நடிகர் விஜய் நடித்துள்ள the greatest of all time படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் the greatest of all time படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. GOAT என சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தில் இருந்து “விசில் போடு” என்ற முதல் பாடல் கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. மதன் கார்க்கி எழுதிய அந்த பாடலை விஜய் பாடியிருந்தார். இதன் வரிகள் எல்லாம் விஜய்யின் அரசியல் வருகையை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தது.

இப்பாடல் தென்னிந்திய சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக நபர்களால் பார்க்கப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றாலும், ஏதோ ஒன்று மிஸ் ஆவதாக ரசிகர்கள் தெரிவித்தனர். குறிப்பாக யுவனிடம் இருந்து இப்படி ஒரு இசையை எதிர்பார்க்கவே இல்லை என சொல்லும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் ஒரு வீடியோவில் பேசிய யுவன் தனக்கு குத்துப்பாட்டுக்கு இசையமைப்பது பெரும் தலைவலி என தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by kowsick.efx💜 (@kowsick._ks)

அந்த வீடியோவில், “இசையமைப்பதில் எனக்கு கடினமாக இருப்பது எது என்று கேட்டால் திடீரென இயக்குநர்கள் குத்துப்பாட்டு கேட்பது தான். நான் இன்னிக்கு செத்தேன் என நினைத்துக் கொள்வேன். ஏனென்றால் இசையில் நிறைய வகைகள் உள்ளது. ஆனால் குத்து பாடலில் யோசிக்க எதுவுமே கிடையாது. சந்தமே கொஞ்சம் தான் உள்ளது. அதுல யோசிக்கிறது என்பது ரொம்ப பெரிய தலைவலியான விஷயம்” என யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்திருப்பார்.

இதனைத் தொடர்ந்து அருகில் அமர்ந்திருக்கும் இயக்குநர் விஷ்ணுவர்தன், ‘எந்த இயக்குநராவது யுவனிடம் குத்து பாட்டு வேண்டும் என கேட்டால், யுவனின் எண்ணமெல்லாம் அந்த இயக்குநரை போட்டு குத்த வேண்டும் என்பது போல இருக்கும்’ என கிண்டலாக தெரிவித்திருப்பார். இந்த வீடியோவை பார்க்கும்போது யுவனுக்கு குத்துப்பாடல் என்றாலே அலர்ஜி தான் போல.. அதனால் தான் விசில் போடு பாடல் இப்படி இருக்கிறதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The Greatest of All Time

the greatest of all time படத்தில் மீனாட்சி சௌத்ரி, பிரஷாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா, விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், வைபவ், யோகிபாபு, அஜ்மல் அமீர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tag: யுவன் ஷங்கர் ராஜா

Yuvan Shankar Raja: GOAT விசில் போடு பாடல் சொதப்பியதற்கு இதுதான் காரணமா? – யுவனின் பதிலை பாருங்க!

GOAT movie whistle podu first single song is collaborated with CSK team and the video goes viral
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘The Greatest of All Time’. நடிகர் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 14) மாலை யூ டியூபில் வெளியிட்டது படக்குழு.
நடிகர் விஜய் பாடல்கள் எப்போதுமே மாஸ் லெவலில் இணையத்தில் வைரலாகி சாதனை செய்து வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் முதல் முறையாக விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். ஒரு பக்கம் இந்த பாடல் ட்ரெண்டிங்காகி வரும் அதே வேளையில் இந்த பாடலில் சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் இருப்பதாகவும், அது பிரச்சினையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், இளைஞர்கள் மத்தியில் வெறியை தூண்டும் வகையில் இருப்பதாகவும் கூறி பாடலை நீக்கி, விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்து இருந்தார்.
இப்படி ஒரு பக்கம் ‘விசில் போடு’ பாடல் சர்ச்சையில் சிக்கி இருந்தாலும் மறுபக்கம் அது மேலும் மேலும் வைரலாகி வருகிறது. பாடல் வெளியான 17 மணி நேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் விசில் போடு பாடலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாடலான ‘விசில் போடு’ பாடலுடன் கொலாப்ரேஷன் செய்து சோஷியல் மீடியாவில் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு பக்கம் GOAT படத்தின் விசில் போடு பாடல் பட்டையை கிளப்பி வரும் அதே வேளையில் CSK அணியுடன் கொலாப்ரேஷன் செய்துள்ள இந்த பாடலும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. ஐபிஎல் மேட்ச் களைகட்டி வரும் இந்த நேரத்தில் இன்றைய நாள் முழுவதும் விசில் போடு வைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் உற்சாகமும் இந்த பாடலும் கூடுதல் எனர்ஜியை கொடுக்கிறது. இந்த கொலப்ரேஷன் வீடியோ தாறுமாறாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதை விஜய் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் டேக் செய்துள்ளார்.
மேலும் காண

watch vijays the goat movie first single whistle podu song out now
யுவன் ஷங்கர் ராஜா இசையில் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார்
தி கோட் (The Goat)
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தி கோட். பிரபுதேவா, பிரஷாந்த் , சினேகா , லைலா, மோகன் , பிரேம்ஜி , வைபவ், மினாக்ஷி செளதரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
விசில் போடு
தமிழ் புத்தாண்டை ஒட்டி இன்று தி கோட் படத்தின் முதல் பாடல் ‘விசில் போடு’ தற்போது வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி பாடல்வரிகளை எழுதியுள்ள நிலையில் நடிகர் விஜய் இந்த பாடலை பாடியுள்ளார்.
#WhistlePodu 💛https://t.co/mrX0dKcjzz#GoatFirstSingle #TheGreatestOfAllTime ⁰⁰@actorvijay Sir ⁰#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @dhilipaction @actress_Sneha #Laila @meenakshiioffl… pic.twitter.com/A1olyVw6vN
— Archana Kalpathi (@archanakalpathi) April 14, 2024
கடந்த ஆண்டு லியோ படத்தின் நான் ரெடி பாடல் விஜயின் அரசியல் வருக்கை அச்சாரமாக அமைந்தது. அதே போல் இந்த முறை விசில் போடு பாடல் வெளியாகியுள்ளது . ‘பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா என்கிற முதல் வரியிலேயே விஜயின் அரசியல் பாடலில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும் பாடலில் விஜயுடன் பிரபுதேவா , பிரஷாந்த் முதலியவர்கள் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளார்கள். மூன்று நடிகர்களும் நடனத்தில் அசத்துபவர்கள் என்பதால் இந்தப் பாடலின் வீடியோ நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் .மேலும் காண

the goat movie first single promo video sung by thalapathy vijay to be released tomorrow evening details
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் (The GOAT – The Greatest of All Time) திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்த மாதம் தொடங்கி அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ஏற்கெனவே இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்திருந்தார்.
யுவன் இசையில் முதன்முறையாகப் பாடும் விஜய்!
அதன்படி முன்னதாக ரம்ஜான் சிறப்பு அப்டேட்டாக தி கோட் திரைப்படம் வரும் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு விஜய் ரசிகர்களை குஷியாக்கியது. இந்நிலையில் நாளை (ஏப்.14) தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ‘தி கோட்’ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என இன்று காலை படக்குழு அறிவித்து ரசிகர்களை இரட்டிப்பு சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் முதல் சிங்கிள் பாடலின் குட்டி ப்ரோமோ வீடியோ ஒன்றை தற்போது படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் இந்தப் பாடலை விஜய் பாடியுள்ளார் என்றும், நாளை மாலை 6 மணிக்கு இப்பாடல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் உற்சாகம்
யுவன் – நடிகர் விஜய் இருவரும் சுமார் 21 ஆண்டுகள் கழித்து இணைந்துள்ளனர். 2003ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் மட்டுமே விஜய்யும் யுவனும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் இதுவரை இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ள நடிகர் விஜய், கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக டாப் இசையமைப்பாளராக வலம் வரும் யுவனின் இசையில் இதுவரைப் பாடியதில்லை. இந்நிலையில், இந்தப் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.
ரஷ்யாவில் ஷூட்டிங்
தி கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் ஷூட்டிங்கில் தற்போது கலந்துகொண்டு வரும் நிலையில் அவர் படப்பிடிப்பு தளத்தில் ஃப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டர் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது.
சை – ஃபை மற்றும் டைம் ட்ராவலை மையப்படுத்திய கதையாக தி கோட் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், லைலா , மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரேம்ஜி எனப் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடித்து விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை எதிர்ப்பார்த்து விஜய் மற்றும் ரசிகர்கள் என இரு தரப்பினரும் காத்துள்ளனர்.
மேலும் படிக்க: Sonu Sood: ஷூ திருடிய டெலிவரி பாய்க்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சோனு சூட் – குவியும் கண்டனங்கள்
Bhavana: “நீதி கிடைக்கும் வரை போராடுவேன்” நீதிமன்றமே இப்படி பண்ணலாமா? கேரள நடிகை வேதனைமேலும் காண

Yezhu Kadal Yezhu Malai: அடுத்த சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தயார்! ராமின் “ஏழு கடல் ஏழு மலை” படக்குழு உற்சாகம்!

இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை ரோட்டர்டாம் திரைப்பட விழாவைத் தொடர்ந்து மற்றொரு சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

அடுத்த சர்வேதத் திரைப்பட விழா

ராம் இயக்கத்தில் நிவின் பாலி – அஞ்சலி ஆகி்யோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி இப்படத்தினைத் தயாரித்துள்ளார்.

இயக்குநர் ராமின் வழக்கமான பாணியில் பேரன்பை கதைக்களமாகக் கொண்டு முன்னதாக வெளியான இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நடிகர் சூரி இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக சென்ற ஆண்டு இறுதியில் நடைபெற்ற 53ஆவது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ இப்படம் தேர்வாகி இருந்தது. இந்த விழாவில் திரையிடப்பட்டு இப்படம் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் தற்போது ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் தற்போது மற்றொரு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

தயாரிப்பாளர் மகிழ்ச்சி

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஏழு கடல் ஏழு மலை, “ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன்’ போட்டிப் பிரிவில் பெரும் வரவேற்பையும், முத்திரையும் பதித்த ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம், உலக அரங்கில் தனது பயணத்தை உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் தொடர்கிறது. தற்போது 46ஆவது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக ஏழு கடல் ஏழு மலை’ தேர்வாகியிருப்பதை சினிமா ரசிகர்களுக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.

ஏப்ரல் 19 முதல் 26 வரை நடைபெறவுள்ள மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘பிளாக்பஸ்டர்ஸ் ஃப்ரம் அரௌண்ட் தி வேர்ல்ட் (Blockbusters from around the World) பிரிவில் ஏழு கடல் ஏழு மலை திரையிடப்பட இருக்கிறது. சமகால சினிமாவின் சிறந்த உலகத் திரைப்படங்களின் வரிசையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் தேர்வாகியிருப்பது இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமைக்கும் கடின உழைப்பிற்குமான சான்றாகும்.

எனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமைமிரு இயக்குநர் ராமின் படைப்பான ‘ஏழு கடல் ஏழு மலை’, அதன் அழுத்தமான திரைக்கதை மற்றும் பிரமிக்கத்தக்க காட்சி அமைப்பினால் பார்வையாளர்களின் உள்ளங்களைக் கவர்ந்துள்ளது.

நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் அசாதரணமான நடிப்பும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், கலை இயக்குநரான உமேஷ் குமாரின் உழைப்பும், மதன் கார்க்கியின் பாடல் வரிகளும், சில்வாவின் அபரிமிதமான உழைப்பும் உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

தமிழ் புத்தாண்டில் இச்செய்தியை அனைவரிடமும் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Star Director Elan: அப்பாவுக்காக பண்ணப்பட்ட “ஸ்டார்” படம்.. இயக்குநர் இளனின் தந்தை இந்த நடிகரா?

நடிகனாக வேண்டும் என்பதே தனது தந்தையின் ஆசை என்றும் தனது தந்தையை மனதில் வைத்து எடுத்த படம்தான் ஸ்டார் என்று இயக்குநர் இளன் கூறியுள்ளார்.

ஸ்டார் பட இயக்குநர் இளன்

2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேம காதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இளன். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் இளன் இயக்கியிருக்கும் படம் ஸ்டார். இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் இயக்குநர் இளன் தனது சினிமா பயணம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் இளனின் அப்பா

அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஜெய் கதாபாத்திரத்திற்கு அப்பாவாக நடித்தவர்தான் இயக்குநர் இளனின் தந்தை . இவரது பெயர் பாண்டியன். ராமராஜ் நடித்த தேடிவந்த ராசா படத்தில் கவுண்டமனிக்கு லஞ்சம் கொடுக்கவரும் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். தான் சினிமாவில் ஆர்வம் காட்ட தனது தந்தை தான் தனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தார் என்று இயக்குநர் இளன் தெரிவித்துள்ளார்.

அப்பாதான் சினிமாவில் ஆர்வம் வர காரணம்

"பெரிய நடிகனாக வேண்டும் என்பதுதான் என் அப்பாவின் ஆசை . சினிமாவில் வாய்ப்பு கிடை க்காத காரணத்தினால் ஃபோட்டோகிராஃபராக இருந்தார். அவ்வப்போது சில சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒரு காட்சியில் ஆயிரம் பேரில் ஒருவராக ஒரு ஓரமாக நின்றாலும் அதைப் பற்றி ரொம்ப ஆர்வமாக என்னிடம் வந்து சொல்வார். அதை எல்லாம் கேட்டு தான் எனக்கு சினிமாவின் மேல் ஆர்வம் வந்தது.

நான் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போதே குறும்படங்கள் எடுக்கத் தொடங்கிவிட்டேன். அதில் என் அப்பாவை நடிக்க வைத்தேன். அதற்கு பிறகு என் அப்பா நடித்த குறும்படம் ஒன்று தேசிய விருது வென்றது. அதைப் பார்த்த அட்லீ அவரை ராஜா ராணி படத்தில் நடிக்க அழைத்தார். அந்த படம் என் அப்பாவுக்கு ஒரு நல்ல பிரேக் கொடுத்தது. என் அப்பா ஃபோட்டோகிராபராக இருந்தபோது வாழ்க்கையில் ஒருமுறையாவது நிலாவுக்குச் சென்று ஃபோடடோ எடுத்துவிட வேண்டும் என்று ஒருமுறை விளையாட்டாக சொன்னார்.

அதை கேட்ட எனக்கு எப்படியாவது நிலாவுக்கு சென்றுவிட வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதனால் தான் ஏரோனாட்டிக்கல் இஞ்சினியரிங்க் எடுத்தேன் . கல்லூரி சேர்ந்தப்பின் தான் தெரிந்தது நான் படிப்பதற்கும் நிலாவுக்கு சம்பந்தம் இல்லை என்று. என் அப்பா எனக்கு கொடுத்த நம்பிக்கை தான் நான் இயக்குநராக மாற பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறது. ஸ்டார் படம் நான் என் அப்பாவை மனதில் வைத்து எடுத்தது தான்." என்று அவர் கூறினார்.

முதல் படம் டிராப்

"நான் கல்லூரி படிக்கும் போதே முதல் படத்தில் கமிட் ஆகிவிட்டேன் . ஃபாக்ஸ் ஸ்டார் தமிழில் தொடங்கிய போது இரண்டு படங்களை அறிவித்தார்கள். ஒன்று ராஜா ராணி மற்றொன்று என்னுடைய கதை . நான் இயக்கியிருந்த 40 நிமிடம் குறும்படம் ஒன்றை பார்த்து என்னை தேர்வு செய்தார்கள். ஒருசில காரணங்களால் இந்த படம் கைவிடப் பட்டது. இந்த படம் கைவிடப் பட்டதும் நான் ஒரு த்ரில்லர் கதை எழுதி அதை ஒவ்வொரு தயாரிப்பாளரிடமாக சென்று கதை சொல்லத் தொடங்கினேன்.
த்ரில்லர் கதை என்றதும் எல்லா தயாரிப்பளர்களும் மறுத்துவிட்டார்கள்.

அந்த ஒருவருடம் முழுவதும் நான் எல்லா கதை சொன்ன எல்லா தயாரிப்பாளர்களும் கதையை நிராகரித்துவிட்டார்கள். சரி அவர்கள் கேட்கும் கதையை எழுதலாம் என்று முடிவு செய்து அடுத்த பத்து நாட்களில் ஒரு ஃபேண்டஸி காதல் கதையை எழுதிவந்தேன். ஒரு முதல்பட இயக்குநருக்கு ஃபேண்டஸி படத்திற்கான பட்ஜட் கொடுக்க மாட்டார்கள் என்பதை நான் யோசிக்கவில்லை . இந்த கதை யை கேட்ட எல்லா முன்னணி நடிகைகளும் தங்களுக்கு கதை பிடித்து நடிக்கவும் சம்மதித்தார்கள். ஆனால் இந்தப் படத்திற்கான பட்ஜட்டை யாரும் என்னை நம்பி தர முன்வரவில்லை .

இதற்கு பிறகு கிரகணம் என்கிற ஒரு கதையை எழுதி அந்த படம் படப்பிடிப்பும் முடிந்தது ஆனால் படம் வெளியாகவில்லை . இந்த கிரகணம் படத்தின் டிரைலரை பார்த்த யுவன் ஷங்கர் ராஜா தான் தயாரிக்க இருந்த முதல் படத்திற்கான கதையை என்னிடம் கேட்டார். அப்போதுதான் பியார் பிரெமா காதல் தொடங்கியது." என்று இளன் கூறினார்.

14 years of Paiyaa : துளி துளி துளி மழையாய் வந்தாளே..14 ஆண்டுகளை கடந்த கார்த்தியின் பையா!
14 years of Paiyaa : துளி துளி துளி மழையாய் வந்தாளே..14 ஆண்டுகளை கடந்த கார்த்தியின் பையா!
Ilayaraja : கடவுளை கண்ணு முன்னாடி காட்டுனாதான் நம்புவியா? மேடையில் கமலை அட்டாக் செய்த இளையராஜா!

பகவான் ரமண மகரிஷியே தனக்கு கடவுள் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா

"கடவுள் இருக்கிறாரா இல்லையா. நம்பலாமா நம்பக் கூடாதா"என்கிற கேள்வி எழாத ஒரு மனிதன் கூட இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இந்த புகழ்பெற்ற கேள்விக்கு உலகத்தில் பல மேதைகள் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் உலகநாயகன் கமல்ஹாசனின் விளக்கம் உடனே நினைவுக்கு வரலாம். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்டால். "இருந்தால் நல்லா இருக்கும். இவருதான் கடவுள் அப்டினு கண்ணு முன்னாடி காட்டுங்க நான் நம்புறேன்" என்பது தான் கடவுள் பற்றி கமல்ஹாசனின் பார்வை.

கமல்ஹாசனின் பதிலுக்கு சவால்விடக் கூடிய ஒருவர் என்றால் அது இளையராஜாவாக தான் இருக்க முடியும். அப்படி மேடை ஒன்றில் கமல்ஹாசனின் கருத்துக்கு இளையராஜா எதிர் கருத்து தெரிவித்த தருணத்தை நினைகூறலாம்.

கமலுக்கு பதில் சொன்ன இளையராஜா

நிகழ்ச்சி ஒன்றில் யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவிடம் கடவுளை நீங்கள் நேரில் பார்த்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று கேள்வி கேட்கிறார். இதற்கு பதில் அளித்த இளையராஜா " கடவுள நான் எப்போ பாக்கல. கடவுள் கிட்ட கேட்க எனக்கு எந்த கேள்வியும் கிடையாது. எனக்கு ரொம்ப கஷ்டத்த கொடுத்தா நான் கஷ்டப்படுறத பார்த்து நீ சந்தோஷமா இருக்கியா எனக்கு அது போதும் அப்டினு எடுத்துப்பேன். நமக்குள்ள இல்லாத கடவுளா வெளிய இருக்க போறாரு. நம்ம மன்சுதான் கடவுள். அத நம்மால பாக்க முடியாது. கடவுள் என்ன எதிரிட்டு காணக் கூடிய விஷயமாவா இருப்பாரு.

நமக்கு அறிவு இருக்குனு தெரியுது ஆனா அறிவு என்ன கண்ணால பார்க்கக் கூடிய பொருளா? அறிவையே கண்ணால பார்க்க முடியாதப்போ அறிவால உணர்ந்துகொள்ளக் கூடிய கடவுள் நமக்கு கண் முன் தோன்ற வேண்டும் என்று கேட்பது கமல்ஹாசன் கேட்பது போல் இருக்கிறது. என்ன மேடையில வச்சுகிட்டு இவரை கடவுள் என்று சொல்லுங்கள் நான் கடவுளை நம்புகிறேன் என்று கமல் சொல்கிறார்.

அப்போ கடவுள கண்ணால காட்டுனா மட்டும்தான் நம்புவியா? அப்போ இவ்ளோ உருவம் இருக்கே அதுல ஒன்ன கடவுள்னு சொல்லிட்டு போயேன். உனக்கு அறிவு இருக்கானு கேட்டா என்ன சொல்லுவ. அறிவு இருக்குனு எந்த அறிவ வச்சு சொல்ற. நம்மளுடைய சொந்த அறிவையே எதிரிட்டு பார்க்க முடியாத போது கடவுள் என்பது எதிரிட்டு பார்க்கக் கூடிய ஒரு விஷயம் இல்லை. அறிவே கடவுள். அன்பே கடவுள். கடவுளுக்கு ஒரு வேலை கற்பிக்கிறது தப்பு.

ரமண மகரிஷிதான் எனக்கு கடவுள்

எனக்கு கடவுள் என்றால் அது பகவான் ரமண மகரிஷிதான். நமக்காக மண்ணாக போகக் கூடிய இந்த மனித சரீரம் கொண்டு பிறந்தவர் அவர். ஆறு முறை அவருக்கு அருவை சிகிச்சை பண்ணிருக்காங்க அவர் முகத்துல ஒரு சின்ன அசைவுகூட இல்ல. பதினாறு வயசுல தவத்துல உட்காரும்போது அவர் உடம்புல கரையான் புற்று முளைச்சது. அவர் தன்னோட உடம்புலயே இல்ல. நமக்கு மெய் ஞானத்தை உணர்த்துவதற்கான பொய்யான ஒரு மனித உடலில் வந்து போன கடவுள் அவர். நான் ஒவ்வொரு நாளும் அவரை பார்க்கிறேன். அவர் எனக்குள்ள தான் இருக்காரு. இங்க இருக்க ஒவ்வொருத்தர் உள்ள அவர் இருக்கார். ஒவ்வொரு மனிதனும் முழுமையானவன் என்று சொன்னவர் அவர் ஒருவர்தான். எனக்கு என்ன வேணுமோ கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். யுவன் , கார்த்திக் , பவதா உங்க மூனு பேரையும் எனக்கு கொடுத்திருக்கிறார். " என்று இளையராஜா பேசினார்.

Ameer paruthiveeran movie completes 17 Years
பருத்திவீரன்
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் (Paruthiveeran) திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன.கடந்த 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான படம் பருத்திவீரன். கார்த்தி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பிரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் ஆகியோஎ இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். பருத்தி வீரன் படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன.
நிலம் சார்ந்த மனிதர்கள்
இன்று மலையாளப் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கின்றன. இந்தப் படங்கள் ஏதோ ஒரு வகையில் நிலத்தையும் மனிதர்களையும் தொடர்புபடுத்துகின்றன. இப்படியான படங்கள் இன்று தமிழ் சினிமாவில் வெளியாவது கொஞ்சம் குறைவுதான். பருத்திவீரன் அப்படியான ஒரு படம். நிலத்தையும் கதாபாத்திரங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத வகையில் இப்படம் தொடர்புபடுத்தியது.கதையாக பார்க்கையில் இரு குடும்பங்களுக்கு இடையில் நிலவும் பகை மற்றும் இந்த குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காதலிக்கிறார்கள். பருத்திவீரன் படத்தை சுவாரஸ்யமானதாக மாற்றியது கதையை விட அதை சொன்ன விதமே! ஒரு கிராமத்தில் வாழும் மக்கள். அவர்களின் அன்றாடங்களை யதார்த்தமான நிகழ்வுகளை காட்சிபடுத்தியதே படத்தின் மிகப்பெரிய பலம்.
முத்தழகு – வீரன்
பாரதிராஜா காட்டிய கிராமங்களுக்குப் பிறகு பருத்திவீரன் படம் காட்டிய கிராமத்து கதாநாயகன் – நாயகி இன்னும் ஒரு படி மேலே இருந்தார்கள். அடிதடியைத் தவிர ஹீரோவுக்கான எந்த குணாதிசயமும் கார்த்தியிடம் இருக்காது. அதே நேரத்தில் ஒரே நேரத்தில் அதீத அன்பு கொண்டவராகவும் அதீத தைரியம் கொண்ட ஒருவராகவும் பிரியாமணியின் கதாபாத்திரம் அமைந்திருக்கும்.வெளிநாட்டில் தன் சினிமா சார்ந்த படிப்பை முடித்து வந்து உதவி இயக்குநராகப் பணியாற்றி நவீன யுகத்து இளைஞராக வலம் வந்த நடிகர் கார்த்தியை, அவரது முதல் படத்தில் வீரன் கதாபாத்திரமாகவே மாற்றியதில் இயக்குநர் அமீருக்கு பெரும் பங்கு இருக்கிறது. மேலும் சித்தப்பு சரவணன், முத்தழகின் அம்மா சுஜாதா, பொன்வண்ணன், சம்பத், கஞ்சா கருப்பு என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம்.
இவர்களுடன், படத்தின் காட்சி மொழியுடன் ஒன்றி மற்றுமொரு கதாபாத்திரமாகத் திகழ்ந்து கூடுதல் பலம் சேர்த்தது யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. பின்னணி இசை, பாடல்கள் என மண் சார்ந்த தனித்துவமான இசையைக் கொடுத்த யுவனின் பருத்திவீரன் ஆல்பம் அவரது கரியரின் உச்சம்!
அமீர் Vs ஞானவேல் ராஜா
சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குநர் அமீரின் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தார். அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியவை அனைத்தும் திரிக்கப்பட்டவை என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக நடிகர் மற்றும் இயக்குநர்களான சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டவர்கள் பருத்திவீரன் படத்தின்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படப்பிடிப்பின் பாதியில் கைவிட்டுவிட்டதாகவும் தங்களது நண்பர்கள் பலரிடம் இருந்து பணம் கடன் வாங்கியே அமீர் இந்தப் படத்தை வெளியிட்டதாகவும் அவருக்கு ஆதரவுக் குரல்கள் வலுத்தன. சில வாரங்கள் வரை இந்தப் பிரச்னை நீள, சென்ற நவம்பர் மாதம் இறுதியில் தன் பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞான வேல் ராஜா வருத்தம் தெரிவித்தார்.
பருத்திவீரன் படத்தினைச் சுற்றி இப்படி 17 ஆண்டு கால பிரச்னைகள் சுழன்று வந்தாலும், தமிழ் சினிமாவுக்கு பருத்திவீரன் எனும் சிறந்த படைப்பைத் தந்த அமீர் தமிழ் சினிமாவில் காலம் கடந்து என்றென்றும் கொண்டாடப்படுவார்.
மேலும் காண

Kavin, who is acting in Vetrimaran movie; Udayam theater closure, Vairamuthu in grief – Cinema headlines | Cinema Headlines :வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்; உதயம் தியேட்டர் மூடல், வேதனையில் வைரமுத்து
Kavin: வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்.. வெளியான சூப்பர் அப்டேட் இதோ!
கவினின் அடுத்த புதுப்படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் தான் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். கிராஸ் ரூட் கம்பெனி இப்படத்தை தயாரிக்க வெற்றி மாறனின் உதவி இயக்குநரான விகர்னன் அசோகன் இயக்கவுள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க
Udhayam Theatre: கண்ணீர் வடிக்கின்றேன்.. உதயம் தியேட்டர் மூடப்படுவதால் வைரமுத்து வேதனை!
சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகி திரையுலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து உதயம் தியேட்டர் தொடர்பான பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
Ramki: நிரோஷாவே வேண்டாம் என சொல்லியும் கேட்கல.. நடிகர் ராம்கி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
நேர்காணல் ஒன்றில் பேசிய ராம்கி, நிரோஷாவுடன் தனக்கு காதல் ஏற்பட்ட தருணம் பற்றி பேசியுள்ளார். அதில்,”நிரோஷாவை என்னிடம் அறிமுகம் செய்தபோது அவர் கமலுடன் சூரசம்ஹாரம் படத்தில் நடித்து வந்தார். எந்த பத்திரிக்கை எடுத்தாலும் அட்டைப்படத்தில் இடம்பிடித்தார். நிரோஷாவின் பின்னணி என்பது வேற லெவலில் இருந்தது. அக்னி நட்சத்திரம் படத்தில் நடித்த அவரை செந்தூரப்பூவே படத்தில் ஹீரோயினாக போடலாம் என சொன்னார்கள். ஆனால் நான், ‘இவங்க வேண்டாம். நல்ல பொண்ணா நான் சொல்றேன்’ என சொன்னேன்.மேலும் படிக்க
SPB Pallavi: பல ஆண்டுகளாக பாடாமல் இருக்கும் எஸ்.பி.பி., மகள் பல்லவி – என்ன காரணம் தெரியுமா?
தான் ஏன் பாடவில்லை என்பதை பல்லவி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்பா என்னிடம் நிறைய கிளாசிக்கல் இசை கற்றுக் கொள்ள சொன்னார். ஆனால் எனக்கும் தம்பிக்கும் பெரிதாக விருப்பமில்லை. எஸ்.பி.பி.யின் பையன், பொண்ணு என்று சில வாய்ப்புகள் வந்தது. ஒரு சில காரணங்களுக்காக நான் பாடுவதை நிறுத்தி விட்டேன். குடும்பத்தினருடன் பிஸியாகி விட்டதால் அதனால் விருப்பம் போய்விட்டது. ஆனால் முறைப்படி பயிற்சி எடுக்காமல் மீண்டும் களமிறங்கினால் அது சரியாக இருக்காது. நான் நியாயமாக இருக்கிறேன் என்று சொல்வதை விட அப்பாவின் பெயரை கெடுக்காமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மேலும் படிக்க
Yezhu Kadal Yezhu Malai: மறுபடியும் நீ.. என் தோழி ஆவாயா..! மனதை உருக்கும் ஏழு கடல் ஏழு மலை முதல் பாடல் ரிலீஸ்
ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகி இருந்தது. இந்த நிலையில் ஏழுமலை ஏழு கடல் படத்தின் முதல் பாடலான ‘மறுபடி நீ’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகரும் பாடகருமான சித்தார்த் பாடியுள்ளார். இந்த பாடல் மெலடி பாடலாக உள்ளதால், பெரும்பான்மையான ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. மேலும் படிக்கமேலும் காண

Yuvan shankar raja shares memories about his sister bavadharini on how she taught music to him
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி கடந்த ஜனவரி 25ம் தேதி உடல்நலக்குறைவால் ஸ்ரீலங்காவில் உயிரிழந்தார். அவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது மிகவும் தாமதமாகவே கண்டறியப்பட்டது. நேச்சுரோபதி சிகிச்சைக்காக ஸ்ரீலங்கா சென்ற பவதாரிணி அங்கே சிகிச்சை தொடங்குவதற்கு முன்னரே உயிரிழந்தார். அவரின் வயது 47. தனித்துவமான குரலால் அனைவரையும் மயங்க வைத்த பாடகியின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
பாவதாரிணியின் நினைவலைகள் குறித்து பலரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்த நிலையில் அவரின் சகோதரரான யுவன் ஷங்கர் ராஜா, அக்காவை பற்றி மனம் திறந்து நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார்.
பவதாரிணி பற்றி யுவன் :
தற்போது ஸ்ரீலங்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்கே பத்திரிகையாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா பதிலளித்து இருந்தார். அப்போது பவதாரிணி பற்றி பேசுகையில் “அக்கா என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். எனக்கு ஐந்து, ஆறு வயசு இருக்கும் போது என்னோட கையை பிடிச்சு பியானோவில் வைச்சு உன்னாலயும் வாசிக்க முடியும் என சொல்லி வாசிக்க வைத்தாள். அவ மியூசிக் கிளாஸ் போகும்போது என்னையும் கூட கூட்டிட்டு போவா. என்னோட இந்த இசைப் பயணத்தில் மட்டும் அல்ல என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அக்கா மிகவும் முக்கியமானவர். நிச்சயம் இந்த இசை நிகழ்ச்சியில் அவரின் பாடல்களும் இருக்கும்” என நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
முறையான இசை :
இசைஞானி என இளையராஜா போற்றப்படுகிறார். அவரின் வாரிசுகள் பவதாரிணி மற்றும் கார்த்திக் ராஜா இருவருமே இசையை முறையாக கற்றுத் தேர்ந்தவர்கள். ஆனால் யுவன் ஷங்கர் ராஜா முறையாக இசையை கற்றவர் இல்லை. சுத்தமாக இசை தெரியாத யுவனுக்கு முதன் முதலில் இசையை கற்றுக் கொடுத்தது அக்கா பவதாரிணி தான்.
மீண்டும் விஜய் – யுவன் காம்போ :
தற்போது யுவன் ஷங்கர் ராஜா வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் GOAT படத்திற்கு இசையமைக்கிறார். அதனால் இந்தப் படத்திற்கான இசையைக் கேட்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள். விஜய் – யுவன் ஷங்கர் ராஜா காம்போவில் கடைசியாக வெளியான படம் ‘புதிய கீதை’. அப்படத்திற்கு பிறகு விஜய் படத்தில் யுவன் இசையமைக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், “GOAT திரைப்படம் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. இப்படத்திற்காக மிகவும் ஆவலாக இருக்கிறேன். இனிமேல் பேச்சு கிடையாது வீச்சு தான்” எனத் தெரிவித்துத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.மேலும் காண

Vasuki Bhaskar Emotional Tweet On Sister Bhavatharini Demise
பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரிணியின் (Bhavatharini) திடீர் மறைவு திரையுலகத்தினரையும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது இளமை மற்றும் மெல்லிய குரலால் கேட்போரின் மனதை லேசாக்கி மாயாஜாலம் செய்யக்கூடியவர். 47 வயதேயான இந்த இசை வாணிக்கு இவ்வளவு சீக்கிரம் விடை பெற்றுச் சென்றது அனைவரையும் பெரும் துக்கத்தில் மூழ்கடித்துள்ளது.
ஒட்டுமொத்த குடும்பமே அவர்களின் இசையால் மக்களை சந்தோஷப்படுத்தியவர்களாக இருக்கும் நிலையில், எப்படி ஆறுதல் சொல்வது என்பது மிக பெரிய வேதனை. இசைமைப்பாளர்கள், இயக்குநர்கள் என குடும்பமே வித்வான்களாக கலைத் துறையில் சாதனைகளை செய்து வர, அதில் போட்டியின்றி மிகவும் சாந்தமான ஒரு அமைதிப் புறாவாக இருந்த பவதாரிணியின் இழப்பு அந்தக் குடும்பத்திற்கே ஒரு பேரிழப்பு. குறைவான பாடல்கள் மட்டுமே பாடி இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கது என்பது மறுக்க முடியாத ஒன்று.
வாசுகி பாஸ்கர் பதிவு:
இந்நிலையில், இளையராஜாவின் மற்றுமொரு சகோதரர் ஆர்.டி. பாஸ்கரின் மகளும் திரையுலகின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான வாசுகி பாஸ்கர் தன்னுடைய அன்பான சகோதரி பவதாரிணியின் மறைவுக்கு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் மிகுந்த மனவேதனையுடன் ட்வீட் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.
“என்னுடைய மறுபாதி நீ… இப்போது அதை என்னிடம் இருந்து எடுத்து சென்றுவிட்டாய். மறுபக்கம் உன்னை பார்க்கிறேன். என்னுடைய ஒரே சகோதரி. உன்னை நாங்கள் அனைவரும் பயங்கரமாக மிஸ் செய்வோம். லவ் யூ பவதா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார் வாசுகி பாஸ்கர்.
பவதாரிணியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட வாசுகி பாஸ்கர், சகோதரியின் உடலை பார்த்து உடைந்து அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்தக் குடும்பத்தின் இரு பெண் தேவதைகள் இவர்கள் இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாசினியின் வீடியோ :
அதே போல இளையராஜா மனைவி ஜீவாவின் உறவினரான சின்னத்திரை நடிகை ஹாசினி தற்போது அமெரிக்காவில் இருப்பதால், தன்னால் இந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டு பவதாரிணியின் முகத்தை கூட பார்க்க முடியாமல் போய்விட்டது என தனது வருத்தத்தை வீடியோ மூலம் பகிர்ந்து இருந்தார்.
அதில் ஒரு மாதத்திற்கு முன்னர் தான் பவதாரிணிக்கு புற்றுநோய் நான்காவது ஸ்டேஜில் இருப்பது கண்டறியப்பட்டது என்றும் அதற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக தான் இலங்கை சென்றார்கள் ஆனால் சிகிச்சை ஆரம்பிக்கும் முன்னரே அவர் இறந்துவிட்டார் எனவும் கூறி கண்ணீர் மல்க அந்த வீடியோவில் பேசி இருந்தார் நடிகை ஹாசினி.
சகோதரியின் மறைவால் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி என அனைவரும் மிகுந்த மனவேதனையில் தவித்து வர, மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் இறுகிய மனதுடன் தவித்து வருகிறார் இசைஞானி இளையராஜா.

Music Director Yuvan Shankar Raja Says Bhavatharini Taught Him To Play Piano | Bhavatharini
தனக்கு முதல் முறையாக பியானோ வாசிக்க சொல்லிக்கொடுத்தது தனது அக்கா பவதாரிணி தான் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.
பவதாரிணி மறைவு
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி உயிரிழந்தார். இசையுலகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக அவரது மறைவு பார்க்கப்படுகிறது. கல்லீரல் புற்றுநோயினால் பவதாரிணி பாதிக்கப்பட்டிருந்தது வெகு தாமதாகவே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவர், நேச்சுரோபதி என்கிற சிகிச்சை முறைக்காக இலங்கை சென்றுள்ளார். ஆனால் அவரது சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாகவே மாரடைப்பு ஏற்பட்டு அவர் தனது 47 வயதில் உயிரிழந்துள்ளது திரையுலகினரையும் பொதுமக்களையும் பெரும் சோகத்திற்குள் தள்ளியுள்ளது.
இறுதி அஞ்சலி
இலங்கையில் இருந்து பவதாரிணியின் உடல் விமானம் மூலமாக நேற்று சென்னை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து தியாகராய நகரில் அவரது தந்தை இளையராஜாவின் வீட்டில் அரசியல் தலைவர்கள், திரை பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. தமிழ் திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் அவருக்கு தங்களது அஞ்சலியை நேரடியாகவும் சமூக வலைதளம் வாயிலாகவும் செலுத்தினார்கள். இந்த தருணத்தில் மிகப்பெரும் சோகத்திற்கு உள்ளாகியிருக்கும் வெங்கட்பிரபு, கங்கை அமரன் , பிரேம் ஜி, வாசுகி, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, மற்றும் இளையராஜா ஆகிய குடும்பத்தினருக்கு அனைவரும் தங்களது ஆதரவுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
எனக்கு இசை கற்றுக் கொடுத்தது அக்கா தான்
பவதாரிணி பற்றிய பல்வேறு நினைவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தனது குழந்தை போன்ற குரலால் பல பாடல்களுக்கு உயிர்கொடுத்த அவர், லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்காத தடம்பதித்துச் சென்றுள்ளார். பவதாரணியுடனாக தங்களது பல நினைவுகளை திரையுலகினரும் பகிர்ந்து வருகிறார்கள். இசையைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சகோதரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா பேசியுள்ள பழைய காணொளி ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
தனது தந்தை இசைஞானி என்று போற்றப்பட்டாலும், யுவன் ஷங்கர் ராஜா இசையை முறையாக கற்றவர் இல்லை. ஆனால் கார்த்திக் ராஜா, பவதாரிணி ஆகிய இருவரும் முறையாக இசை பயின்றவர்கள். தனக்கு சுத்தமாக இசை தெரியாது என்றும், முதல்முறையாக தன் கையைப்பிடித்து பியாவோவில் வைத்து, தனக்கு அதை வாசிக்க சொல்லிக் கொடுத்தவர் தன் அக்கா பவதாரிணி தான் என்று யுவன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது காண்போரை உருகவைத்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Life can be cruel sometimes Stay strong Yuvan @thisisysr #Bhavatharini #RIPBhavatharini 🕊️pic.twitter.com/cpUsdD8KWc
— Irfan ❤️ (@irfan12995) January 25, 2024நல்லடக்கம்
பவதாரிணியின் உடம் சென்னையில் இருந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் நல்லடக்கம் செய்யப் படவுள்ளது. அவரது உடலுக்கு திருவாசகம் பாடி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இளையராஜா தனது மகளுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
Garudan Movie Soori Sasikumar Unni Mukundan Film Title Video Glimpse Details | Garudan: சூரி – வெற்றிமாறன்
நடிகர் சூரி – இயக்குநர் சசிகுமார் இணைந்து நடிக்கும் ‘கருடன்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனமீர்த்தவர் இயக்குநர் துரை செந்தில் குமார். இவரது இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது இப்படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. கருடன் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், சூரி, சசிகுமார் இணைந்திருக்கும் காட்சி ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.
சொக்கன் எனும் கதாபாத்திரத்தில் விசுவாசமான நாயகனாக இந்த வீடியோவில் சூரி தோன்றும் நிலையில், “விசுவாசத்துல மனுஷனுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா எப்பவும் நாய் தான் ஜெயிக்கும், ஆனால் அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா, சொக்கன் தான் ஜெயிப்பான்” என சூரியின் கதாபாத்திரத்தைப் பற்றி சசிகுமார் கதாபாத்திரம் விவரிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்று கவனமீர்த்துள்ளன.
Get ready for a soaring adventure! 🦅💥 The pulse-pounding “Glimpse of Garudan” is here!▶️🔗: https://t.co/rtxbkIpxTb#Garudan, starring @sooriofficial and directed by @Dir_dsk hitting theaters soon!🔥An @thisisysr musicalA #VetriMaaran story@SasikumarDir… pic.twitter.com/ZzxZLYn8JV
— Actor Soori (@sooriofficial) January 19, 2024வெற்றிமாறன் இப்படத்துக்கு கதை எழுதும் நிலையில், இப்படத்துக்கு இது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசை அமைக்கிறார்.
முன்னதாக வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக ப்ரொமோஷன் ஆன நிலையில், இந்தப் படத்தில் சூரியின் நடிப்பு பெரும் பாராட்டுகளைப் பெற்றது. மேலும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சூரி – வெற்றிமாறன் மீண்டும் இணையும் இப்படத்தின் அப்டேட் வெளியாகி இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க: அன்னபூரணி விவகாரம்: ”கோயில்களுக்கு செல்கிறேன்.. அப்படி நினைக்கவில்லை..” வருத்தம் தெரிவித்த நயன்தாரா
RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி