Tag: ராமேஸ்வரம்

• Visit Rameshwaram tourist places in a special Tamil Nadu government tour bus for just 80 Rs TNN | ரூ.80 இருந்தால் போதும்.. ராமேஸ்வரத்தை சுற்றிப்பார்க்கலாம்

Visit Rameshwaram tourist places in a special Tamil Nadu government tour bus for just 80 Rs TNN | ரூ.80 இருந்தால் போதும்.. ராமேஸ்வரத்தை சுற்றிப்பார்க்கலாம்

ராமேஸ்வரம் அழகிய தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஒரு தீவு நகரமாகும். ‘இந்தியப் பெருங்கடலில் உள்ள பாலம்’ என்றும் பிரபலமாக அறியப்படும் இந்த நகரம் அதன் விருந்தினர்களுக்கு வழங்க நிறைய உள்ளது. அற்புதமான கடல் காட்சிகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த விருந்தோம்பல் ஆகியவற்றுடன், ராமேஸ்வரம் நாட்டிலேயே மிகவும் வரவேற்கத்தக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உங்கள் அடுத்த பயணத்திற்கு ராமேஸ்வரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.

மதுரை விமான நிலையம் ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள விமான நிலையமாக இருக்கிறது.  இந்த விமான நிலையம் முக்கிய தேசிய மற்றும் சர்வதேச விமான நிலையங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து ராமேஸ்வரத்தை பேருந்து, வண்டிகள் அல்லது வாடகை டாக்சிகள் மூலம் அடையலாம்.

ராமேஸ்வரம் ரயில் பாதை வழியாக பிரதான நிலப்பகுதிக்கு ரயில் இணைப்பு வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இது சென்னை, மதுரை மற்றும் திருவனந்தபுரம் போன்ற தென்னிந்திய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் செல்வதற்கு இது மிகவும் சிக்கனமான வழியாகும்.

ராமேஸ்வரம் கோவிலுக்கு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிக்கலான கட்டிடக்கலைப் பகுதியாக உள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களுக்கு பிரார்த்தனை செய்ய வருகிறார்கள்.

இந்த நகரம் பக்தர்களால் புனிதமாகக் கருதப்படும் “புனித குளியல்”களால் நிறைந்துள்ளது. அக்னிதீர்த்தம் கோயிலின் பாரம்பரிய சுற்றுப்புறத்திற்கு வெளியே அமைந்துள்ள மிகப்பெரிய குளியல் ஆகும். சுற்றுலாப் பயணிகள் அக்னிதீர்த்தத்தில் புனித நீராடுவதற்காக ஒரு கலாச்சார நடைமுறையாக வருகிறார்கள். வாரத்தின் எந்த நாளிலும் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை அக்னிதீர்த்தத்தை தரிசிக்கலாம்.

அடுத்தபடியாக,ராமேஸ்வரத்தின் கிழக்கு முனையில் அமைந்திருக்கிறது தனுஷ்கோடி. மீனவ நகரமான இது நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலாதலமும் கூட. 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் மண்ணோடு மண்ணாகி, சிதிலடைந்து கிடைக்கும் தனுஷ்கோடியில் இன்றும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆங்காங்கே வசித்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கு இவர்களே வழிக்காட்டியாக உள்ளனர். கோயில் தொடங்கி, தேவாலயங்கள், கட்டிடங்கள், ரயில் நிலையம் என இங்கு பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. எனவே, தனுஷ்கோடி சுற்றுலா செல்பவர்கள் அதை சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாக இருக்கிறது.

இந்நிலையில், ராமேஸ்வரத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ராமநாத சுவாமி திருக்கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு அதன் பின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்ப்பதற்கு சௌகரியமாக இருப்பதற்காக சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சுற்றுலா பேருந்துகள் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளதாகவும், அதில் வெறும் 80 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.

இந்த பேருந்துகள் அக்னி தீர்த்த கடற்கரை, ராமர் தீர்த்தம், சீதா தீர்த்தம், லக்ஷ்மண தீர்த்தம், ராமர் பாதம், கலாம் இல்லம் மற்றும்  கலாம் தேசிய நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றி பார்க்க ஏதுவாக இயக்கப்பட உள்ளதாகவும் ஒரு முறை என்பது ரூபாய் பயன் அட்டை எடுத்தால் போதும் இந்த சிறப்பு பேருந்துகள் எங்கெங்கே வருகிறதோ அங்கெல்லாம் இந்த பயண அட்டையை பயன்படுத்தி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பயணித்துக் கொள்ளலாம் என ராமேஸ்வரம்  போக்குவரத்து கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link

• To Participate In Kachchatheevu Festival Devotees Can Apply Before 6th February

To Participate In Kachchatheevu Festival Devotees Can Apply Before 6th February

Kachchatheevu: கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் மொத்தமாக 8 ஆயிரம் பேர் பங்கேற்க, இலங்கையின் யாழ்பாணம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.’
கச்சத்தீவு திருவிழா:
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். இதில் இலங்கை மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.  இதில் முதல் நாளில் இந்தியா சார்பிலான கொண்டாட்டங்களும், இரண்டாவது நாளில் இலங்கை பக்தர்கள் சார்பிலான கொண்டாட்டங்களும் நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்.23ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது.
8,000 பக்தர்களுக்கு அனுமதி:
திருவிழாவின் முதல் நாளான பிப்.23ம் தேதியன்று மாலை இந்திய பக்தர்கள், பாதிரியார்கள் தரப்பில் கொடியேற்றம், இரவில் தேர்பவனி நடைபெறும். தொடர்ந்து,  பிப்ரவரி 24ம் தேதியன்று அந்தோணியார் ஆலய வளாகத்தில் இலங்கை பக்தர்கள், பாதிரியார்கள் பங்கேற்கும் சிறப்பு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும். இதில் இந்தியா சார்பில் நான்காயிரம் பேர் மற்ரும் இலங்கை சார்பில் 4000 பேர் என, மொத்தமாக 8000 பேர் பங்கேற்க யாழ்ப்பாணம் மாவட்ட அரசு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இந்தியர்கள் பயணிப்பதற்கு ஏதுவாக, பிப்ரவரி 23ம் தேதி அதிகாலை 6 மணி முதல் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாக அனுமதி பெற்ற பக்தர்கள் படகில் கச்சத்தீவு செல்லலாம். மறுநாள் காலை 10 மணிக்குள் திருவிழா திருப்பலி பூஜை நிறைவு பெற்று, கச்சத்தீவில் இருந்து படகில் புறப்பட்டு மீண்டும் ராமேஸ்வரம் வர இலங்கை கடற்படை அனுமதி அளித்துள்ளது.
பிப்ரவரி 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்:
இந்நிலையில், கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க விரும்புபவர்கள், பிப்ரவரி 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கச்சத்தீவு திருவிழா ஒருங்கிணைப்பாளரும்,  ராமேஸ்வரம் வேர்க்கோடு புனித ஜோசப் ஆலய பாதிரியாருமான சந்தியாகு பேசுகையில், ‘கச்சத்தீவு திருவிழா செல்வதற்கான விண்ணப்ப படிவ விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பக்தர்கள், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிப்ரவரி 6ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். அனுமதி கிடைத்த பக்தர்கள் தடை செய்யப்பட்ட எவ்வித பொருட்களையும் படகில் கொண்டு செல்லக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.  விண்ணப்ப படிவத்திற்கு ரூ.10, படகில் செல்ல கட்டணமாக ரூ.2 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆலய வரலாறு:
1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது. கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்துக் காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் இங்கு வழிபாடு நடத்துவர். ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு திருவிழா, அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கச்சத்தீவு 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக் நீரிணை’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.

Source link

• PM ModI Rameshwaram Plan On Day 3 Tn Visit Check The Complete Details Here | PM Modi Rameswaram: ராமேஸ்வரம் அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி

PM ModI Rameshwaram Plan On Day 3 Tn Visit Check The Complete Details Here | PM Modi Rameswaram: ராமேஸ்வரம் அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி

PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் இருந்து தீர்த்த கலசங்களை எடுத்துக் கொண்டு, பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்புகிறார்.
பிரதமர் மோடி தமிழகம் வருகை:
தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த வெள்ளியன்று மாலை சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று திருச்சிக்கு சென்ற பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். இதையடுத்து தனது பயணத்தின் இறுதி அங்கமாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்ற அவர், புன்னிய தீர்த்தங்களில் குளித்து அங்குள்ள ரங்கநாத சுவாமி ஆலயத்தில் இறைவழிபாடு நடத்தினார். தொடர்ந்து இன்றும் அவர் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளார்.
பிரதமர் மோடியின் ராமேஸ்வர பயண திட்டம்:

நேற்றைய வழிபாட்டை தொடர்ந்து நேற்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்கியுள்ளார்
இதையடுத்து இன்று காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புனித நீராடுகிறார்
அந்த வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார்.
இறுதியாக கலசத்தில் சேகரித்த 22 புனித தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.

டெல்லி சென்றடையும் பிரதமர் மோடி நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தீர்த்த கலசங்களை கொண்டு சேர்க்கிறார். தொடர்ந்து, குழந்தை ராமர் சிலையை கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை செய்து, ஆரத்தி வழங்க உள்ளார். இதற்காக 11 நாட்களுக்கான சிறப்பு விரதத்தை பிரதமர் மோடி கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது,
கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்:
பிரதமரின் வருகையினை முன்னிட்டு ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதசுவாமி கோயில், பிரதமர் தங்க உள்ள ராமகிருஷ்ண மடம் ஆகியவை சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இன்று நண்பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி செல்லும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது
ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link

• பிரதமர் மோடி ராமநாதபுரம் வருகை: விடுதலையான தமிழக மீனவர்கள்

பிரதமர் மோடி ராமநாதபுரம் வருகை: விடுதலையான தமிழக மீனவர்கள்

பிரதமர் மோடி ராமநாதபுரம் வருவதையொட்டி இலங்கை சிறையில் இருந்த 40 தமிழக மீனவர்கள் இன்று (ஜனவரி 20) விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 40 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கடிதம் எழுதினார்.

இந்தநிலையில் தான், நேற்று (ஜனவரி 19) சென்னை வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று மோடி சாமி தரிசனம் செய்தார். மதியம் 12.45 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு 2.05 மணிக்கு பிரதமர் மோடி ராமேஸ்வரம் சென்றடைகிறார்.

மோடி ராமநாதபுரம் செல்லும் முன்பே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால், 40 மீனவர்கள் இன்றே தமிழகம் திரும்புவார்கள் என்று மீனவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அவர்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது போல, பிரதமர் மோடி ராமநாதபுரம் செல்லும் முன்பே 40 தமிழக மீனவர்களை இலங்கை அரசு இன்று விடுதலை செய்துள்ளது.

Source link

• சாலை முழுவதும் கட்சிக் கொடிகள்..! விண்ணைப் பிளக்கும் ஜெய்ஸ்ரீராம் கோசம்.. மோடியை வரவேற்கத் தயாரான பாஜகவினர்..!

சாலை முழுவதும் கட்சிக் கொடிகள்..! விண்ணைப் பிளக்கும் ஜெய்ஸ்ரீராம் கோசம்.. மோடியை வரவேற்கத் தயாரான பாஜகவினர்..!

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க பாஜகவினர் ஜெய் ஸ்ரீ ராம் கோசங்களை எழுப்பியவாறு பிரதமரை வரவேற்க ராமேஸ்வரத்திற்கு பாஜகவினர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

ஆன்மீக பயணமாக ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க, ராமேஸ்வரத்தில் பாஜகவினர் திரண்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார்.

இன்று மதியம் அவர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.

இரண்டு நாள் ஆன்மீக சுற்றுப்பயணமாக வரும் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இன்று இரவு தங்குகிறார். அவரை வரவேற்கும் விதமாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பகுதியில் இருந்து பாஜக தொண்டர்கள் வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

அவரை வரவேற்கும் விதமாக சாலைகளின் இரு புறங்களிலும் வானளாவிய உயரத்தில் கட்சி கொடி தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளது. மகளிர் அணியினர், பாஜக நிர்வாகிகள் என சாரை சாரையாக ராமேஸ்வரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

Source link

• PM Modi Visit Rameswaram Ban On Sami Darshan North Indians Devotees Suffer – TNN | PM Modi Visit Rameswaram:ராமேஸ்வரத்தில் சாமி தரிசனத்திற்கு தடை

PM Modi Visit Rameswaram Ban On Sami Darshan North Indians Devotees Suffer – TNN | PM Modi Visit Rameswaram:ராமேஸ்வரத்தில் சாமி தரிசனத்திற்கு தடை

பிரதமர் நரேந்திர மோடி வருகையால், ராமேசுவரத்தில் பொதுப் போக்குவரத்துக்கும் சாமி தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதனால் வடமாநிலங்களில் இருந்து வழக்கம் போல ராமேஸ்வரத்திற்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், ஏராளமானோர் அங்கு தங்கும் விடுதிகளிலும் தங்க இயலாமல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ளார். இதையொட்டி, ராமேசுவரத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆன்மீக பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 2.05 மணிக்கு ராமேசுவரம் வந்தடைகிறார்.
ஸ்ரீரங்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, ராமேசுவரம் மாதா அமிர்தானந்தமயி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு இன்று பிற்பகல் 2.05 மணிக்கு வருகிறார். அங்கிருந்து காரில் ராமநாத சுவாமி கோயிலுக்குச் செல்லும் பிரதமர், பகல் 2.45 மணிக்கு அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடுவார் என கூறப்படுகிறது
தொடர்ந்து, ராமேசுவரம் கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, கோயிலில் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7.15 மணி வரை பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், இரவு ராமேசுவரம் ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார் என சொல்லப்படுகிறது.

நாளை (ஜன.21) காலை 8.55மணிக்கு ராமகிருஷ்ண மடத்திலிருந்து காரில் தனுஷ்கோடி அரிச்சல்முனை செல்லும் பிரதமர், அங்குகாலை 9.30 முதல் 10 மணி வரை தரிசனம் மற்றும் பூஜை செய்கிறார். பின்னர், காலை 10.30 மணிக்கு தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறார். காலை 11.05 மணிக்கு அங்கிருந்து காரில் ராமேசுவரம் திரும்பி ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று, விமானம் மூலம்பிற்பகல் 12.35 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் 2.30 மணிவரையிலும், நாளை காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரையிலும் ராமேசுவரத்தில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் ராமநாத சுவாமிகோயிலில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதனால் வடமாநிலங்களில் இருந்து வழக்கம் போல ராமேஸ்வரத்திற்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக ஏராளமானோர் அங்கு தங்கும் விடுதிகளிலும் தங்க இயலாமல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்க்க வழி இல்லாமலும் தெருக்களில் சுற்றித் திரிகின்றனர்.

Source link

• PM ModI Travelling To Rameshwaram To Vsit Ramanadhaswamy Temple Security On High Alert | PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி

PM ModI Travelling To Rameshwaram To Vsit Ramanadhaswamy Temple Security On High Alert | PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி

PM ModI Rameshwaram: பிரதமர் மோடியின் வருகையையொட்டி, ராமேஸ்வரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன், பலத்த பாதுககாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தமிழகம் வருகை:
தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். இந்நிலையில், பயணத்தின் இரண்டாவது நாளான இன்று திருச்சிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்த உள்ளார். தொடர்ந்து பிற்பகலில் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்று நாளை வரை ஆன்மிக்க செயல்பாடுகளில் ஈடுபட உள்ளார்.
பிரதமர் மோடியின் ராமேஸ்வர பயண திட்டம்:

திருச்சி பயணம் முடிந்தவுடன் அங்கிருந்து பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்
அங்கிருந்து ராமநாதசுவாமி கோவிலுக்கு தரை மார்க்கமாக செல்கிறார்.
அங்கு அக்னி தீர்த்தம் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சிறப்பு பூஜை செய்து ராமநாதசுவாமியை வழிபாடு செய்கிறார்.
தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்குகிறார்.
இதையடுத்து நாளை காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புனித நீராடுகிறார்
அந்த வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார்.
இறுதியாக கலசத்தில் சேகரித்த 22 புனித தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.

கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்:
பிரதமரின் வருகையினை முன்னிட்டு ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதசுவாமி கோயில், பிரதமர் தங்க உள்ள ராமகிருஷ்ண மடம் ஆகியவை சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நண்பகல் 12 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் ராமேஸ்வரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்களிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்குறுஇப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி செல்லும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
தங்கும் விடுதிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையம் போன்ற இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதோடு, இலங்கைத் தமிழர் மறு வாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்கள் விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன
ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது
ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link

• PM Modi visit Rameswaram: பிரதமர் மோடி வருகை..பக்தர்கள் தரிசனத்துக்கு தடை.. ராமேஸ்வரத்தில்  3 அடுக்கு பாதுகாப்பு

PM Modi visit Rameswaram: பிரதமர் மோடி வருகை..பக்தர்கள் தரிசனத்துக்கு தடை.. ராமேஸ்வரத்தில்  3 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி இன்று, ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, கடந்த 12-ம் தேதியில் இருந்து பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டு வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலும்; திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலங்களாக திகழ்கின்றன. அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.

இன்று காலை 8:30 மணிக்கு திருச்சிக்கு தனி விமானத்தில் செல்கிறார் பிரதமர் மோடி. 11:00 மணிக்கு காரில், சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் மோடி, தாயார், ரெங்கநாதர் மற்றும் அங்குள்ள சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.

இன்று மதியம் அவர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கிருந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.

21-ம் தேதி காலை மீண்டும் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார். பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் கோயில், ராமநாதசுவாமி கோயில்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்திற்கு இன்று பிரதமர் மோடி வர உள்ளதால், 3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் தங்கும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, ராமநாதசுவாமி கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் அக்னி தீர்த்தம் கடல், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள், பாம்பன் பாலம் போன்ற கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் உள்ள பொது இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தமிழர் மறு வாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்கள் விபரங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது..

அதேபோல, ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link

• Prime Minister Modi Will Visit Tamilnadu Today On A 3 Day Visit To Kickoff The Khelo India Sports | PM Modi TN Visit: மாலை 04.50-க்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி

Prime Minister Modi Will Visit Tamilnadu Today On A 3 Day Visit To Kickoff The Khelo India Sports | PM Modi TN Visit: மாலை 04.50-க்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி

PM Modi TN Visit: தமிழ்நாட்டிற்கு 3 நாள் பயணமாக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை, திருச்சி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பயணம் செய்ய உள்ளார்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி:
தமிழ்நாட்டில் இன்று தொடங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளை, சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அதில் பங்கேற்று பிரதமர் மோடி போட்டிகளை மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர்ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதயொட்டி பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கும் மோடி:
முதல் நாள் (ஜனவரி – 19)

பெங்களூருவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி
விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்கின்றனர்
ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு 5.20 மணிக்கு வருகிறார் பிரதமர் மோடி
காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரும் பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது
கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு இரவு 7.45 மணிக்கு காரில் ஆளுநர் மாளிகையை சென்றடைகிறார் பிரதமர் மோடி
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், தமிழக பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து இரவு அங்கேயே ஓய்வெடுக்கிறார்

இரண்டாவது நாள் (ஜனவரி – 20)

சனிக்கிழமை காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானத்தில் திருச்சி செல்கிறார்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 10.55 மணி அளவில் தரிசனம் செய்வதுடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்

காரில் ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, மதியம் 2.05 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறார்.
2.10 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதோடு, அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார்.

மூன்றாவது நாள் (ஜனவரி – 21)

ஞாயிற்றுக்கிழமை காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பிரதமர் மோடி புனித நீராடுகிறார்
தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார்.
காலை 10.05 மணிக்கு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார்.
காலை 10.25 முதல் 11 மணி வரை கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார்
11.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்

பலத்த போலீஸ் பாதுகாப்பு:
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை, திருச்சி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசாருடன், 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தங்கும் இடங்கள் மற்றும் செல்லும் வழிகளில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். குறிப்பிட்ட சில மார்கங்களில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் உள்ள பல புன்னிய ஸ்தலங்களில் பிரதமர் மோடி வழிபாடு நடத்துவது குறிப்பிடத்தக்கது.

Source link

• PM Modi TN Visit Rameswaram Officials Strict Measures Tourists Suffer- TNN | நாளை பிரதமர் வருகை

PM Modi TN Visit Rameswaram Officials Strict Measures Tourists Suffer- TNN | நாளை பிரதமர் வருகை

பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 20 மற்றும் 21ஆகிய இரு தினங்கள் ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக பயணமாக வர இருப்பதையடுத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தை சுற்றியுள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள நபர்களின் விவரங்கள் மற்றும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களின் விவரங்கள் மற்றும் கோயிலை சுற்றி உள்ள வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனால், வழக்கம்போல் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் ஆன்மீக கடன்களை நிறைவேற்ற வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பயணிகள் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அங்கு தங்கும் விடுதிகளில் பலத்த சோதனை நடைபெற்று வருவதால், அவர்களை தங்க அனுமதிக்காமல் அதிகாரிகளின் தொல்லைகளுக்கு பயந்து தனியார் விடுதி நிறுவனத்தினர் கராற் காட்டுகின்றனர். இதனால், முன் பதிவு செய்தவர்களும் கூட அவதி அடைகின்றனர்.

Source link

• Prime Minister’s Visit Tomorrow Rameswaram Officials Show Rudeness Tourists Suffer – TNN | நாளை பிரதமர் வருகை

Prime Minister’s Visit Tomorrow Rameswaram Officials Show Rudeness Tourists Suffer – TNN | நாளை பிரதமர் வருகை

பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 20 மற்றும் 21ஆகிய இரு தினங்கள் ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக பயணமாக வர இருப்பதையடுத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தை சுற்றியுள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள நபர்களின் விவரங்கள் மற்றும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களின் விவரங்கள் மற்றும் கோயிலை சுற்றி உள்ள வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனால், வழக்கம்போல் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் ஆன்மீக கடன்களை நிறைவேற்ற வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பயணிகள் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அங்கு தங்கும் விடுதிகளில் பலத்த சோதனை நடைபெற்று வருவதால், அவர்களை தங்க அனுமதிக்காமல் அதிகாரிகளின் தொல்லைகளுக்கு பயந்து தனியார் விடுதி நிறுவனத்தினர் கராற் காட்டுகின்றனர். இதனால், முன் பதிவு செய்தவர்களும் கூட அவதி அடைகின்றனர்.

Source link