Tag: ரஜினி

  • Rajini movie scene in americal dad sitcom surprises rajini fans

    Rajini movie scene in americal dad sitcom surprises rajini fans


    அமெரிக்கன் டேட் என்கிற கார்ட்டூன் தொடரின் ரஜினியின் ‘அதிசயப்பிறவி’ படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது.
    ரஜினிகாந்த்
    தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கம் செலுத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். நடப்பது, முடியைக் கோதுவது, தூக்கிப் போட்டு சிகரெட்டை பிடிப்பது, உள்ளே ஒரு டீ ஷர்ட் அணிந்து வெளியே சட்டை பட்டனை திறந்து விடுவது, என ரஜினி எதை செய்தாலும் அதை அந்தக் காலத்தின் வெகுஜனம் அப்படியே பின்பற்றும். எந்திரன் படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் எல்லாம் சிட்டி ரோபோட் மாதிரியே புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்ததை நாம் பார்த்திருப்போம். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வரை ரஜினியின் ஸ்டைலை ரசித்து வருகிறார்கள். 
    ஹாலிவுட் சிட்காமில் ரஜினி படக்காட்சி

    ஹாலிவுட்டில் பொழுதை போக்குவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட சிட்காம் தொடர்கள் அதிகம். ஃப்ரண்ட்ஸ், தி ஆபிஸ், ஹவ் ஐ மெட் யுவர் மதர் போன்ற தொடர்கள் இன்றுவரை தொடர்ச்சியாக பார்க்கப்பட்டு வருகின்றன. இதே வகையிலான சிட்காம் தொடர்கள் அனிமேஷனிலும் வெளியாகின. தற்போது இந்தத் தொடர்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் பெருகியுள்ளார்கள். இதன் விளைவாக இந்த தொடர்கள் தமிழில் டப் செய்து வெளியிடப்படுகின்றன. அப்படி தமிழில் வெளியாகி வரும் ஒரு தொடர்தான் “அமெரிக்கன் டேட்”.
    இந்தத் தொடரில் வரும் ஒரு காட்சியில் ரஜினி நடித்த அதிசயப்பிறவி படத்தின் ஒரு காட்சி அப்படியே கார்ட்டூன் வடிவில் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் மேலும் இந்த மாதிரி இன்னும் எத்தனை காட்சிகள் இந்த தொடர்களில் இருக்கும் என்கிற தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளார்கள்.
    வேட்டையன்
    லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர், ரானா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். கேரளா, திருநெல்வேலி , தூத்துக்குடி, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடித்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திரா மாநிலத்தில் கடப்பாவில் நடைபெற்று வருகிறது. 

    மேலும் படிக்க : Boss Engira Bhaskaran : ஒரே ஒரு ஃப்ரண்ட வெச்சுக்கிட்டு, நான் படுற அவஸ்தை இருக்கே.. ரீரிலிஸ் ஆகிறது பாஸ் என்கிற பாஸ்கரன்
    Zanai Bhosle: ஹீரோயினாக அறிமுகமாகும் பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி: எந்தப் படம் தெரியுமா?

    மேலும் காண

    Source link

  • Today cinema headlines Jayam Ravi Mahaan 2 Thalapathy Vijay SJ Suryah Vignesh Shivan

    Today cinema headlines Jayam Ravi Mahaan 2 Thalapathy Vijay SJ Suryah Vignesh Shivan


    Jayam Ravi: “தூக்கத்தில் எழுப்பி நடிக்கச் சொன்னால் கூட நடிப்பேன்” – சைரன் படம் குறித்து ஜெயம் ரவி ஆர்வம்!
    Home Movie Makers சார்பாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”.  பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்  நடைபெற்றது. மேலும் படிக்க
    Watch Video : சூர்யா படத்தால் 8 மாசம் வாய்ப்பில்லாமல் போனது – நடிகர் ஜெகனின் வைரல் வீடியோ!
    2005 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜெகன்.  இவர் 2007 ஆம் ஆண்டு கிங் குயின் ஜேக் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கிய ஜெகனுக்கு சூர்யா நடிப்பில் வெளியான ‘அயன்’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு பையா, சிக்கு புக்கு, கோ, அம்புலி, வத்திக்குச்சி, பட்டத்து யானை, என்றென்றும் புன்னகை, வல்லினம், நான் சிகப்பு மனிதன், இரும்புக்குதிரை, கவண், மிஸ்டர் சந்திரமௌலி, அசுரகுரு, ஜாக்பாட் என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் படிக்க
    Mahaan 2: எவன்டா எனக்கு கஸ்டடி.. மீண்டும் வரும் காந்தி மகான்: 2ஆம் பாகம் பற்றி அப்டேட் தந்த விக்ரம்!
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான மகான் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி தகவல் கொடுத்துள்ளார் நடிகர் விக்ரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் மகான். விக்ரம் ,துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கொரோனா நோய்த் தொற்று காரணமாக இப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியது. சமீபத்தில் இப்படம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது. மேலும் படிக்க
    S.J.Suryah – Vignesh Shivan: எல்.ஐ.சி முதல் நாள் ஷூட்டிங்: விக்னேஷ் சிவனை புகழ்ந்து தள்ளிய எஸ்.ஜே.சூர்யா!
    ஏகே 62 திரைப்படம் ட்ராப் ஆன பிறகு சென்ற ஆண்டு முழுக்க விக்னேஷ் சிவன் அமைதி காத்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத மத்தியில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக மாறிய இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, இப்படத்துக்கு எல்.ஐ.சி (லவ் இன்ஸூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனப் பெயரிடப்பட்டது. க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக கமிட்டானார். மேலும் படிக்க
    Thalapathy Vijay: ரஜினி படத்தில் தேடிப்போய் வாய்ப்பு கேட்ட விஜய்! மறுத்த கே.எஸ்.ரவிகுமார் – காரணம் இதுதான்!
    படையப்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இன்றளவும் டிவியில் ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்கும் அளவுக்கு இப்படத்தில் மாஸ்ஸான காட்சிகள் பல உள்ளது. குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘நீலாம்பரி’ கேரக்டர் அவரின் அடையாளமாகவே மாறிப்போனது. எத்தனை படங்களில் நடித்தாலும் இன்னும் நீலாம்பரி போல இருக்க வேண்டும் என்று தான் ரம்யா கிருஷ்ணனை பலரும் கேட்கின்றனர். மேலும் படிக்க
     

    மேலும் காண

    Source link

  • super star rajinikanth lead Lal Salaam film release Aishwarya shares few informations | Lal Salaam: லால் சலாம் ரஜினிகாந்த் படமா? விஷ்ணு

    super star rajinikanth lead Lal Salaam film release Aishwarya shares few informations | Lal Salaam: லால் சலாம் ரஜினிகாந்த் படமா? விஷ்ணு


    Lal Salaam: லால் சலாம் படம் ஹிட் ஆக வேண்டும் என்பதற்காக ரஜினிக்கு வன்முறை காட்சிகள் வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு படத்தின் இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். 
     
    ரஜினிகாந்த் கேமியோவில் லால் சலாம்:
     

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் படம் லால் சலாம். நீண்ட இடைவெளிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் படம் என்பதாலும், கிரிக்கெட் சார்ந்த உண்மை கதை என்பதாலும், படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
     
    இது தவிர படத்தில் முக்கிய கேரக்டர்களில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால், நிரோஷா, தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்டோர் நடித்து அதகளப்படுத்தியுள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இன்று முதல் திரைக்கு லால் சலாம் வந்துள்ளது. படத்தை பார்த்த ரசிகர்களின் கூஸ்பம்ப் ஏற்படுத்தும் ரஜினியின் நடிப்பை பார்த்து கொண்டாடி வருகின்றனர். 
    யாருடைய படம்?

    இந்த நிலையில் லால் சலாம் படம் குறித்து அதன் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு நச் பதிலை ஐஸ்வர்யா அளித்துள்ளார். முதலில், லால் சலாம் ரஜினிகாந்த் படமா? அல்லது விஷ்ணு – விக்ராந்த் படமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ”லால் சலாம் கதை சார்ந்த படம். அது எந்த ஒரு நடிகராகவும் எடுக்கப்பட்ட படம் இல்லை” என்றார்.
     
    ஒரு மகளாக சூப்பர் ஸ்டாரை வைத்து படத்தை இயக்குவது எந்த மாதிரியான உணர்வை கொடுத்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” ஒரு மகளாக உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு இயக்குநராக கனவு கண்டது போல் இருந்தது” என்றார். ரஜினிகாந்த் இஸ்லாமியர் கேரக்டரில் நடித்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, “முதல் முறையாக அவரது படங்களில் முஸ்லீம் ரோலில் நடித்துள்ளார். அது மிகவும் ஸ்பெஷலானது” என்றார். 
    மீண்டும் கம்பேக்?
    லால் சலாம் படத்தில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. வன்முறைகள் இருந்தால் படம் ஹிட் ஆகும் என நினைத்து எடுத்தீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “படம் ஹிட் ஆகும் என்ற நோக்கத்தில் வன்முறை வைக்கவில்லை. படத்திற்கு தேவையானது எதுவோ அதுதான் வைத்துள்ளோம். கதைக்கு ஏற்றார்போல் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார். பெண் இயக்குநராக இருக்க சந்திக்கும் சவால்கள் என்ன என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு, “ எனது கைகள் கட்டப்படவில்லை. என்னால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பறக்க முடியும். அதனால், என்னால் மீண்டும் கம்பேக் கொடுக்கப்பட்டது” என்றார். 
     

     
    கடைசியாக படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு அதிக சம்பளமாக அல்லது உங்களுக்கு அதிக சம்பளா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “ அதிக சம்பளம் என்பதை எதை கற்று கொள்கிறோம் என்பதை பொறுத்து இருக்கு. அப்படி பார்க்கும்போது லால் சலாம் படத்தின் மூலம் அதிகமாக அதிகமாக கற்றுக் கொண்டது நான் தான். ஆனால், சம்பளத்தில் அதிகம் பெற்றது சூப்பர் ஸ்டார் தான்” என கூறியுள்ளார். 
     

     

    மேலும் காண

    Source link

  • lal salaam rajinikanth share emotional tweet wishing his daughter aishwarya | Rajinikanth: “அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்”

    lal salaam rajinikanth share emotional tweet wishing his daughter aishwarya | Rajinikanth: “அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்”


    தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கௌரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. தன் மகள் இயக்கத்தில் முதன்முதலாக ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார்.
    மேலும் விஷ்ணு  விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கபில் தேவ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியல், 90களை அடிப்படையாகக் கொண்ட கதை என முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்புகளை முன்னதாக அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இன்று காலை வெளி நாடுகள், அண்டை மாநிலங்களில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.
    மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில் படத்தில் ரஜினி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சிறப்பாக ரஜினி பாத்திரத்துக்கு பொருந்தியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
    இந்நிலையில், தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் உணர்ச்சிகரமான ட்வீட்டினைப் பதிவிட்டுள்ளார். “என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
     

    என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்@ash_rajinikanth #LalSalaam pic.twitter.com/bmRe8AGLkN
    — Rajinikanth (@rajinikanth) February 9, 2024

    மேலும் காண

    Source link

  • lal salaam actor charan raj about acting with rajinikanth after Baashha in lal salaam movie

    lal salaam actor charan raj about acting with rajinikanth after Baashha in lal salaam movie


    பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் நண்பராகவும் ஒரிஜினல் பாட்ஷாவாகவும் நடித்த நடிகர் சரண் ராஜ், லால் சலாம் படத்தின் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து ரஜினியுடன் நடித்துள்ளது பற்றி தன் மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார்.
    ரஜினியின் நண்பன் சரண் ராஜ்

    80களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் சரண் ராஜ் (Charan Raj). நடிப்பு தவிர இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல துறைகளிலும் பணியாற்றியுள்ள சரண் ராஜ், சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான லேபிள் சீரிஸிலும் நடித்துள்ளார்.
    கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த பணக்காரன், தர்மதுரை, அதிசய மனிதன், பாட்ஷா உள்ளிட்ட படங்கள் இவரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானதொரு முகமாக மாற்றின.

    ஈவு இரக்கமற்ற வில்லன், போலீஸ், உற்ற நண்பன் என பல துணை கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்த சரண் ராஜ், 1995ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
    பாட்ஷா கதாபாத்திரம்

    பாட்ஷா படத்தின் அடிநாதமான ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் மாணிக்கமாக வரும் நடிகர் ரஜினிகாந்தின் நண்பன் பாட்ஷாவாக உயிர்விடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரஜினியின் பாட்ஷா கதாபாத்திரத்தின் ட்ரான்ஸ்ஃபர்மேஷனுக்கு காரணமான முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த சரண் ராஜ், நிஜ வாழ்விலும் ரஜினிகாந்தின் உற்ற நண்பர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.
    இந்நிலையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் தற்போது நடித்துள்ள சரண் ராஜ். சுமார் 29 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் இணைந்த அனுபவம் பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். சுரேஷ் கிருஷ்ணாவுடன் தனியார் ஊடக நிகழ்ச்சியில் பேசிய சரண்ராஜ் கூறியுள்ளதாவது:
    லால் சலாம் கதாபாத்திரம்
    “ரஜினி சார் பல முறை சொல்லுவார். “என்னடா உன் கூட நடிச்சு ரொம்ப நாள் ஆகிடுச்சு, ஒரு நல்ல கேரக்டரா இருந்தா கூப்பிடு” அப்படினு சொல்லுவார். இருடா நாம பண்றோம் என சொல்லுவார், இப்போ லால் சலாம் கதாபாத்திரத்தில் அவர் நண்பனா நடிக்கறேன்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
    மராட்டிய மொழி பின்புலத்தை ரஜினி, சரண் ராஜ் இருவருமே கொண்டுள்ள நிலையில், இருவருக்கும் பல ஒற்றுமைகள் ஆஃப் ஸ்க்ரீனிலும் உள்ளன. அதனால் தான் தாங்கள் இருவரையும் பாட்ஷாவில் ஒன்றாக நடிக்க வைத்ததாகவும் சுரேஷ் கிருஷ்ணா இந்த நேர்க்காணலில் தெரிவித்துள்ளார்.

    #Lalsalaam படத்தில் தலைவரின் நண்பராக சரண்ராஜ் ❤️❤️After 29 Years, #ThalaivarRajinikanth & #CharanRaj Combo will do the same vibe in Silver Screen 🔥🔥#Baasha Vibe ❤️❤️Surprise Character 🤔🤔#SuperstarRajinikanth #LalSalaamFromFeb9 pic.twitter.com/qjuJQtmOr2
    — R 🅰️ J (@baba_rajkumar) February 8, 2024

    இந்நிலையில் ரஜினி – சரண் ராஜ் இருவரையும் இத்தனை ஆண்டுகள் கழித்து ஒன்றாக திரையில் பார்ப்பது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
    பாட்ஷா படத்துக்குப் பிறகு இஸ்லாமியராக மொய்தீன் பாய் எனு கதாபாத்திரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். தன் மகளுக்காக கௌரவக் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ள நிலையில் நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
     

    மேலும் காண

    Source link

  • Rajini Cameo rol Lal Salaam crew press meet actress nirosha shares super star action experience

    Rajini Cameo rol Lal Salaam crew press meet actress nirosha shares super star action experience


    Lal Salaam: ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் அது நடக்காமல் போனதால், திரை வாழ்க்கை முழுமை பெறாது என வருத்தப்பட்டதாக நடிகை நிரோஷா தெரிவித்துள்ளார். 
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்துள்ள லால் சலாம் படம் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் முக்கிய ரோலில் விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா என பலர் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு நாட்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. 
    அதைத் தொடர்ந்து சென்னையில் படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விக்ராந்த், நிரோஷா, செந்தில், தம்பி ராமையா, விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நிரோஷா, “ரஜினிகாந்த் அவர்களுடன் நடிக்க ஏற்கனவே வாய்ப்பு வந்தது. கடைசி நேரத்தில் அது நடைபெறாமல் போனதால் எனது திரை வாழ்க்கை ஒரு முழுமை பெறாமல் இருந்ததாக நினைத்தேன். ஆனால், இந்தப் படம் மூலம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார். ரஜினியுடன் இணைந்து நடித்தது  மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஒரு இயக்குனராக தனக்கு என்ன தேவையோ அதை மிகவும் தெளிவுடன் நடிகர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்” என பேசியுள்ளார்.
    தொடர்ந்து பேசிய செந்தில், அருமையான கதையை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கி உள்ளதாகவும், அவர் கதையை கூறும் பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும், படத்தில் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்த சக கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்  பேசியுள்ளார். தம்பி ராமையா பேசும்போது, “தமிழ்நாட்டிலும் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என மதங்கள் மூன்றாக இருக்கலாம், ஆனால் மனித மனங்கள் ஒன்றாக இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் கதைக்கு கிரிக்கெட்டை மையப்படுத்தி சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். குடும்பத்துடன் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கான உணர்வுப் பூர்வமான காட்சிகளுடன் படம் உருவாகி உள்ளது” என கூறியுள்ளார்.
    விக்ராந்த் பேசும்போதும்,  படப்பிடிப்பின்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பு தொடர்பாக நிறைய ஆலோசனை கொடுத்து ஊக்கமளித்ததாக தெரிவித்தார்.  நடிகர் விஷ்ணு விஷால் பேசும்போது, “’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கும்பொழுது அவர் நடிக்கும் படத்தில் ,அவருக்கு கீழ் ஒரு கதையின் நாயகனாக நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனப் பேசியுள்ளார். 
     மேலும் படிக்க: Aishwarya Rajinikanth: அரசியல் பேசி தான் எங்க அப்பா படம் ஓடணும் இல்ல – கடுப்பான இயக்குநர் ஐஸ்வர்யா!
    Tamilaga Vettri Kazhagam: விஜய் கட்சி பற்றி என்ன நினைக்கிறீங்க? – ரஜினி சொன்னது என்ன தெரியுமா?
     

    மேலும் காண

    Source link

  • Arvind Swamy old video of heros entering politics is now trending

    Arvind Swamy old video of heros entering politics is now trending


    திரை நட்சத்திரங்களாக பிரபலமான பலரும் அரசியலில் களம் கண்டு அதில் சிலர் அபாரமான வெற்றியும் அடைந்துள்ளனர். ஆனால் ஒரு சிலரோ சென்ற வேகத்திலேயே திரும்பியும் உள்ளனர் என்கிறது வரலாறு. அந்த வகையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன், கமல்ஹாசன், குஷ்பூ, ரோஜா, நக்மா எனப் பலரும் அடங்குவார்கள். அந்த லிஸ்டில் புதிதாக நுழைந்துள்ளார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான தளபதி விஜய். 
    இந்நிலையில், தன்னுடைய ஓட்டு குறித்து நடிகர் அரவிந்த்சாமி பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
     

    ரஜினியின் அரசியல் :  
    நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியல் குறித்து மேடைகளில் பேசி அரசியலுக்குள் இறங்க இருக்கும் தன்னுடைய விருப்பதை பகிரங்கமாகத் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மும்மரமாக செய்து வந்தார். அரசியல் கட்சி தொடங்குவதற்காக தேதியை எல்லாம் அறிக்கையாக வெளியிட்டு விட்டு, பின்னர் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இறங்கும் முடிவை வாபஸ் வாங்குவதாகச் சொல்லி    பின்வாங்கினார். 
     
    கமலின் அரசியல் பிரவேசம் : 
    அவரைத் தொடர்ந்து முழு முயற்சியுடன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி ஆவேசமாக எதிர்க்கட்சிகளை எதிர்த்து பேசி வந்தார் உலகநாயகன் கமல்ஹாசன். தனி கட்சியாக இருப்பார் என எதிர்பார்த்தால் திடீரென திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தார். 
    விஜய்யின் அதிரடி அறிவிப்பு :
    தற்போது தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் பல ஆண்டுக்காகவே அரசியலில் குதிப்பது போன்ற பேச்சுக்கள் அடிபட்டு வந்த வண்ணமாகவே இருந்தன. அந்தப் பேச்சுக்கள் வெறும் பேச்சுக்களாகவே மாறிவிடக் கூடாது என தடாலடியாக ‘தமிழக வெற்றி கழகம்’ (Tamizhaga Vetri kazhagam) என்ற பெயரில் கட்சியை சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி, அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் விஜய். மேலும் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் அதிரடியாக பல முடிவுகளை எடுத்து அதை தெளிவுபடுத்தினார். 
     

    தெளிவான முடிவு : 
    வரும் 2024ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவும் போவதில்லை, யாருக்கும் ஆதரவாக இருக்கவும் போவதில்லை என்பதை தெளிவுபடுத்தி 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்து இருந்தார். மேலும் தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்களை நடித்த பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்று முழு நேரமாக அரசியலில் இறங்க போவதையும் குறிப்பிட்டு இருந்தார். போக போக தான் அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெரியவரும். 
    அரவிந்த்சாமியின் கருத்து :
    இந்த நேரத்தில் நடிகர் அரவிந்த்சாமி அரசியல் குறித்து பேசிய இருந்த பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. “ரஜினி, கமல், விஜய் என அனைவருமே மிகவும் திறமையான நடிகர்கள். அவர்கள் அரசியலில் இறங்கினால் அவர்களின் ரசிகன் என்பதற்காக நான் ஓட்டு போட்டு விட மாட்டேன். அவர்கள் இந்த சமுதாயத்தை எந்த அளவுக்கு முன்னேற்ற முடியும்? என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும்? அவர்களின் கருத்து மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா? என பல வகையிலும் அவர்களின் செயல்பாட்டை கணித்த பிறகே வாக்களிப்பேன். 
     

    அவர்கள் சிறந்த நடிகர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களால் ஒரு மாநிலத்தை ஆளக்கூடிய திறன் படைத்தவர்களா? அந்த அளவுக்கு அவர்களின் தகுதி உயர்ந்துவிட்டதா? அவர்கள் இதை செய்ய முடியுமா? என்பதை அவர்களின் அரசியல் நிலைப்பாடு மூலம் புரியவைக்க வேண்டும்” எனப் பேசி இருந்தார் நடிகர் அரவிந்த்சாமி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதும் தற்போதைய நிலவரமும் ஒத்துபோகிறதே என கருத்து தெரிவித்து வருகிறார்கள் சமூக வலைத்தளவாசிகள்.  

    மேலும் காண

    Source link

  • lal salaam movie rajinikanth salary for moideen bhai role detalis aiswarya rajinikanth

    lal salaam movie rajinikanth salary for moideen bhai role detalis aiswarya rajinikanth


    லால் சலாம் (Lal Salaam) திரைப்படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
    மகளுக்காக கௌரவக் கதாபாத்திரத்தில் ரஜினி
    தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் ஹீரோவாக அல்லாமல், முக்கியப் பாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். 3, வை ராஜா வை, ஆவணப் படமான சினிமா வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்குகிறார்.
    விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, நடிகைகள் தன்யா ராஜேந்திரன், நிரோஷா, ஜீவிதா, நடிகர்கள் தம்பி ராமைய்யா, செந்தில், கிரிக்கெட் வீரட் கபில் தேவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், ஏற்கெனவே பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
    பிப்.9 ரிலீஸ்
    லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னதாக ஜன.26ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. வரும் பிப்ரவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
    மொய்தீன் பாய் எனும் மும்பை தாதாவாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் என கிரிக்கெட் போட்டியாளர்களிடையே நடக்கும் மத அரசியலை கேள்வி கேட்பது போல இப்படத்தின் டீசர்  வெளியாகி ஏற்கெனவே வரவேற்பைப் பெற்றது. மேலும் ரஜினிகாந்தின் மொய்தீன் பாய் க்ளிம்ஸ் வீடியோவும் வெளியாகி லைக்ஸ் அள்ளியது.
    சம்பளம் இத்தனை கோடிகளா!
    இந்நிலையில், மகளின் லால் சலாம் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கௌரவத் தோற்றத்தில் தான் நடித்த மொய்தீன் பாய் கதாபாத்திரத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.40 கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    முன்னதாக ஜெயிலர் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கெஸ்ட் ரோல் என்பதால் இப்படத்தில் ரஜினிகாந்த் தன் சம்பளத்தை பாதிக்கும் மேல் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    சர்ச்சைக்கு விளக்கம்
    இதனிடையே அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்ட இணையத்தில் கடும் விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தன் அப்பாவை சங்கி என பலரும் அழைப்பது வருத்தமளிப்பதாக லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்திருந்தார். நாளை மறுநாள் பிப்.4ஆம் தேதி லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    மேலும் படிக்க: Ajith: நான் கடவுள் முதல் நந்தா வரை! அஜித் ‘நோ’ சொல்லி சூப்பர் ஹிட் அடித்த படங்களின் பட்டியல்!
    Rajkiran Daughter: என்னை மன்னிச்சுருங்க டாடி: முறிந்தது காதல் வாழ்க்கை: ராஜ்கிரண் வளர்ப்பு மகள் வெளியிட்ட வீடியோ
     

    மேலும் காண

    Source link

  • Super Star Rajinikanth Cameo Role Movie List Going On Viral Tamil Cinema News Lal Salaam

    Super Star Rajinikanth Cameo Role Movie List Going On Viral Tamil Cinema News Lal Salaam

    Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வெளியாக இருக்கும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த நிலையில், அவர் நடித்த பிற படங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
     
    தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினி 72 வயதான போதிலும், இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஆக்‌ஷன் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் ஆக்‌ஷனில் களத்தில் பாக்ஸ் ஆபிசில் கலெக்‌ஷனை வாரி குவித்தது. தொடர்ந்து ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியார், ரித்திகா சிங் என ரசிகர்கள் பட்டாளமே நடித்து வருகிறது.
     
    தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 171 படத்திலும் ரஜினி நடிக்க உள்ளார். அடுத்ததாக ஜெயிலர் 2ம் பாகத்திலும் ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனது மகளின் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9ம் தேதி ரிலீசாக உள்ளது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் படத்தில், மொய்தீன் பாயாக ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ளார். 
     
    இந்த நிலையில் ரஜினி கேமியோ ரோலில் நடித்த படங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 1978ம் ஆண்டு துரை இயக்கத்தில் வெளிவந்த பாவத்தின் சம்பளம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த தாயில்லாமல் நான் இல்லை படத்திலும், தெலுங்கு படத்தின் ரீமேக்கான நட்சத்திரம் படத்திலும், 1982ம் ஆண்டு மௌலி இயக்கத்தில் வெளிவந்த நன்றி மீண்டும் வருக படத்திலும், கே. பாலச்சந்திரன் இயக்கத்தில் சரிதா நடிப்பில் வெளிவந்த அக்னி சாட்சி படத்திலும் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 
     
    தொடர்ந்து 1983ம் ஆண்டு எஸ்வி ரமணன் நடிப்பில் வெளிவந்த உருவங்கள் மாறலாம் படத்திலும், 1985ம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த யார் படத்திலும், 1987ம் ஆண்டு கே. பாலச்சந்தர் நடிப்பில் வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் படத்திலும், 1990ம் ஆண்டு வெளிவந்த பெரிய இடத்து பிள்ளை படத்திலும், 1993ம் ஆண்டு வெளிவந்த வள்ளி படத்திலும், குசேலன் மற்றும் ரா ஒன் உள்ளிட்ட படங்களிலும் கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்துள்ளார்.  தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தியுள்ளார். 

    Source link

  • Rajinikanth Starrers Next Schedule Begins In Andhra Pradesh Fahadh Faasil Rana Daggubati To Join Vettaiyan Film

    Rajinikanth Starrers Next Schedule Begins In Andhra Pradesh Fahadh Faasil Rana Daggubati To Join Vettaiyan Film

    Rajini Vettaiyan Movie: டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங், ஆந்திராவின் கடப்பாவில் நடைபெற உள்ளதாகவும், அதில் ரஜினியுடன் பகத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
     
    ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கும் அடுத்த படம் ரஜினியின் வேட்டையன் படம். ரஜினியின் 170வது படமாக உருவாகி வரும் வேட்டையன் படத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 
     
    ஆந்திராவில் ஷூட்டிங்:
     
    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வேட்டையன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட  படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவின் கடப்பாவில் நடைபெறும் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் ரஜினியுடன், ஃபகத் பாசில் மற்றும் ராணா டகுபதி இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வேட்டையன் படத்தின் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமிதாப் பச்சனுடன் ரஜினி இணைந்து நடிக்க உள்ளார். 
     


    #Vettaiyan – Next schedule begins in Kadapa, Andhra Pradesh..⭐• Fahadh Faasil and Rana Daggubati are said to be part of the schedule Along with Superstar #Rajinikanth ..🤙• Shoot to be Wrapped soon..✌️ And it is said be a Thalaivar style entertainer with strong social…
    — Laxmi Kanth (@iammoviebuff007) January 28, 2024

     
    அண்மையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில், விநாயகன் வில்லனாகவும், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்தது. மோகன்லால், ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்தனர். இதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் ரஜினி மொய்தீன் பாயாக கேமியோ ரோலில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். 
     
    அடுத்ததாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படத்திலும் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையே நெல்சன் இயக்க இருக்கும் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
     

     

    Source link

  • Ayodhya Ram temple: நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்;  தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு?

    Ayodhya Ram temple: நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு?


    <p>நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பற்றிதான்.&nbsp; உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோயில் திறப்பு விழா இவ்வளவு கவனம் பெறக் காரணம் அதன் பின்னால் இருக்கும் அரசியலும்தான். ராமர் கோயில் குறித்து கடந்த கால தேர்தல்களில் வாக்குறுதிகள் கூட இடம்பெற்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதனால்தான் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இவ்வளவு கவனத்தைப் பெற்றிருக்கின்றது.&nbsp;</p>
    <p>அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, நாளை அதாவது ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது.&nbsp; குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து திரைத்துறை பிரபலங்களுக்கும் அழைப்பு&nbsp; விடப்பட்டுள்ளன.&nbsp;</p>
    <p>ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பாக நாடு முழுவதும் பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. பல பிரபலங்கள் கோவிலுக்கு லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை கோயில் கட்ட நிதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் எந்தெந்த திரைப்பிரபலங்களுக்கெல்லாம் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பதை இங்கு காணலாம்.&nbsp;</p>
    <p>அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழ் சினிமா பிரபலங்களில் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் மிகவும் நெருங்கியவராக கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர் நாளை மறுநாள் அயோத்திக்குச் சென்று அங்கு நாள் முழுவதும் இருந்துவிட்டு, 23ஆம் தேதி சென்னை திரும்புகின்றார்.&nbsp;</p>
    <p>ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழ் பிரபலங்களான இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் கங்கை அமரன், இயக்குநர்கள் பாக்கியராஜ், கே.எஸ். ரவிக்குமார், பேரரசு, ஆர்.கே. செல்வமணி, பி. வாசு ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>அதேபோல் இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜா, தேனிசைத் தென்றல் தேவா, ஸ்ரீகாந்த் தேவா , டிரம்ஸ் சிவமணி பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கும் அழைப்பி விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>
    <p>அதேபோல் நடிகர்களில் நாசர், தனுஷ், எஸ்.வி. சேகர், லாரன்ஸ், நமீதா, சதீஷ், பிரசன்னா, தாமு, ஸ்ரீமன், ஸ்நேகா, பிரபு உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;<br /><br />இவர்களில் நடிகர் ரஜினி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்வது உறுதியாகியுள்ளது. மற்றவர்களில் யார் யார் செல்லவுள்ளனர் என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.&nbsp;</p>
    <p>ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், ஆன்மீகவாதிகள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 8 ஆயிரம் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 3500 பேர் ஆன்மீகவாதிகள், 500 பேர் திரைப்பிரபலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;<br /><br /></p>
    <p>&nbsp;</p>

    Source link

  • On This Day January 10th 6 Tamil Movies Released For Pongal Festival | Pongal Movies: இதே நாளில் ரிலீசான 6 பொங்கல் படங்களின் நிலை என்ன தெரியுமா?

    On This Day January 10th 6 Tamil Movies Released For Pongal Festival | Pongal Movies: இதே நாளில் ரிலீசான 6 பொங்கல் படங்களின் நிலை என்ன தெரியுமா?

    Pongal Movies: தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஜனவரி மாதம் என்றாலே கொண்டாட்டம் தான். காரணம் புத்தாண்டு,பொங்கல் தொடர் விடுமுறை, குடியரசு தினம் என அடுத்தடுத்து லீவு நாட்கள் வருவதால் முன்னணி நடிகர்கள் படங்களும் ஜனவரி மாதத்தை குறிவைப்பது வழக்கம். அந்த வகையில் ஜனவரி 10 ஆம் தேதி இதுவரை பொங்கல் ரிலீசாக வெளியான படங்களின் நிலை என்ன என்பதை காணலாம். 
    மிஸ்டர் பாரத் 
    1986 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நடித்த படம் “மிஸ்டர் பாரத்”. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இது அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார் நடிப்பில் 1978 ஆம் ஆண்டில் வெளியான திரிசூல் என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்காகும். இப்படத்தில் ரஜினிக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருப்பார் என்றாலும் இருவரது இமேஜூக்கும் ஏற்ற வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. 
    தூள் 
    2003 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விக்ரம் 2வது முறையாக நடித்த படம் “தூள்”. இந்த படத்தில் ஜோதிகா, ரீமாசென், விவேக், சாயாஜி ஷிண்டே, சகுந்தலா, பசுபதி, பறவை முனியம்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த தூள் படம் ஒரு பக்கா ஆக்‌ஷன் படமாக அமைந்து ரசிகர்களை கவர்ந்தது. விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இப்படத்தில் தான் முதல்முறையாக கிளைமேக்ஸ் காட்சியில் பாடல் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புறப் பாடகர் பரவை முனியம்மா பாடிய சிங்கம்போல நடந்து வரான் பாடல் பட்டிதொட்டி எங்கும் செம ஹிட். 
    ஜில்லா
    2014 ஆம் ஆண்டு ஆர்.டி.நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, பூர்ணிமா பாக்யராஜ், மஹத், நிவேதா தாமஸ் என பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜில்லா’. இமான் இசையமைத்த இப்படம் படத்தின் அதீத நீளம் சுமாரான வெற்றியையே பெற்றது. இருந்தாலும் ஜில்லா படத்தின் பாடல்கள் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் ஆக அமைந்தது. 
    வீரம் 
    அதே 2014 ஆம் ஆண்டு இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் அஜித்குமார்  முதல்முறையாக இணைந்த படம் “வீரம்”. கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் விஜய் – அஜித் படங்கள் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதின. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த வீரம் படத்தில் தமன்னா, பாலா, சந்தானம், நாசர், அபிநயா என பலரும் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை கொண்ட இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
    பேட்ட
    2019 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூடன் ரஜினி கூட்டணி அமைத்த படம் தான் “பேட்ட”. இந்த படத்தில் த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ் என பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த பேட்ட படம் ஒரு ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்புராஜால் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 
    விஸ்வாசம் 
    அதே 2019ல் சிறுத்தை சிவாவுடன் அஜித் 4வது முறையாக இணைந்த “விஸ்வாசம்” படம் பொங்கல் வெளியீடாக ரிலீசானது. இப்படத்தில் நயன்தாரா, அனிகா சுரேந்தர், ஜெகபதி பாபு, விவேக், கோவை சரளா, ரோபா ஷங்கர், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்த இப்படம் அஜித்துக்கு மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக டி.இமான் தேசிய விருது பெற்றிருந்தார். 

    Source link

  • Kalaignar 100 Rajinikan Speaks About Kalaignar Karunanidhi Netizens Slams To Him

    Kalaignar 100 Rajinikan Speaks About Kalaignar Karunanidhi Netizens Slams To Him


    Kalaignar 100 Rajini: கலைஞர் 100 விழாவில் கருணாநிதியை புகழ்ந்து ரஜினி பேசியதால், கலைஞருக்கு எதிராக சிவாஜி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
     
    கடந்த ஜனவரி 6 ஆம் தேதி கலைஞர் 100 விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்று பேசிய ரஜினி, ”சிவாஜியை ஒரே படத்தில் ஸ்டாராக்கியவர் கருணாநிதி. சாதாரணமாக இருந்த எம்ஜிஆரை பெரிய வெற்றிப்படங்கள் கொடுக்க வைத்தவர், கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவில் இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆர்களை உருவாக்கி இருக்கலாம்” என ரஜினி பேசியிருந்தார். 
     
    ரஜினியின் இந்த பேச்சுக்கு சிவாஜி மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் தரப்பில் எதிர்ப்பும் விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. அதில் கருணாநிதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிவாஜி கணேசன் பேசியது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்த செய்தி குறிப்பில், ” கருணாநிதி இப்போது என்ன கூறுகிறார் என்பது அவருக்கே தெரியாது. என்னையும், எம்ஜிஆரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசும் அவசியம் அவருக்கு வந்துவிட்டது. நடிகர்கள் அரசியல் பேசலாமா என்று அவர் கேட்கிறார். 
     
    கருணாநிதி மட்டும்தான் அரசியல் பேச வேண்டும் என்றால், அவருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது. அவர் வசனத்தை நான் பேசியதால் தானே கருணாநிதிக்கு பெருமை ஏற்பட்டது. எனக்கும், எம்ஜிஆருக்கும் கருணாநிதியின் அரசியல் எப்படிப்பட்டது என்று தெரியும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
     
    சிவாஜியின் இந்த பேச்சை ட்ரோல் செய்து வரும் சிலர், கருணாநிதி வசனம், கதை எழுதிய உளியின் ஓசை உள்ளிட்ட  படங்களில் ரஜினி ஏன் நடிக்கவில்லை என்று கேட்டதுடன், சிவாஜிகணேசனுக்கு கருணாநிதி இல்லாமல் வெற்றியை கொடுத்தது கட்டபொம்மன் படம் தான் என்றும், அதற்கு கருணாநிதி வசனம் எழுதவில்லை என்றும் விமர்சித்து வருகின்றனர். அப்படி ஒரே படத்தின் மூலம் சிவாஜியை கருணாநிதியை உருவாக்கினார் என்றார், நடிகர் திலகத்தின் மறைவுக்கு பிறகு ஏன் இன்னொரு சிவாஜியை உருவாக்க முடியவில்லை என்றும், தனது மகன்களை ஏன் நல்ல நடிகர்களாக உருவாக்கமுடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
     

     
    கலைஞர் 100 விழாவில் ரஜினி பேசிய சில கருத்துகள் சிவாஜி, கருணாநிதிக்கு இடையிலாத விவாதத்தையே எழுப்பியுள்ளது. சென்னையில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, வடிவேல், கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், கன்னட ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்ட பல திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.
     

     

    Source link

  • Kalaingar 100 Function Dhanush Speaks About Rajini | Kalaingar 100 Dhanush: கலைஞர் 100 விழாவில் ரஜியை பாராட்டி பேசிய தனுஷ்

    Kalaingar 100 Function Dhanush Speaks About Rajini | Kalaingar 100 Dhanush: கலைஞர் 100 விழாவில் ரஜியை பாராட்டி பேசிய தனுஷ்

    Kalaingar 100 Dhanush: கலைஞர் 100 விழாவில் பங்கேற்ர நடிகர் தனுஷ், ரஜினி நடித்த எந்திரன் படத்தை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து பார்த்ததை பேசும்போது, அதை கேட்டு ரஜினி ரசித்து சிரித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
    மறைந்த முன்னாள் முதலமைச்சரும் தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்காற்றியவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100’ (Kalaingar 100) விழா ​ சென்னையில் நடைபெற்றது.  
    நேற்று மாலை 5 மணிக்குத் தொடங்கிய இந்த விழா இரவு 11 மணி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர்கள் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, வடிவேலு, நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோஜா இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
     
    நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், 2010ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் இணைந்து பார்த்தேன். ரஜினிகாந்த் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமில்லை. நடிப்பில் மிகவும் பொறுமை நிறைந்தவர்” என்று புகழ்ந்து கூறியுள்ளார். தன்னை பற்றி தனுஷ் புகழ்ந்து பேசியதை கீழே அமர்ந்துக் கொண்டு கேட்ட ரஜினி, சிரித்து மகிழ்ந்தார்.  மேடையில் ரஜினியை தனுஷ் பேசுவதும், அதை ரஜினி ரசித்தும் கேட்கும் வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

    தொடர்ந்து பேசிய தனுஷ், “கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமோ இல்லை. ஒரு படத்தின் பூஜையின்போது தான் முதன்முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கு வந்திருந்தவர் என்னை, ‘வாங்க மன்மத ராஜா’ எனக் கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா என ஆச்சரியமாக இருந்தது, நெகிழ்ந்துவிட்டேன்” என நினைவுகளை பகிர்ந்தார்.
     
    நிகழ்வில் கருணாநிதி பற்றி பேசிய ரஜினி, “சில பேர் அவங்களோட அறிவைக் காமிக்குறதுக்காக பேசுவாங்க. மத்தவங்களுக்கு புரியுதானு யோசிக்க மாட்டாங்க. ஆனா கலைஞர் அறிஞர் சபைல அறிஞராவும் கவிஞர் சபைல கவிஞராவும் பாமரனுக்கு பாமரனாவும் பேசுவாரு.  எப்பவுமே ஒருத்தருக்கு எழுத்தாற்றல் இருந்தா பேச்சாற்றல் இருக்காது.பேச்சாற்றல் இருந்தால் எழுத்தாற்றல் இருக்காது ஆனா, கலைஞருக்கு இது ரெண்டுமே இருந்துச்சு. கலைஞர் குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது, எங்கு முடிப்பது என எனக்கு தெரியாது. அந்த அளவிற்கு கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான்” என்றார். 
     

     
     
     

    Source link