சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 
முத்து சத்யாவை அடிக்க கை ஓங்குகிறார். அதற்குள் நர்ஸ் உள்ளிடோர் அறைக்குள் வந்து விடுகின்றனர். பின் முத்து அங்கிருந்து சென்று மது அருந்துகிறார். சத்யா சொன்னதையெல்லாம் தன் நண்பரிடம் சொல்கிறார் முத்து. ”இவனை விட பெரிய பெரிய ஆளெல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கிறவன்டா நான்” என்கிறார் முத்து. போதையில் வருத்தப்பட்டு தன் நண்பரிடம் பேசுகிறார் முத்து.
சத்யா சிட்டிக்கு போன் செய்து “நாம் விஜயாவிடம் இருந்து பணம் அடித்தது மாமாவுக்கு தெரிந்து விட்டது” என சொல்கிறார். “எதாச்சி பண்ணா சொல்லு நம்ம பசங்க கிட்ட சொல்லி 2 தட்டு தட்ட சொல்லலாம்” என்கிறார் சிட்டி. அதெல்லாம் வேண்டாம் என்கிறார் சத்யா. ஸ்கேன் ரிப்போர்ட்டில் சத்யாவின் கை எலும்பு உடைந்து விட்டதாக கூறப்படுகிறது. 
சீதா மீனாவிடம், “அக்கா உடனே ஆப்ரேஷன் பண்ணனுமா. 30 ஆயிரம் கட்ட சொல்லி இருக்காங்க” என்கிறார். மீனாவிடம் வெறும் 6 ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது. மாமாக்கிட்ட கேட்டு பாரு என்கிறார் சீதா. மீனா முத்துவுக்கு போன் செய்கிறார். ஆனால் முத்து போனை எடுக்கவில்லை. அவரின் நண்பர் எடுத்து பேசுடா எதாவது பிரச்சனையா இருக்க போகுது என சொல்கிறார். ஆனாலும் முத்து போனை எடுக்கவில்லை. “அவரு போன் எடுக்கல, கார் ஓட்டிக்கிட்டு இருக்காருனு நெனைக்குறேன்” என்கிறார் மீனா. 
”அண்ணாமலை மாமா கிட்ட கேட்டு பார்க்கலாமா?” என்கிறார் சீதா. ”ஏய் வேணாடி அவங்க சும்மாவே எதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க. இப்போ காசு கேட்டு போயி நிண்ணா இதுக்குதான் பொண்ணை கட்டிக்குடுத்தியானு” கேப்பாங்க என்கிறார் மீனாவின் அம்மா. பின் மீனாவும் அவரின் அம்மாவும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் போன் செய்து காசு கேட்கின்றனர்.
மீனாவுக்கு தெரிந்தவர்கள் சத்யாவை பார்க்க மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களிடம் மீனா காசு பற்றி கேட்கிறார். ”அதற்கு அவர்கள் அந்த டாக்டர் ரொம்ப நல்லவர் ஏழைங்களுக்கு எல்லாம் உதவி பண்ணுவாரு. நீ போய் பேசி பாரு” என சொல்கின்றனர். பின் மீனா அந்த டாக்டரிடம் சென்று பேசுகிறார். மருத்துவரும் பணத்தை தவணை முறை கட்டச் சொல்கிறார். 
டாக்டர் மீனாவிடம் ”அவன் ஏதோ அடிதடிக்கு போயிருக்கான்மா அவனை யாரோ பலமான போர்ஸ் கொடுத்து கையை முறுக்கி இருக்காங்க” என்று சொல்கிறார். சத்யா கல்லூரிக்கு செல்ல முடியாது என எண்ணி சத்யாவின் குடும்பத்தினர் வருத்தப்படுகின்றனர். பின் டாக்டர் சொன்னதை மீனா குடும்பத்தினரிடம் சொல்கிறார். சத்யாவும் தன் கையை முறுக்கி விட்டதாக சொல்கின்றார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed