Tag: காஜல் அகர்வால்

  • Actor Kamalhassan Indian 2 Movie to be released on June month See Details

    Actor Kamalhassan Indian 2 Movie to be released on June month See Details


    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம்   வெளியாக இருக்கிறது.
    இந்தியன் 2
    ஷங்கர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் நடித்து கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களில் இந்தியம் படம் முக்கியமானது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
    இந்தியன் 2 படக்குழு
    லைகா ப்ரெடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். கமல்ஹாசன், ரகுல் ப்ரித் சிங், காஜல் அகர்வால், சித்தார்த் , பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டவர்களும் மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளார்கள்.
    கடந்த 2019 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயது. சென்னை , ராஜமுந்திரி, போபால் , க்வாலியர், தைவான், ஜோகன்ஸ்பேர்க் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா நோய்த் தொற்று பரவலான் இந்தியன் 2 படப்பிடிப்பு தடைபட்டது. பல்வேறு சவால்களைக் கடந்து தற்போது இப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது.
    இந்தியன் 2 ரிலீஸ்

    Gear up for the comeback of Senapathy!🤞INDIAN-2 🇮🇳 is all set to storm in cinemas this JUNE. Mark your calendar for the epic saga! 🫡🔥#Indian2 🇮🇳🌟 #Ulaganayagan @ikamalhaasan🎬 @shankarshanmugh🎶 @anirudhofficial📽️ @dop_ravivarman✂️🎞️ @sreekar_prasad🛠️ @muthurajthangvl… pic.twitter.com/kwiKyAcNta
    — Lyca Productions (@LycaProductions) April 6, 2024

    பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது. அடுத்தபடியாக மக்களவை தேர்தல் தேதி காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. ஒருவழியாக படத்தின் ரிலீஸ் தேதியை திட்டவட்டமாக தற்போது அறிவித்துள்ளது படக்குழு. வரும் ஜூன் இந்தியன் 2 வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தெரிவித்துள்ளது.

    மேலும் காண

    Source link

  • Kajal Aggarwal : சிவப்பு உடையில் மனதை பறிக்கும் நடிகை காஜல் அகர்வால்!

    Kajal Aggarwal : சிவப்பு உடையில் மனதை பறிக்கும் நடிகை காஜல் அகர்வால்!


    Kajal Aggarwal : சிவப்பு உடையில் மனதை பறிக்கும் நடிகை காஜல் அகர்வால்!

    Source link

  • Popular kollywood heroines who did not perform well in OTT platform

    Popular kollywood heroines who did not perform well in OTT platform


    சினிமாவில் கொடி கட்டி பறந்த பல ஹீரோயின்கள் காணாமல் போன கதைகள் ஏராளம். அதில் பல ஆண்டுகளுக்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களாக என்ட்ரி கொடுப்பார்கள். ஒரு சிலர் சின்னத்திரை பக்கம் திரும்பி சீரியலில் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்களின் நடுவராக இருப்பது என டிவி பக்கம் சென்று விடுவது ஒரு காலகட்டம். 
    ஓ.டி.டி. ப்ளாப்:
    ஆனால் தற்போதைய ட்ரெண்ட் என்றால் அது ஓடிடி  பக்கம் ஒதுங்குவது தான். ஆனால் ஓடிடிக்கு ட்ராவல் செய்த அனைவராலும் ஜொலிக்க முடியுமா? என்றால் அது சந்தேகம் தான். சமந்தா, தமன்னா போன்ற ஒரு சில நடிகைகள் அதற்கு விதிவிலக்கு. அவர்களுக்கு அமைந்த வாய்ப்புகள் அப்படி. 
    தற்போதைய காலகட்டத்தில் ஓடிடியின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது. திரையரங்கில் வெளியாகும் படங்கள் நான்கே வாரங்களில் ஓடிடிக்கு வந்து விடுகிறது. அது மட்டுமின்றி தனியாகவும் ஓடிடி பிளாட் ஃபாரம்களில் வெப் சீரிஸ் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அப்படி ஓடிடி பக்கம் ஒதுக்கி பெரிய அளவில் பிளாப் கொடுத்த
    தமிழ் சினிமாவின் டாப் நடிகைகள் பற்றி பார்க்கலாம்.  

    ஹன்சிகா :
    சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் எம்.ராஜேஷ், மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு பெரிய அளவில் அவரால் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை. சினிமாவில் இருந்து தற்போது ஓடிடி பக்கம் இறங்கிய ராஜேஷ், சாந்தனு – ஹன்சிகா நடிப்பில் ‘மை 3’ என்ற ரோபோவின் காதலை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த ஜானரில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி இருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான அந்த வெப் தொடர் படு தோல்வியை சந்தித்தது. 
    காஜல் அகர்வால் :
    வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி நடிப்பில் ஹாரர் கதைக்களத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரின் வெளியான வெப் சீரிஸ் ‘லைவ் டெலிகாஸ்ட்’. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. 

    வரலக்ஷ்மி சரத்குமார் :
    இயக்குநர் ஓம்கர் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ், பிந்து மாதவி, நளினி, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் ஆந்தாலஜி வடிவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான மேன்சன் 24 திரைப்படம் திகில் படத்திற்கு தேவையான கிராபிக்ஸ் காட்சிகள் கூட சரியாக அமைக்கப்படாமல் அதிருப்தி அடைய வைத்து. 
    அக்ஷரா ஹாசன் :
    இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் 2020ம் ஆண்டு அக்ஷரா ஹாசன்  நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸ் மிக பெரிய பிளாப் அடைந்தது. அவர் நடித்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாததை அடுத்து வெப் சீரிஸும் தோல்வியை சந்தித்தது. 

    ஸ்ருதி ஹாசன் :
    ஸ்ருதி ஹாசன் ஓடிடி தளத்திற்கு தாவிய ‘பெஸ்ட் செல்லர்’  வெப் சீரிஸ் சொதப்பலாக முடிந்தது. அவரின் சலார் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் அப்படத்தில் கூட ஸ்ருதியின் நடிப்பு பெரிய அளவில் கவனம் பெறவில்லை.  

    மேலும் காண

    Source link

  • Kajal Aggarwal Photos : நடிகை காஜல் அகர்வாலின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!

    Kajal Aggarwal Photos : நடிகை காஜல் அகர்வாலின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!


    Kajal Aggarwal Photos : நடிகை காஜல் அகர்வாலின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!

    Source link

  • Kajal Aggarwal Photos : குடும்பத்துடன் குளிர்கால சுற்றுலா சென்ற காஜல் அகர்வால்!

    Kajal Aggarwal Photos : குடும்பத்துடன் குளிர்கால சுற்றுலா சென்ற காஜல் அகர்வால்!


    Kajal Aggarwal Photos : குடும்பத்துடன் குளிர்கால சுற்றுலா சென்ற காஜல் அகர்வால்!

    Source link

  • Kajal Aggarwal Photos : குளு குளு வெண்பனி போல : நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்!

    Kajal Aggarwal Photos : குளு குளு வெண்பனி போல : நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்!


    Kajal Aggarwal Photos : குளு குளு வெண்பனி போல : நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்!

    Source link