Tag: குடியரசு தின விழா

• 75th Republic Day: குடியரசு  தின விழாவில் ரூ.35.05 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விழுப்புரம் ஆட்சியர்
75th Republic Day: குடியரசு  தின விழாவில்  ரூ.35.05 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு  தின விழாவில்  மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தேசியக்  கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 41  பயனாளிகளுக்கு ரூ.35.05  இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழுப்புரம்  மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி இன்று (26.01.2024) தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டதற்கான நிகழ்வை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் அவர்களுடன் திறந்த வாகனத்தில் சென்று பார்வையிட்டார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செலுத்தியதுடன், குடியரசு தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

பின்னர், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.50,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், தாட்கோ சார்பில், 02 பயனாளிகளுக்கு ரூ.18,89,013/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 10 பயனாளிகளுக்கு ரூ.78,850/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத்துறை சார்பில், 10 ரூ.38,990/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், 03 பயனாளிகளுக்கு ரூ.11,33,900/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறை சார்பில், 02 பயனாளிகளுக்கு ரூ.25,000/-மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 05 பயனாளிகளுக்கு ரூ.2,50,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 02 பயனாளிகளுக்கு ரூ.13,104/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.26,340/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 41  பயானிகளுக்கு ரூ.35,05,197/-  மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அளவிலான 281 அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், குடியரசு தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, விழுப்புரம் நகரில், குடியரசு தின விழாவினை முன்னிட்டு, அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள்  மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Source link

• 75th Republic Day: சேலத்தில் 75வது குடியரசு தின விழா… தேசியக்கொடியை ஏற்றி வைத்த ஆட்சியர்
75th Republic Day: சேலத்தில் 75வது குடியரசு தின விழா… தேசியக்கொடியை ஏற்றி வைத்த ஆட்சியர்

இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்துவரும் 166 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 77 அலுவலர்கள் மற்றும் 112 காவல்துறையினருக்கு விருதுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் இன்றைய தினம் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

மேலும், மாற்றுத்தினாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.19.41 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பின்னர் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கண் கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில், சேலம் சரக டிஐஜி உமா, சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசத்திற்காக உயிர் துறந்த ராணுவ வீரர்கள் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மரியாதை செலுத்தினார்.

இதேபோல் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தேசியக்கொடியனை ஏற்றி வைத்தார். பின்னர் காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சேலம் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர ஆணையாளர் பாலச்சந்தர், சேலம் மாநகராட்சியின் துணை மேயர் சாரதா தேவி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Source link

• Republic Day 2024 Parade How To Book Tickets Online, Offline. From Price To Timing, Here’s Everything You Need To Know
Republic Day 2024 Parade How To Book Tickets Online, Offline. From Price To Timing, Here’s Everything You Need To Know

நாட்டின் குடியரசு தின விழா நாளை (26,ஜனவரி,2024) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
குடியரசு தின கொண்டாட்டம்:
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நாளை (26.01.2024) காலை டெல்லியில் நடக்கும் பிரம்மாண்ட குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள ஆம்பர் கோட்டையை பார்வையிட்டார்.  இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மேக்ரான் ஜெய்ப்பூரில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்றிரவு (25.01.2024) 8.50 மணிக்கு தனி விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு, முப்படை வீரர்களின் சாகசங்களும் நடைபெற உள்ளது. இன்று முதலே ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவின் பிரத்யேக கழுகு பார்வை காட்சிகள் தொலைக்காட்சி சேனல்களிலும், யூட்யூப் பக்கங்களிலும் ஒளிபரப்பு செய்யப்படும்.
எவ்வாறு பார்ப்பது?
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளில் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் நடைபெறும். இதை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை நேரில் மட்டுமின்றி தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டுகளிக்கலாம். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்பட உள்ளது. இந்திய அரசின் இணையதள பக்கமான https://indianrdc.mod.gov.in/  -என்ற இணையதளத்தில் சென்று இலவசமாக குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை காணலாம். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வழங்கும் தளமான பி.ஐ.பி.யிலும் (PIB) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

📡Watch LIVE 📡President Droupadi Murmu to address the nation on the eve of 75th #RepublicDay @rashtrapatibhvn Watch on #PIB’s📺Facebook: https://t.co/ykJcYlNrjjYouTube: https://t.co/7Oz2ScHnab
— PIB India (@PIB_India) January 25, 2024

கம்பீர அணிவகுப்பு
சாமானியர்களும் கண்டு களிக்கும் விதமாக மத்திய அரசு ஆமாந்த்ரன் என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த தளத்தில் குடியரசு தின நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்கலாம். குடியரசு தின விழாவில் பங்கேற்க நினைக்கும் பொதுமக்கள் தங்களுக்கான டிக்கெட்டுகளை அதற்கான பிரத்யேக இணையதளமான https://aamantran.mod.gov.in/login-என்ற இணையதளத்தில் சென்றும் பெறலாம்.
டிக்கெட் பெறுவது எப்படி?

குடியரசு தின விழா அணிவகுப்பை நேரில் சென்று காண வேண்டுமென விரும்புபவர்கள் https://aamantran.mod.gov.in/login- என்ற இணைப்பை க்ளிக் செய்து டிக்கெட் பெற வேண்டும்.
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் உள்ளே செல்ல வேண்டும்.
செல்போன் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
பங்கேற்க உள்ள நிகழ்வின் விவரங்களை கேப்ட்சாவுடன் நிரப்ப வேண்டும்.
ஒரு முறை மட்டுமே வரும் கடவுச்சொல் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பின்பு இணையதளம் மூலமாக உங்களுடைய டிக்கெட் இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ். வாயிலாக அனுப்பப்படும்.

Source link