டெல்லியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 2023ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சுமித் என்பவர் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி கோர்ட்டிற்கு வந்து குற்றம் செய்த நபரை அடையாளம் காட்டினாள். இதில் விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜினி தனது தீர்ப்பை வழக்கமான தீர்ப்பாக கூறாமல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எழுதும் கடிதமாக தீர்ப்பை வழங்கினார்.
அதில், “குழந்தையே, இந்த நீதிமன்றம் உங்கள் மனுவிற்கு பதிலளித்துள்ளது. இன்று, நீங்கள் “மாமா’ என்று அழைத்தவர் இனி ஒருபோதும் சுதந்திரமாக நடமாடமாட்டார் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் கூண்டில்தான் வாழ்வார்.
அந்தக் கூண்டில் அவருக்கு வயதாகிவிடும். அந்தக் கூண்டில் அவர் இறந்துவிடுவார். அவர் உங்களையோ, உங்கள் சிறிய சகோதரியையோ அல்லது வேறு எந்த குழந்தையையோ இனி ஒருபோதும் காயப்படுத்த முடியாது. இந்த நீதிமன்றம் இதுவரை கண்டதிலேயே மிகவும் துணிச்சலான சிறுமி நீதான்.
நீ நீதிமன்றத்திற்கு வந்து, உனக்குத் தீங்கு இழைத்த நபரைச் சுட்டிக்காட்டி, உண்மையைச் சொன்னாய். ‘அங்கிள்’ என்று நீ அழைத்த அந்த நபர் உனக்கு மிக மோசமான ஒரு செயலைச் செய்தார். ஆனால் நீ அமைதியாக இருந்துவிடவில்லை. உன் தாயிடம் அதைத் தெரிவித்தாய். பேசுவதற்குத் தேவையான துணிச்சல் உனக்கு இருந்ததால், இனி அவரால் வேறொரு குழந்தைக்குத் தீங்கு இழைக்க முடியாது. உனது குழந்தைப் பருவத்தை இந்த நீதிமன்றத்தால் உனக்குத் திரும்பத் தர முடியாது. ஆனால், உனது வார்த்தைகள் செவிமடுக்கப்பட்டன என்பதையும், உனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையும் நீதிமன்றம் உனக்கு உறுதியளிக்க முடியும்.
இனி சூரிய ஒளியை பார்க்க முடியாது
உனக்குத் தீங்கு இழைத்த அந்த நபர், இனி ஒருபோதும் சுதந்திரமான மனிதராகச் சூரிய ஒளியைப் பார்க்க முடியாது”என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுமித் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நீதிபதி பிரதீபா எம் சிங் மற்றும் நீதிபதி தினேஷ் பூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்தது. இதில் கீழ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள், கீழ் கோர்ட் நீதிபதி தெரிவித்த செய்தியை அச்சிட்டு சிறுமி அல்லது அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு வடமேற்கு டெல்லி மாவட்ட சட்டச் சேவைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். இழப்பீட்டுத் தொகையுடன் இரண்டு வாரங்களுக்குள் செய்தி குழந்தைக்குச் சென்றடைய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.!

























Felt slightly impressed without being able to point to one specific reason, and a look at waveharborvendorstudio continued that diffuse…