vck ravikumar says Ponmudi is a social justice fighter who can overcome any obstacle – TNN | எத்தனை தடை வந்தாலும் அதை தாண்டி  நிற்க கூடிய சமூக நீதி போராளி பொன்முடி


விழுப்புரம்: பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை திராவிட கொள்ளைகையில் பங்கு கொண்டவர்களும் திராவிட மாடல் அரசு வெற்றி பெறவேண்டும் என நினைப்பவர்கள் இத்தீர்ப்பினை வரவேற்பார்கள் என்றும் எத்தனை தடை வந்தாலும் அதனை தாண்டி  நிற்க கூடிய சமூக நீதி போராளியாக பொன்முடி உள்ளதாக எம்.பி ரவிக்குமார்  தெரிவித்துள்ளார். 
பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து விசிக எம் பி ரவிக்குமார் திமுகவினர் விழுப்புரம் மாதாக கோவில் பேருந்து நிறுத்தம் அருகே  பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த எம்பி ரவிக்குமார் பேராசிரியர் என்று அன்போடு அழைக்கப்படுகின்ற பொன்முடி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
நீதிக்கு கிடைத்த வெற்றி இதனை மாவட்ட மக்கள் மட்டுமல்ல திராவிட கொள்ளைகையில் பங்கு கொண்டவர்கள் திராவிட மாடல் அரசு வெற்றி பெறவேண்டும் திராவிட கொள்கையின் மீது பற்றுகொண்டவர்கள் இத்தீர்ப்பினை வரவேற்பார்கள் என்றும் பொன்முடி மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்கிறார் என்றால் திராவிட மாடல் அரசுக்கு உரம் சேர்ப்பதாகவும் திராவிட என்ற கொள்கைக்கு வலு சேர்ப்பதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு மகத்தான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன் இவ்வாறு ஒரு தீர்ப்பு வழங்கவில்லை என சட்டவல்லுனர்கள் தெரிவிப்பதாகவும், தீர்ப்பின் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது தவறானது உறுதியாகி உள்ளது. எத்தனை தடை வந்தாலும் அதனை தாண்டி  நிற்க கூடிய சமூக நீதி போராளியாக பொன்முடி உள்ளதாகவும் பெரியாரின் பாசறையில் உடம்போடப்பட்ட போர்வாள் அவர் மேலும் பல வெற்றிகளை சூழ்வார் என கூறியுள்ளார்.
திமுகவினர் கொண்டாட்டம் 
விழுப்புரத்தில் திமுக கட்சி அலுவலகம் மற்றும் காந்தி சிலை முன்பாக திமுகவின் நகர செயலாளர் சர்க்கரை தலைமையிலான திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் உச்ச நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கிய தண்டனை நிறுத்தி வைத்துள்ள செய்தி திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தையும், அரசியல் களத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண

Source link