Tag: ஏழு கடல் ஏழு மலை
• Yezhu Kadal Yezhu Malai: அடுத்த சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தயார்! ராமின் “ஏழு கடல் ஏழு மலை” படக்குழு உற்சாகம்!
Yezhu Kadal Yezhu Malai: அடுத்த சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தயார்! ராமின் “ஏழு கடல் ஏழு மலை” படக்குழு உற்சாகம்!
இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை ரோட்டர்டாம் திரைப்பட விழாவைத் தொடர்ந்து மற்றொரு சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
அடுத்த சர்வேதத் திரைப்பட விழா
இயக்குநர் ராமின் வழக்கமான பாணியில் பேரன்பை கதைக்களமாகக் கொண்டு முன்னதாக வெளியான இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நடிகர் சூரி இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முன்னதாக சென்ற ஆண்டு இறுதியில் நடைபெற்ற 53ஆவது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ இப்படம் தேர்வாகி இருந்தது. இந்த விழாவில் திரையிடப்பட்டு இப்படம் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் தற்போது ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் தற்போது மற்றொரு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
தயாரிப்பாளர் மகிழ்ச்சி
இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஏழு கடல் ஏழு மலை, “ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன்’ போட்டிப் பிரிவில் பெரும் வரவேற்பையும், முத்திரையும் பதித்த ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம், உலக அரங்கில் தனது பயணத்தை உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் தொடர்கிறது. தற்போது 46ஆவது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக ஏழு கடல் ஏழு மலை’ தேர்வாகியிருப்பதை சினிமா ரசிகர்களுக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
ஏப்ரல் 19 முதல் 26 வரை நடைபெறவுள்ள மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘பிளாக்பஸ்டர்ஸ் ஃப்ரம் அரௌண்ட் தி வேர்ல்ட் (Blockbusters from around the World) பிரிவில் ஏழு கடல் ஏழு மலை திரையிடப்பட இருக்கிறது. சமகால சினிமாவின் சிறந்த உலகத் திரைப்படங்களின் வரிசையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் தேர்வாகியிருப்பது இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமைக்கும் கடின உழைப்பிற்குமான சான்றாகும்.
எனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமைமிரு இயக்குநர் ராமின் படைப்பான ‘ஏழு கடல் ஏழு மலை’, அதன் அழுத்தமான திரைக்கதை மற்றும் பிரமிக்கத்தக்க காட்சி அமைப்பினால் பார்வையாளர்களின் உள்ளங்களைக் கவர்ந்துள்ளது.
நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் அசாதரணமான நடிப்பும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், கலை இயக்குநரான உமேஷ் குமாரின் உழைப்பும், மதன் கார்க்கியின் பாடல் வரிகளும், சில்வாவின் அபரிமிதமான உழைப்பும் உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
தமிழ் புத்தாண்டில் இச்செய்தியை அனைவரிடமும் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source link
• soori explains how he damaged his voice for p s vinothraj kottukaali movie | Soori: வேறு குரல் வேண்டும்.. டாக்டரிடம் சென்ற சூரி
soori explains how he damaged his voice for p s vinothraj kottukaali movie | Soori: வேறு குரல் வேண்டும்.. டாக்டரிடம் சென்ற சூரி
கொடுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, விடுதலை உள்ளிட்ட சூரி நடித்த மூன்று படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டுள்ளன.
சூரி
நடிகர் சூரி தற்போது சர்வதேச திரைப்பட ரசிகர்களிடம் பாராட்டுக்களை அள்ளி வருகிறார். ஒரே நேரத்தில் சூரி நடித்துள்ள மூன்று படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டுள்ளன. ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை, வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை  1 மற்றும் 2 ஆம் பாகங்கள் சமீபத்தில் நெதர்லாந்தில் நடைபெற்ற ராட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன.
இந்த படங்கள் இரண்டிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூரியின் நடிப்பு சர்வதேச ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படம் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அடுத்தடுத்த திரையிடல்களில் கூட்டம் நிரம்பி வழிய இந்தப் படம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இது தொடர்பாக சூரி அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளது வீடியோ அவனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
. @sooriofficial 👀👀#Kottukkaali pic.twitter.com/HiRN4YJdAr
— Prakash Mahadevan (@PrakashMahadev) February 23, 2024
குரலை சேதப்படுத்திக் கொண்டேன்
கொட்டுக்காளி படத்தில்  தனது குரலை வேண்டுமென்றே சேதப்படுத்திக் கொண்டதாக நடிகர் சூரி கூறியுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறுகையில் “ கொட்டுக்காளி படத்தில் ஒரு காட்சியில் என் குரல் கட்டியதைப் போல் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்டார். அது ஒரு பெரிய டெக் என்பதால் ரீடேக் போவது கஷ்டம். இதனால் நானே ஒரு ஐடியா பன்னினேன். டாக்டரிடம் சென்று என்னுடைய குரலை கொஞ்சமாக கட்டியதுபோல் சேதப்படுத்த ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று நான் கேட்டேன். இதை கேட்ட மருத்துவர் சிரித்துவிட்டார்.
மேலும் நோயை குனப்படுத்த வேண்டிய தன்னால் இப்படி செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். நான் அவரை ரொம்ப வற்புறுத்தியதால் அவர் எனக்கு சில நாட்டு மருந்துகளை பரிந்துரை செய்தார். இந்த மருந்துகளை சாப்பிட்டால் நம் குரல் சேதமடைந்து விடும். மரப்பட்டைகள் ஒரு சில இலைகள் என எல்லாவற்றையும் சேர்த்து சாப்பிடத் தொடங்கினேன். பேசவே முடியாத அளவிற்கு எனது குரல் கம்மிவிட்டது.
அதோடு தான் இந்த காட்சியில் நடித்தேன். இந்தப் படத்தைப் பார்த்த அனைவரும் என்னிடம் வந்து எப்படி குரலை அவ்வளவு வறுத்தி என்னால் நடிக்க முடிந்தது என்றுதான் கேட்டார்கள்.’ என்று சூரி பேசியுள்ளார்.தனது கதாபாத்திரத்திற்காக சூரி எடுத்துக் கொள்ளும் இப்படியான முயற்சிகள் ரசிகர்களால் பாராட்டப் படுகின்றன.
மேலும் படிக்க : Ethirneechal: ஜனனிக்கும் சக்திக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி… எதிர்நீச்சலில் இன்று நடப்பது என்ன?
மேலும் காண
Source link
• Kavin, who is acting in Vetrimaran movie; Udayam theater closure, Vairamuthu in grief – Cinema headlines | Cinema Headlines :வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்; உதயம் தியேட்டர் மூடல், வேதனையில் வைரமுத்து
Kavin, who is acting in Vetrimaran movie; Udayam theater closure, Vairamuthu in grief – Cinema headlines | Cinema Headlines :வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்; உதயம் தியேட்டர் மூடல், வேதனையில் வைரமுத்து
Kavin: வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்.. வெளியான சூப்பர் அப்டேட் இதோ!
கவினின் அடுத்த புதுப்படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் தான் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். கிராஸ் ரூட் கம்பெனி இப்படத்தை தயாரிக்க வெற்றி மாறனின் உதவி இயக்குநரான விகர்னன் அசோகன் இயக்கவுள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க
Udhayam Theatre: கண்ணீர் வடிக்கின்றேன்.. உதயம் தியேட்டர் மூடப்படுவதால் வைரமுத்து வேதனை!
சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகி திரையுலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து உதயம் தியேட்டர் தொடர்பான பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
Ramki: நிரோஷாவே வேண்டாம் என சொல்லியும் கேட்கல.. நடிகர் ராம்கி பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
நேர்காணல் ஒன்றில் பேசிய ராம்கி, நிரோஷாவுடன் தனக்கு காதல் ஏற்பட்ட தருணம் பற்றி பேசியுள்ளார். அதில்,”நிரோஷாவை என்னிடம் அறிமுகம் செய்தபோது அவர் கமலுடன் சூரசம்ஹாரம் படத்தில் நடித்து வந்தார். எந்த பத்திரிக்கை எடுத்தாலும் அட்டைப்படத்தில் இடம்பிடித்தார். நிரோஷாவின் பின்னணி என்பது வேற லெவலில் இருந்தது. அக்னி நட்சத்திரம் படத்தில் நடித்த அவரை செந்தூரப்பூவே படத்தில் ஹீரோயினாக போடலாம் என சொன்னார்கள். ஆனால் நான், ‘இவங்க வேண்டாம். நல்ல பொண்ணா நான் சொல்றேன்’ என சொன்னேன்.மேலும் படிக்க
SPB Pallavi: பல ஆண்டுகளாக பாடாமல் இருக்கும் எஸ்.பி.பி., மகள் பல்லவி – என்ன காரணம் தெரியுமா?
தான் ஏன் பாடவில்லை என்பதை பல்லவி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்பா என்னிடம் நிறைய கிளாசிக்கல் இசை கற்றுக் கொள்ள சொன்னார். ஆனால் எனக்கும் தம்பிக்கும் பெரிதாக விருப்பமில்லை. எஸ்.பி.பி.யின் பையன், பொண்ணு என்று சில வாய்ப்புகள் வந்தது. ஒரு சில காரணங்களுக்காக நான் பாடுவதை நிறுத்தி விட்டேன். குடும்பத்தினருடன் பிஸியாகி விட்டதால் அதனால் விருப்பம் போய்விட்டது. ஆனால் முறைப்படி பயிற்சி எடுக்காமல் மீண்டும் களமிறங்கினால் அது சரியாக இருக்காது. நான் நியாயமாக இருக்கிறேன் என்று சொல்வதை விட அப்பாவின் பெயரை கெடுக்காமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மேலும் படிக்க
Yezhu Kadal Yezhu Malai: மறுபடியும் நீ.. என் தோழி ஆவாயா..! மனதை உருக்கும் ஏழு கடல் ஏழு மலை முதல் பாடல் ரிலீஸ்
ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகி இருந்தது. இந்த நிலையில் ஏழுமலை ஏழு கடல் படத்தின் முதல் பாடலான ‘மறுபடி நீ’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகரும் பாடகருமான சித்தார்த் பாடியுள்ளார். இந்த பாடல் மெலடி பாடலாக உள்ளதால், பெரும்பான்மையான ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. மேலும் படிக்க
மேலும் காண
Source link
• Actor Soori Visits Rotterdam Film Festival For Viduthalai And Yezhu Kadal Yezhu Malai Movie Premier
Actor Soori Visits Rotterdam Film Festival For Viduthalai And Yezhu Kadal Yezhu Malai Movie Premier
Actor Soori : சூரி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை மற்றும் விடுதலை ஆகிய இரண்டு படங்கள் சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளன.
சூரி
தமிழ் சினிமாவில்  நகைச்சுவை நடிகராக இருந்து, பின் ஒரு படத்தை தனது தோளில் மொத்தமாக தாங்கும் அளவிற்கு பெரிய நடிகராக உருவாகி வருகிறார் நடிகர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் தொடங்கிய இவரது இந்த புதிய பயணம் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி  நகர்கிறது. கூழாங்கல் இயக்குநர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கியிருக்கும் கொட்டுக்காளி படத்தில்  ஒரு புதிய அவதாரத்தில்  தோன்ற இருக்கிறார். இதனைத் தொடர்ந்து நிவின் பாலி நடித்து ராம் இயக்கியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்.
அடுத்தபடியாக துரை செந்தில் குமார் இயக்கும் கருடன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் எழுதிய கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது.
நெதர்லாந்து சென்ற சூரி
#Rotterdam Film festival #Ezhukadal ezhu malai#Viduthalai#Director Ram#Director Vetrimaran #nedherland pic.twitter.com/tYIzDD4lXW
— Actor Soori (@sooriofficial) January 30, 2024
தற்போது சூரி நெதர்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் நடித்துள்ள விடுதலை மற்றும் ஏழு கடல் ஏழு மலை ஆகிய இரு படங்கள் சர்வதேச ரோட்டர்ட்டாம் திரைப்பட விழாவில் திரையிடப் பட இருப்பதால் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கருடன்
Get ready for a soaring adventure! 🦅💥 The pulse-pounding “Glimpse of Garudan” is here!▶️🔗: https://t.co/rtxbkIpxTb#Garudan, starring @sooriofficial and directed by @Dir_dsk hitting theaters soon!🔥An @thisisysr musicalA #VetriMaaran story@SasikumarDir… pic.twitter.com/ZzxZLYn8JV
— Actor Soori (@sooriofficial) January 19, 2024
எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனமீர்த்தவர் துரை செந்தில் குமார். இவரது இயக்கத்தில், சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் கருடன். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சொக்கன் என்கிற கதாபாத்திரத்தில் இப்படத்தில் சூரி நடித்துள்ளார்.
மேலும் சூரி வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் கொட்டுக்காளி படமும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரிய அங்கீகாரத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொட்டுக்காளி படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Sarpatta 2: நீயே ஒளி, நீதான் வழி.. சார்பட்டா 2ஆம் பாகத்துக்காக வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் ஆர்யா!
அனிமல் படத்துல நான் நடிச்சிருந்தா இதை செஞ்சிருப்பேன்.. நானி சொன்ன பதில்..
Source link