top news India today abp nadu morning top India news April 6 2024 know full details | Morning Headlines: கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கை பதிலடி! மதரஸா சட்டம்



“மோடி தமிழ்நாட்டிற்கு வருவது திமுகவிற்குதான் ப்ளஸ் பாய்ண்ட்” – குட்டி குட்டி நேர்காணலில் முதல்வர் ஸ்டாலினின் சுவாரஸ்ய பதில்கள்!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7  கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்றத்தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய அளவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் பாஜக அரசை பின்னுக்கு தள்ளி ஆட்சியை கைப்பற்ற பல யுக்திகளை கையாண்டு வருகிறது இந்தியா கூட்டணி. இந்த இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமையாக செயல்பட்டு வருகிறார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். மேலும் படிக்க..

“முடிஞ்சுபோன விஷயம்.. மறு பேச்சுக்கே இடமில்ல” கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவுக்கு இலங்கை பதிலடி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 15 நாள்கள் கூட இல்லாத நிலையில், கச்சத்தீவு விவகாரம் பற்றி எரிந்து வருகிறது. இதனால், இலங்கை, இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படுமோ என முன்னாள் தூதர்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 14 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டதாகவும் இதற்கு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு துணை போனதாகவும் பிரதமர் மோடி குற்றம் சுமத்தினார். மேலும் படிக்க..

“மதரஸா சட்டம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

உத்தரப் பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004ஐ அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. அரபு, உருது, பெர்சியன் (பாரசீகம்), இஸ்லாமிய ஆய்வுகள், தத்துவங்கள், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பான படிப்புகளே மதரஸா கல்வியாகும். இவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் மதரஸாக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரம் மதரஸா கல்வி வாரியத்திற்கு அளிக்கப்பட்டது. மேலும் படிக்க..

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ஆர்.பி.ஐ ஆளுநர் அறிவிப்பு..

2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.5% சதவீதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பதுன் குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க..

மேலும் காண

Source link