Tag: நடிகர் விஜய்

  • tvk party leader vijay birthday greetings to Ambedkar birthday | TVK Vijay: “சமூக நீதி, சமத்துவம், சம உரிமை”

    tvk party leader vijay birthday greetings to Ambedkar birthday | TVK Vijay: “சமூக நீதி, சமத்துவம், சம உரிமை”


    அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். 
    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பியும், ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடியவர் அம்பேத்கர். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அம்பேத்கரின் பெருமைகளையும், அவர் பிறந்தநாளில் ஏற்க வேண்டிய உறுதிமொழி தொடர்பாகவும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். 

    #Ambedkar#அம்பேத்கர் pic.twitter.com/T0Ux934OZQ
    — TVK Vijay (@tvkvijayhq) April 14, 2024

    அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை எல்லாருக்கும் கிடைக்க உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல்வேறு விதமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
     

    மேலும் காண

    Source link

  • மலையாளிகள் எல்லாருக்கும் நன்றி! நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ | Actor Vijay Release Selfie Video Thanking Malayali Fans

    மலையாளிகள் எல்லாருக்கும் நன்றி! நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ | Actor Vijay Release Selfie Video Thanking Malayali Fans

    Entertainment
    19 Mar, 11:16 AM (IST)

    Vijay Fans : ரசிகர் புயலில் சிக்கிய விஜய்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்! சேட்டன்ஸ் அட்ராசிட்டி

    Source link

  • Thalapathy Vijay Expresses Heartfelt Thanks to Malayalis Shares Video on Social Media GOAT Tamil Cinema

    Thalapathy Vijay Expresses Heartfelt Thanks to Malayalis Shares Video on Social Media GOAT Tamil Cinema


    Thalapathy Vijay: கேரளாவில் தனது ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
    விஜய் வெளியிட்ட வீடியோ:
    கேரளாவில், தனது நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். அப்போது, அங்கு குவிந்த ரசிகர்களை சந்தித்தார். வாகனத்தின் மீது நின்றவாறு ரசிகர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டார். அதனை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எனது அண்ணன்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கைகள் மற்றும் அம்மாக்கள் என எல்லா மலையாளிகளுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள்” என நடிகர் விஜய் மலையாளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று விஜய சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    Ente Aniyathimaar , aniyanmaar, chettanmaar, chechimaar ammamaar!Ella Malayalikalkkum ente Hridayam Niranja Nanni 🤗 pic.twitter.com/axmw72aOls
    — Vijay (@actorvijay) March 22, 2024

     
    கேரளாவில் குவியும் ரசிகர்கள்:
    நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு தமிழகத்தை போன்று, கேரளாவிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் நடைபெறும் தனது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க கேரளா சென்றுள்ளார். இதுதொடர்பான தகவல் வெளியானதில் இருந்தே, விஜயை காண அவரது ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்து வருகின்றனர். விஜய் சென்ற காரை சுற்றி ஏராளமான ரசிகர்கள் குவிந்ததில், அந்த கார் கடும் சேதமடைந்தது. அதைதொடர்ந்து, தனது ரசிகர்களை சந்தித்தது மற்றும் சிறுமிக்கு முத்தமிட்டது போன்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. நாளுக்குள் நாள் விஜயை காண, படப்பிடிப்பு தளத்தில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தான், தனது கேரளா ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் வெளியிட்டுள்ளார்.

    Felt Like a Farewell Speech 🥹#VijayEuphoriaInKerala pic.twitter.com/SzrDSeHVuR
    — Kerala Vijay Fans (@KeralaVijayFC) March 22, 2024

    தி கோட் படப்பிடிப்பு:
    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் தி கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள இப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கேரளாவில் படப்பிடிப்பு முடிந்ததுமே தி கோட் படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல இருக்கிறது. அங்கு  படப்பிடிப்பு முடிந்ததுமே, நடப்பாண்டில் இரண்டாம் பாதியில் படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. அரசியல் நுழைவு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் என்பதால், தி கோட் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    மேலும் காண

    Source link

  • Actor Vijay Car Damaged in Kerala By Thalapathy Fans GOAT Tamil Cinema News

    Actor Vijay Car Damaged in Kerala By Thalapathy Fans GOAT Tamil Cinema News


    கோட் படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளாவுக்கு சென்ற நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜ்மல் அமீர், பிரேம்ஜி அமரன், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

    Fans gathered large in number that @actorvijay ‘s car moves inch by inch in #Kerala pic.twitter.com/hiD83IG4xB
    — Vijay Makkal Iyakkam Qatar (@qatarvmi) March 18, 2024

    சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகும் கோட் படத்தின்  சிஜி மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், சென்னையிலும் நடைபெற்றது. இந்த படத்தில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தொடர்ந்து வெளியான செகண்ட் லுக் போஸ்டர்களும் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகின. 
    இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கிற்காக விஜய் இன்று கேரளா சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பயணித்த கார் உடன் பலரும் தங்கள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பேரணி சென்றனர். வழியெங்கும் தலைவா.. தலைவா.. தளபதி..தளபதி என கோஷமிட்டு கொண்டே சென்றனர். 

    #VijayStormhitskerala #ThalapathyVijay #TVKVijay Thalapathy Vijay Car broken by rush of huge Kerala fans pic.twitter.com/Vdd9NVO9I9
    — Mervin Raj (@MervinR80838445) March 18, 2024

    இந்நிலையில் ரசிகர்கள் அளவுக்கதிகமாக விஜய்யை காண முண்டியடித்ததால் அவர் பயணித்த கார் கண்ணாடி உடைந்தது. அதுமட்டுமல்லாமல் காரின் பல இடங்களில் சேதம் ஏற்படும் அளவுக்கு ரசிகர்கள் செயல் அமைந்துள்ளது. இங்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக கிடைத்து வரும் வரவேற்பு அரசியல் வட்டாரத்திலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. 

    மேலும் காண

    Source link

  • Ananya Pandey : பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் அசத்தல் புகைப்படங்கள்!

    Ananya Pandey : பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் அசத்தல் புகைப்படங்கள்!


    Ananya Pandey : பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் அசத்தல் புகைப்படங்கள்!

    Source link

  • TVK Leader Thalapathy Vijay Donates Rs 1 Crore For Construction of Nadigar Sangam Building

    TVK Leader Thalapathy Vijay Donates Rs 1 Crore For Construction of Nadigar Sangam Building


    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான நடிகர் விஜய் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு  ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கியுள்ளார். 
    தென் இந்திய  நடிகர் சங்கம் கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு ரூபாய் 40 கோடி தேவைப்படும் என்று நடிகர் சங்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தென் இந்திய திரைப் பிரபலங்கள் தங்கள் பங்குக்கு நிதி வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க கட்டப் பணிகளுக்கு ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த காசோலையை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாலர் கார்த்தி உள்ளிட்டவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  நடிகர் சங்கக் கட்டடத்திற்கு  ரூபாய் ஒரு கோடி வழங்கினார். 
    விஜய் 1 கோடி ரூபாய் நிதி:
    இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ரூபாய் ஒரு கோடி வழங்கியுள்ளார். 

    Source link

  • KPY BALA says Actor Vijay is a great legend, whatever he does is right – TNN | KPY BALA: நடிகர் விஜய் மிகப் பெரிய லெஜண்ட் அவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்

    KPY BALA says Actor Vijay is a great legend, whatever he does is right – TNN | KPY BALA: நடிகர் விஜய் மிகப் பெரிய லெஜண்ட் அவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்


    சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் பாலா கடந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். அதனை மீறி சில இடங்களில் தவறுகள் நடந்து விடுகிறது. சமீபத்தில் நடந்துள்ளது மிகப்பெரிய தவறு. அதற்கான தண்டனை விரைவில் கிடைக்கும் என்றார். புதுவை சிறுமி மரணம் குறித்த கேள்விக்கு, சிறுமிக்கு நடந்தது மிக மிக தவறு. ஒரு குழந்தையை இது போன்று செய்தவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். கண்டிப்பாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

    மேலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு “குட் டச், பேட் டச்” என்று சொல்வதைப் போல “டோன்ட் டச்” என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பல பெற்றோர்கள் இதனை சொல்லிக் கொடுத்து விளக்கின்றனர். அதை மீறியும் சில தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஈவு இரக்கமற்ற சில மனிதர்கள் இதுபோன்ற தவறுகளை செய்கிறார்கள் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.
    நடிகர் விஜய் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது குறித்த கேள்விக்கு, கட்சி, அரசியல் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி இல்லை. நடிகர் விஜய் உச்சத்தில் உள்ள ஒரு நடிகர். நடிகர் விஜய் மிகப் பெரிய லெஜண்ட், அவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்.
    நடிகர் அஜித் உடல்நலம் குறித்த கேள்விக்கு, நடிகர் அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். தலைக்கு நிகர் தல மட்டும்தான். அவருக்கு எதுவும் ஆகாது, வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். விடாமுயற்சி மூலமாக தல மீண்டும் வருவார் என்றார்.

    மேலும் காண

    Source link

  • Popular cinematographer Manikandan’s 16 year old daughter vijay sister role in Goat movie

    Popular cinematographer Manikandan’s 16 year old daughter vijay sister role in Goat movie


    G.O.A.T Movie: பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயதான மகள் அபியுக்தா கோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
    கோட் படம்:
    இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட்(GOAT) தன் அரசியல் எண்ட்ரியை சமீபத்தில் அறிவித்த விஜய்யின் 68ஆவது திரைப்படமாக கோட் உருவாகி வருகிறது. அரசியல் வருகையால் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி இரண்டு படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
    நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோட் படத்தில் விஜய் இரண்டு விதமாக கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிகிறது. 
    விஜய் மகளாக நடிக்கும் பிரபலத்தின் 16 வயது மகள்:
    அவ்வப்போது,  இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது இப்படத்தில் பிரபலம் ஒருவரின் மகள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறு வயதிலேயே அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் அனிகா சுரேந்திரன், சாரா, யுனி பார்த்தவி வரிசையில் தற்போது மற்றொரு பிரபலத்தின் வாரிசு நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார்.
    அதன்படி, பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயதான மகள் அபியுக்தா கோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. கோட் படத்தில் விஜய்யின் மகளாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர், பரதநாட்டிய நடனக் கலைஞர் மற்றும் மாடலாக இருக்கிறார்.   

    முன்னதாக, கோட் படத்தில் விஜய்யிக்கு மகளாக நடிக்க இவானாவை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது நடிகையாக நடித்து வருவதால், அவர் விஜய்க்கு மகளாக நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
    இந்த நிலையில், விஜய்க்கு மகளாக நடிக்க பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயதான மகள் அபியுக்தா கமிட் ஆகி இருப்பதாக சமூக வலைதளங்களில் சொல்லப்பட்டு வருகிறது. இதனால், அபியுக்தா யார் என்று ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். 

    மேலும் படிக்க
    Raayan: வட சென்னையில் வசிக்கும் சகோதரர்களின் கதை: தனுஷின் ராயன் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
    Blue Star Ott Release: ஓடிடிக்கு ரெடியான அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார்! எந்தத் தேதி, எந்தத் தளம் தெரியுமா?

    மேலும் காண

    Source link

  • actor vijay tamizhaga vetri kazhagam meeting held at panaiyur oath taken by party cadres

    actor vijay tamizhaga vetri kazhagam meeting held at panaiyur oath taken by party cadres


    இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக ஆலோசனை கூட்டத்தில் தங்கள் கட்சி நிர்வாகிகளை தோழர்கள் என அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் (Vijay) . ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  அதே நேரத்தில், விஜய் அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார். விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது. அதே சமயம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 ஆம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
    இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி அமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
    நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.
    சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு. சமஉரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உறுதி மொழியினை அனைவரும் ஏற்றனர்.
    நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அவரது கட்சி பெயரில் பிழை இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டது. கட்சியின் பெயரில் இருந்த பிழையை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியதை ஏற்று, விஜய் அதில் திருத்தம் செய்துள்ளார். அதாவது தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டினர். சில அரசியல் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரில், வெற்றி கழகத்திற்கு இடையே ஒற்றெழுத்தான “க்” சேர்த்து ”தமிழக வெற்றிக் கழகம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

    மேலும் காண

    Source link

  • Tamilga Vetri Kazhagam’s advisory meeting is going to be held today at the headquarters secretariat office in Panayur actor vijay

    Tamilga Vetri Kazhagam’s advisory meeting is going to be held today at the headquarters secretariat office in Panayur actor vijay


    தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் இன்று பனையூரில் இருக்கும் தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 
    தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் (Vijay) . ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  அதே நேரத்தில், விஜய் அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார். விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது. அதே சமயம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 ஆம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
    நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அவரது கட்சி பெயரில் பிழை இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டது. கட்சியின் பெயரில் இருந்த பிழையை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியதை ஏற்று, விஜய் அதில் திருத்தம் செய்துள்ளார். அதாவது தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் சுட்டிக் காட்டினர். சில அரசியல் கட்சியினர் இதனை கடுமையாக விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரில், வெற்றி கழகத்திற்கு இடையே ஒற்றெழுத்தான “க்” சேர்த்து ”தமிழக வெற்றிக் கழகம்” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 
    இந்நிலையில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் சின்னம் மற்றும் கொடி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் கூட்டத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி அமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் தலைமை கட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    விஜயின் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒருபக்கம் அவரை அரசியல் தலைவராக பார்க்கும் ஆசை இருந்தாலும் இனிமேல் அவரை நடிகராக திரையில் பார்க்க முடியாத வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. தங்களது சிறு வயது முதல் பார்த்து வளர்ந்த ஒரு நடிகரை இனிமேல் மீண்டும் திரையில் பார்க்க முடியாதது அவர்களுக்கு ஒரு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்நிலையில் விஜயின் 69-வது படமே அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில் இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதே ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. 

    மேலும் காண

    Source link

  • POR Movie Promotion Coimbatore Actor Arjun Das Believes That Even After Starting Political Party Actor Vijay will act in films- TNN | Arjun Das on Vijay: அரசியல் கட்சி துவங்கிய பின்னரும்விஜய் படங்களில் நடிப்பார்

    POR Movie Promotion Coimbatore Actor Arjun Das Believes That Even After Starting Political Party Actor Vijay will act in films- TNN | Arjun Das on Vijay: அரசியல் கட்சி துவங்கிய பின்னரும்விஜய் படங்களில் நடிப்பார்


    இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடிப்பில் உருவான போர் திரைப்படம் மார்ச் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள ப்ராட் வே மாலில் அத்திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அர்ஜுன் தாஸ், ”போர் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரவிருக்கிறது. தமிழில் நாங்கள் நடித்துள்ளோம். இப்படம் கல்லூரி மாணவர்களின் சேட்டைகளை கதைகளமாக கொண்டது. இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் காண வேண்டும். வில்லன் கதாபாத்திரம், கதாநாயகன் கதாபாத்திரம் இரண்டும் கடினமானது. நல்ல கதாபாத்திரம் எது கிடைத்தாலும் செய்வேன். இந்த படத்தில் நான் வில்லனா இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை. மக்கள் என்னை அன்பாகவும் ரசித்தார்கள், வில்லன் கதாபாத்திரத்திலும் ரசித்தார்கள். மக்கள் எதனை ஏற்றுக்கொள்கிறார்களோ அதனை தொடர்ந்து செய்வேன். லோகேஷ் கனகராஜ் வில்லன் கதாபாத்திரத்திற்கு அழைத்தால் அதுதான் லைன் அப் நெகட்டிவ் ரோலாக இருக்கும்” என தெரிவித்தார். 
    நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய உள்ளது குறித்தான கேள்விக்கு, ”நடிகர் விஜய்க்கு ஆன்லைனில் வாழ்த்துக்களை தெரிவித்தேன். நன்கு யோசித்து தான் அவர் அந்த முடிவை எடுத்திருப்பார். அரசியல் கட்சி துவங்கிய பின்பும் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என நம்பிக்கை உள்ளது. அவர்களது ரசிகர்களும் அதனைத் தான் விரும்புவார்கள். என்னைப் பொறுத்தவரை அவரது படங்களை பார்க்க ஆசைப்படுவேன். ஆனால் அது அவர் எடுத்த முடிவாக இருக்கலாம்” என பதிலளித்தார்.

    பின்னர் பேசிய நடிகர் காளிதாஸ் ஜெயராம், ”இது ஒரு கனவு போல் உள்ளது. இந்த படம் பல்வேறு விஷயங்களை தங்களுக்குள்ளாகவே பகிர்ந்துள்ளோம். இந்த படத்தை பற்றி நினைக்கும் போதே பல்வேறு நல்ல நினைவுகள் தான் நினைவிற்கு வருகிறது. விக்ரம் படத்தில் தன்னுடைய கதையும், அர்ஜுன் தாஸ் கதையும் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் ஒற்றுமையாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாவக்கதைகள் திரைப்படம் முடித்தவுடன் அது போன்ற சமூக அக்கறை உடைய படங்களை நடிக்க வேண்டும் என எண்ணி இருந்தேன். ஆனால் நடிகர் மக்களுக்காக அனைத்து கதாபாத்திரங்களையும் நடிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
    பின்னர் பேசிய இயக்குநர் பிஜோய் நம்பியார், ”இந்த படம் கல்லூரி வாழ்க்கை சார்ந்த கதை. சமூகம் சார்ந்த கருத்துக்களும் இதில் அடங்கி உள்ளது. இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளனர். போர் என்ற பெயர் இந்த படத்திற்கு பொருந்தும் என்பதால் பயன்படுத்தினேன்” எனத் தெரிவித்தார். இதையடுத்து பேசிய நடிகை சஞ்சனா நடராஜன், ”சோலோ, டேவிட் படங்களை எல்லாம் பார்க்கும் போது மிகவும் அற்புதமாக இருக்கும். அதுபோன்ற படங்களில் எப்போதாவது நடிக்க மாட்டோமா என்று எண்ணினேன். இப்படிப்பட்ட நேரத்தில் இந்த திரைப்படத்தில் எனக்கு இந்த கதாப்பாத்திரம் வேண்டுமென சண்டை போட்டு இந்த கதாபாத்திரத்தை வாங்கினேன். சார்பட்டா இரண்டாவது பாகம் வருவது என்பதே சமூக வலைத்தளங்களை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். தற்போதைக்கு அது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை” எனத் தெரிவித்தார்.

    மேலும் காண

    Source link

  • Former Union Minister Thangapalu welcomes actor Vijay party launch – TNN | நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை வரவேற்கிறேன், வாழ்த்துக்கள்

    Former Union Minister Thangapalu welcomes actor Vijay party launch – TNN | நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை வரவேற்கிறேன், வாழ்த்துக்கள்


     
    திருப்பத்தூர் மாவட்டம்  திருப்பத்தூர் நகர காங்கிரஸ் மைதானத்தில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நீதி பயண விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் 65 அடி அளவில் கொடியேற்றுதல்,  பண்டிதர் ஜவஹர்லால் நேரு, அன்னை இந்திரா காந்தி, பாரத ரத்னா ராஜீவ் காந்தி மூவரின் முழு உருவ சிலை திறப்பு என முப்பெரும் விழா நடைபெற இருந்தது.
     
    இதற்கு கொடி ஏற்றி வைத்து சிறப்பிக்க முன்னாள் மத்திய அமைச்சர் தங்கப்பாலு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுனர் பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

     
    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கபாலு பேசியதாவது:
     
    திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள்‌ சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்திய அளவில் மாற்றம் வரவேண்டும். தமிழகத்தில் வெற்றிக்கூட்டணி தான் மிகப்பெரிய கூட்டணி. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க போகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்தும் தெரியும். சரியான முடிவை எடுப்பார்கள் இந்தியாவிற்கே வழிகாட்டி தமிழகம் தான். ராகுல் காந்தி சாதிவாரி கணக்கு எடுப்பார் அதன் மூலம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.  இரண்டு முறை பிரதமராக இருந்த மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது.‌ எந்த வேலை வாய்ப்பையும் ஏற்படுத்த வில்லை. பாஜக வை எதிர்ப்பவர்களை அவர்களின் மீது வழக்கு போடுகிறார்கள்.‌ தமிழகத்தில் 40 இடங்களிலும் எங்கள் கூட்டணிதான் வெல்லும். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பாஜக ஆட்சியை கண்டித்து போராட்டம் நடத்தினால் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதை வரவேற்கிறேன் வாழ்த்துக்கள்  எனவும் தெரிவித்தார்.
     
    இந்த முப்பெரும் விழாவில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் காண

    Source link

  • Thalapathy 69: விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தை இயக்குவது அட்லீயா?  ஏ.ஆர். முருகதாஸா?

    Thalapathy 69: விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தை இயக்குவது அட்லீயா? ஏ.ஆர். முருகதாஸா?


    <div class="gmail_default" style="text-align: justify;"><strong>Thalapathy69:</strong> விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவரது கடைசி படமாக இருக்கும் தளபதி69 படத்தை யார் இயக்குவதுஜ் என்ற விவாதம் எழுந்துள்ளது.&nbsp;</div>
    <div class="gmail_default" style="text-align: justify;">&nbsp;</div>
    <h2 class="gmail_default" style="text-align: justify;"><strong>தளபதி 69:</strong></h2>
    <div class="gmail_default" style="text-align: justify;">&nbsp;</div>
    <div class="gmail_default" style="text-align: justify;"><a title="லியோ" href="https://tamil.abplive.com/topic/leo" data-type="interlinkingkeywords">லியோ</a> படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படமான &lsquo;தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்&rsquo; என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய் நடிக்கும் கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், புதிதாக கட்சி தொடங்குவதாக விஜய் அறிவித்தார்.&nbsp;</div>
    <div class="gmail_default" style="text-align: justify;">&nbsp;</div>
    <div class="gmail_default" style="text-align: justify;">கடந்த 2ம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக விஜய் அறிவித்தார். அரசியலில் பயணித்தால் நடிப்பதை நிறுத்திக் கொள்வேன் என்றும் விஜய் அறிவித்திருந்தது அவரது ரசிகர்களையும், தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அரசியலுக்கு வந்தால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய் தெரிவித்துள்ளதால், தளபதி 69 படத்தை யார் இயக்குவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.&nbsp;</div>
    <h2 class="gmail_default" style="text-align: justify;"><strong>அட்லீயா? ஏ.ஆர்.முருகதாஸா?</strong></h2>
    <div class="gmail_default" style="text-align: justify;">தளபதி 69 படம் குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கும் நிலையில், படத்தில் எந்தவித முரண்பாடுகளும் இருக்க கூடாது என்பதில் விஜய் தரப்பு கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவது, தயாரிப்பது என்ற விவாதம் எழுந்துள்ளது. அனேகமாக விஜய்யின் கடைசி படத்தை அட்லீ இயக்கினால் சரியாக இருக்கும் என்ற பேச்சும், அதேநேரம் ஏ.ஆர். முருகதாஸ்க்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற பேச்சும் அடிப்படுகிறது.&nbsp;</div>
    <div class="gmail_default" style="text-align: justify;">&nbsp;</div>
    <div class="gmail_default" style="text-align: justify;">விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக ரமணா படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியது, அவரது பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவி கட்சி தொடங்குவதற்கு முன்பாக முருகதாஸ் இயக்கிய படம் நல்ல பெயரை பெற்று தந்தது. விஜய் நடித்த கத்தி, துப்பாக்கி, சர்க்கார் உள்ளிட்ட அரசியல் பேசும் படங்களை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய நிலையில், அந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால், விஜய்யின் அரசியல் பயணத்துக்கு முன்னதாக எடுக்கும் படம் ஏ.ஆர். முருகதாஸ் எடுத்தால் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</div>
    <div class="gmail_default" style="text-align: justify;">&nbsp;</div>
    <div class="gmail_default" style="text-align: justify;">அதேநேரம் விஜய் நடித்த மெர்சல், தெறி, பிகில் உள்ளிட்ட படங்களை அட்லீ இயக்கி உள்ளார். இந்த படங்கள் வெற்றிப்பெற்று விஜய்க்கு ஹிட் அடித்தன. அந்த வரிசையில் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யின் கடைசி படத்தை அட்லீ இயக்கினால் நன்றாக இருக்கும் என பேசப்படுகிறது.&nbsp;</div>
    <div class="gmail_default" style="text-align: justify;">&nbsp;</div>
    <div class="gmail_default" style="text-align: justify;"><strong>மேலும் படிக்க: <a title="Lal Salaam: லால் சலாம் ரஜினிகாந்த் படமா? விஷ்ணு – விக்ராந்த் படமா? ஐஸ்வர்யா நச் பதில்!" href="https://tamil.abplive.com/entertainment/super-star-rajinikanth-lead-lal-salaam-film-release-aishwarya-shares-few-informations-166616" target="_blank" rel="dofollow noopener">Lal Salaam: லால் சலாம் ரஜினிகாந்த் படமா? விஷ்ணு – விக்ராந்த் படமா? ஐஸ்வர்யா நச் பதில்!</a></strong></div>
    <div class="gmail_default" style="text-align: justify;"><strong><a title="Lal Salaam Review: ரஜினிகாந்தின் மாஸ் கேமியோ! ஐஸ்வர்யா இயக்கம் எப்படி? &ldquo;லால் சலாம்&rdquo; திரைப்பட விமர்சனம்!" href="https://tamil.abplive.com/movie-review/entertainment/movie-review-lal-salaam-review-in-tamil-rajinikanth-vishnu-vishal-aishwarya-senthil-kapil-dev-lal-salaam-movie-review-rating-166555" target="_blank" rel="dofollow noopener">Lal Salaam Review: ரஜினிகாந்தின் மாஸ் கேமியோ! ஐஸ்வர்யா இயக்கம் எப்படி? &ldquo;லால் சலாம்&rdquo; திரைப்பட விமர்சனம்!</a></strong></div>
    <div class="gmail_default" style="text-align: justify;">&nbsp;</div>

    Source link

  • What will the Tamil cinema industry look like without Vijay?

    What will the Tamil cinema industry look like without Vijay?


    Vijay Tamil Cinema: அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் சினிமாவில் இருந்து விலகுவது, திரைத்துறைகயுலகின் வணிகத்திற்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
    அரசியலில் நடிகர் விஜய்:
    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் வேளையிலேயே நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலுமே, தற்போது அவர் தமிழ் சினிமாவில் பிடித்துள்ள இடம் என்பது யாருமே எதிர்பார்க்காதது தான். அப்படி தமிழ் சினிமாவின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் நேரத்தில், சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருப்பது தான் ஆச்சரியத்தை அளிக்கிறது. 
    உச்சாணிக் கொம்பில் விஜய்..!
    ஆரம்ப காலங்களில் உருவ கேலிக்கு ஆளான விஜய், வருடங்கள் கடந்தோட கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் அவர் பெற்றுள்ள வளர்ச்சியான அசுரத்தனமானது என்றே கூறலாம். கேட்கும் கோடிகளை சம்பளமாக கொடுத்து அவரது படத்தை தயாரிக்க, தயாரிப்பாளர்கள் காத்துக் கிடக்கின்றனர். வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும், திரையரங்குகள் பக்கம் இழுத்து படம் பார்க்க வைக்கும் ஒரு சில தமிழ் நடிகர்களில் விஜய்க்கு மிக முக்கிய இடம் உண்டு. இதன் காரணமாகவே சுமாரான படமாகவே இருந்தாலும் சில நூறு கோடிகளை வசூலாக வாரிக் குவிப்பது என்பது விஜய் படங்களுக்கு சர்வ சாதாரண செயலாகிவிட்டது. அதற்கு உதாரணம் தான் மோசமான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், 300 கோடிகளை வாரிக் குவித்த வாரிசு திரைப்படம்.
    தமிழ் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக திகழும் விஜய்:
    இந்தியாவின் பன்மொழி திரைத்துறைகளில், தமிழ் சினிமாவின் கோலிவுட்டிற்கு என தனி இடம் உண்டு. தரமான படங்களை தயாரிப்பதோடு, சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படங்களை வழங்குவதிலும் தமிழ் சினிமா கைதேர்ந்தது. ஆனாலுமே, அதன் பெரும்பாலான வணிகம் என்பது இன்னும் ஒரு சில குறிப்பிட்ட நடிகர்களையே அதிகளவில் சார்ந்துள்ளது. அதில் மிக முக்கிய நபர் மற்றும் தவிர்க்க முடியாத நபர் தான் விஜய்.
    உதாரணமாக கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே துவண்டு கிடந்தது. பொதுமக்கள் திரையரங்கிற்கு வர அஞ்சியதால், சில நடிகர்கள் தங்களது படத்தை நேரடியாக ஒடிடியில் வெளியிட்டனர். ஆனால், விஜயோ ஊரடங்கு முடியும் வரை காத்திருந்து, தனது மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டார். 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே வெளியான இந்த படம், மொத்தமாக 300 கோடி ரூபாய் வரை வசூலிது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது அவரது ரசிகர் பட்டாளத்தின் பலத்தை மட்டுமின்றி, விஜய் படம் என்றால் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் கூட்டம் குவியும் என்பதை உரக்க உணர்த்தியது.   இப்படி இருக்கையில், சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் எடுத்துள்ள முடிவு அவரது சினிமா ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, தமிழ் சினிமாவின் வணிகத்திலும் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
    இனி இந்த பிரச்னைகள் இருக்காது?  

    இனி தலயா, தளபதியா என்ற அநாவசிய தலைப்பிலான சமூக வலைதள விவாதங்கள் இருக்காது என நம்பலாம்
    தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார், வசூல் சக்ரவர்த்தி யார் என்ற தலைப்பில் அஜித் – விஜய் ரசிகர்கள் இடையேயான வரம்பு மீறும் சண்டைகள் இருக்காது
    மிக மோசமான வார்த்தைகளை உள்ளடக்கிய ஹேஷ்டேக்குகள் அஜித் – விஜய் ரசிகர்களால் தேசிய அளவில் டிரெண்டாகாது
    விஜய் படங்களில் இடம்பெறும் அரசியல் வசனங்களால் ஏற்படும் சர்ச்சைகள் இனி குறைந்து விடும் (நேரடியாகவே அரசியல் பேசுவார்)
    முதல் நாள் முதல் காட்சிக்கு என கூறிக்கொண்டு நள்ளிரவு முதலே திரையரங்க வளாகங்களில் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் கூட்டம் காணாமல் போகும்
    விஜய் படத்திற்கு அநாவசியமாக கூடுதல் கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் பிரச்னை இருக்காது 

    தமிழ் சினிமா வணிகம் பாதிக்குமா?

    என்ன தான் சிறிய படங்கள் வெளியானாலும், திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபம் தருவது என்றால் அது உச்சநட்சத்திரங்களின் படங்கள் தான். அந்த லிஸ்டில் இருந்து விஜய் விலகுவது, விநியோகஸ்தர்களுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது
    திரையரங்குகளில் கூட்டம் குவிந்தால் தான் அதன் உரிமையாளர்களுக்கு லாபம். அப்படி ஒட்டுமொத்த மக்களையும் திரைக்கு இழுக்கும் வல்லமை கொண்ட விஜய் படம் இனி வராது என்பது திரையரங்க உரிமையாளர்களுக்கும் இழப்பே.
    விஜய் போன்ற ஒரு சில நடிகர்களின் படங்களை தான் ஒடிடி நிறுவனங்கள் 100 கோடி ரூபாய் வரை கொடுத்து விலைக்கு வாங்கும். அந்த வருவாயையும் தமிழ் சினிமா இழக்கும்
     விஜயின் நூறு கோடியை கடந்த ஊதியம் மற்றும் அவரது படங்கள் வசூலிக்கும் சில நூறு கோடிகள் மூலம் கிடைக்கும் அரசுக்கான வரி வருவாயும் தடைபடும் 
    தொலைக்காட்சிகளில் விஜய் படம் ஒளிபரப்பானால் அன்றைய நாளின் டிஆர்பி வின்னர் அதுவாக தான் இருக்கும். அந்த வகையில் ஒளிபரப்ப இனி புதிய படங்கள் எதுவும் கிடைக்காது.
    விஜய் படம் வெளியாகிறது என்றாலே அதற்கான மார்கெட்டிங் என்பது மும்முரமாக நடைபெறும். எங்கு திரும்பினாலும் அந்த படத்தை பற்றி பேசும் வகையில் தான் விளம்பரங்கள் இருக்கும். இனி அந்த துறையும் இழப்பை சந்திக்கும்.
    விஜய் படம் என்றாலே திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பும் இனி பறிபோகும் 

    மேலும் காண

    Source link

  • Actor Vijay : சினிமாவுக்கு Bye Bye சொன்ன விஜய்..திரைத்துறை என்னெல்லாம் மிஸ் செய்ய போகிறது?

    Actor Vijay : சினிமாவுக்கு Bye Bye சொன்ன விஜய்..திரைத்துறை என்னெல்லாம் மிஸ் செய்ய போகிறது?


    Actor Vijay : சினிமாவுக்கு Bye Bye சொன்ன விஜய்..திரைத்துறை என்னெல்லாம் மிஸ் செய்ய போகிறது?

    Source link

  • Vijay Tamil Cinema: இனி விஜய் இல்லாத தமிழ் சினிமாவும் திரைத்துறை வணிகமும் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு பார்வை

    Vijay Tamil Cinema: இனி விஜய் இல்லாத தமிழ் சினிமாவும் திரைத்துறை வணிகமும் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு பார்வை


    <p><strong>Vijay Tamil Cinema:</strong> அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் சினிமாவில் இருந்து விலகுவது, திரைத்துறைகயுலகின் வணிகத்திற்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.</p>
    <h2><strong>அரசியலில் நடிகர் விஜய்:</strong></h2>
    <p>தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் வேளையிலேயே நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலுமே, தற்போது அவர் தமிழ் சினிமாவில் பிடித்துள்ள இடம் என்பது யாருமே எதிர்பார்க்காதது தான். அப்படி தமிழ் சினிமாவின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் நேரத்தில், சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருப்பது தான் ஆச்சரியத்தை அளிக்கிறது.&nbsp;</p>
    <h2><strong>உச்சாணிக் கொம்பில் விஜய்..!</strong></h2>
    <p>ஆரம்ப காலங்களில் உருவ கேலிக்கு ஆளான விஜய், வருடங்கள் கடந்தோட கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் அவர் பெற்றுள்ள வளர்ச்சியான அசுரத்தனமானது என்றே கூறலாம். கேட்கும் கோடிகளை சம்பளமாக கொடுத்து அவரது படத்தை தயாரிக்க, தயாரிப்பாளர்கள் காத்துக் கிடக்கின்றனர். வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும், திரையரங்குகள் பக்கம் இழுத்து படம் பார்க்க வைக்கும் ஒரு சில தமிழ் நடிகர்களில் விஜய்க்கு மிக முக்கிய இடம் உண்டு. இதன் காரணமாகவே சுமாரான படமாகவே இருந்தாலும் சில நூறு கோடிகளை வசூலாக வாரிக் குவிப்பது என்பது விஜய் படங்களுக்கு சர்வ சாதாரண செயலாகிவிட்டது. அதற்கு உதாரணம் தான் மோசமான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், 300 கோடிகளை வாரிக் குவித்த வாரிசு திரைப்படம்.</p>
    <h2><strong>தமிழ் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக திகழும் விஜய்:</strong></h2>
    <p>இந்தியாவின் பன்மொழி திரைத்துறைகளில், தமிழ் சினிமாவின் கோலிவுட்டிற்கு என தனி இடம் உண்டு. தரமான படங்களை தயாரிப்பதோடு, சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படங்களை வழங்குவதிலும் தமிழ் சினிமா கைதேர்ந்தது. ஆனாலுமே, அதன் பெரும்பாலான வணிகம் என்பது இன்னும் ஒரு சில குறிப்பிட்ட நடிகர்களையே அதிகளவில் சார்ந்துள்ளது. அதில் மிக முக்கிய நபர் மற்றும் தவிர்க்க முடியாத நபர் தான் விஜய்.</p>
    <p>உதாரணமாக கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே துவண்டு கிடந்தது. பொதுமக்கள் திரையரங்கிற்கு வர அஞ்சியதால், சில நடிகர்கள் தங்களது படத்தை நேரடியாக ஒடிடியில் வெளியிட்டனர். ஆனால், விஜயோ ஊரடங்கு முடியும் வரை காத்திருந்து, தனது மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டார். 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே வெளியான இந்த படம், மொத்தமாக 300 கோடி ரூபாய் வரை வசூலிது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது அவரது ரசிகர் பட்டாளத்தின் பலத்தை மட்டுமின்றி, விஜய் படம் என்றால் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் கூட்டம் குவியும் என்பதை உரக்க உணர்த்தியது.&nbsp; &nbsp;இப்படி இருக்கையில், சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் எடுத்துள்ள முடிவு அவரது சினிமா ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, தமிழ் சினிமாவின் வணிகத்திலும் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.</p>
    <h2><strong>இனி இந்த பிரச்னைகள் இருக்காது?</strong>&nbsp;&nbsp;</h2>
    <ul>
    <li>இனி தலயா, தளபதியா என்ற அநாவசிய தலைப்பிலான சமூக வலைதள விவாதங்கள் இருக்காது என நம்பலாம்</li>
    <li>தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார், வசூல் சக்ரவர்த்தி யார் என்ற தலைப்பில் அஜித் – விஜய் ரசிகர்கள் இடையேயான வரம்பு மீறும் சண்டைகள் இருக்காது</li>
    <li>மிக மோசமான வார்த்தைகளை உள்ளடக்கிய ஹேஷ்டேக்குகள் அஜித் – விஜய் ரசிகர்களால் தேசிய அளவில் டிரெண்டாகாது</li>
    <li>விஜய் படங்களில் இடம்பெறும் அரசியல் வசனங்களால் ஏற்படும் சர்ச்சைகள் இனி குறைந்து விடும் (நேரடியாகவே அரசியல் பேசுவார்)</li>
    <li>முதல் நாள் முதல் காட்சிக்கு என கூறிக்கொண்டு நள்ளிரவு முதலே திரையரங்க வளாகங்களில் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் கூட்டம் காணாமல் போகும்</li>
    <li>விஜய் படத்திற்கு அநாவசியமாக கூடுதல் கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் பிரச்னை இருக்காது&nbsp;</li>
    </ul>
    <h2><strong>தமிழ் சினிமா வணிகம் பாதிக்குமா?</strong></h2>
    <ul>
    <li>என்ன தான் சிறிய படங்கள் வெளியானாலும், திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபம் தருவது என்றால் அது உச்சநட்சத்திரங்களின் படங்கள் தான். அந்த லிஸ்டில் இருந்து விஜய் விலகுவது, விநியோகஸ்தர்களுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது</li>
    <li>திரையரங்குகளில் கூட்டம் குவிந்தால் தான் அதன் உரிமையாளர்களுக்கு லாபம். அப்படி ஒட்டுமொத்த மக்களையும் திரைக்கு இழுக்கும் வல்லமை கொண்ட விஜய் படம் இனி வராது என்பது திரையரங்க உரிமையாளர்களுக்கும் இழப்பே.</li>
    <li>விஜய் போன்ற ஒரு சில நடிகர்களின் படங்களை தான் ஒடிடி நிறுவனங்கள் 100 கோடி ரூபாய் வரை கொடுத்து விலைக்கு வாங்கும். அந்த வருவாயையும் தமிழ் சினிமா இழக்கும்</li>
    <li>&nbsp;விஜயின் நூறு கோடியை கடந்த ஊதியம் மற்றும் அவரது படங்கள் வசூலிக்கும் சில நூறு கோடிகள் மூலம் கிடைக்கும் அரசுக்கான வரி வருவாயும் தடைபடும்&nbsp;</li>
    <li>தொலைக்காட்சிகளில் விஜய் படம் ஒளிபரப்பானால் அன்றைய நாளின் டிஆர்பி வின்னர் அதுவாக தான் இருக்கும். அந்த வகையில் ஒளிபரப்ப இனி புதிய படங்கள் எதுவும் கிடைக்காது.</li>
    <li>விஜய் படம் வெளியாகிறது என்றாலே அதற்கான மார்கெட்டிங் என்பது மும்முரமாக நடைபெறும். எங்கு திரும்பினாலும் அந்த படத்தை பற்றி பேசும் வகையில் தான் விளம்பரங்கள் இருக்கும். இனி அந்த துறையும் இழப்பை சந்திக்கும்.</li>
    <li><a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> படம் என்றாலே திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பும் இனி பறிபோகும்&nbsp;</li>
    </ul>

    Source link

  • actor vijay meet fans at goat movie shooting spot at puducherry tamizhaga vetri kazhagam

    actor vijay meet fans at goat movie shooting spot at puducherry tamizhaga vetri kazhagam


    கோட் படப்பிடிப்பு தளத்தில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்க்கு ஆரவாரம் எழுப்பி ரசிகர்கள் வரவேற்பு தந்த புகைப்படங்கள், வீடியோ வெளியாகியுள்ளது.
    அரசியல் வருகைக்கு இடையே படப்பிடிப்பு
    வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரைப்படம் கோட் (GOAT – Greatest Of All Time). இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய் நேற்று முன் தினம் தன் அரசியல் எண்ட்ரி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதுடன்,  தமிழக வெற்றி கழகம்” என கட்சியின் பெயரையும் பதிவு செய்து அறிவித்தார்.
    இதனைத் தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை தமிழ்நாடு தாண்டி பேசுபொருளாகியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா வட்டாரத்தினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
    புதுச்சேரியில் சூழ்ந்த ரசிகர்கள்
    இந்நிலையில் புதுச்சேரியில் கோட் படப்பிடிப்புத் தளத்தில் விஜய் தன் ரசிகர்களை சந்தித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி, முதலியார் பேட்டை ஏஎஃப்டி பஞ்சாலையில் கோட் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கு அவரது ரசிகர்கள் சூழந்தனர்.
    இந்நிலையில் வெள்ளை ஷர்ட் அணிந்து கேரவேன் மேற்கூரையில் ஏறி தன் ரசிகர்களை நோக்கி கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார் விஜய். தொடர்ந்து அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து அவர் மீது பூக்களைத் தூவி வாழ்த்தினர். அரசியல் வருகையை அறிவித்த பின் முதன்முறையாக நடிகர் விஜய் பொதுவெளியில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    ரசிகர்களுடன் செல்ஃபி!
     

    நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் ❤️#Thalapathy @actorvijay na❤️ @tvkvijayoffl pic.twitter.com/V5uTcKAf3m
    — Jagadish (@Jagadishbliss) February 4, 2024

    இந்நிலையில் “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” எனும் கேப்ஷனுடன் இந்த வீடியோவினை விஜய்யின் மேனேஜரும் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகிறது. 
    இந்நிலையில், தமிழ்நாடு வெல்கம்ஸ் டிவிகே விஜய் எனும் ஹேஷ்டேகையும் விஜய்யின் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 
    தமிழக வெற்றி கழகம்
    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் அரசியல் வரவேற்பு எதிர்பார்த்த ஒன்று என்றாலும், இந்த அறிவிப்பு அரசியல், சினிமா தளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் எண்ட்ரி கொடுத்துள்ள விஜய்க்கு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடப்போவதில்லை எனவும், அதே நேரத்தில் யாருக்கும் தாங்கள் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்பதையும் விஜய் ஏற்கெனவே தன் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். இந்நிலையில், முன்னதாக “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு தான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி” என விஜய் தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • IN PICS Actor and Tamizha vetri kazhgam leader Vijay meets fans at GOAT shooting spot

    IN PICS Actor and Tamizha vetri kazhgam leader Vijay meets fans at GOAT shooting spot


    பொழுதுபோக்குVijay: “இது விளையாட்டு இல்ல, காலம் என்னை அங்கு நிறுத்தும்” – 13 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் எண்ட்ரி பற்றி விஜய்!

    Source link

  • “மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்” வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறிய விஜய்!

    “மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்” வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறிய விஜய்!


    தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் (Vijay), அரசியலுக்கு வர போவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்தது. நேற்று முன்தினம், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார் விஜய். நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் 
    அரசியலில் நுழைந்த விஜய்:
    அதில், தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், அதே நேரத்தில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து தமிழ்நாடு அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளார்.
    தனது அரசியல் கட்சியின் பெயர் வெளியானதில் இருந்தே, ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் விஜய். அரசியலில் குதித்துள்ள விஜய்-க்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
    “மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்”
    வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கம் அளிக்கும் ஊடகவியலாளர்கள், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
     

    மேலும் காண

    Source link

  • Will Actor Vijay try to capitalise ground reality by challenging BJP What will be the ideology of Tamizhaga vetri kazhagam

    Will Actor Vijay try to capitalise ground reality by challenging BJP What will be the ideology of Tamizhaga vetri kazhagam


    “நாளைய வாக்காளர்கள் நீங்க.. ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க.. உங்க பெற்றோர்கிட்டயும் இத சொல்லுங்க.. அம்பேத்கர், பெரியார், காமராஜர் எல்லாம் படியுங்க” என மாணவர்கள் மத்தியில் பேசி அரசியலுக்கு அச்சாரம் போட்ட விஜய்,  நேற்று அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார்.
    வள்ளுவர் முதல் அம்பேத்கர் வரை:
    மாணவர்கள் மத்தியில் இதை பேசுவதற்கு முன்பே பல முறை அனல் பறக்க அவர் அரசியல் பேசியிருந்தாலும், இந்த கருத்துகள்தான், அவர் எங்கிருந்து தனது அரசியலை தொடங்க போகிறார் என்பதை நமக்கு உணர்த்தியது. தனது கொள்கை எது? தத்துவம் எது? தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளில் தனது நிலைபாடு என்ன? என்பதை அவர் அறிவிக்கவில்லை என்றாலும், அம்பேத்கர், பெரியார், காமராஜரை குறிப்பிட்டு, தான் எதை சார்ந்து அரசியல் செய்ய போகிறார் என்பதை உணர்த்தியுள்ளார்.
    ‘பிளவுவாத அரசியல் கலாசாரம்’, ‘ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம்’ ஆகிய இரண்டுக்கு எதிராக அடிப்படை அரசியல் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக கட்சிக்கான அடித்தளத்தை போட்டுள்ளார். இலவசங்கள் தொடங்கி ஊழல் வரை திரைப்படத்தில் பல குழப்பமான, அபத்தமான கருத்துகளை பேசியிருந்தாலும், தனது அறிக்கையின் மூலம் அரசியல்வாதியாக பரிணமித்திருக்கிறார் விஜய்.
    சாதி, மத வேறுபாடுகள் சமீபகாலமாக பல பிரச்சினைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய அரசியல் கட்சி தோற்றம் பெற்றுள்ளது. பல்வேறு காரணங்களால் அதிமுக பலவீனம் அடைந்திருக்கும் நிலையில், திமுகவுக்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க்கட்சிக்கான இடத்தில் வெற்றிடம் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதி வரும் சூழலில், விஜய்யின் அரசியல் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
    பா.ஜ.க.வுக்கு சவாலாக மாறுகிறாரா விஜய்?
    ஆனால், அந்த இடத்தை பிடிக்கத்தான் பா.ஜ.க. கடும் முயற்சிகளை செய்து வருகிறது. மேற்கு வங்கத்தை தொடர்ந்து தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பிரதான எதிர்க்கட்சிக்கான இடத்தை பிடிக்க பாஜக முயற்சித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலும் தனது கவனத்தை திருப்பியிருக்கிறது. ஆனால், தற்போது அதற்கு சவாலாக மாறியுள்ளார் விஜய்.
    பாஜக, விஜய்-க்கு இடையேயான போட்டி இன்று, நேற்று தொடங்கவில்லை. மெர்சல் படத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது அந்த படத்தில் ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின் சில நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் வகையில் வசனம், காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. 
    அந்த சமயத்தில், நடிகர் விஜய்யை, ‛ஜோசப் விஜய்’ என கூறி, பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பரபரப்பை கிளப்பினார். அதாவது விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதால்தான் மத்திய அரசை விமர்சனம் செய்கிறார் எனும் வகையில் எச். ராஜா கருத்து தெரிவித்திருந்தார். 
    மேலும், விஜய் தனது கிறிஸ்தவ அடையாளளமான ஜோசப் என்ற பெயரை பயன்படுத்தாமல் விஜய் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து மக்களை ஏமாற்றுவதாகவும் விமர்சித்து இருந்தனர். இதற்கு, நடிகர் விஜய், எந்த வித எதிர்வினையும் ஆற்றவில்லை. ஆனாலும், இந்த விமர்சனத்துக்கு பிறகு நடிகர் விஜய் தொடர்பான சில அறிவிப்புகளில் அவரது பெயர் ஜோசப் விஜய் என இடம்பெற்று கவனம் ஈர்த்தது. அதாவது எனது பெயர் ஜோசப் விஜய் தான். இதனை மறைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என நடிகர் விஜய் பதிலடி கொடுக்கும் வகையில் இப்படி செய்திருந்தார்.
    அறிக்கையில் பட்டவர்த்தனமான அரசியல் பேசும் விஜய்:
    வள்ளுவனுக்கு காவி சாயம் பூசி வரும் நிலையில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (பிறப்பால் அனைவரும் சமம்) என்ற குறளை அறிக்கையில் விஜய் குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அனைவருக்கும் சம உரிமைகளை உறுதி செய்துள்ள அரசியலமைப்பை மாற்ற போகிறேன் என்ற குரல் ஓங்கி ஒலித்து நிலையில், இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு, தனது அரசியல் இருக்கும் என்பதை பட்டவர்த்தனமாக சொல்லியுள்ளார் விஜய்.
    மாநில உரிமைகள் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருப்பது தமிழ்நாடு. அண்ணா தொடங்கி கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் வரை, அனைவரும் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளனர். நீட் தொடங்கி பல விவகாரங்களில் மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாட்டின் கள அரசியலை பிரதிபலிக்கும் வகையில் மாநில உரிமைகள் சார்ந்து பேசியுள்ளார் விஜய்.
    அம்பேத்கர், பெரியாரை பற்றி படிக்க வேண்டும் என சொன்னது முதல் மாநில உரிமைகள் சார்ந்து இயங்க போவதாக கூறியது வரை, அனைத்துமே அரசியல் நிலைபாடுதான். தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜக துடித்து வரும் நிலையில், தனது அறிக்கையின் மூலம் அவர்களுக்கு எதிராக அரசியலில் களமாடுவாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் விஜய்.                                                                                                              இதையும் படிக்க: Actor Vijay: ஆரம்பமே அதிரடி: அரசியல் சூழலை சரமாரியாக விமர்சித்த விஜய்- பயணிக்கப்போகும் பாதை என்ன?

    மேலும் காண

    Source link

  • Reason behind the name of political party Tamilaga vetri kalagam Vijay follows the footprint of N Rangaswamy ys jagan mohan reddy

    Reason behind the name of political party Tamilaga vetri kalagam Vijay follows the footprint of N Rangaswamy ys jagan mohan reddy


    தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் (Vijay), அரசியலுக்கு வர போவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் விஜய். நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் இன்று பதிவு செய்துள்ளனர். 
    அரசியலில் நுழைந்த விஜய்:
    அதில், தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், அதே நேரத்தில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து தமிழ்நாடு அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளார்.
    தனது அரசியல் கட்சியின் பெயர் வெளியானதில் இருந்தே, ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் விஜய். குறிப்பாக, அவர் இந்த குறிப்பிட்ட பெயரை தேர்வு செய்தது ஏன் என்பது அனைவரின் மனதிலும் கேள்வியாக எழுந்துள்ளது. தமிழ்நாட்டு அரசியல் பாணியை பின்பற்றும் விதமாக தனது கட்சியின் பெயரில் ‘கழகம்’ என்ற வார்த்தையை சேர்த்து கொண்டுள்ளார்.
    பொதுவாக, தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தொடங்கினால், அதன் பெயரில் திராவிடம் என சேர்த்து கொள்வது வழக்கம். ஆனால், திராவிடம் வார்த்தையை தவிர்த்துள்ளார். விஜயின் அரசியல் கட்சி பெயர் காரணம் குறித்து பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், ஒரு ருசிகரமான தகவல் கிடைத்துள்ளது.
    கட்சி பெயருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம்:
    புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் வழியை விஜய் பின்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய என். ரங்கசாமி, தனி கட்சி தொடங்கும்போது, என்.ஆர். காங்கிரஸ் என அதற்கு பெயர் சூட்டினார். 
    ‘நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்’ என்ற பெயரை சுருக்கித்தான் என்.ஆர். காங்கிரஸ் என பெயர் வைத்தார். ஆனால், தனது பெயரான என். ரங்கசாமி என்பதையே மறைமுகமாக கட்சிக்கு வைத்திருக்கிறார் என கூறப்பட்டது. 
    அதேபோல, தனது தந்தையும் மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய் . எஸ். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜெகன் மோகன் ரெட்டி, தனி கட்சி தொடங்கினார். அதற்கு, யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் என பெயர் சூட்டினார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால், தனது தந்தை பெயரான ஒய் . எஸ். ஆர் என்பதையே மறைமுகமாக கட்சிக்கு வைத்திருக்கிறார் என கூறப்பட்டது. 
    அந்த வழியில், விஜயும், தளபதி விஜய் கழகம் (TVK) என்பதையே தமிழக வெற்றிக் கழகம் (TVK) என மறைமுகமாக வைத்திருப்பதாக சமூகவலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது
     

    மேலும் காண

    Source link

  • Vijay Politics vijay start new party Tamizhaga Vetri kazhagam minister udhayanidhi stalin and other politicians wishes vijay

    Vijay Politics vijay start new party Tamizhaga Vetri kazhagam minister udhayanidhi stalin and other politicians wishes vijay


    தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் (Vijay) . ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  அதே நேரத்தில், விஜய் அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் விஜய்.
    அரசியலில் குதித்த விஜய்:
    நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் இன்று அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி பதிவு செய்துள்ளனர். அதில் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். 
    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  (Tamizhaga Vetri kazhagam) வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜய், ”இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி.  அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். 
    உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து:
    எனவே, அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்”  என்றார். தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போது அரசியலில் களமிறங்கிய விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
    அதன்படி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஜனநாயகத்தில் நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை உள்ளது.  புதிய கட்சியை தொடங்கிய விஜய்க்கு எனது பாராட்டுகள். நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    மேலும், ”தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
    இவரை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “கட்சியை தொடங்கி உள்ள விஜய் மண்ணை ஆள்வதற்கு முன்பு முதலில் மக்களின் மனதை வெல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் கட்சியை தொடங்கியபோது ஒரு வெற்றிடம் இருந்தது. அதனால், அவர் வெல்ல முடிந்தது. நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை தக்க வைக்க கடினமாக உழைக்க வேண்டும்” என்றார். 
     

    மேலும் காண

    Source link

  • Thalapathy Vijay to End His Cinema Career This is the last Movie Tamizhaga Vetri Kazhagam TVK

    Thalapathy Vijay to End His Cinema Career This is the last Movie Tamizhaga Vetri Kazhagam TVK


    தான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய்(Vijay) அறிவித்துள்ளார்.
    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்(Tamizhaga Vetri Kazhagam) கட்சியைத் தொடங்கி உள்ளது, அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. புலி வருது புலி வருது கதையாக அல்லாமல், கட்சியின் பெயரை அறிவித்துவிட்டார் நடிகர் விஜய்.  
    முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விஜய் கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
    இந்த நிலையில், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.
    வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டி இடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
    அரசியல் மற்றொரு தொழில் அல்ல
    இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.
    தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றிக் கடன்
    எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றிக் கடனாகக் கருதுகிறேன்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால், நடிகர் விஜய் திரைத் துறையில் இருந்து விலகுகிறார் என்று அறிய முடியகிறது. 

    மேலும் காண

    Source link

  • Thalapathy Vijay’s Political Party Name Tamizhaga Munnetra Kazhagam Viral On Social Media | Thalapathy Vijay: தமிழக முன்னேற்ற கழகம்.. வைரலாகும் விஜய் அரசியல் கட்சி பெயர்

    Thalapathy Vijay’s Political Party Name Tamizhaga Munnetra Kazhagam Viral On Social Media | Thalapathy Vijay: தமிழக முன்னேற்ற கழகம்.. வைரலாகும் விஜய் அரசியல் கட்சி பெயர்

    நடிகர் விஜய் விரைவில் தொடங்கவுள்ள அரசியல் கட்சியின் பெயர் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான தகவலும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். 
    அரசியல் களத்தில் விஜய்
    இதற்கிடையில் விஜய் விரைவில் அரசியல் களத்தில் களமிறங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்த தகவல். இதற்காக கடந்த 14 ஆண்டு காலமாகவே அவர் ஒவ்வொரு அடியாக எடுத்து வருகிறார். தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றியது, 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது, ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாராவே சந்தித்தது, அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த ராகுல் காந்தியை சந்தித்தது என முதல் 10 ஆண்டுகள் பார்த்து பார்த்து அரசியல் நகர்வுகளை செயல்படுத்தி வந்தார். 
    ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக அரசியலில் களமிறங்குவது தொடர்பாக விஜய்  பல திட்டங்களை கையிலெடுத்தார். முதற்கட்டமாக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகளை தனது புகைப்படம், மக்கள் இயக்கத்தின் கொடி எதையும் பயன்படுத்தாமல் சுயேட்சையாக போட்டியிட செய்து மக்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ள செய்தார். இதில் நல்ல பலன் கிடைத்தது. உள்ளாட்சி தேர்தலில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை மக்கள் இயக்க நிர்வாகிகள் பெற்றனர். 
    இதனைத் தொடர்ந்து மக்கள் இயக்கம் மூலம் நூலகம், மாலை நேர படிப்பகம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார். கடந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களை தொகுதி வாரியாக அழைத்து பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இதன்பின்னர் சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை வழங்கினார். 

    தமிழக முன்னேற்ற கழகம் – இந்த பெயர் இருந்தால் அருமை . ஒட்டுமொத்த தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக ஒரு கட்சி ! வாழ்த்துக்கள் அண்ணா @actorvijay !
    — Prashanth Rangaswamy (@itisprashanth) January 29, 2024

    மேலும் அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து தொகுதி தொடர்பான கள நிலவரங்களையும் கேட்டறிந்து வந்தார். விஜய்யின் அரசியல் வருகைக்கு பெரும்பாலும் பலரும் வரவேற்பு இருக்கும் நிலையில், சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது. 
    அரசியல் கட்சி பெயர் 
    விஜய் அரசியலுக்கு வருவது 100% உறுதியாகி விட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் அரசியல் கட்சியை பதிவு செய்ய மக்கள் இயக்கத்தில் பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பதிவு செய்ய  உள்ளதாக கூறப்படுகிறது. 

    தமிழக முன்னேற்ற கழகம்வெல்வான் தமிழன் 👑
    — Anitha Sampath (@anithasampath_) January 29, 2024

    இந்நிலையில் விஜய் தொடங்கவுள்ள அரசியல் கட்சிக்கும் தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக 
     

    Source link

  • Director Sa Chandrasekhar Teases Thalapathy Vijay In Desingu Raja 2 Motion Poster Release | Thalapathy Vijay: அப்ப அவர் என்ன சூப்பர் ஸ்டாரா?

    Director Sa Chandrasekhar Teases Thalapathy Vijay In Desingu Raja 2 Motion Poster Release | Thalapathy Vijay: அப்ப அவர் என்ன சூப்பர் ஸ்டாரா?

    சினிமாவுக்கு வருகின்ற இளைஞர்களுக்கு ஒரு பொறுப்புணர்வு உள்ளது. நல்ல விஷயங்களை படமாக எடுக்க வேண்டும் என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 
    இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விமல், இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக பூஜிதா பொன்னாடா  நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜனா, ஹர்ஷிதா, சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா என பலரும் நடித்து வருகின்றனர். வித்யாசாகர் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 
    தேசிங்கு ராஜா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், படம் எடுக்க வரும் இளைய தலைமுறையினருக்கு சில அறிவுரைகள் வழங்கினார். அவர் தன் பேச்சின்போது, “சினிமாவுக்கு வருகின்ற இளைஞர்கள் ஒரு கதையுடன் வாருங்கள். உங்களுக்கென்று ஒரு பொறுப்புணர்ச்சி உள்ளது. ஒரு அப்பாவாக, அண்ணனாக இதனை சொல்லிக்கொள்ளும் தகுதி இருப்பதால் தெரிவிக்கிறேன்.  
    அந்த காலத்தில் 10 தலையை வெட்டுகிறவர்களை வில்லன் என சொன்னோம். ஆனால் இன்னைக்கு அதே விஷயத்தை ஹீரோவை பண்ண வைக்கிறீர்கள். இது எப்படின்னு எனக்கு புரியவில்லை. இதை எப்படி நாம் சினிமான்னு ஏற்றுக் கொள்கிறோம், கொண்டாடுகிறோம்?. இளைஞர்களுக்கு நீயும் கத்தி எடுத்து 10 பேரை வெட்டுன்னு சொல்ல வருகிறோமா?. 
    ஏனென்றால் இன்றைய இளைஞர்கள் எல்லாம் ஹீரோ என்ன சட்டை போடுகிறார், ஹேர்ஸ்டைல் பண்ணுகிறார் என்பதை பின்பற்றி அப்படியே செய்கிறார்கள். தயவுசெய்து உங்கள் காலை தொட்டு கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். நல்ல விஷயங்களை படமாக எடுங்கள். இரண்டரை மணி நேர படத்தில் 3 நிமிடங்கள் நல்ல விஷயங்களை சொல்லுங்கள். 
    எழிலை பொறுத்த வரை நான் அவரிடம் விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் படம் பண்ணுவதற்கு முன் ஒரு கேள்வி கேட்டேன். அதை அவர் தன் படத்தின் மூலம் பதிலாக சொன்னார். அந்த படம் வெள்ளி விழா கொண்டாடியது. அப்ப என்ன விஜய் சூப்பர் ஸ்டாரா? இல்லையே. அந்த கதை அவரை தூக்கி விட்டது. துள்ளாத மனமும் துள்ளும் படத்துக்குப் பின் தான் விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகமானார்கள். நான் உண்மையை ஒப்புக் கொள்வதில் தயங்க மாட்டேன்.
    அந்த படத்தில் யார் நடித்திருந்தாலும் வெள்ளி விழா கொண்டாடியிருக்கும். களிமண்ணை கூட அழகான சிலையாக மாற்றக்கூடிய சக்தி இயக்குநர்களுக்கு இருக்கிறது. அவர்களிடம் சொல்லிக் கொள்வது என்னவென்றால், ‘உங்கள் கையில் ஒவ்வொரு ஹீரோவும் கிடைக்கும்போது அவர்களை உருவாக்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. அதேசமயம் சமுதாயத்தில் ஒரு பொறுப்புணர்ச்சி உள்ளது” என தெரிவித்துள்ளார். 
    இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள இணையவாசிகள், ‘உண்மையில் நீங்கள் சொல்வது போல துள்ளாத மனமும் துள்ளும் படம் நல்ல கதை தான். ஆனால் இந்த மாதிரியான படங்கள் மூலமாகத்தான் உங்கள் மகன் விஜய்யின் நடிப்புத்திறமை என்பது வெளிப்பட்டதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். நல்ல கதை அமைந்தாலும், அதில் சரியாக நடிக்க தெரிந்தால் மட்டுமே ரசிகர்கள் பார்ப்பார்கள்’ என கருத்துகளை பதிவிட்டுள்ளனர். 

    Source link

  • Did You Know January 12 Is The Important Day For Actor Thalapathy Vijay | Thalapathy Vijay: நடிகர் விஜய் வாழ்க்கையை மாற்றிய “ஜனவரி 12 ஆம் தேதி”

    Did You Know January 12 Is The Important Day For Actor Thalapathy Vijay | Thalapathy Vijay: நடிகர் விஜய் வாழ்க்கையை மாற்றிய “ஜனவரி 12 ஆம் தேதி”

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் சினிமா கேரியரில் ஜனவரி 12ம் தேதி மிக முக்கியமான நாளாகும். அவர் நடித்த 4 படங்கள் இதே தேதியில் ரிலீசாகியுள்ளது. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். 
    போக்கிரி 
    கடந்த 2007 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் தான் “போக்கிரி”. இந்த படத்தின் மூலம் நடிகர் மற்றும் நடன இயக்குநர் பிரபுதேவா இயக்குநராக அறிமுகமானார். இப்படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெற்றி பெற்ற போக்கிரி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் அசின், வடிவேலு, பிரகாஷ்ராஜ், நெப்போலியன், நாசர், ஆனந்த ராஜ், ஸ்ரீமன் என பலரும் நடித்திருந்தனர். மணிசர்மா இப்படத்துக்கு இசையமைத்த நிலையில் விஜய்க்கு இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக அமைந்தது. 200 நாட்கள் ஓடிய போக்கிரி படம் விஜய் சினிமா கேரியரில் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படத்தின் ஒரு பாடலில் பிரபுதேவா விஜய்யுடன் இணைந்து நடனமாடியிருந்தார். 
    வில்லு 
    போக்கிரி படத்தின் வெற்றிக்குப் பின் 2009 ஆம் ஆண்டு நடிகர் விஜய் – இயக்குநர் பிரபுதேவா கூட்டணி 2வது முறையாக இணைந்த படம் தான் “வில்லு”. இந்த படத்தில் நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ்ராஜ், கீதா, தேவராஜ், ரஞ்சிதா என பலரும் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமையத்த இந்த படத்தில் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் ஒரு பாடலில் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவா, குஷ்பூ ஆகியோர் நடனமாடியிருந்தனர். வில்லு படம் சொதப்பலான திரைக்கதையால் தோல்வியை தழுவியது. 
    நண்பன்
    ரசிகர்களின் ரொம்ப நாள் எதிர்பார்ப்பாக பிரமாண்ட இயக்குநர் ஷங்கருடன் விஜய் முதல்முறையாக கூட்டணி அமைத்தார். இந்தியில் வெளியாகி சக்கைப்போடு போட்ட “3 இடியட்ஸ்” படத்தின் ரீமேக் உரிமையை பெற்று அதை தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் படமாக எடுத்தார். இப்படத்தில் விஜய், இலியானா டி குரூஸ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன், எஸ்.ஜே.சூர்யா என பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த நண்பன் படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 
    பைரவா
    தன்னை வைத்து அழகிய தமிழ் மகன் படம் எடுத்த இயக்குநர் பரதனுடன் விஜய் 2வது முறையாக இணைந்த படம் “பைரவா”. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. கல்வியில் நடக்கும் ஊழலை பற்றி பேசிய பைரவா படம் சுமாரான வெற்றியைப் பெற்றாலும், ரூ.100 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் படிக்க: Varisu vs Thunivu: இன்றோடு ஓராண்டு நிறைவு.. வாரிசு, துணிவு படத்தால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோதனை..!

    Source link