TN Goverment: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567 நபர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளளது.

கடந்த 3 ஆண்டுகளில் 60,567 நபர்களுக்கு அரசு வேலை

சென்னையில் 16.02.2024 அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மாதம் வரை 60,567 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விபரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக உள்ள தேர்வு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்காக, ஜனவரி 2024 வரை, 27,858 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எந்தெந்த துறை?

துறைவாரியான நியமனங்களைப் பொறுத்தவரை நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக்கல்வித்துறையில் 1,847 பணியிடங்களும், வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்களும், சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத் துறையில் 4,286 பணியிடங்களும், ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும், உயர் கல்வித் துறையில் 1,300 பணியிடங்களும், காவல்துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூக நலம் மற்றும் சத்துணவு போன்ற அரசின் பிற துறைகளின் வாயிலாக 15,442 பணியிடங்களும் அந்தந்தத் துறைகளின் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டன. இவ்வகையில் 32,709 இளைஞர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆக மொத்தம், இந்த அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டு காலத்திற்குள் (27,858 + 32,709) 60,567 நபர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, தமிழ் நாட்டில் படித்த இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பினை உருவாக்கிட உலக முதலீட்டாளர்களும் நடத்தப்பட்டது.

இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக நம் மாநிலத்தின் இளைஞர்களுக்கு இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட தமிழ் நாடு அரசு வழிவகை செய்துள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

"ஒட்டுமொத்த குடும்பத்தோட நம்பிக்கையும் நொறுங்கிடுச்சு" வேலையில்லா திண்டாட்டம் பற்றி மனம் திறந்த ராகுல் காந்தி!

Fact Check: தமிழ்நாட்டின் முதல் பழங்குடி நீதிபதி ஸ்ரீபதி இல்லையாம்! உண்மை நிலவரம் என்ன?

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…
Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…
Кейтеринговый банкет? https://furshetnye-nabory-s-dostavkoi.ru удобное решение для корпоратива, дня рождения, свадьбы или делового события. Выбирайте готовое меню или соберите собственный вариант…
Кейтеринговый банкет? https://furshetnye-nabory-s-dostavkoi.ru удобное решение для корпоратива, дня рождения, свадьбы или делового события. Выбирайте готовое меню или соберите собственный вариант…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘தம்பி நீ எழுந்தா தான் சண்டை வருது, 8-ம் தேதி வரைக்கும் பேசாதீங்க.!’- ஆதவ் அர்ஜுனா குறித்து பிரேமலதா | premalatha vijaykanth slams aadha arjuna | ACTPnews.com

‘இது சட்டமன்றமா… இல்ல சண்டை மன்றமா?’ – திடீரென கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த் |“Is This a Legislative Assembly or a Fight House?” – Premalatha Vijayakanth Erupts Suddenly | ACTPnews.com

இமயமலை உருகினால் 200 கோடி பேருக்கு ஆபத்து – நேபாள அமைச்சர்|‘What Melts in Himalayas Rises in Sea’: Nepal FM’s Big Warning | ACTPnews.com

முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை – சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி | ACTPnews.com

தளபதி எக்ஸிட்; பி.டி.ஆர் என்டரி? டு `புது நட்பு?’ விஜய் – மத்திய மாண்புமிகு ரகசிய சந்திப்பு| கழுகார் | Kazhugar updates on PTR and TVK, BJP politics | ACTPnews.com

Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…