞ்சழுத்தம். உனக்காக இந்த வீட்ல நான் எவ்ளோ அசிங்கப்பட்டு இருப்பேன். நான் ஏதோ உன்னை பொண்ணு மாதிரி நெனச்சி பொருமையா இருந்தா உன் இஷ்டத்துக்கு நீ நடந்துக்குவியா? ” என கேட்கிறார் விஜயா.
”அந்த முத்து உன் பேர்ல பூக்கடை மட்டும் தான் இருக்குனு சொல்றான். இந்த அசிங்கத்தை எனக்கு வாங்கி கொடுத்துட்ட இல்ல. இந்த அளவுக்கு வேற யாராவது என்ன அவமானப்படுத்தி இருந்தா நான் நடந்துக்குற விதமே வேற மாதிரி இருக்கும். நீ இப்போ செஞ்சத எப்பவும் என்னால மறக்க முடியாது” என விஜயா சொல்கிறார். ”இதுதான் ரோகிணி உனக்கு கடைசி, இனிமே என்கிட்ட எதையும் மறைக்காதே” என எச்சரிக்கை கொடுக்கிறார் விஜயா.
’என்ன பத்தி முழு உண்மை தெரிஞ்சா என்னாகுமோ தெரியலையே?” என மனதிற்குள் நினைக்கிறார் ரோகினி. செல்வம் நண்பருக்கு ஒரு கார் பார்க்க வேண்டும் எனக்கூறி மீனா பார்த்து விட்டு சென்ற காரை முத்துவிடம் காண்பிக்கிறார். முத்து காரை பார்த்து விட்டு புது கார் மாதிரி இருப்பதாக சொல்கிறார் . பின் மீனா முத்துவை கோயிலுக்கு கூட்டிச் செல்கிறார்.
பின் ஐயர் காருக்கு பூஜை செய்து விட்டு சாவியை மீனாவிடம் கொடுக்கிறார். மீனா உனக்காக இந்த காரை வாங்கி இருக்காங்க என செல்வம் சொல்கிறார். முத்து அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். மீனா, ”நீங்க எனக்கு கடை வச்சி கொடுத்திங்க நான் உங்களுக்கு ஒரு கார் வாங்கி கொடுக்கனும்னு நெனச்சேன் வாங்கிட்டேன்” என சொல்கிறார். முத்துவும் மீனாவும் காரில் ஒரு ரவுண்டு செல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் காண