Tag: உ.பி.யோத்தாஸ்

• Pro kabaddi 2023 Tamil Thalaivas set to battle U.P. Yoddhas in Match 108 tamil sports news

Pro kabaddi 2023 Tamil Thalaivas set to battle U.P. Yoddhas in Match 108 tamil sports news

ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 108வது ஆட்டத்தில் பிப்ரவரி 6ம் தேதியான இன்று தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யோதாஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளும் கடந்த போட்டியில் எப்படி..?
கடந்த பிப்ரவரி 4ம் தேதி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு தமிழ் தலைவாஸ் அணி இந்தப் போட்டியில் களமிறங்குகிறது. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் 30-42 என்ற கணக்கில் குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்தது. மேலும் இது ப்ரோ கபடி லீக் சீசன் 10 இல் தமிழ் தலைவாஸ் அணியின் 11வது தோல்வியாக அமைந்தது.
மறுபுறம், உ.பி யோதாஸ் அணி கடந்த பிப்ரவரி 3ம் தேதி யு மும்பா அணிக்கு எதிரான போட்டியில் 39-23 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் அணியும்,  உ.பி யோதாஸ் அணியும் இதுவரை 14 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக தமிழ் தலைவாஸ் அணி 6 முறை வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. உ.பி யோதாஸ் 5 முறை வெற்றியுடன் வலம் வருகிறது. இந்த அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் டையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தலைவாஸ் மற்றும் உ.பி யோதாஸ் இடையேயான கடைசி ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் 46-27 என்ற கணக்கில் உ.பி யோதாஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் 7 வெற்றிகள் மற்றும் 11 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 40 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. அதேசமயம், உபி யோதாஸ் 28 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளது. இதுவரை 4 வெற்றி, 12 தோல்வி, ஒரு டையுடன் உள்ளது.
கணிக்கப்பட்ட இரு அணிகள்:
தமிழ் தலைவாஸ் : அஜிங்க்யா பவார், நரேந்தர், சாகர் (கேப்டன்), சாஹில் குலியா, எம் அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு
உ.பி யோதாஸ் : பர்தீப் நர்வால் (கேப்டன்), அஷு சிங், ஹரேந்திர குமார், ககன் கவுடா, மஹிபால், நிதேஷ் குமார், சுமித்
இரு அணிகளின் விவரம்:
தமிழ் தலைவாஸ் : அஜிங்க்யா பவார், ஹிமான்ஷு நர்வால், நரேந்திர கண்டோலா, ஹிமான்சு சிங், கே.செல்வமணி, விஷால் சாஹல், நிதின் சிங், ஜதின் ஃபோகட், எம்.லக்ஷ்மன், சதீஷ் கண்ணன், சாகர் ரதி (கேப்டன்), ஹிமான்ஷு யாதவ், எம். அபிஷேக், சாஹில் குலியா , மோஹித் ஜாகர், ஆஷிஷ் மாலிக், அமீர்ஹோசைன் பஸ்தாமி, நிதேஷ் குமார் , ரோனக் கர்ப்,.
உ.பி. யோதாஸ் : குல்வீர் சிங், பர்தீப் நர்வால் (கேப்டன்), சுரேந்தர் கில், மஹிபால், அனில் குமார், சிவம் சவுத்ரி, ககனா கவுடா, ஆஷு சிங், நிதேஷ் குமார், சுமித், ஹரேந்திர குமார் , ஹிதேஷ், கிரண் மகர், விஜய் மாலிக் , குர்தீப், நிதின் பன்வார், ஹெல்விக் வஞ்சலா மற்றும் சாமுவேல் வஃபுலா.
இன்று படைக்கவிருக்கும் மைல்கல்கள்:
உபி யோதாஸ் அணியின் பர்தீப் நர்வால் தனது ப்ரோ கபடி லீக் வரலாற்றில் 1700 ரெய்டு புள்ளிகளை பெற இன்னும் 10 ரெய்டு புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் எம்.அபிஷேக் ப்ரோ கபடி லீக்கில் 100 டிபென்ஸ் புள்ளிகளை எட்ட இன்னும் 4 டிபென்ஸ் புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது.

Source link

• Pro Kabaddi 2024: 19 புள்ளிகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி! மிரட்டல் கம்பேக் தந்த தமிழ் தலைவாஸ்!

Pro Kabaddi 2024: 19 புள்ளிகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி! மிரட்டல் கம்பேக் தந்த தமிழ் தலைவாஸ்!

ப்ரோ கபடி லீக் 10வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2 போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து மோசமாக ஆடி வந்தது.

இந்த நிலையில், மும்பையில் இன்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் உ.பி.யோத்தாஸ் அணியும் மோதின. இந்த தொடரில் 11வது இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணியும், 10வது இடத்தில் உள்ள உ.பி.யோத்தாஸ் அணியும் இன்று நேருக்கு நேர் மோதின.

மிரட்டிய தமிழ் தலைவாஸ்:

இந்த போட்டியில் இரு அணிகளும் கட்டாய வெற்றி நோக்கி களமிறங்கின. கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கி தமிழ் தலைவாஸ் அணி தொடக்கம் முதலே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தமிழ் தலைவாஸ் அணியை எதிர்த்து ஆடிய உ.பி.யோத்தாஸ் அணியினர் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தர் ரைடு செல்லும்போது புள்ளிகளை அள்ளினார். எதிரணி வீரர்களை தொட்டு மட்டும் 11 புள்ளிகளும், போனஸ் மூலம் 3 புள்ளிகளை அள்ளினார்.  சிறப்பாக ஆடிய சாஹர் சூப்பர் டேக்ளில் 6 புள்ளிகளை அள்ளினார். ஷகில்சிங் சூப்பர் டேக்ளில் 5 புள்ளிகளை அள்ளினார்.

19 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி:

தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் களத்திற்குள் வந்த உ.பி.யோத்தாஸ் அணி வீரர்கள் தொடர்ந்து தமிழ் தலைவாஸ் அணி வீரர்களிடம் பிடிபட்டனர். இதனால், போட்டியின் முடிவில் 46- 27 என்று புள்ளிகள் முடிந்தது. தமிழ் தலைவாஸ் அணி இதனால் உ.பி. யோத்தாஸ் அணியை காட்டிலும் 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. தமிழ் தலைவாஸ் அணி இதன்மூலம் 7 போட்டிகளுக்கு பிறகு மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக, இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் எதிரணி வீரர்களை 3 முறை ஆல் அவுட்டாக்கினர். இந்த வெற்றி புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. 11வது இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து 11வது இடத்திலே நீடிக்கிறது.  11 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றிகள், 8 தோல்விகளுடன் 19 புள்ளிகளுடன் உள்ளது. புனேரி பல்தான் அணி 10 ஆட்டங்களில் 9 வெற்றி 1 தோல்வியுடன் 46 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தபாங் டெல்லி அணி 40 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link