காஞ்சிபுரம் மாநகராட்சியில் துணை மேயர், மூன்று மண்டல குழு தலைவர்கள், 20 திமுக கவுன்சிலர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சி

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை கொண்டது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாநகராட்சி மேயராக திமுகவைச் சார்ந்த, மகாலட்சுமி யுவராஜ் பதவி வகித்து வருகிறார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அவ்வப்பொழுது ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயர் செயல்பாட்டிற்கு எதிராக போர் கொடி தூக்குவது அதேபோன்று எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என்பது தொடர்கதை ஆகியுள்ளது.

21 தீர்மானங்கள் ரத்து

இந்தநிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஆணையராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில் முருகன் நியமிக்கப்பட்டார். செந்தில் முருகன் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என எதிர்கட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று திமுக கவுன்சிலர்களையும் அவர் மதிப்பதில்லை என இன்று நடந்த மாதாந்திர கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால், இன்று நிறைவேற்றப்பட இருந்த 21 தீர்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்யப்படுவதாக மேயர் மகாலட்சுமி அறிவித்து கூட்டத்தை பாதியிலேயே முடித்தார்.

பாதாள சாக்கடை திட்டம்

கூட்டம் முடிந்த பிறகும் திமுக கவுன்சிலர்கள் வெளியேறாமல் இருக்கையில் அமர்ந்து தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், வார்டுகளுக்கு மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தராமல் இது போன்று வீடு கட்ட அனுமதி தருதல் , புதிய வீட்டுமனைகள் உருவாக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மட்டும் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். நேற்று புதிதாக 250 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம், அவசர அவசரமாக நேற்று பூமி பூஜை செய்யப்பட்டதாகவும், இவற்றுக்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித தகவலும் தரப்படவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துணை மேயர் குமரகுருநாதன்

இந்தப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மூன்று மண்டல தலைவர்களும் அவர்களுடன் 20 திமுக கவுன்சிலர்களும் கலந்து கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களுக்கு ஆதரவாக அதிமுக , பாமக மற்றும் பாஜகவை சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும் கலந்து கொண்டுள்ளனர் . இதன் காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி பரபரப்புடன் காணப்படுகிறது.

தொடரும் பிரச்சினைக்கு காரணம் என்ன ?

கடந்த சில மாதங்களாகவே, மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு இடையே உரசல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கவுன்சிலர்கள் மெய்யருக்கு எதிராக குரல் கொடுத்து வருவதால், சில மாதங்களுக்கு முன்பு கூட கவுன்சிலர்கள் மற்றும் மேயர் ஆதரவாளர்களுக்கு இடையே சமாதானம் ஏற்படுத்த அதிகாரப்பூர்வமற்ற சமாதான பேச்சு வார்த்தையும் நடந்தேறியது. இதன் பிறகு பிரச்சினை தீரும் என நினைத்த நிலையில் மீண்டும் பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஒருபுறம் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை, உரிய மரியாதை கொடுப்பதில்லை, தங்கள் வார்டுகளுக்கு எந்தவித அரசு நல திட்ட பணிகளையும் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து போராடும் நிலையில், தற்பொழுது திமுக கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மேயர் தரப்புக்கு தலைவலியை அதிகரித்துள்ளது. இன்று நடைபெறும் உள்ளிருப்பு போராட்டத்தில் கூட, அதிமுக கவுன்சிலர்கள் முறைகேடுகளை தடுக்க வேண்டுமென பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tag: காஞ்சிபுரம் மாநகராட்சி

திமுக மேயருக்கு எதிராக களம் இறங்கிய திமுக கவுன்சிலர்கள் ..! காஞ்சி மாநகராட்சியில் நடப்பது என்ன ?

காஞ்சியில் கவுன்சிலர்கள் இரண்டு நாள் தொடர் போராட்டம்..! மயங்கி விழுந்த பெண் கவுன்சிலர்..!

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் குழந்தைகளோடு குடும்பத்துடன் இரவு முழுவதும் பாய், தலையனையுடன் உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது. மாநகராட்சியில் 32 திமுக, வி.சி.க 1 , சுயேச்சைகள் 3 என 37 உறுப்பினர்களும், அதிமுக 8 தமிழ் மாநில காங்கிரஸ் 1 , பிஜேபி 1 பாமக 2 ,சுயேச்சைகள் 1 என மொத்தம் 14 எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். நிர்வாக பணிக்காக மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு ,பாதாள சாக்கடை , குப்பைகளை கையாளுவது உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் போர் கொடி

எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு, எந்தவித மேம்பாட்டு பணிகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக மாமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டமும் முறையாக நடைபெறவில்லை. அதுமட்டுமல்லாமல், திமுக கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அவர்களின் ஒரு தலைப்பட்சமான நிர்வாகத்தை கண்டித்தும் எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் செந்தில்குமார் இடம் மனு அளித்தனர்.

கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியை சேர்ந்த 14 வார்டுகளிலும் இதனால் வரையில் எந்த அடிப்படை பணிகளும் செய்யாமல் வார்டுகளை புறக்கணித்து மக்கள் மத்தியில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு அவப்பெயரை வாங்கித் தர திமுகவும் மாமன்ற ஊழியர்களும் முயற்சிப்பதாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகிறார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் பல்வேறு முறைகேடுகள் ஈடுபடுவதாக கோரி, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் காலை முதல் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் மாநகராட்சி பரபரப்பாக ஏற்படுத்தியது.

விடிய விடிய நடைபெற்ற போராட்டம்

மேலும் மாலையுடன் போராட்டத்தில் இருந்து பின்வாங்கி செல்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், மாநகராட்சி ஆணையர் தற்போது வரை பேச்சுவார்த்தை நடந்ததால் அதிமுக, பாஜக , தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் 9 கவுன்சிலர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பத்தாருடன் நுழைவாயிலில் உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் காலை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் மதியம் மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு, வந்த பொழுது பாஜகவை சேர்ந்த பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெண் கவுன்சிலர் ஒருவர் மயங்கி விழுந்ததை எடுத்து அவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவுன்சிலர்கள் போராட்டமும் பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.