Tag: மகா சிவராத்திரி

  • Maha Shivratri 2024 List of Lord Shiva Movies in Tamil To Watch Out

    Maha Shivratri 2024 List of Lord Shiva Movies in Tamil To Watch Out


     
    இன்றைய தினம் சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரி. அனைத்து சிவ தலங்களிலும் சிவபெருமானுக்கு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதை பார்ப்பதற்கு பக்தகோடிகள் அனைவரும் கண்விழித்து சிவபெருமானை ஆராதிப்பார்கள். ஒரு சில அன்றைய தினம் இரவு கண்முழிக்க வேண்டும் என்பதற்காக கச்சேரி, நாட்டியம், இசை என பல நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒரு சிலர் சிவனின் பெருமைகளை போற்றக்கூடிய படங்களை கண்டு பரவசமடைவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில சிவபக்தி படங்களை பற்றி இன்றைய தினத்தில் பார்க்கலாம் :
     

     
    திருவிளையாடல் :
    ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி நடிப்பில் 1965ம் ஆண்டு வெளியான திருவிளையாடல் திரைப்படம் சிவனின் மகிமையை பெருமையை பறைசாற்றிய திரைப்படம். 
    சரஸ்வதி சபதம் :
    ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1966ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மிகவும் பிரபலமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்படும் ஒரு திரைப்படம். 
    திருவருட்செல்வர் :
    ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1967ம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, ஆர்.முத்துராமன், பத்மினி, நாகேஷ், மனோரமா என ஏராளமானோரின் நடிப்பில் உருவான இப்படம் சிவனின் பெருமைகளை போற்றியது. 
     

    சிவன் மகிமை :
    கிரிதர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உன்சூர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1981ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிவன் மகிமை’. சீனிவாச மூர்த்தி, பத்மப்பிரியா, மைசூர் லோகேஷ், ஸ்ரீநாத், ஸ்ரீலதா, ராஜனந்த், டிஸ்கிரி நாகராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். சிவபெருமானின் மகிமையை போற்றும் இப்படம் சிவராத்திரி கண்டுகளிக்க உகந்த திரைப்படம். 
    சிவலீலை :
    விஎஸ்என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வி.சுவாமிநாதன் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான சிவலீலை படத்தில் கே.ஆர்.விஜயா, சித்தாரா, கல்யாண்குமார், சீனிவாச மூர்த்தி, கவிதா, சுதர்ஷன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.  டி.ஜி.லிங்கப்பா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். 
     சக்திலீலை :
    டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, ஜெயலலிதா, கே.ஆர். விஜயா, மஞ்சுளா, சிவகுமார், சுந்தர்ராஜன், அசோகன், மனோரமா மற்றும் ஏராளமானோர் நடிப்பில் மல்டி- ஸ்டாரர் புராணப் படமாக 1972ம் ஆண்டு வெளியானது.   
    இப்படி ஏராளமான பக்தி திரைப்படங்கள் சிவபெருமானின் மகிமைகள், அதிசயங்களை உணர்த்தும் வகையில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. காலத்தால் அழியாத இப்படங்கள் வரும் தலைமுறையினருக்கும் சிவ பக்தியை பறைசாற்றும் படங்களாக அமைந்தன. சிவராத்திரி தினமான இன்று இந்த சிவ பக்தி படங்களை கண்டு ரசித்து சிவனின் பரிபூரணமான அருளை பெறுங்கள். 
     

    மேலும் காண

    Source link

  • Maha Shivaratri 2024 Preparation of 40,000 latts at Villupuram Sri Kailasanathar Temple in progress ahead of Maha Shivratri – TNN

    Maha Shivaratri 2024 Preparation of 40,000 latts at Villupuram Sri Kailasanathar Temple in progress ahead of Maha Shivratri – TNN


    விழுப்புரத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு 40 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    மகா சிவராத்திரி
    விழுப்புரம் திரு.வி.க., வீதியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு 40,000 லட்டுகள் தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் திரு.வி.க வீதியில் ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோயிலின் மூலவராக கைலாசநாதர் உள்ளார்.

    லட்டு பிரசாதம் 
    வருகின்ற 8-ம் தேதி  மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இக்கோயிலின் பிரதோஷ பேரவை சார்பில், பிரதோஷ பேரவை உறுப்பினர்களிடம் இருந்தே பணம் வசூல் செய்து, சிவராத்திரி அன்று சுவாமி தரிசனம் செய்து வரும் அனைத்து பக்தர்களுக்கும் லட்டுகளை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் லட்டுக்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. லட்டுக்களை தயாரிக்கும் பணியில் பேரவையின் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு லட்டுகளை பிடித்து பெட்டிகளில் போட்டு வைக்கிறார்கள். மொத்தமாக 40 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    1008 சங்கு பூஜை
    அதுமட்டுமல்லாமல் மார்ச் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரி திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ள நிலையில், காலை 11 மணிக்கு 1008 சங்கு பூஜைகள் நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறும் கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் காண

    Source link

  • Tamilnadu special buses will be operated on the occasion of Shivratri Mukurtham and weekends | TN Special Buses: சிவராத்திரி, முகூர்த்த நாள்! 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    Tamilnadu special buses will be operated on the occasion of Shivratri Mukurtham and weekends | TN Special Buses: சிவராத்திரி, முகூர்த்த நாள்! 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


    TN Special Buses: சிவராத்திரி, முகூர்த்த நாள், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சிறப்பு பேருந்துகள்:
    இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ”08/03/2024 (வெள்ளிக்கிழமை சிவராத்திரி முகூர்த்தம்) 09/03/2024 (சனிக்கிழமை) மற்றும் 10/03/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 07/03/2024 (வியாழக்கிழமை) அன்று 270 பேருந்துகளும் 08/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 390 பேருந்துகளும், 09/03/2024 (சனிக்கிழமை) 430 பேருந்துகளும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 08/03/2024 மற்றும் 09/03/2024 (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) அன்று 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 07/03/2024 (வியாழக்கிழமை) அன்று 270 சிறப்பு பேருந்துகளும் 08/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 390 பேருந்துகளும் மற்றும் 09/03/2024 (சனிக்கிழமை) அன்று 430 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 70 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
    முன்பதிவு:
    இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 9,096 பயணிகளும் வெள்ளிக்கிழமை 7,268 பயணிகளும் சனிக்கிழமை 3,769 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,011 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மேலும் படிக்க
    Teachers Strike: ‘அரசு ஊழியராக மட்டும் ஆகாதீர்கள்’- 2 வாரம் கடந்து நீளும் போராட்டம்; இடைநிலை ஆசிரியர்கள் வேதனை!
    ” ரூபாய் 20 கோடி பணம் தரலனா பேருந்து, ரயிலில் குண்டுகள் வெடிக்கும்” மெயிலில் வந்த மிரட்டலால் பரபரப்பு!

    மேலும் காண

    Source link

  • Adavalleeswarar Temple Villupuram Munnur Guru Peyarchi Sthalam Marriage Problems Solution TNN

    Adavalleeswarar Temple Villupuram Munnur Guru Peyarchi Sthalam Marriage Problems Solution TNN


    முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில்
    தமிழக வரலாற்றில் தடம்பதித்தது இந்த முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில். மேற்குத் திசை நோக்கி எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியைக் காண, குரு பெயர்ச்சி அன்று செல்ல வேண்டிய மிக சிறந்த கோவில் இது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குப்பத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர் திருத்தலம்.

    நவக்கிரகங்களில் சுபகிரகமாகத் திகழ்பவர் பிருகஸ்பதி என்று வணங்கப்படும் குருபகவான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆச்சார்யனாக விளங்கும் குரு பகவான் நான்கு வேதங்களிலும் கரை கண்டவர். சீலத்தினாலும் கடும் தவ வேள்விகளாலும் இவரிடம் உள்ள ஆன்ம ஒளியைக் கண்டு ஈரேழு பதினான்கு உலகத்தவரும் இவரைப் பணிந்து போற்றி வணங்கினர். முக்காலத்தையும் முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் ஞானமும் பெற்றதனால் தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற கர்வம் குரு பகவானுக்கு சில விநாடிகள் ஏற்பட்டது. தேவர்களேயானாலும் கர்வம்கூடாது என்பது தர்மத்தின் நியதி. இதற்கு மாறாக மனம் மாசுபட்டு குரு பகவான் நடந்து கொண்டதால் தன் தவ வலிமையையும் தெய்வீக ஒளியையும் இழக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. சிறிது நேர கர்வத்தினால் தனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதே என்று எண்ணி மனம் வருந்திய தேவ குரு படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை வணங்கி, தான் இழந்த பலத்தை மீண்டும் பெற வழி கூறியருளுமாறு வேண்டினார் எனச் சொல்லப்படுகிறது

    குரு பகவானின் நிலை கண்டு வருந்திய பிரம்ம தேவரும் மனமிரங்கி, பூவுலகில் முன்னூற்று மங்கலம் என்று பூஜிக்கப்படும் திருத்தலம் சென்று அங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி அன்னை பார்வதி தேவியுடன் ஆனந்தத் திருநடனம் புரியும் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து தவமியற்றினால் இழந்த தவவலிமைகளை மீண்டும் பெறலாம் என உபாயம் கூறி அருளினார். பிரம்மதேவனின் ஆலோசனையை ஏற்ற குருபகவான் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து நீண்ட நாட்கள் தவமியற்ற அவரது தவவலிமையால் மனம் மகிழ்ந்த ஈசன் அன்னை பார்வதி தேவியுடன் தரிசனமளித்து குரு பகவானுக்குத் தவ பலத்தையும் ஆன்ம ஒளியையும் மீண்டும் வழங்கி அருள்புரிந்தாராம். நவக்கிரகங்களில் முழுமையான சுப பலம் பெற்ற குரு பகவான் சர்வேஸ்வரனால் ஆட்கொள்ளப்பட்ட இத்திருத்தலம் அன்றிலிருந்து தென் திருக்கயிலாயம் என்றும் பூவுலகின் கயிலை என்றும் ஈரேழு பதினான்கு உலகத்தவராலும் பக்தியோடு பூஜிக்கப்பட்டு வருவதாக தலபுராணம் தெரிவிக்கின்றது.

    சங்க கால இலக்கியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் பத்துப்பாட்டில் நான்காவதாகக் குறிக்கப்படுவது சிறுபாணாற்றுப் படை என்னும் இலக்கியமாகும். இது ஒய்மா நாட்டை ‘கிடங்கல்’ என்னும் கோட்டையிலிருந்து செங்கோல் தவறாமல் அரசாண்ட மன்னன் நல்லியக் கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நல்லூர் நத்தத்தனார் என்பவரால் பாடப்பட்ட இலக்கியமாகும். இந்நூலில் அண்ணல் யானை அருவிதுகள் அவிப்ப நீறடங்கு தெருவின் அவன் சாறயர் மூதூர் (சிறுபாணாற்றுப்படை பா.200-1) என்று பாடப்பெற்ற மூதூரில் (தற்போதைய முன்னூர்) உள்ள ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் தனிச்சந்நிதியாக ஆறு திருமுகங்கள் மற்றும் பன்னிரு திருக்கரங்களுடன் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசிவசுப்ரமணியராக மயில் மீது அமர்ந்த அற்புதத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் முருகப் பெருமான். நல்லியக்கோடன் மீது எதிரிகள் போர் தொடுத்தபோது இம்முருகப் பெருமானின் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த தாமரை மொட்டுக்கள் முருகனின் திருவருளால் வேலாக மாறி எதிரிகளின் சேனை வெள்ளத்தை வதைத்து மீண்டது. இதனால் மன்னன் நல்லியக்கோடன் முன்னூர் முருகப் பெருமானுக்கு தினசரி வழிபாடுகள் செய்யக் கொடைகள் அளித்து வெற்றிவேல் பரமனுக்கு நன்றி செலுத்தியுள்ளார்.

    சம்புவராயர் காலத்து வரலாற்றுத் தொடர்பு
    நல்லியக்கோடன் பெற்ற வெற்றியின் நினைவாக இன்றும் இத்தலத்தில் செவ்வேள்பரமனுக்கு வேல் பூஜைத் திருவிழா, சித்திரை மாதம், அக்னி நட்சத்திரத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. சங்க காலத்துத் தொன்மையும், பல்லவர் காலத்துச் சமயச் சிறப்பும், சோழர் காலத்து கலைச் சிறப்பும், சம்புவராயர் காலத்து வரலாற்றுத் தொடர்பும், காடவராயர் காலத்து கல்வெட்டுத் தொடர்பும் கொண்ட மிகவும் புராதனமான திருத்தலம் முன்னூர் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருத்தலமாகும். சோழ மன்னன் குலோத்துங்கன் எம்பெருமானுக்கு அன்பு பணிவிடைகள் செய்து வழிபட்டபோது ஈசன் தில்லையம்பலத்தில் ஆடிய ஆனந்த நடனத்தைக் காண வேண்டும் என்று பக்தியோடு வேள்வி செய்ததினால் அரசனை மகிழ்விக்க எம்பெருமானே அற்புதக் காட்சி தந்து தன் தேவியுடன் ஆனந்த நடனமாடியதால் இத்தலத்தின் ஈசனுக்கு ஆடவல்லீஸ்வரர் எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளதாகத் தல வரலாறு தெரிவிக்கின்றன. இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அன்னை பிரகன்நாயகியின் அருள் ததும்பும் திருமுக தரிசனம் இங்கு வழிபடும் பக்தர்களின் விழிகளில் நீங்காமல் நிலைத்து விடுகிறது.

    இறைவன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளதாக இத்தலத்தின் வரலாறு
    புராதன காலத்தில் முன்னூற்று மங்கலம் எனப் புகழ்பெற்ற இத்தலம் காலப்போக்கில் மருவி தற்போது முன்னூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் உள்ள மிகப் பழமையான கல்வெட்டுகளில் இத்தலத்தின் ஈசன் ஆடவல்ல நாயனார், திருமூலத்தானமுடைய மகாதேவர், விஸ்வேஸ்வரர் என்னும் திருநாமங்களுடன் மன்னர்களின் காலத்தில் வணங்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. பிறந்தால் முக்தி என்று போற்றப்படும் திருவாரூர் தியாகேசர் திருச்சன்னிதி பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் இத்தலத்தின் கல்வெட்டுகளிலும் உள்ளன. இத்திருக்கோயிலில் உள்ள இரண்டு புடைப்புச் சிற்பத் தொடர்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் துறையினரால் 1966-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகப் புராதனமான இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், தென் திசை நோக்கி எழுந்தருளியிருப்பது வேறு எங்கும் எளிதில் காண முடியாத அரிய தரிசனம் ஆகும். ஜாதகத்தில் 8-ம் இடமாகிய ஆயுள் ஸ்தானத்தில் தோஷமிருப்பவர்களுக்கும் கடும் நோயினால் அவதியுறுபவர்களுக்கும் அளவற்ற இரக்கம் காட்டி அவர்களைக் காப்பாற்றவே இறைவன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளதாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கிறது.

    அரிய திருக்காட்சியாக மேற்குத் திசை நோக்கி எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி
    திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை
    சனகாதி முனிவர்களுக்கு மௌன யோக நிலையில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் காட்சி தந்து அருளியுள்ளார் என்று பிரம்மாண்ட புராணம் தெரிவிக்கின்றது. தேவ குருவான பிருகஸ்பதிக்கு இழந்த தவவலிமையை மீண்டும் அளித்து அருள்பாலித்த தலம் என்பதாலும் இறைவன் தென்புலத்தை நோக்கியிருப்பதாலும் மிகச் சிறந்த குருதோஷப் பரிகாரத் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது. இத்தலத்தில் அரிய திருக்காட்சியாக மேற்குத் திசை நோக்கி எழுந்தருளி யுள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது. காஞ்சி மகாபெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் திருவலம் சிவானந்த மௌனகுரு சுவாமிகளும் இத்திருத்தலத்திற்கு எழுந்தருளி ஸ்ரீ ஆடவல்லீஸ்வரப் பெருமானையும் அன்னை ஸ்ரீ பிருகன்நாயகியையும் தரிசித்துள்ளனர்.ஆன்மீகப் பொக்கிஷமான இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கும் ஈசன் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரப் பெருமானையும் அன்னை ஸ்ரீபிரகன் நாயகியையும் தரிசிக்க குருவருளோடு திருவருளும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெறலாம் என கூறப்படுகிறது.

     

    மேலும் காண

    Source link