Tag: பங்குனி உத்திரம்

• Panguni Uthiram 2024 Peacock Murugan Temple Panguni Uthiram Chariot

Panguni Uthiram 2024 Peacock Murugan Temple Panguni Uthiram Chariot

விழுப்புரம் : பிரசித்தி பெற்ற மயிலம் முருகர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேரோட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. இதனையொட்டி கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பெருவிழா துவங்கியது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தது.

பங்குனி உத்திர திருத்தேரோட்டம்:
8ம் நாள் திருவிழாவான நேற்று இரவு திருக்கல்யாணமும், வெள்ளி குதிரை வாகன உற்சவமும் நடந்தது. பங்குனி உத்தர விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தேரில் வள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலயசுவாமிகள் வடம்பிடித்து துவக்கி வைத்தார்.

அப்போது ‘மயிலம் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக அலகு குத்தி மலையேறினர். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். இன்று இரவு முத்து விமான உற்சவமும், வரும் 24 ம் தேதி காலை பங்குனி உத்திரம், தீர்த்தவாரி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 25ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு உற்சவமும், 26 ம் தேதி இரவு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் திருமடத்தினர் செய்திருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. அதிகளவில் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதையட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.
பங்குனி உத்திரம் என்றால் என்ன?
தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக பங்குனி உத்திரம் எனப்படும். பங்குனி மாதத்தில் பௌர்ணமி திதியில் வரும் உத்திர நட்சத்திரமே பங்குனி உத்திரம் ஆகும்.

மேலும் காண

Source link

• Sabarimala: உத்திர திருவிழாவை ஒட்டி சபரிமலை கோயில் நடை திறப்பு.. சிறப்பு பூஜைகள் என்னென்ன? முழு விவரம்..

Sabarimala: உத்திர திருவிழாவை ஒட்டி சபரிமலை கோயில் நடை திறப்பு.. சிறப்பு பூஜைகள் என்னென்ன? முழு விவரம்..

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இதனை தவிர்த்து விஷு, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்களுக்கும் நடை திறக்கப்படும். ஆனால் கார்த்திகை மாதம் மற்றும் மகரஜோதி பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தருவார்கள்.

அதன்படி பங்குனி மாதம் மற்றும் உத்திர திருவிழாவை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (13 ஆம் தேதி புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதரி நடையை திறந்து வைத்து தீப ஆராதனை காட்டுவார். இதனை தொடர்ந்து நாளை முதல் (14 ஆம் தேதி) வழக்கமாக சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தினசரி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, சகஸ்ர கலச பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். 18-ந் தேதி வரை 5 நாட்கள் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

மேலும் பங்குனி விழா வரும் 16 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பத்து நாட்கள் வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். இவ்விழாவின் போது கூடுதல் சிறப்பாக உத்சவ பூஜை நடத்தப்படுகிறது. 10 ஆம் நாள் திருவிழாவின் போது ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையாக பம்பையில் ஆரட்டு விழா நடைபெறும். வரும் 25 ஆம் தேதி மாலை கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெரும். அதனை தொடர்ந்து வழக்கமான இரவு பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். பங்குனி உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு செய்து வருகிறது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை தொடர்ந்து அதிக நாட்கள் நடை திறக்கப்பட்டிருப்பது இதுவே ஆகும். இந்த ஆண்டு மகர விளக்கு பூஜைக்காக தினசரி வரும் பக்தர்களின் கூட்டம் ஒரு லட்சத்தை கடந்து பதிவானது. இதனால் சபரிமலையே ஸ்தம்பித்து போனது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய நேரிட்டது. பக்தர்களுக்காக தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. ஸ்பாட் புக்கிங் போன்ற வசதிகள் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link