Tag: அரசு ஊழியர்கள்

• அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் – அமைச்சர் கே.என்.நேரு
அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வீட்டு மனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, 3197 பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் 475 மாற்று திறனாளிகளுக்கு 2 கோடியே 25 லட்சம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்களை வழங்கினார். இதே போன்று சேலம் மாநகராட்சி சார்பில் தூய்மை பணிக்கு 2 கோடியே 15 லட்சம் மதிப்பிலான டிராக்டர்களை வழங்கிய அவர், சேலம் மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கான குடியிருப்பு ஆணைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மொத்தமாக 3,720 பயனாளிகளுக்கு சுமார் 26.89 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்குவது மட்டுமல்ல அவர்களுக்கு வீடு கட்டி தர முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசு இதற்கான நிதியை ஒதுக்க வில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் செய்த பல்வேறு திட்டங்களை குறிப்பாக முதல்வரின் முகவரி, நீங்கள் நலமா, உங்கள் ஊரில் போன்ற திட்டங்கள் மக்களை நோக்கி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் செல்லும் நிலை உள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதலமைச்சர் நிறைவேற்றிய திட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்காகவே நிறைவேற்றி உள்ளார். இங்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மற்ற மாநில முதல்வர்களும் பின் பற்றும் வகையில் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், குறிப்பாக காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து ஒரிசா மாநிலத்தில் இருந்து வந்து நேரடியாக பார்வையிட்டு செல்லும் நிலை உள்ளது என்று கூறினார். இதே போன்று மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று அனைவரும் கூறிய நிலையில் அதை செயல்படுத்தி, மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றும் வகையில் சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் என்றும் இவருக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், இது போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு உறுதுணையாக இருந்த அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்திபன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Source link

• If you don’t come to work, you won’t get paid – Tamil Nadu government warns employees
If you don’t come to work, you won’t get paid – Tamil Nadu government warns employees

TN Govt Warning To Employees: அரசு ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை:
தமிழ்நாடு அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமை செயலாளர் சக்தி காந்த தாஸ் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத சங்கத்தினர், நாளை (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முன்மொழிந்துள்ளனர். தமிழக அரசின் விதிப்படி, அரசின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய எந்தவித வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களிலும் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது அல்லது ஈடுபடப்போவதாக பயமுறுத்தக்கூடாது. அது, அரசு விதிகளை மீறியதாக அமைந்துவிடும்.
எனவே, இதுபோன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்கள் கீழ் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 15ம் தேதியன்று அரசு ஊழியர்கள் யாராவது அலுவலகத்திற்கு வரவில்லை என்றாலோ அல்லது இந்த சங்கத்தினர் நிர்ணயிக்கும் வேறு தேதியில் வரவில்லை என்றாலோ அவர்கள் பணிக்கு வரவில்லை என்று கருத வேண்டும். எனவே அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். இந்த போராட்டம் நடைபெறும் 15ம் தேதி மருத்துவ விடுப்பு தவிர மற்ற விடுப்புக்கள் அளிக்கக்கூடாது. எனவே அன்றைய தினம் காலை 10.15 மணிக்குள் உங்கள் துறையில் உள்ள பணியாளர்களின் வருகை பற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது” என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் போராட்டம் அறிவிப்பு:
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 15ம் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து,  பிப்ரவரி மாதம் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
அரசின் சமரச முயற்சிகள்:
இதனிடயே, போராட்டத்தை தடுத்து நிறுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், ‛‛அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். நிதி நிலைமை சரியான உடன் படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை ஜாக்டோ ஜியோ ஏற்கவில்லை. தங்களின் கோரிக்கையை தமிழக அரசு ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா எச்சரித்துள்ளார்.

மேலும் காண

Source link