உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.

சர்ச்சையை கிளப்பும் சங்கராச்சாரியார்கள்:

ஆனால், பிரதிஷ்டையின்போது ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவதற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மாட்டோம் என 4 சங்கராச்சாரியார்களும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து விரிவாக பேசிய பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, "சங்கராச்சாரியார்கள் தங்கள் கண்ணியத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள். இது ஈகோ அல்ல. பிரதமர் ராம் லல்லா சிலையை (குழந்தை ராமர் சிலை) நிறுவும் போது நாங்கள் வெளியில் அமர்ந்து கைதட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? கும்பாபிஷேக விழாவில் மதச்சார்பற்ற அரசு பங்கேற்க வேண்டும் என்பதற்காக பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல" என்றார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என்ற முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ள உத்தரகாண்ட் சங்கராச்சாரியார் சுவாமி அவி முக்தீஸ்வரானந்த் சரஸ்வதி, "கோவிலை இன்னும் கட்டி முடிக்கவில்லை. கட்டுமான பணிகள் முழுமை பெறவில்லை. முழுமையடையாத கோயிலில் தெய்வத்தை நிறுவுவது மத சாஸ்திரங்களுக்கு எதிரானது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:

என்னுடைய ஜோதிஷ் பீடம் கோயில் அறக்கட்டளையிடம் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளது. முழு கட்டுமானம் முடிந்த பின்னரே கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

கோயில் என்பது கடவுளின் உடல் போன்றது. கோயிலின் மேற்பகுதி கடவுளின் கண்களை குறிக்கிறது. ‘கலசம்’ என்பது கடவுளின் தலையைக் குறிக்கிறது. கோயிலின் கொடி, கடவுளின் முடியை குறிக்கிறது. கடவுளின் தலை இல்லாமலோ கண்கள் இல்லாமலோ உடலுக்கு பிரதிஷ்டை நடத்துவது மத சாஸ்திரங்களுக்கு எதிரானது.

VIDEO | "I understand that the Pran Pratishtha ceremony is scheduled for January 22. I’ve also been informed that the temple construction is not yet complete. According to our ‘Shastra,’ the ‘Pratishtha’ should only happen once the temple is properly constructed. Therefore, it’s… pic.twitter.com/o76RIx2iBu

— Press Trust of India (@PTI_News) January 14, 2024

எனவே, நான் அங்கு செல்லமாட்டேன். ஏனென்றால், நான் அங்கு சென்றால் மக்கள் என் முன்னால் வேதம் மீறப்பட்டதாகக் கூறுவார்கள். எனவே, பொறுப்புள்ள நபர்களிடம், குறிப்பாக அயோத்தி அறக்கட்டளை உறுப்பினர்களிடம் கோவில் முழுவதுமாக கட்டப்பட்டவுடன் கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் பிரச்னையை எழுப்பியுள்ளோம். ஆலோசனை செய்து வருகிறோம்" என்றார்.

பூரி சங்கராச்சாரியார், உத்தரகாண்ட் சங்கராச்சாரியார் மட்டும் இல்லாமல் கர்நாடக, குஜராத் சங்கராச்சாரியார்களும் அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

Tag: சங்கராச்சாரியார்

Shankaracharyas: அயோத்தி ராமர் சிலையை தொட மோடிக்கு எதிர்ப்பு! சர்ச்சையை கிளப்பும் சங்கராச்சாரியார்கள்!

Shankaracharyas: "அவரு ராமர் சிலைய தொடுவாரு, நான் கைய தட்டிட்டு இருக்கணுமா" சங்கராச்சாரியார்கள் அட்டாக்

அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு சொந்தம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயிலின் முதற்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்:

கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, சங்கர மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்கள், இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

அரைகுறையாக கட்டுப்பட்டுள்ள ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் அரசியல் லாபத்திற்காக கோயில் கும்பாபிஷேக விழாவை விஷ்வ இந்து பரிஷத் கையில் எடுத்துள்ளதாகவும் இந்து மதத் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ள பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, "கோயிலில் சிலையை தொட்டு பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வார், நான் அங்கு சென்று கை தட்டு கொண்டு இருக்க வேண்டுமா?

அயோத்தியில் பிரதமரே அனைத்தையும் செய்துவிட்டால் மதகுருமார்களுக்கு செய்வதற்கு மிச்சம் என்ன இருக்கிறது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். சனாதன தர்மத்தை மதிப்பதற்கும் மதச்சார்பற்ற தலைவராக பிரதமர் தன்னை சித்தரித்து கொள்ளாமல் இருப்பதற்கும் பாராட்டுகள். ஆனால், மதகுருமார்கள் செய்யும் யோகாவையும் பிரதிஷ்டை விழா முதற்கொண்டு அனைத்தையும் பிரதமரே செய்துவிடுகிறார்" என்றார்.

மோடிக்கு எதிராக கொந்தளித்த சங்கராச்சாரியார்கள்:

இதே கருத்தை முன்வைக்கும் உத்தரகாண்ட் சங்கராச்சாரியார் சுவாமி அவி முக்தீஸ்வரானந்த் சரஸ்வதி, "அரசியல் லாபத்திற்காக மட்டுமே அரைகுறையாக கட்டுப்பட்டுள்ள ராமர் கோயில் திறக்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பாரம்பரியத்தை பின்பற்றவில்லை.

இந்தியாவை பொறுத்தவரையில் மன்னர்களும் மதகுருமார்களும் வேறு வேறு ஆட்களாகவே இருந்துள்ளனர். ஆனால், தற்போது, அரசியல் தலைவர், மதத்தின் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார். இது பாரம்பரியத்துக்கு எதிரானது. அரசியல் லாபத்திற்காக செய்யப்படுகிறது" என்றார்.

இதற்கு பதிலடி தந்துள்ள விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவரும் ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளருமான சம்பத் ராஜ், "ராமர் கோயில், ராமானந்த் பிரிவை சேர்ந்தவர்களுக்கே சொந்தம். சங்கராச்சாரியார்களோ சைவர்களோ சொந்தம் கொண்டாட முடியாது" என்றார்.