மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திருச்சியில் பாஜக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக தேசிய மகளிரணித் தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில், அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூரண கும்ப மரியாதை அளித்து, பரிவட்டம் கட்டி வரவேற்றனர். விழா நடைபெற்ற பகுதியில், நாட்டுப்புற கலைகளுடன், கிராமிய நடனங்களை அமித்ஷா கண்டு ரசித்தார்.
Joined Pongal celebrations with my sisters and brothers of Tamil Nadu.
தமிழ்நாட்டு சகோதர சகோதரிகளுடன் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டேன். pic.twitter.com/0hkO6ccwIn
— Amit Shah (@AmitShah) January 6, 2026
அப்போது, பாஜகவினர் பொங்கல் வைத்தனர். பொங்கல் பானையில் நெய் மற்றும் வெல்லத்தை போட்டு, அமித்ஷா பொங்கல் வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, அமித்ஷா வெறும் காலுடன் நின்று பொங்கல் வைத்து வழிபட்டது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் இன்று நடைபெற்ற துடிப்பான பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. இது இயற்கையுடனும், நமது சமூகங்களுடனும் நமது ஆழமான பிணைப்பை நன்றியுணர்வு மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் புதுப்பிக்கும் ஒரு புனிதமான பண்டிகையாகும். இது அனைவருக்கும்… pic.twitter.com/91CdqYNWaT
— Amit Shah (@AmitShah) January 5, 2026
திராவிட கட்சியினர் பொங்கல் என்ற பெயரில் பெயரளவு செய்துவிட்டு, செருப்பு அணிந்த காலுடன் புகைப்படம் எடுப்பார்கள் என்றும், ஆனால், அமித்ஷா வெறும் காலுடன் சென்று பாரம்பரியத்தை கடைபிடித்து மரியாதையுடன் பொங்கல் வைத்து வழிபட்டதாகவும் பாஜகவினர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அமித்ஷா, அண்ணாமலை, பாஜக, திமுக, amit shah, bjp, annamalai, dmk, pongal, பொங்கல்,



















