Tag: கோவை

  • Chance of rain next three hours in Tamil nadu at tenkasi coimbatore kanyakumari and thirunelveli | TN Weather: அடுத்த 3 மணி நேரம்! தமிழ்நாட்டில் பெய்யப்போகுது மழை
    Chance of rain next three hours in Tamil nadu at tenkasi coimbatore kanyakumari and thirunelveli | TN Weather: அடுத்த 3 மணி நேரம்! தமிழ்நாட்டில் பெய்யப்போகுது மழை


    அடுத்த 3 மணி நேரம்
    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
    அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 
    தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
    இன்று (ஏப்ரல் 4)தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக  மாவட்டங்கள்,   புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    ஏப்ரல் 5  முதல் 7-ஆம் தேதி வரை:  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    08.04.2024 முதல் 10.04.2024 வரை: கடலோர        மாவட்டங்கள்         மற்றும்        அதனை     ஒட்டிய         மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு
    இன்று(ஏப்ரல்4) முதல் வரும் 8ஆம் தேதி வரை தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும்,  புதுவையிலும்  அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில்  2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும். 
    அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச  வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் 39°  – 41° செல்சியஸ், உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°  – 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34°  – 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.
    ஈரப்பதம்: அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும்  இருக்கக்கூடும்.
    அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் காண

    Source link

  • Annamalai said that Congress and Dmk should apologize for covering kachchatheevu – TNN | கச்சத்தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ், திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்
    Annamalai said that Congress and Dmk should apologize for covering kachchatheevu – TNN | கச்சத்தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ், திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்


    கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”திமுக இத்தனை ஆண்டு காலமாக காங்கிரஸ் அரசு எங்களை கேட்காமல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக கூறுவது கட்டுக்கதை. திமுகவினர் தமிழக மக்களை வஞ்சித்து இருக்கிறார்கள். அப்போதைய மத்திய அமைச்சர் கேவல்சிங் கலைஞர் கருணாநிதியை சந்தித்து அனுமதி பெற்ற பின்னரே, கச்சத்தீவு கொடுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதில் கருணாநிதியின் முடிவும் இருந்தது. கருணாநிதி கச்சத்தீவை கொடுக்க சம்மதம் தெரிவித்தது மட்டுமின்றி சிறிய அளவில் போராட்டம் நடத்தி கொள்வதாக அமைச்சர் கேவல் சிங்கிடம் பேசியுள்ளார். முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனுமதி இல்லாமல் கச்சத்தீவை மத்திய அரசு கொடுக்க வாய்ப்பே இல்லை. இந்திய இறையாண்மை மீது திமுகவிற்கு நம்பிக்கை உள்ளதா?ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் திமுக தான்.
    தமிழக பாஜக கச்சத்தீவை மீட்க வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளோம். தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைவாக இருப்பதால் தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லை அருகே சென்றாலே இலங்கை அரசு கைது செய்கிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு திரும்ப பெற வேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரசும், திமுகவும் சேர்ந்து செய்த சதி. கச்சத்தீவை மீட்கும் விவகாரத்தில் இந்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். கச்சத்தீவு மீட்பு பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். வங்கதேசத்துடன் உள்ள எல்லை குழப்பங்களை தீர்க்க சில பகுதிகள் கொடுக்கப்பட்டது.  வங்கதேச பிரச்சனையும், கச்சத்தீவு பிரச்சனையும் ஒன்றல்ல. சரித்திரம் தெரியாமல் மல்லிகர்ஜூன கார்கே பேசுகிறார். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததில் இந்தியாவிற்கு ஒரு பைசா கூட இலாபம் இல்லை.

    மன்னிப்பு கேட்க வேண்டும்
    கச்சத்தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் திமுக மன்னிப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னிசியா உள்ளது. நான் பிடித்த முயலுக்கு 3 கால் என பேசுவது முதலமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல.  கடந்த 33 மாதங்களில் திமுக அரசு செய்த சாதனை என்ன? பிரதமர் மோடி 10 இலட்சம் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு தந்துள்ளார். அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் தந்துள்ளார். நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். அன்று நாடாளுமன்றத்தில் இருந்து திமுகவினர் ஏன் வெளிநடப்பு செய்தனர்?முதலமைச்சர் தான் திசை திருப்ப முயல்கிறார். கச்சத்தீவை இலங்கை கொடுப்பது பற்றி அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, ஒரு மத்திய அமைச்சர், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு மட்டும் தான் தெரியும்.
    கச்சத்தீவு மதிப்பற்றது என்பது காங்கிரஸ் நிலைப்பாடாக இருந்துள்ளது. மீனவர்கள் நலனுக்காக இந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் முயல்கிறோம். இலங்கை முழுவதும் இந்தியா உடன் நட்புறவில் உள்ளது. இலங்கைக்கு நிதியுதவி செய்வது தொப்புள் கொடி உறவு என்பதால் தான். இதற்கும் தேர்தலுக்கும் சம்மந்தம் இல்லை. சீனாவிற்கு நிலம் கொடுத்தது எல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான். நாங்கள்  ஒவ்வொரு இடமாக மீட்டு கொண்டுள்ளோம். பாஜக அதிகாரபூர்வமாக எல்லை பகுதியை சீனாவிற்கு தரவில்லை. திசை மாற்றுவதற்காக கார்கே பேசுகிறார். இலங்கை தமிழருக்கு குடியுரிமை உள்ளது. 11 ஆண்டுகள் வாழ்ந்தவர்களுக்கு குடியுரிமை தந்துள்ளோம். எதிர் கட்சிகளை ஒழிப்பேன் என மோடி சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சி இருக்க கூடாது என்பது தான் எங்கள் நோக்கம்” எனத் தெரிவித்தார்.

    மேலும் காண

    Source link

  • Isha yoga Centre rekla race contest 202
    Isha yoga Centre rekla race contest 202

    ’தமிழ் தெம்பு’ திருவிழாவின் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோக மையத்தில் ரேக்ளா பந்தயப் போட்டி இன்று (மார்ச் 17) விறுவிறுப்பாக நடைபெற்றது.  200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் இடம் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. 
     
    தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றி கொண்டாடும் ‘தமிழ் தெம்பு’ என்னும் 9 நாள் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக திகழும் மாட்டு வண்டிப் போட்டி (ரேக்ளா பந்தயம்) ஆதியோகி முன்பு நடத்தப்பட்டது. ஈஷாவில் முதல்முறையாக நடந்த ரேக்ளா போட்டியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 

     
    இதற்காக, கோவை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவே ஈஷாவிற்கு வருகை தந்தனர். போட்டி இன்று காலை தொடங்கியது. முதல்கட்டமாக 200 மீட்டர் பந்தயப் போட்டி நடைபெற்றது.  தொடக்க புள்ளியில் இருந்து கொடி அசைத்த உடன் 2 நாட்டு மாடுகளுடன் கூடிய ரேக்ளா வண்டி மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்தது. ஒரு வண்டி பந்தய கோட்டை அடைந்த பின்னர் அடுத்த வண்டி அனுமதிக்கப்பட்டது. 
     
    ஒவ்வொரு நாட்டு மாடுகளும் காண்போரை அசர வைக்கும் வகையில் எல்லை கோட்டை நோக்கி சீறி பாய்ந்தன. 200 மீட்டர் போட்டி நிறைவு பெற்ற பின்னர் 300 மீட்டர் போட்டி நடத்தப்பட்டது. இவ்விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

     
    இரண்டு பிரிவிலும், முதல் இடம் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 2-ம் பரிசாக ரூ.50,000, 3-ம் பரிசாக ரூ.25,000, 4-ம் பரிசாக ரூ.15,000 வழங்கப்பட்டது. இதுதவிர 5 முதல் 15 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.3,000-மும், 16 முதல் 30 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.2,000-மும் பரிசு தொகையாக வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

    சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
    மேலும் காண

    Source link

  • Public attention..! PM Modi visit – Traffic change in Palladam, Madurai, covai | PM Modi Traffic Change: பொதுமக்கள் கவனத்திற்கு..! பிரதமர் மோடி வருகை
    Public attention..! PM Modi visit – Traffic change in Palladam, Madurai, covai | PM Modi Traffic Change: பொதுமக்கள் கவனத்திற்கு..! பிரதமர் மோடி வருகை


    PM Modi Traffic Change:  பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை தர உள்ளார்.
    பிரதமர் மோடி தமிழகம் வருகை:
    நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி தொடர்பாக விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டும் நிலையில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் எம்.பிக்களை பெற கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாகவே நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரது இரண்டு நாள் பயணத்த ஒட்டி பல்லடம், கோவை மற்றும் மதுரையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
    கோவையில் போக்குவரத்து மாற்றம்:
    கேரளாவில் இருந்து கோவைக்கு தான் முதலில் பிரதமர் மோடி இன்று வருகை தருகிறார். இதையொட்டி கோவை சூலூரில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக  கனரக வாகனங்களுக்கு மட்டும் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    1) பாலக்காட்டிலிருந்து வாளையார் வழியாக வரும் தாராபுரம், திருச்சி செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மதுக்கரை, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.
    கோவை மாநகருக்குள் இருந்து வரும் கனரக வாகனங்கள் சுங்கம் வழியாக பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.
    கோவை மாநகர் சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, L&T Bye-pass, பட்டணம் பிரிவு, G-Square, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.
    கோவை சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, நீலாம்பூர், அவினாசி சாலை, கருமத்தம்பட்டி, அவினாசி வழியே செல்ல வேண்டும்.
    பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் செல்லும் கனரக வாகனங்கள் உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.
    கருமத்தம்பட்டியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சூலூர் வழியில் செல்வதற்கு அனுமதி இல்லை. நீலாம்பூர், சிந்தாமணிபுதூர் சந்திப்பு, கற்பகம் கல்லூரி சந்திப்பு, பொள்ளாச்சி வழியே செல்ல அனுமதிக்கப்படும்.

    பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்:

    பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள், சரக்கு லாரிகள், நீலாம்பூர், கருமத்தம்பட்டி, அவினாசி வழியாக செல்ல வேண்டும்.
    கோவையில் இருந்து பல்லடம் வழியாக மதுரை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி நால்ரோடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக செல்ல வேண்டும்.
    திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் கொடுமுடி, கணபதிபாளையம், பெருந்துறை, அவினாசி வழியாக செல்ல வேண்டும்.
    திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி, உடுமலை, கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தண்ணீர் பந்தல், சின்னதாராபுரம், மூலனூர், குடிமங்கலம், பொள்ளாச்சி, வழியாக செல்ல வேண்டும்.
    பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் குடிமங்கலம் நால்ரோடு, தாராபுரம், அவினாசிபாளையம் வழியாக செல்ல வேண்டும்.
    மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் வழியாக கோவை கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும்.
    கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் இலகு ரக வாகனங்கள் சூலூர், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம், கொடுவாய், காங்கயம், வெள்ளகோவில் வழியாக செல்ல வேண்டும்.
    திருச்சி மற்றும் கரூரிலிருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் இலகுரக வாகனங்கள் காங்கயம், படியூர், திருப்பூர், அவினாசி வழியாக செல்ல வேண்டும்

    மதுரையில் போக்குவரத்து மாற்றம்:
    பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி மதுரையில் 2 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 

    திருச்சியில் இருந்து மதுரை வரும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக மாட்டுத்தாவணி செல்லலாம். 
    திருச்சியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக செல்லும். 
    சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் பூவந்தி வழியாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்றடையும். 
    ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் சாக்குடி பாலம் வழியாக சென்றடையும். 
    தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் ஏ.முக்குளம் சந்திப்பு வழியாக சென்றடையும். 

    மேலும் காண

    Source link

  • PM Modi visiting Tamil Nadu today – plans and schedules on february 27 & 28 check the details
    PM Modi visiting Tamil Nadu today – plans and schedules on february 27 & 28 check the details


    PM Modi TN Visit: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி:
    பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளார். இதில் பல்வேறு அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து செல்வது, அக்கட்சியின் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பிரதமரின் இன்றைய பயண விவரம்:

    இன்று பிற்பகல் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார்
    பிற்பகல் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார் பிரதமர் மோடி
    2.45 முதல், 3.45 வரை அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி
    3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து சூலூர் விரைந்து, அங்கிருந்து 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சென்றடைகிறார்.
    5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர்
    6.15 முதல் 6.45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வு எடுக்கிறார் பிரதமர்
    அன்றைய தினம் அரசியல் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    பிரதமரின் நாளைய பயண திட்டம்:

    நாளை காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்
    8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9.00 மணிக்கு சென்றடைகிறார் பிரதமர் மோடி
    9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார். இதில் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளமும் அடங்கும்.
    10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு  திருநெல்வேலி செல்கிறார்
    ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தையும் திறந்து வைக்கிறார்.
    11.15 to 12.15 மணிக்கு பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்று தனது தமிழக பயணத்தை முடிக்கிறார்
    12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

    பாதுகாப்பு ஏற்பாடுகள்:
    பிரதமரின் வருகையை தொடர்ந்து மதுரை விமான நிலையம், அவர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடங்கள் உள்ளிட்டவை மத்திய பாதுகாப்பு படைப்பிரிவினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. தீவிர பரிசோதனைக்கு பிறகே பொதுமக்கள் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தங்க உள்ள தனியார் ஓட்டலில் 100-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  பிரதமர் பயணிக்க உள்ள சாலைகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை விமான நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பசுமலை தனியார் நட்சத்திர ஓட்டல், கருப்பாயூரணி டி.வி.எஸ். பள்ளி மற்றும் பிரதமர் பயணிக்கும் சாலை, மாநகர, மாவட்ட எல்லைகளில் டிரோன்கள் பறக்க இன்றும், நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ள திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலும் சுமார் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் கொண்டு அந்த பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன. 

    மேலும் காண

    Source link

  • Lok Sabha Elections 2024 – BJP Targeting Tamil Nadu – March 4 Prime Minister Modi Is Coming To Chennai | PM Modi Chennai Visit: மக்களவைத் தேர்தல் – தமிழகத்தை குறிவைக்கும் பாஜக
    Lok Sabha Elections 2024 – BJP Targeting Tamil Nadu – March 4 Prime Minister Modi Is Coming To Chennai | PM Modi Chennai Visit: மக்களவைத் தேர்தல் – தமிழகத்தை குறிவைக்கும் பாஜக

     PM Modi Chennai Visit: பிரதமர் மோடி மார்ச் 4ம் தேதி சென்னைக்கு வந்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
    பிரதமர் மோடி சென்னை வருகை:
    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் தமிழகத்தை குறிவத்து தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக,  மார்ச் 4ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, சென்னையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். அதே நேரத்தில் அன்றைய தினம் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பரப்புரை கூட்டத்தை நடத்த தமிழக பாஜவினர் திட்டமிட்டுள்ளனர்.
    பிரமாண்ட பரப்புரை கூட்டம்:
    பரப்புரை கூட்டத்தை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடல் அல்லது பல்லாவரம்  பகுதியில் நடத்த பாஜவினர் திட்டமிட்டுள்ளனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு இடம் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை அறிமுகப்படுத்துவதோடு, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைதொடர்ந்து, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    தமிழகத்தை குறிவைக்கும் பாஜக:
    முன்னதாக இந்த மாத இறுதியிலேயே இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்திலேயே திருச்சி பாரதிதாசன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பது என இரண்டு முறை தமிழகம் வந்து சென்றார். இந்நிலையில் அடுத்த ஒரு வார கால இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு முறை, பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். இதன் மூலம், வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் தமிழ்நாட்டில் ஆழமாக கால்பதிக்க பாஜக தீவிரம் காட்டுவதை உணர முடிகிறது. அதோடு, தமிழகத்திலிருந்து மக்களவைக்கு பாஜக சார்பில் உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதிலும் தீர்க்கமாக இருக்கிறது. இதற்கு, பிரதமர் மோடியின் அடுத்தடுத்த தமிழக பயணங்கள் பெரிதும் உதவும் என, பாஜக மாந்ல தலைமை நம்புகிறது.
    பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம்: 

    27ம் தேதி பிற்பகல் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார்
    பிற்பகல் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார் பிரதமர் மோடி
    2.45 முதல், 3.45 வரை அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி
    3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து சூலூர் விரைந்து, அங்கிருந்து 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சென்றடைகிறார்.
    5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர்
    6.15 முதல் 6.45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வு எடுக்கிறார் பிரதமர்
    அன்றைய தினம் அரசியல் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    28ம் தேதி பிரதமரின் பயண திட்டம்:

    காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்
    8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9.00 மணிக்கு சென்றடைகிறார் பிரதமர் மோடி
    9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார்
    10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு  திருநெல்வேலி செல்கிறார்
    11.15 to 12.15 மணிக்கு பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்று தனது தமிழக பயணத்தை முடிக்கிறார்
    12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

    Source link

  • PM Modi visiting Tamil Nadu – plans and schedules on february 27 & 28 check the details | PM Modi TN Visit: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
    PM Modi visiting Tamil Nadu – plans and schedules on february 27 & 28 check the details | PM Modi TN Visit: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி


    PM Modi TN Visit: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் இரண்டு நாள் பயணத்தில், அவர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி:
    பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில் மூன்றாவது முறையாக அடுத்த வாரம், இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளார். இதில் பல்வேறு அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து செல்வது, அக்கட்சியின் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, பிரதமர் மோடியின் வருகையின் போது நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் இரண்டு நாள் பயணத்தில், அவர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி, குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
     
    27ம் தேதி பயண விவரம்:

    27ம் தேதி பிற்பகல் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார்
    பிற்பகல் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார் பிரதமர் மோடி
    2.45 முதல், 3.45 வரை அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி
    3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து சூலூர் விரைந்து, அங்கிருந்து 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சென்றடைகிறார்.
    5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர்
    6.15 முதல் 6.45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வு எடுக்கிறார் பிரதமர்
    அன்றைய தினம் அரசியல் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    28ம் தேதி பிரதமரின் பயண திட்டம்:

    காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்
    8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9.00 மணிக்கு சென்றடைகிறார் பிரதமர் மோடி
    9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார்
    10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு  திருநெல்வேலி செல்கிறார்
    11.15 to 12.15 மணிக்கு பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்று தனது தமிழக பயணத்தை முடிக்கிறார்
    12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

    மேலும் காண

    Source link

  • Vanathi Srinivasan alleged that the increase in debt of Rs 8.33 lakh crore was the dmk government’s achievement in Tamil Nadu Budget 2024 | ‘ரூ.8.33 லட்சம் கோடி கடன் அதிகரிப்பு தான் திமுக அரசின் சாதனை’
    Vanathi Srinivasan alleged that the increase in debt of Rs 8.33 lakh crore was the dmk government’s achievement in Tamil Nadu Budget 2024 | ‘ரூ.8.33 லட்சம் கோடி கடன் அதிகரிப்பு தான் திமுக அரசின் சாதனை’


    தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் ரூ. 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடியே 80 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்தையும் தாண்டி 26.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடனுக்கு வட்டியாக மட்டும் ரூ. 63 ஆயிரத்து 722 கோடியே 24 லட்சம் செலுத்த வேண்டும். நடப்பு 2024-25-ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 584 கோடியே 48 லட்சம் கடன் வாங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ. 49 ஆயிரத்து 278 கோடியே 73 லட்சமாக அதிகரித்துள்ளது.
    நிதிநிலை அறிக்கையில் உள்ள இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்லவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஊழல், குடும்ப ஆட்சியே இதற்கு காரணம். தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் இருந்தே கிடைக்கிறது. ஆனால், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த எந்த உத்தரவாதமான அறிவிப்பும் இல்லை. ஏழை, நடுத்தர மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள். அதை தங்களின் சாதனையாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    வெளிமாநில, வெளிநாட்டு பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக்குழுவை திமுக அரசு அமைத்தது. ஆனாலும், தமிழ்நாடு பொருளாதாரத்தில், நிதி மேலாண்மையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, பொருளாதார நிபுணர் குழுவுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது, அவர்கள் என்ன ஆலோசனை வழங்கினார்கள், அவை செயல்படுத்தப்பட்டதா, அதன் தாக்கம் என்ன என்பது குறித்து நிதியமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். மொத்தத்தில் திமுக அரசின் இந்த நிதிநிதி அறிக்கை வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, மக்களை ஏமாற்றும் சில அறிவிப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு மக்களின் நலன். தொலைநோக்கு எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • Vanathi Srinivasan demands that the Chief Minister should stop the attempts to build a dam in Meghadatu | காங்கிரஸ் தலைவர்களுடனான நெருக்கத்தை தமிழக நலனுக்கு முதல்வர் பயன்படுத்த வேண்டும்
    Vanathi Srinivasan demands that the Chief Minister should stop the attempts to build a dam in Meghadatu | காங்கிரஸ் தலைவர்களுடனான நெருக்கத்தை தமிழக நலனுக்கு முதல்வர் பயன்படுத்த வேண்டும்


    பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    அணை கட்ட முடியாது:
    அதில், “கர்நாடக மாநில சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, ’காவிரியாற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளோம். முறையான அனுமதி பெற்று விரைவில் அணையின் கட்டுமானப் பணிகளை தொடங்குவோம்’ என்று அறிவித்துள்ளார். சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1924-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, காவிரியாறு பாயும்  தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரியாற்றின் குறுக்கே கர்நாடகம் எந்த அணையையும் கட்ட முடியாது. இதை காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும்  உறுதிப்படுத்தியுள்ளது.
    முறியடிக்க வேண்டியது அவசியம்:
    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி காவிரியாற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவோம் என்று கர்நாடக சட்டப்பேரவையிலே யே அம்மாநில முதலமைச்சர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேகதாதுவில் அணை இல்லாத போதே, நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வறட்சியான காலங்களில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடகம் மறுத்து வருகிறது.
    இத்தகைய சூழலில், மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு இப்போது கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும். விவசாயத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் காவிரி நீரே உள்ளது. எனவே, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை முறியடிக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால், தமிழக நலன்களை காற்றில் பறக்கவிட்டு, கண்டனம் கூட தெரிவிக்காமல், ‘மேகதாதுவில் அணை கட்ட முடியாது’ என்று வழக்கமான பல்லவியை பாடி இருக்கிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
    தமிழக நலனுக்கும் பயன்படுத்துங்கள்:
    திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் தமிழக விவசாயிகள் நலன், தமிழக மக்களின் குடிநீர் தேவையை விட அரசியல் நலனே  முக்கியமானதாக இருக்கிறது. கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தால், சோனியாவும், ராகுலும், பிரியங்காவும் கோபித்துக் கொள்வார்கள் என்பதால், தமிழக நலன்களை காவு கொடுக்கவும் திமுக தயாராகிவிட்டது. இதனால்தான், மேகதாது அணை விவகாரத்தில் மென்மையான போக்கே  திமுக அரசு கையாண்டு வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.
    காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் பதவியேற்ற போது பெங்களூருக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்கள் உடனான தனது நெருக்கத்தை, அரசியல் நலன்களுக்காக மட்டும் பயன்படுத்தாமல், தமிழகத்தில் நலன்களுக்காகவும் பயன்படுத்தி, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும். இதற்கு சட்ட ரீதியான தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • POR Movie Promotion Coimbatore Actor Arjun Das Believes That Even After Starting Political Party Actor Vijay will act in films- TNN | Arjun Das on Vijay: அரசியல் கட்சி துவங்கிய பின்னரும்விஜய் படங்களில் நடிப்பார்
    POR Movie Promotion Coimbatore Actor Arjun Das Believes That Even After Starting Political Party Actor Vijay will act in films- TNN | Arjun Das on Vijay: அரசியல் கட்சி துவங்கிய பின்னரும்விஜய் படங்களில் நடிப்பார்


    இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடிப்பில் உருவான போர் திரைப்படம் மார்ச் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள ப்ராட் வே மாலில் அத்திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அர்ஜுன் தாஸ், ”போர் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரவிருக்கிறது. தமிழில் நாங்கள் நடித்துள்ளோம். இப்படம் கல்லூரி மாணவர்களின் சேட்டைகளை கதைகளமாக கொண்டது. இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் காண வேண்டும். வில்லன் கதாபாத்திரம், கதாநாயகன் கதாபாத்திரம் இரண்டும் கடினமானது. நல்ல கதாபாத்திரம் எது கிடைத்தாலும் செய்வேன். இந்த படத்தில் நான் வில்லனா இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை. மக்கள் என்னை அன்பாகவும் ரசித்தார்கள், வில்லன் கதாபாத்திரத்திலும் ரசித்தார்கள். மக்கள் எதனை ஏற்றுக்கொள்கிறார்களோ அதனை தொடர்ந்து செய்வேன். லோகேஷ் கனகராஜ் வில்லன் கதாபாத்திரத்திற்கு அழைத்தால் அதுதான் லைன் அப் நெகட்டிவ் ரோலாக இருக்கும்” என தெரிவித்தார். 
    நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய உள்ளது குறித்தான கேள்விக்கு, ”நடிகர் விஜய்க்கு ஆன்லைனில் வாழ்த்துக்களை தெரிவித்தேன். நன்கு யோசித்து தான் அவர் அந்த முடிவை எடுத்திருப்பார். அரசியல் கட்சி துவங்கிய பின்பும் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என நம்பிக்கை உள்ளது. அவர்களது ரசிகர்களும் அதனைத் தான் விரும்புவார்கள். என்னைப் பொறுத்தவரை அவரது படங்களை பார்க்க ஆசைப்படுவேன். ஆனால் அது அவர் எடுத்த முடிவாக இருக்கலாம்” என பதிலளித்தார்.

    பின்னர் பேசிய நடிகர் காளிதாஸ் ஜெயராம், ”இது ஒரு கனவு போல் உள்ளது. இந்த படம் பல்வேறு விஷயங்களை தங்களுக்குள்ளாகவே பகிர்ந்துள்ளோம். இந்த படத்தை பற்றி நினைக்கும் போதே பல்வேறு நல்ல நினைவுகள் தான் நினைவிற்கு வருகிறது. விக்ரம் படத்தில் தன்னுடைய கதையும், அர்ஜுன் தாஸ் கதையும் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் ஒற்றுமையாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாவக்கதைகள் திரைப்படம் முடித்தவுடன் அது போன்ற சமூக அக்கறை உடைய படங்களை நடிக்க வேண்டும் என எண்ணி இருந்தேன். ஆனால் நடிகர் மக்களுக்காக அனைத்து கதாபாத்திரங்களையும் நடிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
    பின்னர் பேசிய இயக்குநர் பிஜோய் நம்பியார், ”இந்த படம் கல்லூரி வாழ்க்கை சார்ந்த கதை. சமூகம் சார்ந்த கருத்துக்களும் இதில் அடங்கி உள்ளது. இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளனர். போர் என்ற பெயர் இந்த படத்திற்கு பொருந்தும் என்பதால் பயன்படுத்தினேன்” எனத் தெரிவித்தார். இதையடுத்து பேசிய நடிகை சஞ்சனா நடராஜன், ”சோலோ, டேவிட் படங்களை எல்லாம் பார்க்கும் போது மிகவும் அற்புதமாக இருக்கும். அதுபோன்ற படங்களில் எப்போதாவது நடிக்க மாட்டோமா என்று எண்ணினேன். இப்படிப்பட்ட நேரத்தில் இந்த திரைப்படத்தில் எனக்கு இந்த கதாப்பாத்திரம் வேண்டுமென சண்டை போட்டு இந்த கதாபாத்திரத்தை வாங்கினேன். சார்பட்டா இரண்டாவது பாகம் வருவது என்பதே சமூக வலைத்தளங்களை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். தற்போதைக்கு அது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை” எனத் தெரிவித்தார்.

    மேலும் காண

    Source link

  • Siren Movie Promotion Coimbatore Actor Jayam Ravi Advice to Students TNN | Jayam Ravi: தேர்வில் தோற்றால் தப்பில்லை, வாழ்க்கையில் தோற்றால் தான் தப்பு
    Siren Movie Promotion Coimbatore Actor Jayam Ravi Advice to Students TNN | Jayam Ravi: தேர்வில் தோற்றால் தப்பில்லை, வாழ்க்கையில் தோற்றால் தான் தப்பு


    கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டார். அவரது வருகையின் போது அரங்கத்தில் இருந்த மாணவ, மாணவிகள் அனைவரும் ஆரவாரத்துடன் உற்சாக முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளிடையே சிறப்புரையாற்றிய நடிகர் ஜெயம்ரவி, ”இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட அவர், என்னுடைய காதலர் தினத்தை விட்டு விட்டு இங்கு வந்துள்ளேன். எனக்கு நீங்கள் அனைவரும் ஒரு உறவாக இருக்கிறீர்கள். வருங்காலம் பின்னால் ஓடாதீர்கள் இப்போது இருக்கின்ற மாதிரி மகிழ்ச்சியாக இருந்தாலே வருங்காலம் உங்களை தேடி வரும். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தப்பில்லை, ஆனால் வாழ்க்கையில் தேர்ச்சி பெறாமல் போனால் தான் தப்பு” எனத் தெரிவித்தார்.
    அவரிடம் காதலர் தினம் குறித்து கருத்து கேட்டதற்கு, ”18 வயது நினைவுகளை நினைவுப்படுத்தினால் 18 வயதில் ஒரு இன்னொசென்ஸ் இருக்கும். அது காதலில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். காதல் அனைத்தையும் கடந்த ஒன்று அனைவரையும் மதிக்க வைக்கிறது” என்றார். 18 வயதில் ரசித்த காதல் பாடல் என்ன என்ற கேள்விக்கு, சிங்கிள் சைடு காதல் இருந்த போது ரசித்த பாடல் என்னவென்றால் ’மஞ்சம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடல் என பதிலளித்து அந்த பாடலை பாடினார். திருமணம் குறித்தான கேள்விக்கு, ”ஏன் திருமணம் செய்கிறோம் என்றால் உன்னுடைய வாழ்க்கையை உன்னுடன் வாழந்த பெண் சொல்ல வேண்டும். அது தான் வாழ்க்கை எதற்கு தான் திருமணம்” எனக் கூறினார். பின்னர் மாணவர்களின் கோரிக்கைக்கிணங்க மேடையில் நடனமாடினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள சைரன் திரைப்படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. அது குறித்து பேசிய ஜெயம் ரவி, ”சைரன் படம் அப்பா மகள் பாசத்தை எடுத்துரைக்கும் படம். 15 ஆண்டுகளாக அப்பாக்களுக்கு நடக்க கூடிய கதை இது. அனைவரும் இந்த படத்தை விரும்புவர்” எனத் தெரிவித்தார். மேலும் சைரன் படத்தில் அவர் நடித்துள்ள இரண்டு கதாப்பாத்திரங்கள் போலவும், பொன்னியின் செல்வன் பட வசனத்தையும் பேசி அசத்தினார். அப்போது மாணவிகள் சந்தோஷ் சந்தோஷ் என ஆர்ப்பரித்தனர். அதனை தொடர்ந்து சைரன் படத்தின் 10 நொடி காட்சிகள் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”கோவை வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சைரன் படம் மிக முக்கியமான படம். குடும்பத்திற்காக இந்த படம் செய்துள்ளேன். இந்த படம் எனக்கு சவாலாக தான் இருந்தது. 15 ஆண்டுகால வித்தியாசங்களை இதில் அனைவரும் காண்பித்துள்ளோம். எனவே இந்த படம் ஒரு ஆர்கானிக் ஆக வந்துள்ளது” என்றார்.

    மேலும் காண

    Source link

  • Annamalai said candidates are ready for all constituencies – TNN | Annamalai:அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்
    Annamalai said candidates are ready for all constituencies – TNN | Annamalai:அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்


    கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எல்.முருகன் மறுபடியும் ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிடுகிறார் என பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது எங்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.. மத்திய பிரதேசம், தமிழகம் என அவரது பணி சிறக்கட்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். 1952 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றது. இதுவரை 91 முறை மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டது. அதில் 50 முறை இந்திரா காந்தி ஆட்சிகளை கலைத்ததால் தேர்தல் நடத்தும் நேரம் மாறியது. ஒரே நாடு, ஒரே தேர்தலை கலைஞர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் வரவேற்று எழுதியுள்ளார். ஸ்டாலின் தனது தந்தையின் புத்தகத்தை படிக்கவில்லையா?
    இப்போது இல்லையென்றாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்காலத்தில் வரும். 2024 ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தான் 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த முடியும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். எடுத்தோம் கவிழ்த்தோம் என பத்து வரி எழுதி வந்து முதல்வர் சட்டமன்றத்தில் ஆதரவு, எதிர்ப்பு கேட்பது என்பது யோசனை இல்லாமல் கொண்டு வந்துள்ளார். எல்.முருகனை நீலகிரியில் போட்டியிட நாங்கள் சொல்லவில்லை. நீலகிரி தொகுதியை தயார்படுத்தி தர அவரிடம் சொல்லி இருந்தோம். நீலகிரியில் வேட்பாளர் தயாராக உள்ளார். எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.

    குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை கொண்டு வர 40 இலட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். ராகுல்காந்தி விவசாயிகள் தற்கொலை செய்த போது எங்கே போனார்? விவசாயிகள் சும்மா சும்மா வந்தால் என்ன அர்த்தம்? கரும்பு விலை உயர்வு, ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தருவதாக திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதை எதிர்த்து ஏன் விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை? சில விவசாயிகள் குழுவிற்கு தேர்தல் வந்தால் மட்டும் கண் திறக்கும். விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் கள்ளு கடையை திறக்க வேண்டும். விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க தயாராக இருக்கிறோம். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக இயற்ற இயலாது.
    கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 16 பேரை விடுவிக்க திமுக கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. அக்குற்றவாளிகளை எந்த காரணத்திற்காகவும் விடுவிக்க கூடாது. கோவை இன்னும் அபாயத்தில் இருந்து தப்பிக்கவில்லை. கொத்தடிமைகள் கூட்டம் அதிகமாக உள்ளது. கொத்தடிமைகள் ஜால்ரா போடுபவர்களாக மாற்றியுள்ளார்கள். எம்.ஜி.ஆர். அரசியலில் இருக்கும் போது திமுகவினர் கேவலமாக பேசினார்கள். உதயநிதி குடும்ப கோட்டாவில் வந்தவர்கள். உதயநிதியை எம்.ஜி.ஆர். உடன் 1 சதவீதம் கூட ஒப்பிட முடியாது” எனத் தெரிவித்தார்.
    நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு, ”எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நான் கட்சி பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். நல்ல வேட்பாளர்களை போட்டியிட வைப்போம்” என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”சபாநாயகர் திமுககாரரை விட மோசமாக உள்ளார். சபாநாயகர் நடுநிலையாக இருந்தால் பிரச்சனை இருக்காது. நாங்கள் யாரையும் போன் போட்டு கட்சிக்கு வர அழைப்பதில்லை. விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் இணைகிறார்கள். ஒரு கட்சியை உடைத்து கட்சியை வளர்க்கும் வேலையை பாஜக செய்யாது. எங்கள் கட்சியில் இணைந்தவர்களை வயதானவர்கள் என்ற வேலுமணி, எடப்பாடி பழனிசாமி வயது என்ன? வயதை பற்றி பேசி வேலுமணி அவரது கட்சி தலைவர் கேவலப்படுகிறார். எடப்பாடி பழனிசாமி இளைஞரா? எடப்பாடி பழனிசாமி வயதை விட எங்கள் கட்சியில் இணைந்தவர்களின் வயது 90 சதவீதம் குறைவு தான். வேலுமணி கண்ணாடி கூண்டில் இருந்து கல் ஏறிய கூடாது.இப்படி தவறாக சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
    கேரள அரசு சிறுவாணி அணையில் தரும் தண்ணீரின் அளவை குறைக்க கூடாது. கோவை சீட் கம்யூனிஸ்ட்களுக்கு கிடைக்குமா என தெரியவில்லை. கம்யூனிஸ்ட் மக்கள் பிரச்சனைகளை பேசி 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அது நல்லகண்ணு கால கம்யூனிஸ்ட்கள். தற்போது அவர்கள் கமர்சியலாகி விட்டார்கள். திமுக காங்கிரஸ் போல காதல் திருமணம் இருக்க கூடாது. மோடி பாஜக போல காதல் திருமணம் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

    மேலும் காண

    Source link

  • Will 5 New Districts Be Formed In Tamil Nadu? – Explanation Given By The Government | TN New Districts: தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள் உருவாகின்றனவா?
    Will 5 New Districts Be Formed In Tamil Nadu? – Explanation Given By The Government | TN New Districts: தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள் உருவாகின்றனவா?

    TN New Districts: தமிழ்நாட்டில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாக வெளியான தகவலை,  மாநில அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
    தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாகின்றனவா?
    தமிழ்நாட்டில் புதியதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. அதாவது கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் ஆகிய மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது. இதன் மூலம் நீண்ட நாட்களாக இருக்கும் தங்களது எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    பிரிகிறதா சேலம்?
    இந்தியாவின் முதல் மாவட்டம் என்ற பெருமைக்குரிய சேலம் மாவட்டம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இன்று மாவட்டங்களாக உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் இணைந்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்தது. இந்நிலையில், ஆத்தூரை மையமாக கொண்டு சேலத்தில் இருந்து புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என, கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், மீண்டும் இதுதொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
    உடைகிறதா கோவை?
    ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக 1804 ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதியன்று கோவை நகரை தலைநகரமாக கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர். அதைதொடர்ந்து. 1868 ம் ஆண்டு கோவை மாவட்டத்தில் இருந்து பிரிந்து நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்து உருவாகின. இதையடுத்து, 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே, பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்தன. இருப்பினும் அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் பொள்ளாச்சி மாவட்டம் பிரிக்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சியில் பொள்ளாச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    உருவாகிறது கோவில்பட்டி மாவட்டம்?
    தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்குகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தங்க நாற்கர நான்குவழிச்சாலையில் கோவில்பட்டி நகரம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் சிறுதானியங்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள கோவில்பட்டி, ரெவின்யு டிவிஷன் என்ற வகையிலும் மாவட்ட அந்தஸ்து கொண்ட வருவாய்க் கோட்டமாக உள்ளது. எனவே இதனை மாவட்டமாக தரம் உயர்த்துவது பொருத்தமான செயல் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
    வருகிறது கும்பகோணம் மாவட்டம்?
    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில், ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்த மாநகராட்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, பல காலங்களாகவே கோரிக்கைகள் நிலவி வருகின்றன. தேர்தல்கள் நெருங்கும் காலக்கட்டத்தில் எல்லாம் தஞ்சை மாவட்டம் 2 ஆக பிரித்து கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்பதுதான் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளாக இருக்கிறது. ஆனால் தேர்தலுக்கு பிறகு இதுதொடர்பான நடவடிக்கை எதுவும் இல்லை என்பதே நிதர்சனம். இப்படிபட்ட ஒரு சூழலில் தான், கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாச்சலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் ஆகிய மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ”புதிய மாவட்டங்கள் உருவாகாது”
    புதிய மாவட்டங்கள் உருவாவது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுதொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது மாவட்டங்களை பிரிப்பது தொடர்பாக எந்தவொரு திட்டமும் இல்லை என்றும், இந்த தகவல் வதந்தி என்றும் அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

    Source link

  • Vanathi Srinivasan Said That Jallikattu Is Part Of Sanatana Dharma – TNN | Jallikattu: ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி தான்
    Vanathi Srinivasan Said That Jallikattu Is Part Of Sanatana Dharma – TNN | Jallikattu: ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி தான்

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பாஜக சார்பில் டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டபேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வருகின்ற ஜனவரி 22 ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கான அட்சதை, அழைப்பிதழ்கள் கோடிக்கணக்கான வீடுகளுக்கு சென்று வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அவற்றை ராமர் வந்ததை போல மக்கள் பக்தி பரவசத்துடன் பெற்று கொண்டு, ராமர் கோவிலுக்கு வர சங்கல்பம் எடுத்துள்ளனர்.
    நாடு முழுவதும் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். பாகுபாடு இல்லாமல் அத்தனை ஆலயங்களிலும் தூய்மை பணி நடைபெறுகிறது. 22 ம் தேதி மக்கள் திரளாக கூடி ராமர் கீர்த்தனைகளை பாடி, கும்பாபிஷேகத்தை காணொலி வாயிலாக பார்க்க உள்ளனர். கும்பாபிஹேக நாளான்று வீடுகளில் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் விழா போல கொண்டாட உள்ளனர். நாடு முழுவதும் ஆன்மிக பேரலை எழுந்துள்ளது. அடிமை சின்னத்தை மாற்றி கலாச்சார நாயகனுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கும் பொன்நாள் பாரத் வரலாற்றின் திருநாள். அதனை நாடு கொண்டாட தயாராகி வருகிறது.

    மசூதி கோவிலை இடித்து தான் கட்டப்பட்டு இருந்தது. நியாயப்படி அந்த இடத்தை உரிமையாளரிடம் தான் ஒப்படைக்க வேண்டும். முதலமைச்சர் ராமர் கோயில் அழைப்பிதழை நேரில் வாங்கவில்லை. ஆனால் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அழைப்பிதழை வாங்கி, அயோத்திக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். தகப்பனார் அரசியல் வேறு. மனைவி அரசியல் வேறு. மகன் அரசியல் வேறு என வேறு வேறு அரசியல் வழியில் செல்கின்றனர். ராமர் கோவிலுக்கு ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்வது போல ராமர் பக்தர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.
    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமய அடையாளம் இல்லாத திருவள்ளுவர் வரையப்பட்டது. பல்வேறு ஆன்மிக மடங்களில் சமய அடையாளம் உள்ள திருவள்ளுவர் படம் உள்ளது. அதனை தான் பாஜக எடுத்து பயன்படுத்துகிறது. திருவள்ளுவர் சமய‌ சார்பற்றவர் என்றால், திருக்குறளில் எத்தனை இடங்களில் விஷ்ணு, லட்சுமி பற்றி வந்துள்ளது தெரியவில்லையா? திருக்குறளை அவர்கள் ஒழுங்காக படிக்கவில்லையா? தமிழகத்தில் தாமரை மலர்ந்து 4 பேர் சட்டமன்றத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் ஆளுங்கட்சியாக வருவதை லட்சியமாக கொண்டுள்ளன. நாங்கள் எங்கள் கட்சியல வளர்க்க வேலை செய்கிறோம்.
    ஜல்லிக்கட்டு, மஞ்சள் விரட்டு அனைத்தும் கோவிலோடு தொடர்புடையது. அதனை சு.வெங்கடேசனால் மறுக்க முடியாது. சாமி கும்பிடாமல் காளைகளை அவிழ்த்து விடுவதில்லை. மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து கலாச்சாரத்தை சீரழிப்பதை திமுக, கம்யூனிஸ்ட்கள் வேலையாக கொண்டுள்ளனர். கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க பார்ப்பது முட்டாள்தனம். ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம். அடிக்கடி தேர்தல் வருவதால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாது. அமைச்சர்களின் நேரம் தேர்தலில் செலவாகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை திமுக மறுப்பது சரியாக வராது‌. எப்படி ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என கருத்துகளை சொல்லுங்கள். விவாதிப்போம். அரசியலமைப்பு சட்ட அதிகாரப் படி ஆளுநர் வேலை செய்கிறார். அனைத்து மக்களும் சமமாக பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் மதம், நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அரசு அனைத்து மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

    Source link

  • Pongal 2024: Vanathi Srinivasan Alleges That There Is A Conspiracy To Separate Jallikattu From Hindu Temples – TNN | Pongal 2024: ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்க சதி நடக்கிறது
    Pongal 2024: Vanathi Srinivasan Alleges That There Is A Conspiracy To Separate Jallikattu From Hindu Temples – TNN | Pongal 2024: ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்க சதி நடக்கிறது

    பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை, மகர சங்கராந்தி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகம் இப்போது ‘மனிதநேயம்’ பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் பாரதிய கலாசாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற ‘உயிர்மைநேயத்தை’ வலியுறுத்தி கொண்டே இருக்கிறது. அதனை நமக்கு உணர்த்தும் பண்டிகைதான் பொங்கல் பண்டிகை.

    பொங்கல் வாழ்த்துச் செய்திஉலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை, மகர சங்கராந்தி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகம் இப்போது ‘மனிதநேயம்’ பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால்,… pic.twitter.com/9Uaoi1cn59
    — Vanathi Srinivasan (@VanathiBJP) January 14, 2024


    “>
    விவசாயம் இல்லாவிட்டால் மனித வாழ்வு இல்லை. சூரியன் இல்லாவிட்டால் எந்தப் பயிரும் விளையாது. விவசாயமே இருக்காது. உலகமே இயங்காது. இப்படி மனித வாழ்வு செழிக்க, உலகம் இயங்க முழுமுதற் காரணமாக இருக்கும் சூரியனுக்கு பொங்கல் வைத்து கடவுளாக வணங்கும் பண்டிகை தான் பொங்கல். ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் விவசாயத்திற்கு அடிப்படை. எனவே, கால்நடைகளுக்கு நன்றி செலுத்த பொங்கல் கொண்டாட்டத்தில் ஒரு நாளையே நம் முன்னோர்கள் ஒதுக்கியுள்ளனர்.
    இந்துக்கள் மட்டும் கொண்டாடி வந்த ‘உயிர்மைநேய’ பண்டிகையான பொங்கல் பண்டிகை இப்போது அனைத்துத் தரப்பினரும் கொண்டாடும் பண்டிகையாக மாறியிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், பொங்கல் பண்டிகையின் அடிப்படையான, சூரியனை கடவுளாக தத்துவத்தை அகற்றி அதை வெறும் கொண்டாட்டமாக மட்டும் சுருக்க சில சக்திகள் சுருக்க முயற்சித்து வருகின்றன. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, ஜல்லிக்கட்டு இந்து ஆலயங்களைச் சார்ந்து நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்கவும் சதி நடந்து வருகிறது. இவற்றையெல்லாம் மக்கள் முறையடிப்பார்கள். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

    Source link

  • Tamilisai Soundararajan Said That The Prime Minister And The Central Government Have A Role In Bringing Global Investors To Tamil Nadu | ’உலக முதலீட்டாளர்கள் தமிழகம் வருவதில் பிரதமருக்கும் பங்கு உள்ளது’
    Tamilisai Soundararajan Said That The Prime Minister And The Central Government Have A Role In Bringing Global Investors To Tamil Nadu | ’உலக முதலீட்டாளர்கள் தமிழகம் வருவதில் பிரதமருக்கும் பங்கு உள்ளது’

    கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
    அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. பிரதமர் மோடி பல வெளிநாடுகளுக்கு சென்று ஏற்படுத்திய நல்லுறவு ஏற்படுத்தியுள்ளார். அதனால் பாரத தேசம் தொழில் முனைவோருக்கு ஏற்ற தேசமாக இருக்கிறது. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று நல்லெண்ணம் ஏற்படுத்தியதே இதற்கு காரணம். முந்தைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு தொழில்முனைவோர்கள் கிடைத்ததார்கள்? எந்தெந்த நாடுகள் தொழிற்சாலைகள் ஆரம்பித்தது? என்ன பயன் என்ற விபரம் முழுமையாக தெரியவில்லை. மாநாடு நடத்துவது பெரிது அல்ல. எந்த அளவிற்கு வெற்றிகரமாக நடக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். முதலமைச்சர் சில தொழிற்சாலைகள் தெற்கு பகுதிக்கும் வருகிறது என சொல்லியுள்ளார். அது எல்லா பகுதிகளுக்கும் கிடைக்கும்படி பார்க்க வேண்டும்.
    நாட்டின் மீது நம்பிக்கை இருப்பதால் தான் உலக முதலீட்டாளர்கள் வருகிறார்கள். மாநிலத்தை மட்டும் வைத்து தொழில் துவங்க தொழில் முனைவோர்கள் வருவதில்லை. தமிழகம் மட்டுமல்ல பல மாநிலங்கள் அந்நிய முதலீட்டை ஈர்த்து வருகின்றன. இதில் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் பங்கு உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை, மின்கட்டண உயர்வு, மழை வெள்ள பாதிப்புகள் என பல பிரச்சனைகள் இருக்கின்றன. தொழிற்சாலைகள் ஆரம்பிக்க அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
    சென்னைக்கு அருகே ஒரு பேருந்து நிலையத்தை திறந்துள்ளார்கள். பிரதமர் திருச்சியில் விமான நிலையம் திறந்ததால் என்ன பிரயோஜனம் எனக் கேட்டார்கள். ஆனால் பேருந்து நிலையம் பாதி திறந்தும், திறக்காமல் இருப்பதால் மக்கள் அவதியடைக்கிறார்கள். எல்லா திட்டங்களையும் முழுமையாக முடிக்காமல் திறக்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு அருகாமையில் கொண்டு வரும் திட்டத்தை தான், மக்களுடன் முதல்வர் திட்டம் என முதல்வர் கோவையில் ஆரம்பித்து வைத்தார். மத்திய அரசின் அடிப்படை கொள்கை சார்ந்த திட்டங்களை பார்த்து, பெயர் மட்டும் ஈர்ப்பு தன்மையுடன் வைத்து தமிழக அரசு கொண்டு வருகிறது.
    கூடலூரில் சிறுத்தை தாக்கி குழந்தை உயிரிழந்தது வருத்தமான ஒன்று. வனத்துறை இன்னும் கவனமாக இருக்க வேண்டும். மனிதாபிமானத்தோடு மிருகங்களையும், மனிதர்களையும் பாதுகாக்க வேண்டும். முரசொலியில் பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகளை பார்க்க வரவில்லை என கட்டுரை வந்தது. ஆனால் வெள்ள பாதிப்புகளை முழுமையாக பார்க்க முதலமைச்சரே செல்லவில்லை. தமிழக அரசு விளம்பர விழாக்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. 11 மாவட்டங்களில் மழை வெள்ள எச்சரிக்கை வந்துள்ளது. ஆனால் முன்னேற்பாடுகள் செய்யாமல், மழை பாதிப்பு ஏற்பட்டால் மத்திய அரசின் மீது பழி போடலாம் என்ற எண்ணம் தமிழக அரசிடம் உள்ளது. 20 ஆண்டுகளாக மத்திய அரசில் இருந்த போது ஏன் ஒன்றிய அரசு என்று சொல்லவில்லை? அவர்கள் இருக்கும்போது எதையும் செய்யவில்லை. கல்வியை ஏன் மாநில பட்டியலில் சேர்க்கவில்லை.
    பிரதமரும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழகத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவது தொடர்பான கூறியுள்ளார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான். பிரதமர் தமிழகம் மீது அன்பு செலுத்துவதை தினம் தினம் பார்த்து வருகிறோம். அனைவரும் கனவு கொண்டிருந்த ராமர் கோவில் கிடைக்க போகிறது. அதில் அனைவருக்கும் பங்கு உண்டு. யாரை அழைக்க வேண்டும் என்பது ராமர் கோவிலை சார்ந்தவர்கள் முடிவு செய்வார்கள். அதை அரசியல் ஆக்க வேண்டாம். குடியரசுத் தலைவர் வரக்கூடாது என நினைத்தவர்கள் குடியரசு தலைவரை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
    சபரிமலை விவகாரம் வருத்தத்திற்குரியது. மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறோம் என்று சொல்லிவிட்டு,  இந்து மாதம் சார்ந்த துவேஷத்தை கடைபிடிப்பது தான் ஸ்டாலின், பினராய் விஜயன். சாமியை பார்க்க முடியாமல் திரும்பி வருவது வேதனைக்குரியது. அவர்களுக்கு அத்தனை பேருக்கும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.  வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை என்றால், பக்தர்கள் குறைந்து விடுவார்கள் என அரசு எண்ணுகிறது. ஆனால் ஐயப்ப பக்தர்கள் நிச்சயம் வர வேண்டும். கூட்டம் அதிகமாகி கொண்டு தான் இருக்கும்.  யாருக்கும் கட்டுரை எழுதாத பிரதமர் விஜயகாந்துக்கு கட்டுரை எழுதியதன் மூலம் அவர் மீது எந்தளவு மரியாதை வைத்துள்ளார் என்பது தெரிகிறது” எனத் தெரிவித்தார்.

    Source link

  • உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டியாக இருக்கிறார்… கடுமையாக விமர்சித்த எல்.முருகன்…
    உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டியாக இருக்கிறார்… கடுமையாக விமர்சித்த எல்.முருகன்…

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.

    கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா, கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லா ரயில் சேவை வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, ஒரே மாதத்தில் மிக வேகமாக மத்திய ரயில்வே அமைச்சரால் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது என்றார்.

    இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.6,000 கோடி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் 10 புதிய வழித்தடங்ககள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ரூ.800 கோடி தான், 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய எல்.முருகன், சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

    விரைவில் கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தில் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், உதகை, திருப்பூர், சேலம் உட்பட 75 ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி கிடையாது என்ற அவர், உதயநிதி அரசியலில் கத்துக்குட்டியாக இருப்பதாக விமர்சித்தார். பக்குவப்பட்ட தலைவராக இருக்க வேண்டும் என அறிவுறுத்திய எல்.முருகன், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதால் தமிழக அரசுக்கு தான் நல்ல பலன் கிடைக்கும் என்றார்.