இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக திகழ்வது ரயில்வே போக்குவரத்து ஆகும். தொலைதூர மற்றும் குறுகிய அளவு என பல்வேறு விதமாக ரயில்வே சேவை வழங்கப்பட்டு வருகிறது. பீகாரில் உள்ள பாரவ்னியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ வரை எக்ஸ்ப்ரஸ் ரயில் ஒன்று பயணிகள் சேவைக்காக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருவது வழக்கம்.

பயணியை தாக்கிய டிடிஆர்:

இந்த நிலையில், இன்று வழக்கம்போல இந்த ரயில் பாரவ்னியில் இருந்து உத்தரபிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயில் சரியாக உத்தரபிரதேசத்தில் உள்ள கோந்தாவில் இருந்து பாரபங்கி இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது, அவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர் அந்த பயணியை பளார் என்று அறைந்தார். மேலும், அந்த பயணியின் துண்டை இழுத்து அவரை துன்புறுத்தினார். அந்த பயணியை அவர் தொடர்ந்து அறைந்ததை அங்கே இருந்த மற்றொரு பயணி வீடியோவாக எடுத்தார்.

அந்த டிக்கெட் பரிசோதகர் அவர்கள் வீடியோ எடுப்பதை தடுத்ததுடன், வீடியோ எடுத்தவரின் செல்போனை பறிக்க முயற்சித்தார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ये कौन TT है जो बरौनी-लखनऊ एक्सप्रेस में गरीब निर्दोष यात्रियों को पीट रहा है?

ये सरेआम गुंडागर्दी है।@AshwiniVaishnaw क्या इसके विरुद्ध कड़ी कार्यवाही करेंगे? pic.twitter.com/Xt4xZul6YX

— Surya Pratap Singh IAS Rtd. (@suryapsingh_IAS) January 18, 2024

பணியிடை நீக்கம்:

இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, தற்போது அந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ரயில்வே துறையினர் நடத்திய விசாரணையில் அந்த டிக்கெட் பரிசோதகர் பெயர் பிரகாஷ் என்று தெரியவந்துள்ளது. அந்த வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாமல் சாதாரண வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் அவர் வைத்திருந்ததால் டிக்கெட் பரிசோதகர் அவரை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியது. அவர் மீது ரயில்வே துறை சார்பில் கடுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: PM Modi Visit Schedule: ஒரே நாளில் 3 மாநிலங்களுக்கு பறக்கும் பிரதமர் மோடி! மொத்த ப்ளான் இதுதான்!

மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: 1000 ஆண்டுகள் தாங்கும் வகையில் அயோத்தி ராமர் கோயில்! 380 கல் தூண்கள்! 15 மீட்டர் தடிமன் அடித்தளம்!

Tag: பயணி

Watch Video: பயணிக்கு பளார்! பளார்! ஓடும் ரயிலில் டி.டி.ஆர். வெறிச்செயல் – நீங்களே பாருங்க

Passenger Who Got Stuck Inside The Lavatory For About An Hour On SpiceJet Flight From Mumbai To Bengaluru
SpiceJet: மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பெஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் சுமார் ஒரு மணி நேரமா சிக்கிக் கொண்டிருந்தார்.
விமான கழிவறையில் சிக்கிய பயணி:
மும்பையில் இருந்து நேற்று அதிகாலை 2 மணியனிக்கு பெங்களூருவுக்கு ஸ்பெஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு பிறகு ஆண் பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றிருக்கிறார். அங்கு, கழிவறை கதவின் பூட்டு பழுதாகி இருந்ததால் அவரால் வெளியே வர முடியாமல் இருந்திருக்கிறார்.
சில நிமிடங்கள் கதவை திறக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், கழிவறை கதவை திறக்க முடியாமல் அதிகாலை 3.42 மணி வரை உள்ளேயே இருந்திருக்கிறார். பெங்களூருவில் விமானம் தரையிறங்கிய பிறகே, ஊழியர்கள் விமானத்தில் ஏறி கதவை உடைத்து அவரை மீட்டுள்ளனர்.
ஒரு மணி நேரமாக திக் திக் பயணம்:
இதற்கிடையில், அதாவது கழிவறையில் சிக்கி கொண்டிருந்த நேரத்தில் பயணிக்கு ஊழியர்கள் ஒரு குறிப்பை அனுப்பி உள்ளனர். அதில், “சார், எங்களால் முடிந்தவரை கதவை திறக்க முயற்சித்து வருகிறோம். ஆனால், எங்களால் கதவை திறக்க முடியவில்லை. நீங்க பயப்பட வேண்டாம். சில நிமிடங்களில் விமானம் தரையிறங்கிவிடும்.
The passenger who got stuck inside the lavatory for about an hour on SpiceJet flight operating from Mumbai to Bengaluru is being provided a full refund: SpiceJet Spokesperson https://t.co/nrrxaDGC4c
— ANI (@ANI) January 17, 2024எனவே, தயவு செய்து கழிவரை மூடியில் உட்கார்ந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். சில நிமிடங்களில் மெயின் கதவு திறக்கப்படும். அதன் பிறகு இன்ஜினியர் வருவார். நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, ஒரு மணி நேரமாக கழிவறையில் சிக்கிக் கொண்ட நபரை பத்திரமாக மீட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம்:
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் கூறுகையில், “மும்பையிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கழிவறையில் பயணி ஒருவர் ஒரு மணி நேரமாக சிக்கி தவித்தார். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். கதவின் பூட்டில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. பயணம் முழுவதும், எங்கள் குழுவினர் பயணிக்கு உதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்கினர். அவர் மீட்கப்பட்டதும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. பயணிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். உங்களது விமான கட்டணத்தை முழுவதுமாக திருப்பி தருகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க
பளார் பளார்! விமானியை சரமாரியாக அறைந்த பயணி – இண்டிகோ விமானத்தில் மீண்டும் சர்ச்சை!