Tag: ஆளுநர் ரவி

• TN Assembly: பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை; ஆளுநர் செய்வது சரியா? – சபாநாயகர் அப்பாவு பதிலடி

TN Assembly: பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை; ஆளுநர் செய்வது சரியா? – சபாநாயகர் அப்பாவு பதிலடி

ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான, எந்த அரசையும் குறை கூறி  வார்த்தையும் பயன்படுத்தப்படவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் காலை 10 மணிக்கு தொடங்கியது.  அப்போது பேசிய அவர், தேசிய கீதம் உரையின் துவக்கத்தில் இசைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். தமிழக அரசின் உரையில் உள்ளவற்றை உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி அதனை படிக்காமல் புறக்கணித்தார். இது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிப்ரவரி 22 வரை சட்டப்பேரவை

தொடர்ந்து நிகழ்வு முடியும் முன்னரே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பின் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிப்ரவரி 15 ஆம் தேதி ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 16 ஆம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை, தொடர்ந்து பிப்ரவரி 19 ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 21 ஆம் தேதி இரண்டு வேளைகளாக பொது பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும். 22 ஆம் தேதி முதலமைச்சர் பதிலுரையுடன் சட்டப்பேரவை நிறைவு பெறும்” என தெரிவித்தார்.

ஆளுநர் குற்றச்சாட்டுக்கு பதில்

தேசிய கீதம் இசைத்து தான் ஆளுநருக்கு வரவேற்பு அளிக்கிறோம். சட்டமன்றத்திற்குள் வந்த உடனே பேரவை விதி 76/1ன் படி தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர் உரை, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். சட்டப்பேரவையின் முதல் நாள் ஆளுநரை அழைத்து அவரது உரையுடன் தொடங்கப்படுவது மரபாகும். இப்படிப்பட்ட நிலைப்பாட்டை ஆளுநர் எடுப்பதால் தான் பல மாநிலங்களில் அவர்களை அழைப்பதே இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் கொள்கை ரீதியாக வேறுபாடு இருந்தாலும் மாண்பு, சட்டத்தை மதிப்பதால் ஆளுநரை அழைக்கிறோம்.

தமிழ்நாடு அரசு எழுதி கொடுக்கும் உரைக்கு அனுமதி கொடுத்த பின் தான் பிரிண்ட் செய்யப்படுகிறது. அதைத்தான் வாசிக்கிறார்கள். அதில் உண்மைக்கு புறம்பான, எந்த அரசையும் குறை கூறி எந்த வார்த்தையும் பயன்படுத்தப்படவில்லை. அதில் ஒரு பகுதியை அவர் வாசித்து விட்டு பின்  கடைசி பக்கத்தை வாசித்து முடித்தார். அதன்பிறகு அவை மாண்புபடி உட்கார்ந்து தேசிய கீதம் இசைக்கும் வரை இருக்க வேண்டும்.

நானும் தலைமை செயலாளரும் அழைக்க சென்றபோது எங்களிடம் எதையும் சொல்லவில்லை. வருகிறேன் என்று தான் சொன்னார். அதேபோல் ஆளுநர் உரையில் நான் சொல்லியதை எல்லாம் நீக்கவில்லை. அதனால் கடைசி பக்கத்தை படிக்கிறேன் என சொல்லாமல் எனக்கு எதுவுமே இதில் பிடிக்கவில்லை என சொல்வது சரியா?  தமிழ்நாட்டுக்கு என்று ஒரு மரபு உள்ளது. அதனை ஏன் அவர் மீற வேண்டும் என சபாநாயாகர் அப்பாவு கேள்வியெழுப்பியுள்ளார்.

Source link

• Photo Of Thiruvalluvar Dressed In White In The First Song During The Republic Day Celebrations In Chennai

Photo Of Thiruvalluvar Dressed In White In The First Song During The Republic Day Celebrations In Chennai

1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினவிழா கொண்டாட்டம்:
இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே தமிழ்நாட்டிலும் அனைத்து இடங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தப் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடி மீது மலர்தூவப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராணுவம், கடற்படை, விமானப்படை, தமிழ்நாடு காவல்துறை, தேசிய மாணவர் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
வெள்ளை நிற உடையில் திருவள்ளுவர்:
இதன்பின்னர் அண்ணா, கோட்டை அமீர், முதலமைச்சர் சிறப்பு விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனை அடுத்து, பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் நடனம் ஆடினர். அப்போது,  வெள்ளை நிற உடையுடன் திருவள்ளுவர் படம் காண்பிக்கப்பட்டது. இதற்கு மேடையில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரிக்கவும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் முகம் சட்டென மாறியது.  இதன்பிறகு, பாரதியார் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் காண்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, முதலில் வந்த அலங்கார ஊர்தியிலும் திருவள்ளுர் ஊர்தி வந்தடைந்தது. அதில், ‘அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு’ என்று திருக்குறள் இடம்பெற்றிருந்தது.
சட்டென மாறிய ஆளுநர் ரவி முகம்:
முன்னதாக, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அளுநர் ஆர்.என்.ரவி காவி உடை அணிவிக்கப்பட்ட படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ”ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை  செலுத்துகிறேன்” என்று கூறியிருந்தார் ஆளுநர். என்.ரவி.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்த நிலையில், இன்று குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் முதல் பாடலிலேயே வெள்ளை நிற உடை அணிந்த  திருவள்ளுவர் புகைப்படம் காண்பிக்கப்பட்டதற்கு, ஆளுநர் முகம் மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Republic Day 2024: 75வது குடியரசு தின விழா.. சென்னையில் கொடியேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!
Padma Awards 2024:விஜயகாந்த், வைஜெயந்தி மாலா, சிரஞ்சீவி உள்ளிட்ட 132 பேருக்கு பத்ம விருதுகள்..முழு பட்டியல் இங்கே..

Source link

• ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழ்நாட்டில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஐபிசி 124, 379, 436, 353 மற்றும் 506 ஆகிய பிரிவுகளிலும் வெடி பொருள்கள் சட்டம் 1908 பிரிவு 3, 4 மற்றும் 5, தமிழ்நாடு சொத்து (சேதங்கள் மற்றும் இழப்புத் தடுப்பு) சட்டம் 1992 இன் பிரிவு 4 ஆகியவற்றிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி, சென்னை கிண்டி சர்தார் படேல் சாலை வழியாக நடந்து வந்த ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது.

இதைக் கண்டு அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓட முயன்றவரை விரட்டிப் பிடித்தனர். அப்போது, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. இதையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் (42) என்பது தெரியவந்தது. இவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

அவசர கதியில் கைது நடவடிக்கை

அதைத் தொடர்ந்து  ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. இவ்வழக்கில் அவசர கதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” எனபன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

ஆளுநர் மாளிகை அளித்த புகாரை தொடர்ந்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை டிஜிபி அலுவலகம் வெளியிட்டது. கருக்கா வினோத் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

என்னென்ன பிரிவுகளில்?

இந்த நிலையில், கருக்கா வினோத் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஐபிசி 124, 379, 436, 353 மற்றும் 506 ஆகிய பிரிவுகளிலும் வெடி பொருள்கள் சட்டம் 1908 பிரிவு 3, 4 மற்றும் 5, தமிழ்நாடு சொத்து (சேதங்கள் மற்றும் இழப்புத் தடுப்பு) சட்டம் 1992 இன் பிரிவு 4 ஆகியவற்றிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Source link

• Governor Salem Visit: ஆளுநர் சேலம் வருகை… 30 நிமிடங்களுக்கும் மேலாக துணைவேந்தருடன் ஆலோசனை

Governor Salem Visit: ஆளுநர் சேலம் வருகை… 30 நிமிடங்களுக்கும் மேலாக துணைவேந்தருடன் ஆலோசனை

அரசின் அனுமதி இன்றி தனியார் நிறுவனம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு டிசம்பர் 26 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ள நிலையில் பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ், ராம், கணேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். இதனையடுத்து பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஏழு இடங்களில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி 21 மணி நேரத்துக்கு மேலாக சேலம் மாநகர காவல் துறை சோதனை நடத்தினர். மேலும் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஜெகன்நாதன் மீது முறைகேடு புகார் தொடர்பான விசாரணை நாளை உயர்நீதிமன்றத்தில் வர உள்ளது.

இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி  சேலம்  பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் உள்ளே சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது நிலவி வரும் சூழ்நிலை குறித்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆலோசனை நடத்தினார். 30 நிமிடங்களுக்கும் மேலாக ஆளுநரும், துணைவேந்தர் ஜெகநாதன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக அனைத்து துறைத் தலைவர்களுடன் தமிழக ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தினார். 15 நிமிட ஆலோசனைக்கு பின்னர் அங்கிந்து புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி கார் வாயிலாக கோவை புறப்பட்டுச் சென்றார் உள்ளார். ஆளுநர் வருகைக்காக 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா, தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க மட்டுமே இதுவரை ஆளுநர் வந்த நிலையில் தற்போது எந்தவொரு நிகழ்ச்சியும் இல்லாமல் ஆளுநர் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க நேரில் வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் 7 இடங்களில் சேலம் மாநகர காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெரியார் பல்கலைக்கழக நிதித்துறை அலுவலகம், தமிழ்த்துறை, உள் தர மதிப்பீட்டு மையம், தீன் தயாள் உபாத்தியாயா பயிற்சி மைய வளாகம், பியூட்டர் பவுண்டேஷன் உள்ளிட்ட 7  இடங்களில் சேலம் மாநகர காவல் துறை  சோதனை நடத்தி வருகின்றனர்.

Source link

• ஆளுநர் சேலம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ அமைப்புகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

ஆளுநர் சேலம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ அமைப்புகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பெரியார் பல்கலைக்கழகத்தின் நடைபெறும் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் வருகை தந்தார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் 11:30 மணிக்கு புறப்பட்டு 12:15 மணிக்கு தமிழக ஆளுநர் ரவி, சேலம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வருகை தந்தார். ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாணவ அமைப்பினர் பெரியார் பல்கலைக்கழகத்தில் நுழைவாயில் முன்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழக ஆளுநருக்கு எதிராகவும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா, தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க மட்டுமே இதுவரை ஆளுநர் வந்த நிலையில் தற்போது எந்தவொரு நிகழ்ச்சியும் இல்லாமல் ஆளுநர் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

சமீபத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு விதிகளை மீறி வர்த்தக ரீதியான நிறுவனத்தை தொடங்கியதாக எழுந்த புகாரில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தரும் ஆளுநர், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் உள்ளிட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பேராசிரியர்களை நேரில் சந்தித்து முறைகேடு புகார் தொடர்பாக விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று நடைபெற்ற ஆளுநர் சந்திப்பை கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலம் மாநகரில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் "பெரியார் பல்கலைக்கழகத்தின் ஊழல் வழக்கில் உள்ள துணைவேந்தருக்கு துணை போகும் ஆளுநரை கண்டிக்கிறோம்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநர் வருகையை கண்டித்து திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆளுநரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தமிழ்நாடு ஆளுநர் ரவி, பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அலுவலர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக காரில் கோவை புறப்பட்டு சென்றார்.

தமிழக ஆளுநர் வருகையை முன்னிட்டு சேலம் விமான நிலையத்திலிருந்து பெரியார் பல்கலைக்கழகம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி சென்னையில் இருந்து சேலம் வருகை தந்த தமிழக ஆளுநர் பயணிக்கும் விமானத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

• பெரியார் பல்கலை.,க்கு ஆளுநர்  வருகை…காவல்துறையினர் அதிரடி சோதனை

பெரியார் பல்கலை.,க்கு ஆளுநர் வருகை…காவல்துறையினர் அதிரடி சோதனை

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக ஜெகநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள், பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகன்நாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகளை இயக்குனார்களாக கொண்ட பூட்டர் ஃபவுண்டேஷன் என்ற கல்வி நிறுவனத்தை தொடங்க சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. இந்த நிறுவனம் தன்னிச்சையாக செயல்படுவதுடன், பல்கலைக்கழக வளங்களை தனியாருக்கு தாரை பார்ப்பதாக சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

அதில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் சரிவர இயங்கவில்லை. சிண்டிகேட் அனுமதி இல்லாமல் துணைவேந்தர் சமீபத்தில் தொடங்கிய நிறுவனத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதியை முதலீடு செய்துள்ளார். இதனால் பல்கலைக்கழகத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது சாதி ரீதியாகவும், ஆபாசமாகவும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுதல், கூட்டு சரி செய்தல், மோசடி செய்தல், ஆவணங்களை போலியாக தயாரித்தல், அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய எட்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகன்நாதனை கைது செய்த கருப்பூர் காவல்துறையினர் அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் இரவு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்கு பிறகு நள்ளிரவு 12.30 மணிக்கு சேலம் இரண்டாவது நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் வீட்டில் ஆச்சர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜெகநாதன் சொந்த ஜாமின் கூறியுள்ளார். அதன் பேரில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் ஏழு நாட்கள் சேலம் மாநகர் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நிபந்தனை ஜாமின் அடிப்படையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.எம்.ரவி இன்று பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அலுவலர்கள் கூட்டத்திற்கு வருகை தந்தார். இதற்கு முன்பாக சேலம் மாநகர காவல் துறையினர் பெரியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் கட்ட சோதனையை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பதிவாளர் அலுவலகம், துணைவேந்தர் அலுவலகம், கணினி அறிவியல் துறை, தமிழ் துறை உள்ளிட்ட ஏழு இடங்களில் சோதனையானது இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. ஆளுநர் வருகையின் போது சேலம் மாநகர காவல் துறை பெரியார் பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Source link

• Governor Salem Visit: இன்று சேலம் வரும் ஆளுநர் ரவி: கருப்புக்கொடியுடன் காத்திருக்கும் மாணவ அமைப்பினர்! பலத்த போலீஸ் பாதுகாப்பு

Governor Salem Visit: இன்று சேலம் வரும் ஆளுநர் ரவி: கருப்புக்கொடியுடன் காத்திருக்கும் மாணவ அமைப்பினர்! பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பெரியார் பல்கலைக்கழகத்தின் நடைபெறும் பேராசிரியர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் வருகை தருகிறார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் 11:30 மணிக்கு சேலம் வருகை தரும் தமிழக ஆளுநர், சேலம் விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வருகை தர உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாணவ அமைப்பினர் கருப்பூர் டோல்கேட்டில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு விதிகளை மீறி வர்த்தக ரீதியான நிறுவனத்தை தொடங்கியதாக எழுந்த புகாரில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தரும் ஆளுநர், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் உள்ளிட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பேராசிரியர்களை நேரில் சந்தித்து முறைகேடு புகார் தொடர்பாக விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று நடைபெறும் ஆளுநர் சந்திப்பை கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலம் மாநகரில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் "பெரியார் பல்கலைக்கழகத்தின் ஊழல் வழக்கில் உள்ள துணைவேந்தருக்கு துணை போகும் ஆளுநரை கண்டிக்கிறோம்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக ஆளுநர் வருகையை முன்னிட்டு சேலம் விமான நிலையத்திலிருந்து பெரியார் பல்கலைக்கழகம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி சென்னையில் இருந்து சேலம் வருகை தரும் தமிழக ஆளுநர் வரும் விமானத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Source link