Tag: விஜே அர்ச்சனா

  • Bigg Boss archana opens up about what she missed to enjoy during college days | Bigg Boss Archana: “இத செய்யலனா 35 வயசானாலும் கல்யாணம் இல்ல”
    Bigg Boss archana opens up about what she missed to enjoy during college days | Bigg Boss Archana: “இத செய்யலனா 35 வயசானாலும் கல்யாணம் இல்ல”


    விஜேவாக இருந்து சின்னத்திரை நடிகையாக பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற அர்ச்சனாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பெரிய பப்ளிசிட்டியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடிகை அர்ச்சனா ஜாலியான பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அர்ச்சனாவின் அப்பா கேள்வி கேட்க அர்ச்சனா மிகவும் தெளிவாக பதில்களைக் கூறி இருந்தார். 
     

    அர்ச்சனாவின் அப்பாவுக்கு அர்ச்சனாவை ஐஏஎஸ் படிக்க வைக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்தது. ஆனால் அர்ச்சனா மீடியாவில் சேர்வது பற்றி விருப்பம் தெரிவிக்க, அதை முதலில் அவர் மறுத்தாலும் பிறகு ஒரு வருட அவகாசம் கொடுத்துள்ளார்.  “இந்த ஒரு ஆண்டில் உன்னால் மீடியாவில் ஏதாவது சாதிக்க முடிந்தால் நீ தொடரலாம், இல்லை என்றால் நான் சொல்வது போல அறக்கட்டளையில் சேர்ந்து ஐஏஎஸ் படிக்க வேண்டும்” என கண்டிஷனோடு தான் மீடியாவில் சேர அனுமதி கொடுத்துள்ளார். ஆனால் இன்றும் அவருக்கு நான் மீடியாவில் வந்ததில் விருப்பமில்லை. 
     பிக்பாஸ் வீட்டில் முதலில் அர்ச்சனா எதற்கு எடுத்தாலும் அழுதது கவலையாக இருந்தது. ஆனால் அதுவே அவர் வாயைத் திறந்து பேச ஆரம்பித்த போது எடுத்துவைத்த வாதங்கள் அனைத்தும் சரியாக இருந்ததை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. “ஒரு பெண் என்பவள் தன்னுடைய சொந்தக் காலில் நிற்கும் வரையில் திருமணத்தை பற்றி யோசிக்கவே கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. அதனால் அர்ச்சனா 30 , 35 என எந்த வயதானாலும் அவளுக்கு என சொந்த சம்பாத்தியம் தேவை. தன்னுடைய செலவுகளுக்கு மற்றவர்களை நம்பி இருக்கக் கூடாது. அப்போது தான் அவளுக்கு திருமணம் செய்து வைப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் பெரிய அளவுக்கு பிக்பாஸ் சென்று சம்பாதித்துவிட்டாள் அர்ச்சனா” என மகளை நினைத்து பெருமையாக பேசி இருந்தார் அர்ச்சனாவின் அப்பா. 
     

    பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா சொன்ன ஒரு ஸ்டேட்மென்ட் பலரும் ஞாபகத்தில் இருக்கும். நான் என்னுடைய டீனேஜில் எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை. என்னுடைய அப்பா ரொம்ப கண்டிப்பாக வளர்த்தார் என கூறி இருப்பார். இதன் விளக்கத்தை அர்ச்சனாவின் அப்பா நிகழ்ச்சியில் கேட்டு இருந்தார். இதற்கு பதிலளித்த அர்ச்சனா “காலேஜில் படிக்கும் போது எனக்கென ஒரு தனி செட் ப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. நாங்க எல்லாருமா சேர்ந்து எங்காவது போகலாம் என பிளான் பண்ணி இருப்போம். வீட்ல போய் அப்பாகிட்ட சொன்ன உடனே ‘நோ’ தான் சொல்லுவார் என்பது எனக்கு நல்லாவே தெரியும்.
    என்னைத் தவிர மத்தவங்க எல்லாரும் போவாங்க. அடுத்த நாள் காலேஜ் போனதும் அவங்க அதைப் பத்தி பேசும்போது எனக்கு ஏக்கமா இருக்கும். அவங்க எல்லாரும் ரொம்ப க்ளோஸா இருப்பாங்க. காலேஜ் தவிர நான் என்னோட பிரெண்ட்ஸ் கூட வேற எங்கேயும் போனது கிடையாது. ரிலேஷன்ஷிப் டெவலப் பண்ண முடியல. அவுட்டிங் போறது, ஃபன் பண்றது எல்லாத்தையும் நான் மிஸ் பண்ணேன். அதனால அது பற்றின மெமரிஸ் எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணாத பீல் பண்ணுவேன். அதை தான் நான் எதுவுமே அனுபவிக்கவில்லை என சொல்லி இருந்தேன்” எனக் கூறி இருந்தார் அர்ச்சனா.  

    மேலும் காண

    Source link

  • Bigg Boss Title winner vj archana said beauty tips for glowing face | VJ Archana: பளபளப்பான முகம் வேண்டுமா?
    Bigg Boss Title winner vj archana said beauty tips for glowing face | VJ Archana: பளபளப்பான முகம் வேண்டுமா?


    சின்னத்திரை நடிகையான அர்ச்சனா முகம் பளபளப்பாக தெரிவித்த டிப்ஸ் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
    பொதுவாக பிரபலங்களாக இருக்கும் நபர்களை பின்தொடரும் ரசிகர்கள் அனைவரும் அவர்களைப் போல நடை, உடை, பாவனை, ஹேர்ஸ்டைல் தொடங்கி எல்லா விஷயங்களையும் மாற்றிக் கொள்வார்கள். மேலும் பிரபலங்கள் சொல்லும் பிட்னெஸ் மற்றும் சமையல் தொடர்பான தகவல்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அதனை சரியாக ஃபாலோ பண்ணுவார்கள். அந்த வகையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா தெரிவித்த டிப்ஸ் வீடியோ வைரலாகியுள்ளது. 
    சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கலையுலக பயணத்தை தொடங்கிய விஜே அர்ச்சனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தேன்மொழி பி.ஏ., , இந்திரா என்ற சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அவர், காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 
    இதனிடையே நடப்பாண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் பங்கேற்றார். ஆரம்பம் முதலே ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவர் கடைசியாக பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் வைல்ட் கார்ட் எண்ட்ரீ மூலம் நுழைந்து டைட்டில் வென்ற முதல் பிக்பாஸ் போட்டியாளர் என்ற சிறப்பை அர்ச்சனா பெற்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின் அவருக்கு பெரிய திரையில் வாய்ப்பு வந்ததாக சொல்லப்படுகிறது. 
    இந்நிலையில் முகம் பளபளப்பாக இருக்க அவர் டிப்ஸ் ஒன்றை சொல்லியுள்ளார். பழைய நேர்காணல் ஒன்றில், இந்த டிப்ஸை தான் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் செயல்படுத்தி பார்த்ததாகவும் கூறியுள்ளார். அதாவது உடலுக்கு நன்மை பயக்கும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் அடங்கிய ABC ஜூஸில் அதற்கு பதிலாக பதிலாக ஆம்லா (பெரிய நெல்லி), பீட்ரூட், தேங்காய் கொண்டு செய்யப்படும் ஜூஸில் நாட்டு சர்க்கரை கலந்து குடித்தேன். கிட்டதட்ட 7 மாதம் குடித்த நிலையில் என்னுடைய முகம் பளபளப்பாக மாறியது. எல்லாரும் இதனை முயற்சி செய்யலாம் என தெரிவித்துள்ளார். 
    அதேசமயம் இந்த ஏபிசி ஜூஸை ஆப்பிள், பீட்ரூட், கேரட் அல்லது ஆம்லா (பெரிய நெல்லி), பீட்ரூட், தேங்காய்  உள்ளிட்ட பொருட்களை கொண்டு குடிக்க விரும்புபவர்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனையின்படி பருகலாம். இதனை வாரத்துக்கு 3 முறை குடித்தால் உடலுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றது.

    மேலும் படிக்க: AR Rahman: ரஜினிகாந்த் மகளா இருப்பது கஷ்டம்: எதை செய்தாலும் விமர்சனம்: ஐஸ்வர்யாவுக்காக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்!

    மேலும் காண

    Source link