Tag: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

• director rv udhayakumar controversial speech about women dressing pattern

director rv udhayakumar controversial speech about women dressing pattern

பட விழா ஒன்றில் பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பெண்களின் ஆடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.
சின்ன கவுண்டர், கிழக்கு வாசல், சிங்கார வேலன், எஜமான், ராஜகுமாரன், பொன்னுமணி, நந்தவன தேரு, கற்க கசடற உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சிறந்த பாடலாசிரியராகவும் திறம்பட சினிமாவில் பயணித்துள்ளார். இதனிடையே இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற “என் சுவாசமே” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதே நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், படத்தில் இருந்த பெரும்பாலான நபர்கள் மலையாள மொழியை அடிப்படியாக கொண்டவர்கள் என்பதால் அதுதொடர்பாக பல கருத்துகளை தெரிவித்தார்.
அதன்படி, “மலையாளிகள்  தொழிலில் 100% நியாயமாக உழைப்பார்கள்.அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை தான்  நான் பெருமை மற்றும் பொறாமைப்படக்கூடிய விஷயமாக உள்ளது. தமிழர்களுக்கு எப்பவும் மலையாளிகளை பிடிக்கும். ஆனால் மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்கவே பிடிக்காது. மலையாள சினிமா ஒரு விஷயத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை சரியாக கொடுத்து அதை பேசுபொருளாகவே அல்லது கருத்து பொருளாகவோ மாற்றி விடுவார்கள்” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் இந்த படத்தை இன்னும் பார்க்கலை. இனிமேல் உட்கார்ந்து பார்த்து விட்டு தான் செல்வேன் என நினைக்கிறேன். கவிஞர் கவிதாயினி சொல்லும்போது, ‘இந்த படத்தில் பெண்களை ஆடை வழியாக கவர்ச்சியாக காட்டுவது அதிகமாக இருக்கிறது. பெண்ணியத்தை நேசிக்கிறவர்கள் அதனை சற்று குறையுங்கள்’ என சொன்னார். நாங்கள் காட்டுவதை விட பெண்களே அதிகம் காட்டி கொண்டிருக்கிறார்கள்.
நீங்க சமூக வலைத்தளங்களை எடுத்தால் நமக்கே போனை ஆஃப் பண்ண மனசு வரமாட்டிக்குது. பெண்களே உங்கள் உடலை இப்படி ஏன் ஆபாசமாக காட்டுகிறீர்கள் என்று நீங்கள் தான் கேட்க வேண்டும். அதேசமயம் படத்துக்காக வியாபாரத்துக்கும், ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக சில காட்சிகளே எடுப்பார்கள். ஆனால் முழுவதும் தெரிய வேண்டும் என்பதற்காக தானே தனியா எடுத்து போட்டு கொண்டிருக்கிறார்கள்.
யாரை யார் காப்பாற்ற வேண்டும் என தெரியவில்லை. எப்படி உடல் தெரியும்படி ஆடை உடுத்த வேண்டும் என பெண்களே ஆராய்ச்சி பண்ணுவார்கள் போலும். பெண்கள் அப்படி நடிக்கவில்லை என்றால் ஆண் ஏன் அப்படி எடுக்கப்போகிறான். கேரளாவில் இருந்து தான் முதலில் பிட் படம் வாங்கி கொண்டு வந்து தான் இங்கு ஓட்டுவார்கள். அதிலும் மலையாள திரையுலகினர் கில்லாடிகள். அவர்கள் ஆரம்பித்து விட்டது தான்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: RV Udhayakumar: மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்காது – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சால் சர்ச்சை

மேலும் காண

Source link

• RV Udhayakumar: மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்காது – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சால் சர்ச்சை

RV Udhayakumar: மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்காது – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சால் சர்ச்சை

மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்கவே பிடிக்காது என பட விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற “என் சுவாசமே” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், மலையாள திரையுலகை புகழும் வகையில் கருத்துகளை தெரிவித்தார்.

அவர் தனது பேச்சின் போது, “என் சுவாசமே என்கிற பட டைட்டிலேயே அற்புதமாக காதல் இருக்கிறது. சுவாசம் இல்லை என்றால் உயிர் இல்லை, அன்பு இல்லை, உணர்வு இல்லை, காதல் இல்லை. இப்படி எதுவுமே இல்லை. உயிர் வாழ ஆக்ஸிஜன் தேவை. அதனை மையமா வச்சி தான் இப்படத்தை எடுத்துள்ளார்கள். என் சுவாசமே படத்தில் ஒரே மலையாள கரையோரத்தில் நின்ற மாதிரி வாசனை இருக்கிறது. அந்த அளவுக்கு மலையாள பிரபலங்கள் இருக்கின்றனர்.  தமிழர்களுக்கு எப்பவும் மலையாளிகளை பிடிக்கும். ஆனால் மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்கவே பிடிக்காது. அதுதான் உண்மை.

அதைப்பற்றி பேசினால் சர்ச்சையாகும். அதேசமயம் மலையாளிகள்  தொழிலில் 100% நியாயமாக உழைப்பார்கள். இன்னைக்கும் கூட நான் பெருமை மற்றும் பொறாமைப்படக்கூடிய விஷயம் அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை தான். அதில் ஒரு எள்ளளவு நம்ம கிட்ட (தமிழ் சினிமா) இருந்தா நல்லா இருக்கும். அம்மா என்ற சங்கத்தை வைத்துக் கொண்டு எந்த பிரச்சினையிலும் நியாயம் கிடைக்கச் செய்வார்கள். அதையெல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு கதையை எடுத்தால் கதைக்குள்ளேயே இருப்பார்கள். நாம கதையை விட்டு வெளியே செல்வோம். கடைசி வரை கதைக்குள்ளே வர மாட்டோம். கதைக்கு வரமால் இடைவேளை வந்துவிட்டதே, இனிமேலாது வருமா என நினைக்க வைத்து விடுவார்கள். கடைசி ஒரு வரியில் கருத்து சொல்லியிருப்பார்கள். ஆனால் மலையாள சினிமா ஒரு விஷயத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை சரியாக கொடுத்து அதை பேசுபொருளாகவே அல்லது கருத்து பொருளாகவோ, சமுதாயத்தின் மையப் பொருளாகவோ தான் மலையாள திரையுலகினர் இருக்கிறார்கள். அந்த மாதிரி தான் மலையாளியான இந்த படத்தின் இயக்குநரும் இருப்பார் என நம்புகிறேன்’ என ஆர்.வி.உதயகுமார் பேசியுள்ளார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பற்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. சின்ன கவுண்டர், கிழக்கு வாசல், சிங்கார வேலன், எஜமான், ராஜகுமாரன், பொன்னுமணி, நந்தவன தேரு, கற்க கசடற உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Vijay TVK: ஜெயலலிதாவையே மிஞ்சும் விஜய்! பக்கா ப்ளான் ரெடி! தளபதிக்காக தயாரான த.வெ.க நிர்வாகிகள்!

Source link