Tag: நம்பிக்கை வாக்கெடுப்பு

  • நெருக்கடி தரும் ED.. சிக்ஸர் அடித்த அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு!
    நெருக்கடி தரும் ED.. சிக்ஸர் அடித்த அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு!


    மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.
    கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், கட்சியின் செய்தித்தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
    மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயரை தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார் என கடந்த சில நாள்களாகவே தகவல் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால், இதுவரை அதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு:
    இப்படிப்பட்ட சூழலில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், 6 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. 
    இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்படும் என அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி முதலமைச்சர் விரைவில் கைது செய்யப்படுவார் எனக் கூறி பாஜக உறுப்பினர்கள் தங்களை அணுகியதாக இரண்டு ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் என்னிடம் கூறினர்.
    ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலக ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மேலும் பலர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் எம்எல்ஏக்களிடம் தெரிவிக்கப்பட்டது. பாஜகவில் சேர, எம்.எல்.ஏ.,க்களுக்கு, 25 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளனர்.
    டெல்லியில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’:
    ஆனால், பணம் வேண்டாம் என எம்.எல்.ஏ.க்கள் என தெரிவித்தனர். மற்ற எம்எல்ஏக்களிடம் பேசியபோது, ​​அவர்கள் 21 எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ளவில்லை என தெரிய வந்தது. 7 பேரை மட்டுமே தொடர்பு கொண்டுள்ளனர். பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர ஆபரேஷன் லோட்டஸை அமல்படுத்த முயற்சிக்கின்றனர்.
    மதுக்கொள்கை ஊழல் மோசடியே அல்ல. மற்ற மாநிலங்களில் உள்ளது போல் பொய் வழக்குகள் போட்டு எங்கள் கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி என்பது தெளிவாகிறது. இவர்களின் நோக்கம் விசாரணை நடத்துவது அல்ல, மதுபானக் கொள்கை வழக்கு என்ற போர்வையில் நமது தலைவர்களை கைது செய்வதே.
    ஏற்கனவே சிலரை கைது செய்துள்ளார்கள். டெல்லியில் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று அவர்களுக்குத் தெரியும் என்பதால், ஆட்சியைக் கவிழ்ப்பதே அவர்களின் நோக்கம்” என்றார்.
     

    மேலும் காண

    Source link

  • Bihar Trust Vote Today Minor Hurdle For Nitish Kumar-BJP Combine
    Bihar Trust Vote Today Minor Hurdle For Nitish Kumar-BJP Combine


    வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று பீகார் ஆகும். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தார்.
    பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு:
    இந்த நிலையில், கடந்த 28ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாக முதலமைச்சர் பதவியேற்றார். மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நிதிஷ்குமாரின் நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    இந்த நிலையில், பீகாரில் இன்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நிதிஷ்குமார் அரசு தங்களுக்கு 128 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியை பிடிப்பதற்கு அங்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.
    எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கும் அரசியல் கட்சிகள்:
    பா.ஜ.க.வின் 78 உறுப்பினர்களும், நிதிஷ்குமாரின் ஜனதா தளம் 45 உறுப்பினர்களும், ஜிதன்ராம் மாஞ்சிஸ் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 4 எம்.எல்.ஏ.க்களும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி 114 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் வசம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
    நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்க உள்ள நிலையில், பீகாரில் அந்தந்த கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் தங்க வைத்துள்ளனர். பாட்னாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டத்தில் நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 45 பேரில் 4 பேர் பங்கேற்கவில்லை. அவர்களை தொடர்பு கொண்டும் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பெரும் பரபரப்பு:
    அதேபோல, கயாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 78 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் வரவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்கள் வராததற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று அந்த மாநில துணை முதலமைச்சர் விஜய் சவுத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ராஷ்ட்ரியா ஜனதா தள எம்.எல்.ஏ. சேத்தன் ஆனந்த் காணவில்லை என்று தகவல் வெளியான நிலையில், அவர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த வீடியோ வெளியாகி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பீகார் மாநிலத்தில் நடக்கும் இந்த அரசியல் சூழல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மேலும் படிக்க: TN Assembly: ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்!
    மேலும் படிக்க: காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை – கத்தார் நீதிமன்றம்
     

    மேலும் காண

    Source link

  • jharkhands ruling alliance mlas fly back to ranchi from hyderabad ahead of trust vote on | Jharkhand Trust Vote: ஜார்கண்ட் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
    jharkhands ruling alliance mlas fly back to ranchi from hyderabad ahead of trust vote on | Jharkhand Trust Vote: ஜார்கண்ட் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு


    Jharkhand Trust Vote: ஜார்கண்ட் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி எம்.எல்.ஏக்கள் ஜார்கண்ட் திரும்பியுள்ளனர்.
    ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு:
    பணமோசடி வழக்கில் கைதாவதற்கு முன்பாக ஹேமந்த் சோரன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது கட்சியை சேர்ந்த சம்பை சோரன் ஜார்கண்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அம்மாநில சட்டமன்றத்தின் இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் சம்பை சோரன் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் சம்பை சோரனின் ஆட்சி தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    பெரும்பான்மைக்கான எண் என்ன?
    ஜார்கண்ட் சட்டமன்றத்தில் மொத்தம் 81 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியமைக்க பெரும்பான்மையாக 42 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சம்பை சோரனின் ஆட்சிக்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த 28 உறுப்பினர்கள், காங்கிரசை சேர்ந்த 17 உறுப்பினர்கள், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஒருவர் மற்றும் சிபிஐஎம்எல் கட்சியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 47 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.  அதேநேரம், எதிர்க்கட்சிகள் தரப்பில் பாஜகவில் 26 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 32 பேர் உள்ளனர். இதனால், சம்பை சோரன் தலைமையிலான அரசு எளிதில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    VIDEO | Jharkhand Congress MLAs arrive at Birsa Munda Airport in Ranchi from Hyderabad.The floor test in Jharkhand Assembly is scheduled to be held on February 5. pic.twitter.com/EWrr5oTDKm
    — Press Trust of India (@PTI_News) February 4, 2024

    ராஞ்சி திரும்பிய எம்.எல்.ஏக்கள்:
    இதனிடையே, குதிரை பேரம் நடைபெறுவதை தவிர்ப்பதற்காக, ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஐதராபாத் அழைத்துச் செல்லப்பட்டு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். கடும் கண்காண்ப்புக்கு மத்தியில் 3 நாட்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதை முன்னிட்டு, நேற்று இரவு சார்டட் விமானத்த்தின் மூலம் நேற்று இரவு அவர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, பேருந்துகள் மூலம் எம்.எல்.ஏக்கள் தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக பேசிய ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கிர் ஆலம்,  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்,  கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் “ஒற்றுமையாக” இருக்கிறோம்” என பேசினார். 
    பாஜக சொல்வது என்ன?
    ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை சந்திக்கும் என, பாஜக பாஜகவின் தலைமை கொறடா பிரஞ்சி நரேன் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டது,  அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதை இது காட்டுகிறது என குறிப்பிட்டார். இதனிடையே, பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றது.

    மேலும் காண

    Source link