Tag: ஹாரிஸ் ஜெயராஜ்

• 12b movie harris jayaraj music speciality behind the punnagai poove song

12b movie harris jayaraj music speciality behind the punnagai poove song

இசை பிரியர்கள் அனைவருக்கும் திரை இசை பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்கள் பெரும்பாலானோர் என்றாலும் அதை விஷுவலாக பார்த்து ரசிப்பவர்கள் ஏராளம். அதற்காகவே பல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு பாடலுக்காக பல மெனெக்கெடல்களை எடுத்து அந்த பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறார்கள்.
ஒரு புன்னகை பூவே:படத்திற்காக பயன்படுத்தப்படும் பட்ஜெட்டை காட்டிலும் ஒரே பாடலுக்கு பல லொகேஷன்களில் ஷூட்டிங் செய்து பார்வையாளர்களை வியக்க வைப்பார்கள். ஒரு சிலரோ ஏராளமான வேரியேஷன்கள் பாடல்களில் கொண்டு வருகிறார்கள். ஒரு சிலர் அதை கவனித்து இருந்தாலும் பெரும்பாலானோர் அதை ரசிக்க மட்டுமே செய்வார்கள் தவிர அந்த காட்சியின் பின்னணியில் இருக்கும் அர்த்தத்தை புரிந்து பார்ப்பவர்கள் வெகு சிலரே. அப்படி ஒரு மெனக்கெடலுடன் எடுக்கப்பட்ட பாடல் தான் 12பி படத்தில் இடம்பெற்ற ‘ஒரு புன்னகை பூவே…’ பாடல். திரையில் நாம் பார்த்த காட்சிக்கு பின்னணியில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்ற சுவாரஸ்யமான தகவல் உங்களுக்காக…

படமாக்கியது எப்படி?2001ம் ஆண்டு ஜீவா இயக்கத்தில் ஷ்யாம், சிம்ரன், ஜோதிகா, விவேக் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் ரொமான்டிக் திரைப்படம் 12பி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற  லவ் பண்ணு, சரியா தவறா, முத்தம் முத்தம் முத்தம்மா, பூவே வாய் பேசும் போது, ஜோதி நெறஞ்சவ, ஒரு பார்வை பார், ஓ நெஞ்சே என அனைத்து பாடல்களுமே இன்று வரை அனைவரின் பிளே லிஸ்ட்களிலும் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடல்கள்.
“ஒரு புன்னகை பூவே… சிறு பூக்களின் தீவே…” என்ற பாடலை கே கே மற்றும் பிரசாந்தினி பாடி இருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் இந்த பாடலை கேட்கவே மிகவும் அற்புதமாக  இருக்கும். இந்த பாடலின் மேக்கிங் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என இயக்குநர் ஜீவாவும், டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரமும் யோசித்த போது அவர்களுக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளது.
சம்மர் சீசன், மழைக்காலம், இலையுதிர் காலம், ஸ்னோ சீசன் என நான்கு சீசனும் இடம் பெரும் வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு பாடலுக்காக இவ்வளவு மெனெக்கெட்டு எடுத்து இருக்கிறார்களா? என தோன்றும். இது எத்தனை பேர் கவனித்து இருப்பார்கள் என்பது தெரியாது என்றாலும் ஒரு பாடலுக்காக அவர்கள் எடுத்த இந்த மெனக்கெடல் பாராட்டிற்குரியது. இதே போல பல திரைப்படங்களிலும் பல பாடல்களின் பின்னணியிலும் ஏதாவது மறைந்து இருக்கும் ஸ்பெஷாலிட்டி இருக்கும். அவற்றை உற்று நோக்கும் போது தான் தெரியவரும்.

மேலும் காண

Source link

• Harris Jayaraj Net Worth: சொகுசு கார்கள் முதல் அதிநவீன ஸ்டுடியோ வரை.. ஹாரிஸ் ஜெயராஜின் அடேங்கப்பா சொத்து மதிப்பு!

Harris Jayaraj Net Worth: சொகுசு கார்கள் முதல் அதிநவீன ஸ்டுடியோ வரை.. ஹாரிஸ் ஜெயராஜின் அடேங்கப்பா சொத்து மதிப்பு!

தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர். ரஹ்மானின் சாயலிலேயே மெட்டமைக்க கூடிய ஹாரிஸ் ஜெயராஜ், முதன்முதலில் திரையுலகில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமானது ‘மின்னலே’ திரைப்படத்தின் மூலம் தான். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் அதுவே அறிமுக படம். 90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை அனைவரின் ஃபேவரட் மியூசிக் கம்போஸராக இருக்கும் இந்த இசைக் கலைஞன் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் தந்தையும் ஒரு இசைக் கலைஞராக இருந்ததால் அவருடைய மகனுக்கும் பிறப்பிலேயே இசை ஞானம் என்பது ரத்தத்தில் இருந்தது. தனது ஆறு வயது முதலே கர்நாடக சங்கீதம் பயின்ற ஹாரிஸ் ஜெயராஜ் தனது 13 வயதிலேயே லண்டனின் டிரினிட்டி இசைக்கல்லூரியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா என பலரிடமும் புரோகிராமராகப் பணியாற்றியுள்ளார். ஏராளமான விளம்பரங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஆல் டைம் ஹிட்ஸ் :

’மின்னலே’ படத்தின் தீம் மியூசிக் மூலமே ரசிகர்கள் அனைவரையும் கிளீன் போல்ட் செய்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதை தொடர்ந்து மஜ்னு, 12 பி, வாரணம் ஆயிரம், சாமி, கஜினி, காக்க காக்க, அயன் , ஏழாம் அறிவு, ஆதவன், கோ, ஒரு கல் ஒரு கண்ணாடி, என்னை அறிந்தால், என்றென்றும் புன்னகை என ஏராளமான படங்களில் எக்கச்சக்கமான ஹிட்ஸ்களை அள்ளி கொடுத்துள்ளார். அவரின் பாடல்கள் அனைத்துமே இன்றும் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பெற்று இருக்கும். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

வரவிருக்கும் படங்கள் :

அந்த வகையில் அவர் இசையமைத்துள்ள கௌதம் வாசுதேவ் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்க உள்ளார் என பேச்சுக்கள் சினிமா வட்டாரத்துக்குள் அடிபடுகின்றன.  கடந்த 22 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பணிபுரிந்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு தொழில் அதிபராகவும் வெற்றியாளராக ஜொலித்து வருகிறார். அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சொத்து மதிப்பு :

ஒரு படத்திற்கு இசையமைக்க குறைந்தது 3 கோடி வசூல் செய்யும்  ஹாரிஸ் ஜெயராஜூக்கு கார்கள் மீது மிகுந்த கிரேஸ் உள்ளது. ஹம்மர் தான் அவரின் மிக ஃபேவரைட் காராம். அது தவிர அவரிடம் வேறு பல விலையுயர்ந்த கார்களும் உள்ளன. சென்னை, வளசரவாக்கத்தில் சுமார் 35 கோடி மதிப்பிலான ஒரு பங்களா உள்ளதாம். அவர் வசிக்கும் வீட்டிலேயே அதிநவீன ஸ்டூடியோ ஒன்றையும் அமைத்துள்ளாராம். அதன் மதிப்பே 30 கோடிகளை தாண்டுமாம்.

அது தவிர சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான மால் ஒன்றில் அவருக்கு சொந்தமாக மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பல வழிகளில் இருந்தும் வருமானம் குவிந்து வரும் நிலையில் இவை அனைத்தையும் வைத்து பார்க்கையில் அவரின் சொத்து மதிப்பு எப்படியும் 175 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Source link

• Cinema Headlines Today January 8th Tamil Cinema News Today Vijay Sethupathi Janhvi Kapoor Devara Yash Vijayakanth

Cinema Headlines Today January 8th Tamil Cinema News Today Vijay Sethupathi Janhvi Kapoor Devara Yash Vijayakanth

இந்தி படிக்குறதை வேண்டாம்னு சொல்லல. திணிக்கவேண்டாம்னுதான் சொல்றாங்க – விஜய் சேதுபதி
மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். ஸ்ரீராம் ராகவண் இயக்கத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப்  நடித்து உருவாகி இருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் படிக்க
“கேஜிஎஃப்” நடிகர் யஷ் பிறந்தநாளில் சோகம் .. பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
கர்நாடகாவில் நடிகர் யஷ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேனர் கட்டிய 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் யஷ். இவர் 2007 ஆம் ஆண்டு ஜம்பதா ஹுடுகி என்ற படம் மூலம் கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமானார். மேலும் படிக்க
பிப்ரவரியில் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டாவுக்கு நிச்சயதார்த்தமா.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
தென்னிந்திய சினிமாவில் எக்ஸ்பிரஷன் குயின் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா மற்றும் டீன்ஸ் ஹார்ட் த்ரோப் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். திரை ரசிகர்களின் மத்தியில் லவ்வபிள் பேர் என அழைக்கப்படும் இவர்கள் இருவரும் பல மாதங்களாக டேட்டிங் செய்து வருகின்றனர் என்ற செய்திகள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க
விஜயகாந்துக்கு முதன்முறையாக சிலை திறப்பு.. மொட்டை அடித்து வணங்கிய தொண்டர்கள்!
தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் விஜயகாந்தின் மறைவு கவலையில் ஆழ்த்திய நிலையில், அரசியல் தலைவர், சினிமா கலைஞர்கள், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சென்று விஜயகாந்துக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் படிக்க
செங்கடலில் கொள்ளையர்களை துவம்சம் செய்யும் ஜூனியர் என்.டி.ஆர்.. தேவரா க்ளிம்ஸ் வீடியோ ரிலீஸ்!
பிரபல டோலிவுட் இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி திரைப்படம் தேவரா பாகம் 1(Devara Part-1). பிரபல பாலிவுட் நடிகையும் ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் இப்படத்தின் மூலம் முதன்முறையாக தென்னிந்தியாவில் அறிமுகமாகிறார். சைஃப் அலி கான் இப்படத்தில் வில்லனாகக் களமிறங்குகிறார். தெலுங்கு, தமிழ் மொழிகள் உள்பட பான் இந்திய படமாக இப்படம் உருவாகிறது. மேலும் படிக்க
இசையால் மனதை கிறங்கடிக்கும் ஹாரிஸ் ஜெயராஜூக்கு இன்று பிறந்தநாள்..!
தமிழ் சினிமாவில் இளையராஜா இருக்கலாம். ஏ. ஆர் ரஹ்மான் இருக்கலாம். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜுக்கு எப்போது ஒரு தனி இடம் ரசிகர்கள் மனதில் இருக்கிறது.  ஒரு படத்தில் ஹீரோவின் இண்ட்ரோ பாடலாக இருக்கட்டும் அல்லது மெலடியாக இருக்கட்டு ஒவ்வொரு வகைமையிலும் அவரது தனித்துவம் வெளிப்படும். ஹாரிஷ் ஜெயராஜின் இசையில் ஒரு சில பொதுவான அம்சங்கள் இசை ரசிகர்களை கவர்கின்றன. மேலும் படிக்க

Source link

• HBD Harris Jayaraj: இசையால் மனதை கிறங்கடிக்கும் ஹாரிஸ் ஜெயராஜூக்கு இன்று பிறந்தநாள்..!

HBD Harris Jayaraj: இசையால் மனதை கிறங்கடிக்கும் ஹாரிஸ் ஜெயராஜூக்கு இன்று பிறந்தநாள்..!

இன்று ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள். ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் ரசிகர்களை கவர்ந்த பொதுவான அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் இளையராஜா இருக்கலாம். ஏ. ஆர் ரஹ்மான் இருக்கலாம். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜுக்கு எப்போது ஒரு தனி இடம் ரசிகர்கள் மனதில் இருக்கிறது.  ஒரு படத்தில் ஹீரோவின் இண்ட்ரோ பாடலாக இருக்கட்டும் அல்லது மெலடியாக இருக்கட்டு ஒவ்வொரு வகைமையிலும் அவரது தனித்துவம் வெளிப்படும். ஹாரிஷ் ஜெயராஜின் இசையில் ஒரு சில பொதுவான அம்சங்கள் இசை ரசிகர்களை கவர்கின்றன.

பாம்பே ஜெயஸ்ரீ

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் மிக வசீகரமான ஒலிக்கக் கூடியது. கர்நாடக இசையில் தீவிர பயிற்சி இருக்கும் பாம்பே ஜெயஸ்ரீ பெரும்பாலும் இசைக்கச்சேரிகளில் அதிகம் பாடுபவர். இளையராஜா அவரை பாரதி படத்தில் பாட வைத்தார். ஆனால் அதுவும் ஒரு தெய்வீகமான பாடல்தான். ஹாரிஸ் ஜெயராஜ் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலை பெண்ணின் காமம் , ஏக்கம் , துன்பம் அதிகம் ஓங்கியிருக்கும் உணர்ச்சிகளுக்கு பயன்படுத்துகிறார். மின்னலே படத்தில் ’வசீகரா’, மஜ்னு படத்தில் ’முதல் கனவே ‘, காக்க காக்க படத்தில் ’ஒன்றா ரெண்டா’, பச்சைகிளி முத்துச்சரம் படத்தில் உனக்குள் நானே, சத்யம் படத்தில் செல்லமே செல்லமே, வாரணம் ஆயிரம் படத்தில் அனல் மேலே பனித்துளி போன்ற பாடல்களை உதாரணமாக சொல்லலாம்.

குத்துப்பாட்டில் மெலடி

பெரும்பாலான படங்களின் முதல் பாடல் ஒரு குத்துப் பாடலாக இருப்பது வழக்கம். ஆனால் ஹாரிஸ் இசையமைத்தப் படங்களில் சில முதல் பாடலே மெலடியாக இருக்கும். அப்படியே குத்துப் பாடலாக இருந்தாலும் அதன் சரணத்தை மெல்லிசையாக அமைத்திருப்பார்.  மஜ்னு படத்தில் மெர்குரி மேலே , சாமுராய் படத்தில் மூங்கில் காடுகளே, கோவில் படத்தில் காலேஜுக்கு போவோம், அயன் படத்தில் வரும் பளபளக்குற மற்றும் ஆதவன் படத்தில் வரும் டமக்கு டமக்கு பாடல் குத்துப்பாடலாக ஆரம்பித்தாலும் இந்தப் பாடல்களின் சரணத்தில் வரும் மெலடிதான் நமக்கு அதிகம் பிடித்தவையாக இருக்கும். வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு ராப் மற்றும் மெலடி கலந்து கற்க கற்க பாடலை இசையமைத்திருப்பார்.

சத்யம் படத்தில் ஆறடி காத்தே பாடலில் ஹரிஹரன் மெல்லிய குரலில் ’யாரு இவன் யாரு கொம்பனுனு கூறு என்று பாடும்போது எதோ படத்தின் ஹீரோவின் மேல் ஹீரோவுக்கு காதல் வந்தது போல் இருக்கும்.

இளமைக் குரல்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடும் பெரும்பாலான பாடகர்கள் ஒரே குரல் தன்மையுடையவர்கள். எஸ். பி பாலசுப்ரமணியனுக்கும் யேசுதாஸுக்கு இடையிலான வித்தியாசங்கள் இந்த பாடகர்களுக்கு நடுவில் இருப்பதில்லை. எஸ்.பி.பி மற்றும் மனோவுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தான் ஹாரிஸ் ஜெயராஜ் தேர்வு செய்யும் பாடகர்களுக்கு நடுவில் இருக்கும் வேறுபாடு. ஹரிஹரன் , நரேஷ் ஐயர், விஜய் பிரகாஷ்  , கார்த்திக் , பென்னி தயால் , உன்னி மேனன் என ஒரே சுருதியில் பாடக்கூடியவர்கள் இவர்கள். இவர்களின் குரல்களில் அமைந்த பெரும்பாலான பாடல்கள் ஒருவகையான இளமையும் துடிப்பும் அவரது இசைக்கு கொண்டு வருகின்றன. குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல்கள் இன்னும் தனித்துவமானவை . யம்மா யம்மா, என் காதல் தீ, என்னை விட்டு போன்ற ரொம்ப சோகமான பாடல்களுக்கு எஸ்.பி.பி யை தேர்வு செய்திருக்கிறார் ஹாரிஸ்.

ஜிப்ரிஷ்

ஹாரிஸின் இசையில் ஜிப்ரிஷ் அவ்வப்போது வந்து போவது தான். இது தவிர்த்து அவரது இசையில் ஷமனிக் இசை என்று சொல்லப்படும்  புத்த மதத்தின் இசை வகை அதிகம் பயன்படுகின்றன. மற்றும் ஒபெரா என்று சொல்லப்படும்  நாடக இசையை அவரது பாடல்களில் அதிகம் பார்க்கலாம். இனி ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை கேட்டால் அதிலுள்ள தனித்துவத்தை உணருங்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹாரிஸ் ஜெயராஜ்..!

Source link