தமிழ் சினிமாவின் காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் இருவரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் விறுவிறுப்பாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பிரபலங்களும் தாங்கள் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவுக்கு ஆதரவாக நடிகை நமீதா, நடிகர்கள் செந்தில், கூல் சுரேஷ், டான்ஸ் மாஸ்டர் கலா ஆகியோர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாஜகவில் குஷ்பூ, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.

பிரபல தமிழ்த் திரையுலகக் கலைஞர், திருமதி.ஆர்த்தி கணேஷ் அவர்கள், பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமைப் பண்பாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, நமது மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்கள் முன்னிலையில், தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.

திருமதி.ஆர்த்தி… pic.twitter.com/6TCxKs2chE

— BJP Tamilnadu (@BJP4TamilNadu) April 9, 2024

இந்நிலையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் இருவரும் பாஜகவில் இணைந்தனர். அவர்கள் மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.