Tag: கிளாம்பாக்கம் காவல் நிலையம்

  • kilambakkam police Station Address Project Value and full details Tnn

    kilambakkam police Station Address Project Value and full details Tnn


    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள, புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன் மற்றும் பி .கே சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டில் பணிகளை தொடக்கி வைத்தனர்
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
    செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி மதிப்பீட்டில் 88 ஏக்கர் பரப்பளவில் சென்னை பெருநகராட்சி வளர்ச்சி குழுமத்தில் சார்பில் கட்டப்பட்டுள்ள, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 14.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள புதிய காவல் நிலைய கட்டுமான பணிகளுக்கு, அமைச்சர்கள் தா மோ .அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டில் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

    இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது :
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இன்றுடன் 36-நாள் நிறைவு பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் சரியான திட்டமிடல் இல்லை, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்வேறு புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லலாம். தினமும் 30,000க்கும் மேற்பட்ட பயணிகள் தற்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பொதுமக்களின் வசதியை மேம்படுத்தவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் கிளாம்பாக்கத்தில், புதிய ரயில் நிலையம் அமைப்பதற்காக 20 கோடி ரூபாய் ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டுள்ளது ஆறு மாதங்களில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தற்போது 14 கோடியே 35 லட்சம் செலவில் காவல் நிலைய கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த காவல் நிலையம் புதிய முறையில் அமைக்கப்பட உள்ளது காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்காக கட்டப்படும் பேருந்து நிறுத்தம் பணிகள் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும்.கிளாம்பாக்கத்தில் மிக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும், அங்கு விலை குறைவான தரமான உணவுகள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், கோயம்பேட்டில் 32-கடைகள் பயன்பாட்டில் இருந்தது‌. அந்த கடைகளுக்கு மொத்தமாக உரிமையாளர்கள் 11-பேர் தான் இருந்தனர். அவர்களுக்கு கிளாம்பாக்கத்தில் மாற்று இடமாக கடைகளை சலுகை விலைக்கு அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
    ஆம்னி பேருந்துகள் சென்னை செல்வதற்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நீதிமன்றத்தில் எந்த முடிவு எடுக்கப்படுகிறதோ? அதன் பிறகு துறை ரீதியாக முடிவு செய்யப்படும் எனவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 35-நாட்களுக்குள் 90-சதவீதம் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஏடிஎம் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று நடைபாலம் ஆகியவை அமைக்கும் பணிகளும் விரைவில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மழைநீர் வடிகால் பணிகள் இரண்டு மாதத்தில் முடித்து மக்களுக்கு பணியாற்றிய அரசு இந்த அரசு என கூறினார். இவ்விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் காண

    Source link