Tag: மிருணாள் தாகூர்

  • Nayanthara who spoke in Tamil on Hindi stage AV Raju apologizes Trisha take action Cinema Headlines | Cinema Headlines: ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா! ஏ.வி.ராஜூக்கு எதிராக இறங்கிய த்ரிஷா

    Nayanthara who spoke in Tamil on Hindi stage AV Raju apologizes Trisha take action Cinema Headlines | Cinema Headlines: ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா! ஏ.வி.ராஜூக்கு எதிராக இறங்கிய த்ரிஷா


    Nayanthara: ஆடிப்போன பாலிவுட்; ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா; என்ன பேசினார் தெரியுமா?
    மும்பையில்  2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட  விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வழங்கினார். மேலும் படிக்க
    Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் உருவாக காரணமான புத்தகம்.. ரகசியத்தை சொன்ன ராஜ்குமார் பெரியசாமி!
    ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி  இயக்கத்தில் உருவாகி வரும் படம் “அமரன்”. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது. இதனிடையே அமரன் படம் உருவானது எப்படி என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.மேலும் படிக்க
    Trisha: ஏ.வி.ராஜூ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கணும்.. சட்ட நடவடிக்கையை தொடங்கிய திரிஷா
    தன்னைப் பற்றி ஆதாரமில்லாமல் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்த முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு எதிரான திரிஷா சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். மேலும் படிக்க
    Priyamani: “பாலிவுட் நடிகைகள் கலாச்சாரம்: அவங்க எங்க போனாலும் ஃபோட்டோ வரும்” – பிரியாமணி பகிர்ந்த விஷயம்!
    பாலிவுட் நடிகர் நடிகைகள் குறித்த அதிர்ச்சியான மற்றும் ஆச்சரியமான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். பாலிவுட் திரை நட்சத்திரங்கள் குறிப்பாக நடிகைகள் எங்கு சென்றாலும் அவர்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்கும் கலைஞர்களை பாப்பராஸி என்பார்கள். அது ஜிம், ஏர்போர்ட், படப்பிடிப்புத் தளம் என எங்கு இருந்தாலும் அங்கு சென்று போட்டோ, வீடியோ எடுப்பார்கள். இதற்கு பின்னணியில் இருக்கும் விஷயம் என்னவென்றால், நடிகைகள் ஒரு ஏஜென்சி மூலம் அவர்கள் எங்கெங்கு செல்கிறார்களோ அந்த இடத்தைப் பற்றி முன்னதாகவே தகவல் கொடுக்க, அவர்கள் உடனே அந்த தகவலை பப்பராஸியிடம்  கொடுத்து புகைப்படம் எடுக்கச் சொல்வார்கள்.மேலும் படிக்க
    Mrunal Thakur: கங்கனா வீடுகளை விலைக்கு வாங்கிய மிருணாள் தாகூர்.. எத்தனை கோடி தெரியுமா?
    நடிகை மிருணாள் தாகூர் தற்போது மும்பை, அந்தேரி பகுதியில் அருகருகே உள்ள இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 35 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைந்துள்ள இந்த வீடுகளுக்கான பத்திரப்பதிவினை கடந்த ஜன.25ஆம் தேதி மிருணாள் செய்துள்ளார். இந்த 2 வீடுகளும் ரூ.10 கோடிகள் மதிப்பிலானவை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    மேலும், நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரர் மற்றும் அப்பாவுக்கு சொந்தமான இந்த அடுக்குமாடிக் குடியிருப்பினை தற்போது மிருணாள் தாகூர் வாங்கியுள்ளதாகவும், இந்த வீடுகளை தன் ரசனைப்படி தற்போது மிருணாள் புனரமைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

    மேலும் காண

    Source link

  • mrunal thakur buy 2 flats belonged to Kangana Ranaut in Mumbai

    mrunal thakur buy 2 flats belonged to Kangana Ranaut in Mumbai


    சீதா ராமம் புகழ் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur) மும்பையில் பல கோடிகள் மதிப்பிலான புது வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ளார்.
    தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகை
    இந்தி சீரியல் உலகில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து, தற்போது தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார் மிருணாள் தாகூர். பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே மிருணாள் ஹீரோயினாகவும் நல்ல கதாபாத்திரத் தேர்வுகளாலும் கவனமீர்த்து  வந்தாலும், “சீதா ராமம்” எனும் ஒற்றைப் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் கதாநாயகியாக மாறினார்.
    அடுத்தடுத்து நானியுடன் ஹாய் நன்னா, விஜய் தேவரகொண்டாவுடன் ஃபேமிலி ஸ்டார் என டோலிவுட் வட்டாரத்தில் மிருணாள் கலக்கி வரும் நிலையில். தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக தமிழ் சினிமாவிலும் அவர் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. 
    கங்கனாவின் வீடு
    இந்நிலையில் நடிகை மிருணாள் தாகூர் தற்போது மும்பை, அந்தேரி பகுதியில் அருகருகே உள்ள இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 35 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைந்துள்ள இந்த வீடுகளுக்கான பத்திரப்பதிவினை கடந்த ஜன.25ஆம் தேதி மிருணாள் செய்துள்ளார். இந்த 2 வீடுகளும் ரூ.10 கோடிகள் மதிப்பிலானவை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    மேலும், நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரர் மற்றும் அப்பாவுக்கு இந்த அடுக்குமாடிக் குடியிருப்பினை தற்போது மிருணாள் தாகூர் வாங்கியுள்ளதாகவும், இந்த வீடுகளை தன் ரசனைப்படி தற்போது மிருணாள் புனரமைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    காதல் கிசுகிசு
    மும்பையின் பரபரப்பான பகுதியில் பல கோடிகளில் வீடுகள் வாங்கி மிருணாள் செட்டில் ஆகியுள்ளது தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
    சீதா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் ஹோம்லி லுக்கில் அசத்தி மிருணாள் ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும், தற்போது கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் வெரைட்டி காண்பித்து நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட் உலகின் புகழ்பெற்ற ராப் பாடகரான பாட்ஷாவை மிருணாள் டேட்டிங் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இணையத்தில் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் வைரலான நிலையில், இந்தத் தகவல் தவறானது எனப் பதிவிட்டு பாட்ஷா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 
    மிருணாள் – விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்திருக்கும் ஃபேமிலி ஸ்டார் படம் இந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்தியில் இவர் நடித்துள்ள பூஜா மேரி ஜான் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.
    மேலும் படிக்க: Akaay: “அகாய்” என்றால் இதுதான் அர்த்தம்: அனுஷ்கா – விராட் கோலி மகனுக்கு இந்தப் பெயர் ஏன் தெரியுமா?
    Ranam Aram Thavarel Review: விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதை – வைபவின் ரணம் அறம் தவறேல் விமர்சனம் இதோ!

    மேலும் காண

    Source link