Tag: விக்ரம்

  • Pa. ranjith directorial vikram starring Thangalaan movie is planned to be released in coming May month says reports

    Pa. ranjith directorial vikram starring Thangalaan movie is planned to be released in coming May month says reports


     
    தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை தில்லாக எடுத்து அதை  திறம்பட செய்து முடிக்கும் நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கோலார் தங்க வயலில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது. நடிகர் விக்ரம் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்தில் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜி. வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை ஒத்திவைக்கப்பட்ட வந்தது. தற்போது படக்குழு படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
     

     
    மிரட்டலான மேக்கிங் வீடியோ :
    ‘தங்கலான்’ திரைப்படம் விக்ரம் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நடிகர் விக்ரமுடன் பா. ரஞ்சித் கூட்டணி சேர்ந்துள்ளது இதுவே முதல் முறை என்பதால் படம் வேற லெவலில் இருக்கும் என்பது திரை ரசிகர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.  மிக அற்புதமாக  உருவாகியுள்ள இப்படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்பவும் திட்டம் இருப்பதாக சில தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் இருந்தது படக்குழு வெளியிட்ட மிரட்டலான டிரைலர் மற்றும் மேக்கிங் வீடியோ. இது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது. 
     
    பலமுறை ஒத்திவைப்பு :
    ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் பின்னர் அது ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.  பாராளுமன்ற தேர்தலை சுட்டிக்காட்டி படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் ஒத்தி வைத்தனர். ஆனால் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடாமலேயே படக்குழு அமைதி காத்தது. இதனால் தேர்தல் முடிந்த பிறகு ‘தங்கலான்’ படத்தின் வெளியீட்டு தேதி வெளியாகும் என மிகவும் ஆர்வமுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். 
     

    மே மாத ரிலீஸ்?
    தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘தங்கலான்’ படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும்  படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
     
    படக்குழுவின் முடிவு என்ன?
    கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் ‘தங்கலான்’ திரைப்படம் வெளியானால் அது சம்மர் கொண்டாட்டமாக இருக்கும் என்பது ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. இது உறுதியான தகவலா அல்லது வெறும் வதந்தியா என்பதை படக்குழு தான் தெளிவுபடுத்த வேண்டும். அதிகாரபூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் வெயிட்டிங். 
     

    மேலும் காண

    Source link

  • thangalaan update actress Parvathy Thiruvothu birthday special poster released by movie crew details

    thangalaan update actress Parvathy Thiruvothu birthday special poster released by movie crew details


    ஜனவரி மாதம் 28ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின் பல காரணங்களால் தொடர்ந்து தங்கலான் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.
    கோடை ரிலீஸ்?
    தேர்தல் காலம் என்பதால் பெரும் பட்ஜெட் திரைப்படங்களை ரிலீஸ் செய்வதில் சினிமா வட்டாரம் தயக்கம் காண்பித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற வாக்குப்பதிவு முடிந்த பின் ஏப்ரல் 19ஆம் தேதிக்குப் பிறகு தங்கலான் திரைப்படம் ரிலீசாகும் என படக்குழு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    மற்றொருபுறம், துருவ நட்சத்திரம் வரிசையில் தங்கலான் திரைப்படமும் தொடர்ந்து தள்ளிப்போய் வரும் நிலையில் நடிகர் விகரம் ரசிகர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று இப்பட போஸ்டர் வெளியாகியுள்ளது.
    பார்வதி பிறந்தாளில் போஸ்டர்
    தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை பார்வதி (Parvathy Thiruvothu) திருவோத்து இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழு பகிர்ந்து வாழ்த்தியுள்ளது. கங்கம்மா எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் பார்வதி நடித்துள்ள நிலையில், பிறந்த நாள் வாழ்த்துகள் கங்கம்மா என இயக்குநர் பா.ரஞ்சித் பார்வதியை வாழ்த்தியுள்ளார்.
     

    Happy birthday # Gangamma, @parvatweets stay happy n blessed 💥💥💥#HBDParvathyThiruvothu#Thangalaan pic.twitter.com/nNWvFpihfv
    — pa.ranjith (@beemji) April 7, 2024

    நடிகை பார்வதி இன்று தன் 36ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். மலையாளம், தமிழ், இந்தி என பல மொழிகளிலும் தன் நடிப்பு மற்றும் திறமைக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள பார்வதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பார்வதி, மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தமிழில் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருபவர், இறுதியாக தேசிய விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தங்கலான் திரைப்படத்தில் தமிழில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த போஸ்டர் தற்போது லைக்ஸ் அள்ளி வருகிறது.
    தங்கலான் படக்குழு
    இதேபோல் சென்ற ஆண்டு நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ள ஆரத்தி கதாபாத்திரத்தின் லுக் ஆகஸ்ட் மாதம் அவரது பிறந்தநாளன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது.18ஆம் நூற்றாண்டின் கோலார் தங்க வயல், அங்கு வாழ்ந்த பழங்குடியின தமிழ் மக்கள் என அமைந்துள்ள இப்படத்தின் கதையில், நடிகர் விக்ரமின் கதாபாத்திரம் பற்றிய எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியுள்ளன.
    இயக்குநர் பா.ரஞ்சித் உடன் விக்ரம் முதன்முறையாக கைகோர்த்துள்ள நிலையில், சென்ற ஆண்டு வெளியான தங்கலான் டீசர் மிரட்டலாக அமைந்து லைக்ஸ் அள்ளியது. நடிகர் பசுபதி, ஆங்கில நடிகர் டேனியல் கால்டோகிரான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் காண

    Source link

  • Chiyaan 62 Update Dushara Vijayan Joins Cast Vikram Next Movie Tamil Cinema Latest News

    Chiyaan 62 Update Dushara Vijayan Joins Cast Vikram Next Movie Tamil Cinema Latest News


    சியான் 62
    விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சியான் 62’. பண்ணையாரும் பத்மினியும் , சேதுபதி, சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய சு.அருண்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் சித்தார்த் நடித்த சித்தா படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, சியான் 62 படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். எச்.ஆர் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 
    சியான் 62 அப்டேட் (Chiyaan 62 Upadate)
    சியான் 62 படத்தைப் பொறுத்தவரை இதுவரை இரண்டு அப்டேட்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் நடிகர் இயக்குநர் எஸ்.ஜே சூர்யா நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு இப்படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சியான்  62 படத்தின் அடுத்த அப்டேட் வெளியிட்டுள்ளது படக்குழு.

    Happy to have the talented @officialdushara joins #Chiyaan62! Welcome aboard !@chiyaan @iam_SJSuryah #surajvenjaramoodu #SUArunKumar @gvprakash @thenieswar @riyashibu_ @shibuthameens @hridhuharoon @proyuvraaj @propratheesh @nareshdudani @sooriaruna @mugeshsharmaa @rubesh_Rk_ pic.twitter.com/U3bkDhdDK2
    — HR Pictures (@hr_pictures) April 3, 2024

    இதன்படி இப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது , குதிரைவால் உள்ளிட்டப் படங்களில் நடித்த துஷாரா விஜயன் தனுஷ் இயக்கியுள்ள ராயன் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
     

    மேலும் படிக்க : Vela Ramamoorthy: மதயானைக் கூட்டத்துக்கு தேசிய விருது கன்ஃபர்ம்னு சொன்னாங்க ஆனா.. வேல ராமமூர்த்தி வருத்தம்!
    Ranveer Singh : ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸுடன் சேர்ந்து அட்டகாசம் செய்யும் ரன்வீர் சிங்… வைரலாகும் விளம்பரம்

    மேலும் காண

    Source link

  • leo director lokesh kanagaraj celebrates his birthday lets have a look at how lokesh kanagaraj renewed tamil commercial cinema

    leo director lokesh kanagaraj celebrates his birthday lets have a look at how lokesh kanagaraj renewed tamil commercial cinema


    ’ஏதாவது புதுசா செய்யணும்’ ஒரு கமர்ஷியல் படம் எடுக்க ஆசைப்படும் எந்த ஒரு இயக்குநரும் தன் மனதில் நினைத்து கொள்ளும் ஒன்று. கதைகள் எல்லாம் ஒன்றுதான் அவற்றை சொல்லும் விதத்தில் தான் புதுமையை செய்ய முடியும். நீண்ட நாட்களுக்குப் பின் தமிழ் வெகுஜன சினிமா பரப்பில் கொஞ்சம் புதிதாக கதைசொன்னவர் லோகேஷ் கனகராஜ். அப்படி லோகேஷ் கனகராஜ் கமர்ஷியல் சினிமாவில் ட்ரெண்டாக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்
    கதையை குறுகிய காலத்தின் பின்னணியில் வைத்து சொல்வது..
    சுவாரஸ்யமான ஒரு கதை சொல்வதற்கு லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தும் ஒரு அம்சம். டைம் . ஆங்கிலத்தில்  Running Against Time  என்று சொல்வோம்.  ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கப்படவேண்டிய ரூல் இந்த மாதிரியான கதைகளில் இருக்கும். இதனால் பார்வையாளர்களுக்கு இன்னும் சுவாரஸ்யம் கூடும்.  மாநகரம் மற்றும் கைதியை சுவாரஸ்யமானதாக மாற்றியது இந்த டெக்னிக்தான். அதுவும் மாநகரம் படத்தில்  லோகேஷ் கனகராஜ் ஆடியன்ஸுடன் ஒரு  தைரியமாக  ஒரு கேம் விளையாடி இருப்பார். கடைசிவரை அந்தப் படத்தின் கேரக்டரின் பெயர்கள் நமக்கு தெரிவதில்லை. நாமும் கடைசியில் அவர் ஞாபகப் படுத்துவது வரை கேட்பதுமில்லை.
    மல்டிகாஸ்ட்
    உண்மையைச் சொன்னால் பார்த்த முகத்தையே பார்த்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு போர் அடித்துவிட்டது. புது நடிகர்களை பார்க்கும் ஆர்வம் ரசிகர்கள் மனதில் எப்போது இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இருக்கும் அளவு வேறு எந்த மொழியில் இவ்வளவு கேரக்டர் ஆர்டிஸ்ட்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் ஒரு காலக்கட்டத்திற்கு மேல் புது நடிகர்கள் , குணச்சித்திர நடிகர்களின் குறைந்து போனது. நடிகைகளையும் வாட்டசாட்டமான வில்லன்களை மட்டும் மற்ற மொழிகளில் இருந்து இயக்குநர்கள் கடன் வாங்கிக் கொண்டார்கள். லோக்கியின் வருகைக்கு பின் மல்டி காஸ்டிங் என்கிற கான்செப்ட் அதிகம் பிரபலமாகி இருக்கிறது. ஒரே படத்தில் இரண்டு அல்லது மூன்று பெரிய நடிகர்கள் இணைந்து நடிக்கலாம் அதே நேரத்தில் தனது இமேஜையும் காப்பாற்றிக்கொள்ளலாம் என்பதை லோகேஷ் கனகராஜ் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்.
    பூமர்தனங்களை காலி செய்தது
    ஒரு ஸ்டார் இப்படித்தான் நடிக்க வேண்டும் இப்படி எல்லாம் நடிக்கக்கூடாது என்று இருந்த ஒரு சில ரூல்ஸை உடைப்பது லோகேஷ் ரசித்தே செய்கிறார்.  விக்ரம் படத்தில் கமல்ஹாசன் கஞ்சா புகைப்பது, மாஸ்டர் படத்தில் விஜய் குடிப்பது , பொய் பேசுவது ,  விக்ரம் படத்தில் மோனிங் சாங் என்று தனியாக ஒரு பி.ஜி.எம் வைப்பது என கொஞ்சமாக அவ்வப்போது விளையாடிப் பார்ப்பது அவர் வழக்கம்.
    ஆக்‌ஷனில் புதுமை
    லோகேஷ் கனகராஜ் சொன்னதுபோல் தனது ஆக்‌ஷன் காட்சிகளை முடிந்த அளவு சுவாரஸ்யப்படுத்த முயற்சிக்கும் ஒருவர். ஏதோ ஒரு வகையில் ஒரு சாதாரண சண்டைக் காட்சிகளில் புதுமையை சேர்க்க நினைப்பவர். மாநகரம் படத்தில் பேண்ட் பாக்கெட்டிற்குள் ஆசிட் பாட்டிலை போட்டு உடைக்கும் காட்சி அவரது ஆக்‌ஷன் தாகத்தை புரிந்துகொள்ள போதுமானது
    இங்கிலீஷ் பாடல்களை அறிமுகப்படுத்துவது
    90 கிட்ஸ்கள் தொட்டு ஆங்கில பாப் பாடல்கள் வெகுஜனத்தில் பிரபலமாக இருந்திருக்கின்றன. மைக்கல் ஜாக்ஸன் , ஏகான் , ஷகிரா, தற்போது பில்லி ஐலீஷ் வரை  பாடல்களை நாம் கேட்டபடி தான் இருக்கிறோம். அதே நேரத்தில் பழைய பாடல்களின் மீதான் ஈர்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த அம்சத்தை தான் லோகேஷ் கனகராஜின் படங்கள் பிரதிபலிக்கின்றன. மொழி வித்தியாசம் இல்லாமல் எந்த பாடலை அவர் படத்தில் கேட்கலாம்.
    ஒவ்வொரு காலத்திலும் தீவிர சினிமா ரசிகர்கள் மற்றும் பொழுதுபோக்கு சினிமா ரசிகர்கள் இடையில் மோதல் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இரு தரப்பினரையும் திருப்திபடுத்துவது கடினம்தான் . ஆனால் இரு தரப்பினரையும் ஒரே திரையரங்கில் பக்கத்து பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்து பார்க்க வைத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். 

    மேலும் காண

    Source link

  • Vikram – 2 years of Mahaan வீடியோ பகிர்ந்த Vikram

    Vikram – 2 years of Mahaan வீடியோ பகிர்ந்த Vikram


    <p>2 years of Mahaan வீடியோ பகிர்ந்த Vikram</p>

    Source link

  • chithha director next with vikram chiyaan 62 update released

    chithha director next with vikram chiyaan 62 update released


    சித்தா படத்தை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விகரம் நடித்து வரும் படத்தில் விக்ரமுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
    விக்ரம்
    தமிழ் சினிமாவின் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் விக்ரம். சேது, பிதாமகன், அந்நியன், தெய்வத் திருமகள், ஐ, ராவணன் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அதே நேரம் சாமி, தூள், தில், ஜெமினி உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றிப் படங்கள் விக்ரமுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளன. முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் ஆதித்த கரிகாலனாக தோன்றிய விக்ரம் தனது பார்வையாளர்களைக் கவர்ந்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து முடித்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள படம் சீயான் 61.
    சீயான் 62
    இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும் 62ஆவது படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியது.  பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கி கவனமீர்த்த இயக்குநர் சு.அருண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.
    ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். எச்.ஆர்.பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மாமனிதன், ஆர்.ஆர்.ஆர், டான், கேப்டன் உள்ளிட்ட படங்களை விநியோகம் செய்துள்ள இத்தயாரிப்பு நிறுவனம் மும்பைக்கார் மற்றும் தக்ஸ் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் நடிகர் விக்ரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்து பின்னணியில் அமைந்த கதையில் காணப்பட்டார். இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தற்போது இந்தப் படத்தில் விக்ரமுடன் நடிகர் எஸ்.ஜே சூர்யா இணைந்து நடிக்கவுள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா இருவரது ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.

    We are blessed to have a @iam_SJSuryah joins the cast of @chiyaan’s #Chiyaan62 – we warmly welcome you to the energetic team sir An #SUArunKumar filmAn @gvprakash musical @hr_pictures @riyashibu_ @shibuthameens @propratheesh @vamsikaka @nareshdudani @proyuvraaj pic.twitter.com/wb07aHDx7J
    — HR Pictures (@hr_pictures) February 9, 2024

    நிலுவையில் நிற்கும் விக்ரம் படங்கள்
    ஏற்கெனவே நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகாமல் பல சவால்களை சந்தித்து வருகிறது. இப்படியான நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் வருகின்ற ஏப்ரல் மாதம் ரிலீஸாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தல்கள் வர இருப்பதால் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விக்ரம் நடித்துள்ள அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் நெருங்கி பின் தள்ளிப்போவது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்லது. இப்படியான நிலையில் சியான் 62 படத்தின் இந்த அப்டேட் அவர்களுக்கு உற்சாகமளித்துள்ளது.

    மேலும் காண

    Source link

  • vikram thanglalaan movie may be postponed again due to election | Thangalaan: விக்ரமின் தங்கலான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறதா?

    vikram thanglalaan movie may be postponed again due to election | Thangalaan: விக்ரமின் தங்கலான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறதா?


    விக்ரம் நடித்து துருவ நட்சத்திரம் படத்தைத் தொடர்ந்து தற்போது தங்கலான் படமும் நிலுவையில் இருப்பது ரசிகர்களை சோர்வடையச் செய்துள்ளது.
    தங்கலான்
    பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்  நடித்துள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தங்கலான் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் ஒத்திப் போக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    என்ன காரணம்
    கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி தங்கலான் படம் ரிலீஸாக இருந்த நேரத்தில் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப் பட்டது. தங்கலான் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும்  படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் படத்தை வெளியிடுவதற்கு முன் நிறைய வேலைகள் இருப்பதாகவும் மேலும் இது ஒரு பெரிய படம் என்பதால் இந்தப் படம் எந்த படத்துடனும் இல்லாமல் தனியாக ஒரு ரிலீஸ் தேதி தேவைப்படுகிறது.
    மேலும் தங்கலான் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை விரைவில் படக்குழு தொடங்க இருப்பதாக  தயாரிப்பாளர் தனஞ்சயன் முன்னதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், துபாய் , மலேசியா , சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ப்ரோமோஷன் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். படம் ஏப்ரலில் வெளியாவதற்கு இதுவே முதன்மையாக காரணம் என்று கூறப்பட்டது
    தேர்தல் முடியும் வரை ஒத்திவைப்பு
    தங்கலான் படத்திற்காக ஏப்ரல் மாதத்தை எதிர்பார்த்து மிக ஆர்வமாக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடையும் வகையில் தற்போது இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல்கள்  நடைபெற இருப்பதால் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை ஏப்ரல் மாத்தில் இருந்து இன்னும் சில மாதங்கள் தள்ளி ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நேரத்தில் இப்படம் வெளியானால் அது பொதுமக்களின் கவனத்தை தேர்தலில் இருந்து திசைத் திருப்புவதாக அமையும் என்று படக்குழ் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் படக்குழு சார்பில் இருந்து தெரிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
    அடுத்தடுத்து நிலுவையில் விக்ரம் படங்கள்
    ஏற்கனவே கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் பல்வேறு சிக்கல்களால் ரிலீஸாகாமல் நிலுவையில் நிற்கிறது. துருவ நட்சத்திரம் படம் எப்போது ரிலீஸாகும் என்று எந்த விதமான உறுதியான தகவலும் வெளிவரவில்லை. இப்படியான நிலையில் தற்போது தங்கலான் படத்தின் ரிலீஸ் இரண்டாவது முறையாக தள்ளிப் போவது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

    மேலும் காண

    Source link

  • தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்!

    தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்!


    தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்!

    Source link

  • Thangalaan Movie Release Date Postponed To April From January 26th Left Vikram Fans Disappointed

    Thangalaan Movie Release Date Postponed To April From January 26th Left Vikram Fans Disappointed

    தங்கலான் ரிலீஸ் தேதி
    நடிகர் விக்ரம் – இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    18ஆம் நூற்றாண்டில் கோலார் தங்கவயலில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பீரியாடிக் ஆக்ஷன்  திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான்.  மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    வரவேற்பு பெற்ற டீசர்
    தமிழ் பழங்குடியினர் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் 2 மாதங்களுக்கு முன் வெளியாகி விக்ரம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என முதலில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பின் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய் இப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 
    தொடர்ந்து படத்தை ஆஸ்கர் வரை கொண்டு படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்காக படத்தினை மேலும் செழுமைப்படுத்தி வருவதாகவும், இதனால் பட வெளியீடு மேலும் தள்ளிப்போகும் எனவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. அதேபோல் சில காட்சிகளை ரீ ஷூட் செய்ய இயக்குநர் பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் முன்னதாக படக்குழு இதற்கு மறுப்பு தெரிவித்தது.
    விக்ரம் ரசிகர்கள் கவலை
    இந்நிலையில் தற்போது தங்கலான் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று பொங்கல் வாழ்த்து தெரிவித்து தங்கலான் படக்குழ் புதிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் படம் வெளியாக உள்ளதாக இந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையாத நிலையில், தங்கலான் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    துருவ நட்சத்திரம் வரிசையில் தங்கலான்?
    ஏற்கெனவே விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த நவ.24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் கௌதம் மேனனின் நிதி சிக்கல் காரணமாக மீண்டும் தள்ளிப்போனது. 
    இந்நிலையில் துருவ நட்சத்திரம் விரைவில் வெளிச்சத்தைக் காணும் என்றும், தாங்கள் படத்தைக் கைவிடவில்லை என கௌதம் மேனன் முன்னதாக நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
    இச்சூழலில் ஏற்கெனவே தொடர்ந்து தள்ளிப்போய் வரும் துருவ நட்சத்திரம் படத்தை எதிர்பார்த்து விக்ரம் ரசிகர்கள் காத்துள்ள நிலையில், தற்போது இந்த வரிசையில் தற்போது தங்கலான் திரைப்படமும் இணைந்துள்ளது. எனினும் துருவ நட்சத்திரம் படம்போல் பிரச்னைகளில் தங்கலான் சிக்காததால் இப்படம் இன்னும் மெருகேறி வெயிட்டாக வெளிவரும் என்றும் விக்ரம் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.
    மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
    Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!
     

    Source link

  • On This Day January 10th 6 Tamil Movies Released For Pongal Festival | Pongal Movies: இதே நாளில் ரிலீசான 6 பொங்கல் படங்களின் நிலை என்ன தெரியுமா?

    On This Day January 10th 6 Tamil Movies Released For Pongal Festival | Pongal Movies: இதே நாளில் ரிலீசான 6 பொங்கல் படங்களின் நிலை என்ன தெரியுமா?

    Pongal Movies: தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஜனவரி மாதம் என்றாலே கொண்டாட்டம் தான். காரணம் புத்தாண்டு,பொங்கல் தொடர் விடுமுறை, குடியரசு தினம் என அடுத்தடுத்து லீவு நாட்கள் வருவதால் முன்னணி நடிகர்கள் படங்களும் ஜனவரி மாதத்தை குறிவைப்பது வழக்கம். அந்த வகையில் ஜனவரி 10 ஆம் தேதி இதுவரை பொங்கல் ரிலீசாக வெளியான படங்களின் நிலை என்ன என்பதை காணலாம். 
    மிஸ்டர் பாரத் 
    1986 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நடித்த படம் “மிஸ்டர் பாரத்”. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இது அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார் நடிப்பில் 1978 ஆம் ஆண்டில் வெளியான திரிசூல் என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்காகும். இப்படத்தில் ரஜினிக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருப்பார் என்றாலும் இருவரது இமேஜூக்கும் ஏற்ற வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. 
    தூள் 
    2003 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விக்ரம் 2வது முறையாக நடித்த படம் “தூள்”. இந்த படத்தில் ஜோதிகா, ரீமாசென், விவேக், சாயாஜி ஷிண்டே, சகுந்தலா, பசுபதி, பறவை முனியம்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த தூள் படம் ஒரு பக்கா ஆக்‌ஷன் படமாக அமைந்து ரசிகர்களை கவர்ந்தது. விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இப்படத்தில் தான் முதல்முறையாக கிளைமேக்ஸ் காட்சியில் பாடல் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புறப் பாடகர் பரவை முனியம்மா பாடிய சிங்கம்போல நடந்து வரான் பாடல் பட்டிதொட்டி எங்கும் செம ஹிட். 
    ஜில்லா
    2014 ஆம் ஆண்டு ஆர்.டி.நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, பூர்ணிமா பாக்யராஜ், மஹத், நிவேதா தாமஸ் என பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜில்லா’. இமான் இசையமைத்த இப்படம் படத்தின் அதீத நீளம் சுமாரான வெற்றியையே பெற்றது. இருந்தாலும் ஜில்லா படத்தின் பாடல்கள் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் ஆக அமைந்தது. 
    வீரம் 
    அதே 2014 ஆம் ஆண்டு இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் அஜித்குமார்  முதல்முறையாக இணைந்த படம் “வீரம்”. கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் விஜய் – அஜித் படங்கள் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதின. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த வீரம் படத்தில் தமன்னா, பாலா, சந்தானம், நாசர், அபிநயா என பலரும் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை கொண்ட இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
    பேட்ட
    2019 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூடன் ரஜினி கூட்டணி அமைத்த படம் தான் “பேட்ட”. இந்த படத்தில் த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ் என பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த பேட்ட படம் ஒரு ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்புராஜால் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 
    விஸ்வாசம் 
    அதே 2019ல் சிறுத்தை சிவாவுடன் அஜித் 4வது முறையாக இணைந்த “விஸ்வாசம்” படம் பொங்கல் வெளியீடாக ரிலீசானது. இப்படத்தில் நயன்தாரா, அனிகா சுரேந்தர், ஜெகபதி பாபு, விவேக், கோவை சரளா, ரோபா ஷங்கர், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்த இப்படம் அஜித்துக்கு மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக டி.இமான் தேசிய விருது பெற்றிருந்தார். 

    Source link

  • Director Rajakumaran Stirs Controversy Says Vikram Cannot Perform | Vikram: ‘விக்ரமுக்கு நடிக்க தெரியாது’ தேவயானி கணவர் பேட்டியால் அதிர்ச்சி

    Director Rajakumaran Stirs Controversy Says Vikram Cannot Perform | Vikram: ‘விக்ரமுக்கு நடிக்க தெரியாது’ தேவயானி கணவர் பேட்டியால் அதிர்ச்சி

    விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடிகர் விக்ரமுக்கு க்ளோஸ் அப் ஷாட் வைத்தபோது அவருக்கு ரியாக்‌ஷன் கொடுக்கத் தெரியவில்லை என்று இயக்குநர் ராஜகுமாரன் தெரியவில்லை.
    விக்ரம்
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சேது , பிதாமகன், அந்நியன், ராவணன் ,  தெய்வத்திருமகள் என தனது சினிமா கரியரில் பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக அனைவரையும் மிரள வைத்தார்.
    தற்போத் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜய் அஜித் வரிசையில் நடிகர் விக்ரமுக்கு என்று பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இப்படியான ஒரு நடிகருக்கு நடிக்க வராது என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர் ராஜகுமாரன்.
    விக்ரமுக்கு நடிக்கத் தெரியாது
    நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் , காதலுடன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜகுமாரன். இந்தப் படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நேர்காணல் ஒன்றில் ராஜகுமாரன் நடிகர் விக்ரமைப் பற்றி பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
    இந்த வீடியோவில் அவர் ‘ சியான் விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. விக்ரமால் ரஜினி அல்லது கமல்ஹாசனைப் போல் மிமிக் செய்ய முடியும். இதைத் தவிர்த்து அவரால் வேறு எதுவும் புதிதாக நடிக்க முடியாது. அவரால் கெட் அப் மட்டுமே மாற்றமுடியும். அதிலும் குறிப்பாக க்ளோஸ் அப் ஷாட் வைத்தால் அதற்கு எப்படி ரியாக்‌ஷன் கொடுக்க வேண்டும் என்பது விக்ரமுக்குத் தெரியாது. நான் இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.” என்று கூறியுள்ளார்.  அவரது இந்த வீடியோவை விக்ரம் ரசிகர்கள் பார்த்து கொந்தளித்து வருகிறார்கள். ‘ விக்ரமுக்கு நடிக்கத் தெரியாது என்றால் பிதாமகன், தெய்வத் திருமகள் படத்தில் அவர் நடித்தது  நடிப்பு இல்லையா?” என்று கொந்தளித்து வருகிறார்கள்.
    தங்கலான்
    விக்ரம், பார்வதி திருவோது, மாளவிகா மோகனன் உள்ளிட்டவர்கள் நடித்து பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தங்கலான், ஜி.வி பிரகாஷ் இசையமைத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜனவரி 26 ஆம் தேதி தங்கலான் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 
    விக்ரமின் 62 ஆவது படத்தை சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இயக்க இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், சமீபத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

    மேலும் படிக்க : Devara Part-1 Glimpse: செங்கடலில் கொள்ளையர்களை துவம்சம் செய்யும் ஜூனியர் என்.டி.ஆர்.. தேவரா க்ளிம்ஸ் வீடியோ ரிலீஸ்!

    Source link