Tag: கலைஞர் கருணாநிதி நினைவிடம்

• Kalaignar Memorial: திமுக தொண்டனின் குலதெய்வ கோயில்.. கலைஞர் நினைவிடத்தை புகழ்ந்த வடிவேலு!

Kalaignar Memorial: திமுக தொண்டனின் குலதெய்வ கோயில்.. கலைஞர் நினைவிடத்தை புகழ்ந்த வடிவேலு!

சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் மணிமகுடம் கலந்த மணிமண்டபம் என நடிகர் வடிவேலு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், நடிகர் ரஜினிகாந்த், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் அருங்காட்சியகம், வாழ்க்கை வரலாறு தொகுப்பு கொண்ட எழிலோவியங்கள், கலைஞர் எழுதிய புத்தகங்களை வாங்கும் வகையில் புத்தக விற்பனை நிலையம் என ஏகப்பட்ட வசதிகள் உள்ளது.

இதனிடையே இந்த நினைவிடத்தை நடிகர் வடிவேலு நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கலைஞர் நினைவிடம் பற்றி நெகிழ்ச்சியான கருத்துகளை கூறினார். அதாவது, “கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை பார்க்கும் போது மிகப்பெரிய பிரமிப்பாக உள்ளது. இது கலைஞர் அய்யாவின் சமாதி அல்ல, சன்னதி. இதன் உள்ளே ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அதனை காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது. ஆயிரம் கண்கள் வேண்டும். அந்தளவுக்கு ரொம்ப அழகாக நினைவிடத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். கலைஞர் கருணாநிதி எப்படியெல்லாம் வாழ்ந்தார், அவரின் வரலாறு, போராட்டம், கஷ்டங்கள் என உள்ளே போய்விட்டு வந்தால் தெரிந்துக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது.

இதனை மக்கள் பார்வைக்காக மார்ச் 6 ஆம் தேதி முதல் திறந்து வைக்கிறார்கள். எல்லாரும் கண்டிப்பாக வந்து பார்க்க வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். அதன் விபரங்களை சரியாக செய்து அனைவரும் வர வேண்டும். உள்ளே இருந்த கலைஞர் உலகம் என்ற இடத்தில் அவருடன் அமர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. கலைஞர் தனது குரலில் நீ வந்ததற்கு ரொம்ப நன்றி என சொன்னார்.

அவர் என்னையும், நான் அவரையும் கும்பிட்டு வணக்கம் வைத்ததோடு மட்டுமல்லாமல் புகைப்படம் எடுத்தோம். இதெல்லாம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதைவிட முக்கியம் என்னவென்றால் திமுக தொண்டனுக்கு இது குலதெய்வ கோயில். திமுக என்கிற கோட்டையில் ஒரு செங்கலை கூட யாராலும் ஏன் உருவ முடியவில்லை என்பதை கலைஞர் நினைவிடம் சென்று பார்த்தால் புரியும்.

அந்த கட்சியை வளர்க்க அவர் பட்ட கஷ்டங்கள், போராட்டங்களை பார்க்கும்போது புல்லரிக்கிறது. இது மணிமகுடம் கலந்த மணிமண்டபம் என்றே சொல்லலாம். உண்மையிலேயே தொண்டனுக்கு மட்டுமல்ல, நம் மக்களுக்கும், உலக தமிழர்களுக்கு என எல்லாருக்கும் கொடுப்பினையான மணிமண்டபமாகும். இதனை உருவாக்க காரணமாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எல்லாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Source link

• Edappadi palanisamy told as DMK is a corporate company Kamal Haasan’s twist on alliance | Today’s Headlines:திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி; எடப்பாடி பழனிசாமி…கூட்டணி குறித்து கமல்ஹாசன் வைத்த ட்விஸ்ட்

Edappadi palanisamy told as DMK is a corporate company Kamal Haasan’s twist on alliance | Today’s Headlines:திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி; எடப்பாடி பழனிசாமி…கூட்டணி குறித்து கமல்ஹாசன் வைத்த ட்விஸ்ட்

Edappadi Palanisamy : திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. சாடிய எடப்பாடி பழனிசாமி
அப்போது, அதிமுகவில் இருந்த சிலர் பாஜகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ், “இது ஜனநாயக நாடு யாரு வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம்” என்றார். திமுகவினர் வாரிசு அரசியல் செய்வதாக அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் அவர் மகனுக்கு சீட் கேட்கிறார் இது வாரிசு அரசியல் இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,  “அரசியல் வாரிசு என்றால் புரிந்துகொள்ள வேண்டும். சீட் கொடுப்பது அல்ல. தலைமைப் பொறுப்பு. திமுக தலைவராக கருணாநிதி இருந்தார், அதன்பின் ஸ்டாலின் இருக்கிறார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் வர முயற்சி செய்கிறார்கள் இதுதான் வாரிசு அரசியல். ஒரு குடும்பத்திற்கு போகக்கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்த வரையில் வாரிசு அரசியல், குடும்ப கட்சி. அது ஒரு கார்ப்பரேரேட் கம்பெனி. அதிமுகவில் என்னைப்போல் சாதாரண தொண்டனும் உயர் நிலைக்கு வர முடியும். அது அதிமுகவில் மட்டும்தான் முடியும்” என்றார். மேலும் படிக்க
Kamalhaasan: ஒருவனும் முழுநேர அரசியல்வாதி கிடையாது.. கூட்டணி குறித்து கமல்ஹாசன் வைத்த ட்விஸ்ட்!
நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி இன்றோடு 7 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் கொடியேற்றினார். தொடர்ந்து தொண்டர்களிடையே பேசிய கமல்ஹாசன் அனல் பறக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது, “இந்த 7 ஆண்டுகள் எப்படி கடந்தது என தெரியவில்லை என சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு கணமும் எனக்கு புரிந்தது, தெரிந்தது. நேர்மையும், உத்வேகமும் தான் என்பது எனக்கு தெரிந்தது என்றார். மேலும் படிக்க
7 Years of MNM: 7 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்.. தேவை அதிகரித்து வருவதாக கமல் பெருமிதம்!
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி காலை அப்துல்கலாம் குடும்பத்தினரிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ராமநாதபுரம், பரமக்குடி, மானா மதுரை ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அன்று மாலை 6.30 மணியளவில் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் “மக்கள் நீதி மய்யம்” என்ற கட்சியை அறிவித்து கொடியையும் அறிமுகம் செய்தார். அக்கட்சி இன்று 7வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.  இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
புது பொலிவுடன் கலைஞர் கருணாநிதி நினைவிடம்.. வருகின்ற 26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்..!
கடந்த 2021ம் ஆண்டு முதல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூபாய் 39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து,  அவரது சிந்தனைகள், சிந்தாந்தங்கள், சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டது. தற்போது வருகின்ற 26ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Teachers Protest: சம ஊதியம் கோரி போராடினால் கைது செய்வதா?- ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக- அன்புமணி
சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார்.மேலும் படிக்க

மேலும் காண

Source link

• புது பொலிவுடன் கலைஞர் கருணாநிதி நினைவிடம்.. வருகின்ற 26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்..!

புது பொலிவுடன் கலைஞர் கருணாநிதி நினைவிடம்.. வருகின்ற 26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்..!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடக் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், வருகின்ற 26ம் தேதி சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் வரும் 26ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கலைஞர் கருணாநிதி நினைவிடம்:
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வயது முதிர்வு காரணமாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி காலமானார். தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்தது. இதையடுத்து திமுக முன்னாள் தலைவரும், 5 முறை தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
அப்போது, விதிஎண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியபோது, ” முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை வெளிப்படுத்த வேண்டும். மேலும், அவரது சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்” என்றார்.
அதன்படியே, கடந்த 2021ம் ஆண்டு முதல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூபாய் 39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து,  அவரது சிந்தனைகள், சிந்தாந்தங்கள், சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டது. தற்போது வருகின்ற 26ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் முடிவுபெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காண

Source link