Tag: பாவனா

• Cinema Headlines today april 13th today Tamil cinema news vijay the greatest of all time goat bhavana mamitha baiju

Cinema Headlines today april 13th today Tamil cinema news vijay the greatest of all time goat bhavana mamitha baiju

நாளை சம்பவம்.. வெறித்தனமான அப்டேட் கொடுத்த VP … கோட் படத்தின் முதல் பாடல் நாளை ரிலீஸ்
நாளை தமிழ் புத்தாண்டை நாளில் தி கோட் படத்தின் அப்டேட் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.  பிரஷாந்த், பிரபுதேவா, லைலா , சினேகா, மோகன், பிரேம்ஜி, வைபவ் எனப் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது தி கோட் படத்தின் முதல் பாடல் நாளை தமிழ் புத்தாண்டு நாளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஷூ திருடிய டெலிவரி பாய்க்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சோனு சூட் – குவியும் கண்டனங்கள்
இந்தி,  தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து இந்தியத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சோனு சூட். எனினும் தன் நடிப்பைத் தாண்டி கொரோனா பெருந்தொற்று காலம் தொடங்கி தன் உதவிப் பணிகளுக்காக சோனு சூட் பெரிதும் அறியப்பட்டு வருகிறார். இந்நிலையில் இணையத்தில் வைரலான ஷூ திருடிய நபருக்கு ஆதரவாக சோனு சூட் தற்போது பதிவிட்டுள்ளது கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
விஜய் கட்டிய சாய்பாபா கோயிலில் தரிசனம்.. ஷோபா சந்திரசேகர் பற்றி ராகவா லாரன்ஸ் பகிர்ந்த தகவல்!
நடிகர் விஜய் தன் தாய் ஷோபா சந்திரசேகருக்காக கட்டிக் கொடுத்துள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்று நடிகர் ராகவா லாரன்ஸ் தரிசனம் செய்துள்ளார். சென்னை, கொரட்டூரில், 8 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் விஜய் தன் அம்மாவுக்காக சாய்பாபா கோயிலைக் கட்டிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த சாய்பாபா கோயிலை நடிகர் விஜய்யின் தாய் ஷோபாவுடன் சென்று பார்வையிட்டு வீடியோ பகிர்ந்துள்ளார்.
என்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள்… தன்னடகத்தோடு பதில் சொன்ன ராஷ்மிகா மந்தனா
தன்னைவிட எத்தனையோ அழகான, திறமையான பெண்கள் இருந்தும் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசியுள்ளார். கன்னட சினிமா  தொடங்கி, தெலுங்கு, இந்தி எனப் பயணித்து இந்திய சினிமாவில் நேஷனல் க்ரஷ் எனும் அடைமொழியுடன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பாக்ஸ் ஆஃபிஸிலும் இவரது திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்து வருகின்றன. இந்நிலையில் திரையுலகில் தன்னுடைய இடம், தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பு ஆகியவை பற்றி ராஷ்மிகா தற்போது பேசியுள்ளார்.
பாலாவுடன் பணியாற்றியது பாக்கியம்.. நிறைவடைந்த வணங்கான் ஷூட்டிங்: அருண் விஜய் நெகிழ்ச்சி!
பாலா -அருண் விஜய் காம்போவில் உருவாகி வந்த வணங்கான் திரைப்படத்தின் ஷூட்டிங் நேற்று நிறைவடைந்தது. சூர்யா நடிக்கவிருந்து பின் அருண் விஜய்க்கு இந்த வாய்ப்பு வந்து, பல சர்ச்சைகளைக் கடந்து தற்போது வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ள திரைப்படம் வணங்கான். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் காண

Source link

• Bhavana: "நீதி கிடைக்கும் வரை போராடுவேன்" நீதிமன்றமே இப்படி பண்ணலாமா? கேரள நடிகை வேதனை

Bhavana: "நீதி கிடைக்கும் வரை போராடுவேன்" நீதிமன்றமே இப்படி பண்ணலாமா? கேரள நடிகை வேதனை

தனக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று கடத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார்.

நடிகை கடத்தல் வழக்கு

கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளாவில் கொச்சியில் பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்ட நிகழ்வு தென் இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்திற்கு பின் மலையாள நடிகர் திலீப் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது வரை இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து  வருகிறது.

பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் முக்கிய ஆதாரமாக வீடியோ ஒன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.  நீதிமன்ற காவலில் இருந்த இந்த மெமரி கார்ட் சட்டவிரோதமாக மூன்று முறை கையாளப் பட்டதாக கடந்த 2018 ஆம் ஆண்டு  கேரள தடயவியல் துறை தெரிவித்தது . இதனைத் தொடர்ந்து  இந்த வழக்கு மேலும் சர்ச்சைக்குரியதாக மாறியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கேரள  நீதிமன்ற காவலில் இருந்த, இந்த மெமரி கார்டை  எர்ணாகுளம் மாவட்ட நீதிபதியின் அசிஸெடெட்ன் லீனா ரஷீத் , மற்றும் விசாரணை நீதிமன்ற அதிகாரி  தாஜுத்தீன் சட்டவிரோதமாக கையாண்டிருப்பது தெரியவந்துள்ளது தெரியவந்துள்ளது.

தனது தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நீதிமன்றத்தில் இப்படியான முறைகேடுகள் நடந்ததுள்ளது பற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் பாதிக்கப்பட்ட நடிகை.

நீதி கிடைக்கும் வரை போராடுவேன்:

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் “தனியுரிமை என்பது ஒரு நபரின் அடிப்படை உரிமை, ஆனால் இது இந்த நாட்டின் அரசியலமைப்பால் எனக்கு வழங்கப்பட்ட உரிமை, காட்சிகள் அடங்கிய மெமரி கார்டின் ஹாஷ் மதிப்பு பலமுறை மாற்றப்பட்டது. மேலும் இந்த நீதிமன்றத்தில் எனது தனியுரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை என்பதை அறிந்து மிகவும் பயமாக இருக்கிறது.

பாதிக்கப்பட்டவரின் நீதியை பலப்படுத்த வேண்டிய நீதிமன்றமே  பாதிக்கப்பட்டவர்களை உடைத்தெறிந்து குற்றவாளிகளை பெருமைப்படுத்தும் செயலை செய்கிறது. இருப்பினும், நேர்மையான நீதிபதிகளின் காலம் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையுடன், எனக்கு நீதி கிடைக்கும் வரை எனது போராட்டத்தை தொடர்வேன். ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடைசித் தூணாக இருக்கும் நமது நீதித்துறையின் புனிதம் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கையுடன் எனது பயணத்தைத் தொடர்வேன். சத்யமேவ ஜெயதே.” என்று அவர் கூறியுள்ளார்.

Source link