Tag: குழந்தை ராமர் சிலை

  • Sculptor Arun Yogiraj Said Ram Lalla Statue Transformed After Pran Prathishta Ayodhya Ram Temple | Ayodhya Ram Mandir: ’ நான் செய்த சிலை இது இல்லை’

    Sculptor Arun Yogiraj Said Ram Lalla Statue Transformed After Pran Prathishta Ayodhya Ram Temple | Ayodhya Ram Mandir: ’ நான் செய்த சிலை இது இல்லை’

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
    இப்படி பல்வேறு அம்சங்கள் கொண்ட அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலையை வடிவமைத்தவர் யார் என்ற ஆர்வம் மக்களிடையே பற்றிக்கொண்டது. அயோத்தியில் நிறுவப்படும் சிலையை செதுக்க மூன்று சிற்பிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சிற்பிகளில் ஒருவர்தான் கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ். இவர் வடிவமைத்த குழந்தை ராமர் சிலையை தான் தற்போது அயோத்தி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தற்போது குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த அருண் யோகிராஜ், தான் செய்த சிலையில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை முற்றிலும் மாறுப்பட்டு உள்ளது என  கூறியுள்ளார். மேலும், கடவுள் ராமர் என்ன சொன்னரோ அதை தான் நான் வடிவமைத்தேன் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ கடந்த 7 மாதங்கள் மிகவும் சவாலானதாக இருந்தது. இந்த சிலையை செய்வதில் நிறைய நுட்பங்கள் இருந்தது. 5  வயது குழந்தையின் வெகுளித்தனம் அந்த முகத்தில் இருக்க வேண்டும். சிலையில் முகபாவனைகள் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. பல முறை குழந்தை ராமர் சிலையை பற்றி என் நண்பர்களிடம் கேட்டுள்ளேன். புன்சிரிப்பு, தெய்வக்கடாக்‌ஷம், 5 வயது குழந்தையின் முகம், ராஜா போன்ற தோற்றம் ஆகியவை அனைத்தும் பிரதிபளிக்கும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையை நான் வடிவமைத்தவுடன் ஒரு தோற்றம் இருந்தது, ஆனால் பிரான பிரதிஷ்டை செய்தவுடன் குழந்தை ராமர் முற்றிலுமாக உருமாறியுள்ளார். இந்த சிலை நான் செய்தது அல்ல என தோன்றும் அளவு இருந்தது” என தெரிவித்துள்ளார். 
    யார் இந்த அருண் யோகிராஜ்…?
    கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் வசிப்பவர் அருண் யோகிராஜ். அவர் பிரபலமான சிற்பிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் 5 ஆம் தலைமுறை சிற்பி. நவீன காலத்தில்  இந்திய நாட்டின் புகழ்பெற்ற சிற்பிகளில் ஒருவராக இவர் பார்க்கப்படுகிறார். உண்மையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அருணின் சிலைகளுக்கு கிராக்கி என்றே சொல்லலாம். இதற்கு முன்பு கூட சிற்பி அருணின் திறமையை பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டியுள்ளார். இந்தியா கேட்டில் சமீபத்தில் நிறுவப்பட்ட 30 அடி உயர சுபாஷ் சந்திரபோஸின் சிலை இவரால் செதுக்கப்பட்டது. 
    அருண் யோகிராஜ்தான் கேதார்நாத்தில் 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலையையும் செய்துள்ளார். மைசூர் மாவட்டத்தில் உள்ள சுஞ்சன்கட்டேயில் 21 அடி உயர அனுமன் சிலை, 15 அடி உயர அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிலை, மைசூரில் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் வெள்ளை அமிர்தசிலை சிலை, 6 அடி உயர நந்தி சிலை, 6 அடி உயரத்தில் பனசங்கரி தேவி சிலை, 14.5 அடி உயரம் கொண்ட ஜெயச்சாமராஜேந்திர உடையாரின் வெள்ளை நிற அமிர்தசிலை சிலை என பல சிலைகள் அருண் யோகிராஜால் செதுக்கப்பட்டவை ஆகும். 
     

    Source link

  • Government Explains What Makes Ram Lalla’s Idol Extraordinary Explains Sun At Centre Of Crown Ayodhya Ram Mandir

    Government Explains What Makes Ram Lalla’s Idol Extraordinary Explains Sun At Centre Of Crown Ayodhya Ram Mandir

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிரான பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.
    நவீன இரும்பு, எஃகு அல்லது சிமெண்ட் ஆகியவை எதுவும் இல்லாத வகையில் 380 தூண்களும் முற்றிலுமாக கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் திறக்கப்பட்டிருக்கும் ராமர் கோயில் கருவறையில் இருக்கும் குழந்தை ராமர் சிலையின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து மத்திய அரசின் mygovindia என்ற எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

    Sunlight Blesses Ram Lalla’s Idol on Ram Navami!Every Ram Navami at noon, mirrors and lenses systems align to focus sunlight on Ram Lalla’s idol’s forehead. An eco-friendly spectacle with no electricity or batteries needed.#RamMandir #Ayodhya#JaiShriRam#ShriRamJanmbhoomi… pic.twitter.com/2L5kceq162
    — MyGovIndia (@mygovindia) January 24, 2024

    ஒவ்வொரு ராம் நவமியன்று நண்பகல் நேரத்தில் குழந்தை ராமர் நெற்றியில் சூரிய கதிர்கள் விழும் வகையில் கண்ணாடி மற்றும் லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுசூழலுக்கு எந்த விதமான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பேட்டரிகளோ மின்சாரமோ பயன்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    Ram Lalla’s Idol Graced by Vishnu’s Ten Avatars!A majestic portrayal showcasing the ten incarnations of Lord Vishnu. Additionally, adorned with Hanuman on one side and Garuda on the other.#RamMandir #Ayodhya#JaiShriRam#ShriRamJanmbhoomi#RamMandirPranPratishtha pic.twitter.com/zcP4BQKILe
    — MyGovIndia (@mygovindia) January 24, 2024

    குழந்தை ராமர் சிலை மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒருபுறம் கருடனும் மற்றொரு புறம் ஆஞ்சநேயரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    A Timeless Wonder!Carved from 2.5 Billion-Year-Old Black Granite, this sacred masterpiece stands tall. The special black granite, brought all the way from Karnataka, adds to the sanctity.#RamMandir #Ayodhya#JaiShriRam#ShriRamJanmbhoomi#RamMandirPranPratishtha pic.twitter.com/HwuX2JRvpt
    — MyGovIndia (@mygovindia) January 24, 2024

    2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான கருப்பு கிரானைட்டில் இருந்து செதுக்கப்பட்டது இந்த புனிதமான தலைசிறந்த படைப்பு. இந்த கருப்பு கிரானைட் கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    A Crown for Ayodhya’s King!Facts about Ram Lalla’s crown or ‘mukut’ are fashioned from yellow gold, Weighs ~1.7 kilos, Adorned with 75 carats of diamonds, and the Sun at the center symbolizes the Suryavanshi logo.#RamMandir #Ayodhya#JaiShriRam#ShriRamJanmbhoomi… pic.twitter.com/caSrOylE8x
    — MyGovIndia (@mygovindia) January 24, 2024

    ராமரின் தலையில் அணிவிக்கப்பட்டுள்ள தங்க கிரீடம் வட இந்திய பாரம்பரியத்தில் மஞ்சள் தங்கம் கொண்டு (yellow gold) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணிக்கங்கள், மரகதம் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு,  மையத்தில் சூர்ய நாராயனரின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கிரீடத்தின் வலது பக்கத்தில், முத்து இழைகள் நெய்யப்பட்டிருக்கின்றன. இதன் எடை 1.7 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    A Tilak That Illuminates with Precious Elements!Ram Lalla’s tilak boasts a central 3-carat natural diamond, surrounded by smaller diamonds totaling approximately 10 carats. Natural Burmese rubies are used to adorn the Ajana Chakra.#RamMandir #Ayodhya#JaiShriRam… pic.twitter.com/uCkMeN7i1V
    — MyGovIndia (@mygovindia) January 24, 2024

    ராமர் சிலையின் நெற்றியில் உள்ள வெள்ளை-சிவப்புத் திலகம் வைரம் மற்றும் மாணிக்கங்களால் உருவாக்கப்பட்டதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியில் 3 கேரட் கொண்ட இயற்கை வைரம் உடன் சுற்றி சிறிய வைரம் சேர்த்து சுமார் 10 கேரட் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபி கற்களால் சிவப்பு திலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
    அருண் யோகிராஜ் என்பவர் தான் இந்த குழந்தை ராமர் சிலையை வடிவமைத்தவர். இவர் 5 ஆம் தலைமுறை சிலை வடிவமைப்பாளர் ஆவர். டெல்லியில் சுமார் 30 அடி உயரமுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையும் கேதார்நாத்தில் 12 அடி உயரமுள்ள ஆதி சங்கராச்சாரியர் சிலையும் வடிவமைத்தவர் அருண் யோகிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. 

    Source link

  • Ayodhya Ram Lalla Idol 1st Complete Look Revealed With Golden Bow And Arrow

    Ayodhya Ram Lalla Idol 1st Complete Look Revealed With Golden Bow And Arrow

    உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.
    கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
    ராமர் சிலையின் முதல் புகைப்படம்:
    அயோத்தி ராமர் கோயில் எப்படி இருக்கும் என்பது பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கோயிலின் புகைப்படங்களும் வீடியோக்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
    அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் குழந்தை வடிவிலான ராம்லல்லாவின் சிலை கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிலையின் முதல் படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ராமர் கோயிலுக்கான இந்த ராம்லல்லா சிலையை கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார்.
     

    First image of the full Ram Lalla idol with his face uncovered and a gold bow and arrow pic.twitter.com/3Ius0V9UJX
    — Akshita Nandagopal (@Akshita_N) January 19, 2024

    நேற்று கருவறையில் ஸ்ரீ ராமர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு காசியில் இருந்து வந்திருந்த அர்ச்சகர்கள் முழு சடங்குகளுடன் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வுகள் எல்லாம் முடிந்ததும், கருவறையிலிருந்து குழந்தை வடிவமான ராம்லல்லாவின் முதல் படம் நேற்று இரவு வெளியானது.
    பக்தி பரவசத்தில் பக்தர்கள்: 
    ஷியாமல் கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலை 150 கிலோ எடையுள்ளதாகவும், தரையில் இருந்து அளந்தால் மொத்த உயரம் ஏழு அடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    புதன்கிழமை (ஜனவரி 18) விவேக் சிருஷ்டி அறக்கட்டளையிலிருந்து லாரியில் ராமர் கோயிலுக்கு ராம்லல்லா சிலை கொண்டுவரப்பட்டது. கோயில் வளாகத்திற்குள் சிலையை கொண்டு செல்ல கிரேன் உதவியுடன் எடுத்து வைக்கப்பட்டது. ராமர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) முதல் மங்களகரமான சடங்குகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    நேற்று பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் நினைவு அஞ்சல் தலையையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார். 
     

    Source link