Tag: கச்சத்தீவு

  • Sri Lanka Minister Ali sabri on katchatheevu says no need for talks on resolved issue

    Sri Lanka Minister Ali sabri on katchatheevu says no need for talks on resolved issue


    katchatheevu: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 15 நாள்கள் கூட இல்லாத நிலையில், கச்சத்தீவு விவகாரம் பற்றி எரிந்து வருகிறது. இதனால், இலங்கை, இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படுமோ என முன்னாள் தூதர்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர். 
    பற்றி எரியும் கச்சத்தீவு விவகாரம்:
    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 14 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டதாகவும் இதற்கு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு துணை போனதாகவும் பிரதமர் மோடி குற்றம் சுமத்தினார்.
    கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை காங்கிரஸ் அரசு பறித்துவிட்டதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சுமத்தினார். கச்சத்தீவை ஒப்பந்தத்தின் காரணமாகவே வாட்ஜ் பேங்க் பகுதி இந்தியாவுக்கு தரப்பட்டதாகவும் இலங்கையில் பாதிப்புக்குள்ளான 6 லட்சம் தமிழர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் காங்கிரஸ் சார்பில் பதிலடி அளிக்கப்பட்டது.
    50 ஆண்டுகால விவகாரத்தை தேர்தலுக்காக பாஜக அரசு எழுப்புவதாகவும் இதனால் இலங்கை உடனான இந்திய உறவில் பாதிப்பு ஏற்படும் என்றும் விமர்சிக்கப்பட்டது.
    இந்திய இலங்கை உறவில் விரிசலா?
    கச்சத்தீவு விவகாரத்தை பிரதமர் மோடி எழுப்பியதை தொடர்ந்து இலங்கை அரசு முதல்முறையாக எதிர்வினை ஆற்றியுள்ளது. முடிந்து போன கச்சத்தீவு விவகாரம் பற்றி மீண்டும் பேச எந்த விதமான தேவையும் ஏற்படவில்லை என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
    உள்ளூர் செய்தி தொலைக்காட்சிக்கு அலி சப்ரி அளித்த பேட்டியில், “50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்னை பற்றி பேசப்பட்டு, தீர்வு காணப்பட்டுவிட்டது. எனவே, கச்சத்தீவு தொடர்பாக மேலும் பேச எந்த தேவையும் ஏற்படவில்லை” என்றார்.
    தனியார் செய்தி நிறுவனத்திடம் இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இதுதொடர்பாக பேசுகையில், “இந்தியாவில் தேர்தல் வருவதால் இந்த விவகாரத்தில் இரண்டு அரசியல் கட்சிகளும் சண்டை போட்டு கொள்கின்றன. எனவே, ரணில் விக்கிரமசிங்க அரசு இது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை.
    இலங்கையிடம் கச்சத்தீவு செல்ல யார் பொறுப்பு என்பது பற்றியே விவாதம் எழுந்துள்ளது. தற்போது, அது யாருக்கு சொந்தம் என்பது குறித்து கேள்வி எழுப்பவில்லை. எனவே, இதில் இலங்கை கருத்து தெரிவிக்க அவசியம் இல்லை” என்றார்.
    கச்சத்தீவு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இரு நாட்டு மீனவர்களிடையே நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்னையில் இருந்து திசை திருப்பவே இந்திய தலைவர்கள் இப்படி பேசி வருவதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் அதிகமாக மீன்பிடிப்பதால் அங்குள்ள மீன்வளம் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் இலங்கை மீனவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
     

    மேலும் காண

    Source link

  • Kachchathivu issue was a diplomatic move by Indira Gandhi Congress new explanation – TNN | Katchatheevu Issue: கச்சத்தீவு விவகாரம் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை

    Kachchathivu issue was a diplomatic move by Indira Gandhi Congress new explanation – TNN | Katchatheevu Issue: கச்சத்தீவு விவகாரம் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை


    நாடு முழுவதும் கச்சத்தீவு பிரச்சனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் பி.வி.செந்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் மற்றும் திமுக தாரை வார்த்து விட்டது. அதை மீட்பதே எங்கள் இலக்கு என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கச்சத்தீவு 285 ஏக்கர் கொண்ட மணல் திட்டு. ஒரு சொட்டு தண்ணீர் கூட அங்கு குடிக்க கிடைக்காது. 1901 ஆம் ஆண்டில் இருந்து பிரிட்டிஷ் அரசுதான் அந்த தீவை நிர்வாகம் செய்து வந்தது. பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்தியா, இலங்கை மீனவர்கள் அதை பயன்படுத்தி வந்தனர். மீன் வலைகளை காய வைப்பதற்காகவும் அங்குள்ள தேவாலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை விழா நடத்துவதற்காகவும் கச்சத்தீவு பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் 1974 ஆம் ஆண்டு அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லையை வரையறுக்க முற்பட்டார். அதாவது வங்களா விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியை வரையறை செய்ய வேண்டும் என்று ஒரு திட்டத்தை முன்னெடுத்தார். அப்போதுதான் இலங்கை அரசு கச்சத்தீவு விவகாரத்தை முன் வைத்தது. இதையடுத்து இரு நாடுகளும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர். சும்மா ஒன்றும் இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கவில்லை. ஒன்றைக் கொடுத்து ஒன்றை பெறுவது தான் உடன்படிக்கை. அதன்படி 1974 ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக மக்களுக்கும் மீனவர்களுக்கும் எது பலனளிக்கும் என்ற தொலைநோக்கில் கச்சத்தீவானது இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு மாறாக 1976 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி மன்னார் வளைகுடா – வங்காள விரிகுடா கடல் எல்லை வரையறை செய்யப்பட்டு, wadge bank என்ற பகுதியை இந்தியா எடுத்துக் கொண்டது. அந்த பகுதி கிட்டத்தட்ட 10,000 சதுர கிலோமீட்டர் கொண்ட கடல் நிலப்பரப்பு. கன்னியாகுமரியின் தெற்கே கடல் பகுதியை கடலுக்குள் இந்திய அரசால் மூழ்கி எடுத்துக் கொள்ளப்பட்டது.
    அது இன்று 25 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட கடல் பகுதியாக உள்ளது. வெறும் 285 ஏக்கர் நிலத்தை கொடுத்துவிட்டு பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட 25 லட்சம் ஏக்கரை கடலில் இந்தியா எடுத்துள்ளது. இதுதான் அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை. அந்த கடல் நில பரப்பில் 60க்கும் மேற்பட்ட அரிய வகை மீன் இனங்கள் உள்ளன. அந்த பகுதியை பயன்படுத்தி தான் கன்னியாகுமரி, குளச்சல் மற்றும் கேரள மாநில மீனவர்கள் பல லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் நீடித்த நிலையான முடிவை கொச்சைப்படுத்தும் வகையில் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் பேசி வருகிறார்கள். அவர்களது பேச்சில் உண்மை இல்லை. தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி நாடகம் நடத்துகிறது. அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்திரா காந்தி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதுதான் உண்மை” என்று தெரிவித்தார்.

    மேலும் காண

    Source link

  • katchatheevu issue speech former SriLankan’s India ambassador Natarajan

    katchatheevu issue speech former SriLankan’s India ambassador Natarajan


    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சமீபத்தில் கச்சத்தீவு தொடர்பாக தெரிவித்த கருத்து மீண்டும் பேசு பொருளானது. 
    கச்சத்தீவு விவகாரம்:
    இந்நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய அரசின் முன்னாள் துணை தூதர் நடராஜன் ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார். தேர்தல் சமயத்தில் கச்சத்தீவை திரும்ப பெற வேண்டுமென சொல்வது வாக்கு வாங்குவதற்காகவும் இருக்கலாம் என மக்கள் கருதுவார்கள்.
    கச்சத்தீவை திரும்ப பெற முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி. என்னை பொறுத்தவரை கச்சத்தீவை திரும்ப பெறுவது சாத்தியம் கிடையாது. இலங்கை எல்லைக்குள், இந்திய மீனவர்களும், இந்திய எல்லைக்குள் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்தது போல, எல்லை பார்க்காமல் மீன் பிடிக்க அனுமதித்தால் இப்பிரச்சனைக்கு தீர்வு வரும்.

    மத்திய அரசின் முடிவு:
    கச்சத்தீவு விவகாரத்தில் மாநில அரசு எதுவும் செய்திருக்க முடியாது. மாநில அரசு போராட்டம் செய்து மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைக்க மட்டும் தான் முடியும். மற்றபடி முடிவு மத்திய அரசு தான் எடுக்க முடியும். 1974 ல் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி கச்சத்தீவை கொடுக்க வேண்டாம் என மத்திய அரசிடம் சொல்லியிருக்கத்தான் முடியும். வேறு எதுவும் செய்திருக்க முடியாது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் முடிவு.
    தீர்வு காண வழிவகுக்கும்:

    இது நல்ல முடிவாக இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு. கச்சத்தீவை திரும்ப பெற வாய்ப்புகள் இல்லை. வலுக்கட்டாயமாக அதனை எடுக்கவும் முடியாது. அதற்காக சாத்தியமும் கிடையாது இந்திய கடல் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவித்தல், எல்லை தாண்டி இரண்டு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நிரந்தர தீர்வு காண வழிவகுக்கும் என இந்திய அரசின் முன்னாள் துணை தூதர் நடராஜன் ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார்.
    Also Read: PM Modi: கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது எப்படி? – காங்கிரசை ஒருபோதும் நம்பக்கூடாது : பிரதமர் மோடி
    Also Read: Udhayanidhi Stalin: இலங்கை தாக்குதலை ஏன் தடுக்கவில்லை? எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கல் எப்போது? பிரதமருக்கு உதயநிதியின் 10 கேள்விகள்

    மேலும் காண

    Source link

  • Vanathi Srinivasan alleges that the reason for all the miseries of the fishermen is that the Kachchadeevu is cast – TNN | மீனவர்களின் அத்தனை துயரங்களுக்கும் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதே காரணம்

    Vanathi Srinivasan alleges that the reason for all the miseries of the fishermen is that the Kachchadeevu is cast – TNN | மீனவர்களின் அத்தனை துயரங்களுக்கும் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதே காரணம்


    பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் இந்திரா காந்தி. அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தது அப்போதிருந்த திமுக அரசு. இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவிக்கும் அத்தனை துயரங்களுக்கும் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதே காரணம். வெளிநாட்டுக்கு ஒரு இடத்தை கொடுத்து விட்டால் அதை மீட்பது என்பது எளிதல்ல. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில்தான் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் இருக்கும் நாடு. இது தெரிந்தும் தூங்குவது போல நடித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மூன்று கேள்விகள் கேட்டிருக்கிறார்.
    மக்கள் கேட்கும் சில கேள்விகள்
    1. 2004 முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, தமிழ்நாடு வரியாக தந்த ஒரு ரூபாய்க்கு, மத்திய காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு திருப்பித் தந்தது எத்தனை பைசா?2. மக்கள் தொகை அதிகம் உள்ள உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்க மாநில மக்களுக்கு உதவக் கூடாது என்பதுதான் இண்டி கூட்டணியின் நிலைப்பாடா?
    3. மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு அன்றைய மத்திய அரசு கொடுத்த நிவாரண நிதி எவ்வளவு?
    4. நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், அதிவிரைவு ரயில்கள், புதிய ரயில் பாதைகள், புதிய விமான நிலையங்கள், துறைமுக மேம்பாடு என 1998 – 2004 வாஜ்பாய் ஆட்சியிலும், கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியிலும் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தன. இதை யாராலும் மறுக்க முடியுமா?
    பதில் சொல்லுங்கள் ஸ்டாலின்” எனத் தெரிவித்துள்ளார்.
    முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி:
    இதற்கு முன்னதாக கச்சத்தீவு விவகாரம்தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
    1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
    2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
    3. பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?
    திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே” எனத் தெரிவித்து இருந்தார்.

    மேலும் காண

    Source link

  • Annamalai said that Congress and Dmk should apologize for covering kachchatheevu – TNN | கச்சத்தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ், திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்

    Annamalai said that Congress and Dmk should apologize for covering kachchatheevu – TNN | கச்சத்தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ், திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்


    கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”திமுக இத்தனை ஆண்டு காலமாக காங்கிரஸ் அரசு எங்களை கேட்காமல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக கூறுவது கட்டுக்கதை. திமுகவினர் தமிழக மக்களை வஞ்சித்து இருக்கிறார்கள். அப்போதைய மத்திய அமைச்சர் கேவல்சிங் கலைஞர் கருணாநிதியை சந்தித்து அனுமதி பெற்ற பின்னரே, கச்சத்தீவு கொடுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதில் கருணாநிதியின் முடிவும் இருந்தது. கருணாநிதி கச்சத்தீவை கொடுக்க சம்மதம் தெரிவித்தது மட்டுமின்றி சிறிய அளவில் போராட்டம் நடத்தி கொள்வதாக அமைச்சர் கேவல் சிங்கிடம் பேசியுள்ளார். முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனுமதி இல்லாமல் கச்சத்தீவை மத்திய அரசு கொடுக்க வாய்ப்பே இல்லை. இந்திய இறையாண்மை மீது திமுகவிற்கு நம்பிக்கை உள்ளதா?ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் திமுக தான்.
    தமிழக பாஜக கச்சத்தீவை மீட்க வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளோம். தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைவாக இருப்பதால் தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லை அருகே சென்றாலே இலங்கை அரசு கைது செய்கிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு திரும்ப பெற வேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரசும், திமுகவும் சேர்ந்து செய்த சதி. கச்சத்தீவை மீட்கும் விவகாரத்தில் இந்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். கச்சத்தீவு மீட்பு பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். வங்கதேசத்துடன் உள்ள எல்லை குழப்பங்களை தீர்க்க சில பகுதிகள் கொடுக்கப்பட்டது.  வங்கதேச பிரச்சனையும், கச்சத்தீவு பிரச்சனையும் ஒன்றல்ல. சரித்திரம் தெரியாமல் மல்லிகர்ஜூன கார்கே பேசுகிறார். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததில் இந்தியாவிற்கு ஒரு பைசா கூட இலாபம் இல்லை.

    மன்னிப்பு கேட்க வேண்டும்
    கச்சத்தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் திமுக மன்னிப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னிசியா உள்ளது. நான் பிடித்த முயலுக்கு 3 கால் என பேசுவது முதலமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல.  கடந்த 33 மாதங்களில் திமுக அரசு செய்த சாதனை என்ன? பிரதமர் மோடி 10 இலட்சம் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு தந்துள்ளார். அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் தந்துள்ளார். நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். அன்று நாடாளுமன்றத்தில் இருந்து திமுகவினர் ஏன் வெளிநடப்பு செய்தனர்?முதலமைச்சர் தான் திசை திருப்ப முயல்கிறார். கச்சத்தீவை இலங்கை கொடுப்பது பற்றி அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, ஒரு மத்திய அமைச்சர், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு மட்டும் தான் தெரியும்.
    கச்சத்தீவு மதிப்பற்றது என்பது காங்கிரஸ் நிலைப்பாடாக இருந்துள்ளது. மீனவர்கள் நலனுக்காக இந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் முயல்கிறோம். இலங்கை முழுவதும் இந்தியா உடன் நட்புறவில் உள்ளது. இலங்கைக்கு நிதியுதவி செய்வது தொப்புள் கொடி உறவு என்பதால் தான். இதற்கும் தேர்தலுக்கும் சம்மந்தம் இல்லை. சீனாவிற்கு நிலம் கொடுத்தது எல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான். நாங்கள்  ஒவ்வொரு இடமாக மீட்டு கொண்டுள்ளோம். பாஜக அதிகாரபூர்வமாக எல்லை பகுதியை சீனாவிற்கு தரவில்லை. திசை மாற்றுவதற்காக கார்கே பேசுகிறார். இலங்கை தமிழருக்கு குடியுரிமை உள்ளது. 11 ஆண்டுகள் வாழ்ந்தவர்களுக்கு குடியுரிமை தந்துள்ளோம். எதிர் கட்சிகளை ஒழிப்பேன் என மோடி சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சி இருக்க கூடாது என்பது தான் எங்கள் நோக்கம்” எனத் தெரிவித்தார்.

    மேலும் காண

    Source link

  • To Participate In Kachchatheevu Festival Devotees Can Apply Before 6th February

    To Participate In Kachchatheevu Festival Devotees Can Apply Before 6th February

    Kachchatheevu: கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் மொத்தமாக 8 ஆயிரம் பேர் பங்கேற்க, இலங்கையின் யாழ்பாணம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.’
    கச்சத்தீவு திருவிழா:
    கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். இதில் இலங்கை மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.  இதில் முதல் நாளில் இந்தியா சார்பிலான கொண்டாட்டங்களும், இரண்டாவது நாளில் இலங்கை பக்தர்கள் சார்பிலான கொண்டாட்டங்களும் நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்.23ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது.
    8,000 பக்தர்களுக்கு அனுமதி:
    திருவிழாவின் முதல் நாளான பிப்.23ம் தேதியன்று மாலை இந்திய பக்தர்கள், பாதிரியார்கள் தரப்பில் கொடியேற்றம், இரவில் தேர்பவனி நடைபெறும். தொடர்ந்து,  பிப்ரவரி 24ம் தேதியன்று அந்தோணியார் ஆலய வளாகத்தில் இலங்கை பக்தர்கள், பாதிரியார்கள் பங்கேற்கும் சிறப்பு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும். இதில் இந்தியா சார்பில் நான்காயிரம் பேர் மற்ரும் இலங்கை சார்பில் 4000 பேர் என, மொத்தமாக 8000 பேர் பங்கேற்க யாழ்ப்பாணம் மாவட்ட அரசு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இந்தியர்கள் பயணிப்பதற்கு ஏதுவாக, பிப்ரவரி 23ம் தேதி அதிகாலை 6 மணி முதல் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாக அனுமதி பெற்ற பக்தர்கள் படகில் கச்சத்தீவு செல்லலாம். மறுநாள் காலை 10 மணிக்குள் திருவிழா திருப்பலி பூஜை நிறைவு பெற்று, கச்சத்தீவில் இருந்து படகில் புறப்பட்டு மீண்டும் ராமேஸ்வரம் வர இலங்கை கடற்படை அனுமதி அளித்துள்ளது.
    பிப்ரவரி 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்:
    இந்நிலையில், கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க விரும்புபவர்கள், பிப்ரவரி 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கச்சத்தீவு திருவிழா ஒருங்கிணைப்பாளரும்,  ராமேஸ்வரம் வேர்க்கோடு புனித ஜோசப் ஆலய பாதிரியாருமான சந்தியாகு பேசுகையில், ‘கச்சத்தீவு திருவிழா செல்வதற்கான விண்ணப்ப படிவ விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பக்தர்கள், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிப்ரவரி 6ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். அனுமதி கிடைத்த பக்தர்கள் தடை செய்யப்பட்ட எவ்வித பொருட்களையும் படகில் கொண்டு செல்லக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.  விண்ணப்ப படிவத்திற்கு ரூ.10, படகில் செல்ல கட்டணமாக ரூ.2 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
    ஆலய வரலாறு:
    1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது. கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்துக் காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் இங்கு வழிபாடு நடத்துவர். ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு திருவிழா, அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கச்சத்தீவு 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக் நீரிணை’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம். 

    Source link