Tag: அமீர்

• Vadachennai team pays tribute to Daniel balaji vetrimaran anadrea ameer kishore

Vadachennai team pays tribute to Daniel balaji vetrimaran anadrea ameer kishore

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான வில்லன் டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. சின்னத்திரையில் சித்தி சீரியல் மூலம் அறிமுகமான டேனியல் பாலாஜி அதை தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைந்து வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பொல்லாதவன், பிகில், பைரவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் ஒரு அங்கமாக இருந்து தன்னுடையாக நடிப்பை ஒவ்வொரு படத்திலும் கொஞ்சம்கொஞ்சமாக மெருகேற்றி கொண்டார்.

வட சென்னை:
அந்த வகையில் 2018ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் ‘வட சென்னை’. இப்படத்தின் நடிகர் டேனியல் பாலாஜி தம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் தேனிக்கு நல்ல ஒரு வரவேற்பையும் பாராட்டையும் பெற்று கொடுத்தது. குறிப்பாக ‘லைப்ப தொலைச்சிட்டியேடா’ என அவர் சொல்லும் வசனம் மிகவும் பிரபலமானது.
வடசென்னை, பொல்லாதவன் படங்களில் டேனியல் பாலாஜியை வில்லனாக நடிக்க வைத்த இயக்குநர் வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் டேனியல்  பாலாஜியின் இறப்பு செய்து கேள்விப்பட்டதும் மருத்துவமனைக்கு விரைந்தனர். அப்படத்தில் டேனியேலுடன் இணைந்து நடித்த நடிகை ஆண்ட்ரியாவும் இன்ஸ்டாகிராம் மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்.
வீ மிஸ் யூ அண்ணா:
மேலும் அப்படத்தில் நடித்த நடிகர் கிஷோர் ஒரு நீளமான இன்ஸ்டாகிராம்  பதிவின் மூலம் டேனியல் பாலாஜியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “பொல்லாதவன் படத்திற்கு குழுவுக்கு அது ஒரு படம் மட்டுமல்ல. ஒரு வீட்டில் உள்ள கூட்டு குடும்பமாகவே இருந்தோம். அடிக்கடி நாங்கள் தொடர்பில் இல்லை என்றாலும் பொல்லாதவன் படத்தின் வெற்றி பற்றி செய்திகளை கடந்து செல்லும் போது முகத்தில் புயங்கையும் பெருமைகொள்வோம். எண்களில் யார் எதை செய்தாலும் அதை பெருமையாக உணர்வோம். அடிக்கடி என்னிடம் வடசென்னை 2 எப்போது என பலரும் கேட்பார்கள். வெற்றி மிகவும் பிஸியாக இருப்பதை பார்த்தால் எங்களுக்கு 70 வயது ஆகும் போது தான் அது நடக்கும் என நான் காமெடியாக சொல்வதுண்டு. வீ மிஸ் யு அண்ணா” என போஸ்ட் பகிர்ந்து இருந்தார் நடிகர் கிஷோர்.

திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் டேனியல் பாலாஜியின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வரும் வேலையில் அவருடன் இணைந்து படங்களில் நடித்த நடிகர் விஜய், நடிகர் தனுஷ் உள்ளிட்டோர்களுக்கு சக நடிகருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த தான் நேரமில்லை என்றாலும் ஒரு இரங்கல் செய்தியை  அனுப்ப கூடவா அவர்களுக்கு நேரமில்லாமல் போனது என பலரும் கண்டனங்களை முன்வைத்து வருகிறார்கள்.’வடசென்னை 2′ உருவாக்கும் எண்ணம் உள்ளது அது விரைவில் நடைபெறும் என வெற்றிமாறன் தெரிவித்து இருந்த நிலையில் தம்பி இல்லாமல் வட சென்னை 2 எப்படி சாத்தியம் என வருத்தத்துடன் இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

மேலும் காண

Source link

• Priyamani: ”கிளைமேக்ஸ் காட்சி கொடூரம்.. 4 நாட்கள் அழுதேன்..” பருத்திவீரன் படம் பிரியாமணி உருக்கம்..

Priyamani: ”கிளைமேக்ஸ் காட்சி கொடூரம்.. 4 நாட்கள் அழுதேன்..” பருத்திவீரன் படம் பிரியாமணி உருக்கம்..

பருத்திவீரன் படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அப்படம் பற்றி பிரியாமணி பகிர்ந்த தகவல்கள் சிலவற்றை காணலாம்.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் வெளியானது. இப்படத்தில் தான் கார்த்தி நடிகராக அறிமுகமானார். மேலும் பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது. கிட்டதட்ட ஒரு வருடமாக தியேட்டரில் வெற்றிகரமாக பருத்தி வீரன் ஓடியது.

இப்படம் பற்றி ஒரு நேர்காணலில் பிரியாமணி பேசியதாவது, “இந்த மாதிரி ஒரு படம் என் சினிமா கேரியரில் அமைந்தது சந்தோசமாக உள்ளது. ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் என்னை பார்ப்பவர்கள் முத்தழகு என்று அழைக்கிறார்கள். இதற்கு நான் அமீருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இது ரொம்ப ஸ்பெஷலான படமாக இருக்கிறது. அந்த படத்தில் சரிகமபதநி பாடல் தேனியில் ஷூட் செய்யப்பட்டது. கிட்டதட்ட மதியம் 12 மணி வெயிலில் பாறை மேல் உட்கார வைத்து இன்னைக்கு நாம இந்த சீன் எடுக்கப்போறோம் என சொன்னார்.

நானும் சரி என சொல்லிவிட்டேன். அந்த பாட்டில் இருக்கும் பாட்டிகள் எல்லாம் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வேலைக்கு சென்றவர்களை கூட்டி வந்து தலையை மட்டும் ஆட்டினால் போதும் என சொல்லி நடிக்க வைத்தார்.

என்னுடைய அம்மா வழியில் உள்ளவர்கள் இசை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாகராவில் பாடலை ஓடவிட்டு உனக்கு பிடிச்ச மாதிரி நீ தாளம் போடு என சொல்லி விட்டார். அமீர் தான் பாட்டியை கிண்டல் செய்வது உள்ளிட்ட சில விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். அந்த காட்சியில் என் கையில் இருக்கும் குச்சி கூட அந்த பக்கம் கிடந்தது. அதேபோல் ஒரு காட்சியில் கார்த்தி என்னை அடிப்பது போல இருக்கும். அந்த காட்சி மதுரையில் எடுக்கப்பட்டது. எடுக்கும்போது மதியம் அதே 12 மணி வெயில். சரியான வெப்பம் நிலவும் நேரத்தில் மதியம் சாப்பாடும் கிடையாது. சாப்பாடு நேரம் என பார்த்தால் நானும் கார்த்தியும் மாலை 4 மணிக்கு தான் சாப்பிட்டோம்.

அந்த இடத்தில் வேறு ஏதோ காட்சி எடுக்கும்போது அமீர் ஒரு பள்ளம் தோண்டி வச்சாரு. அதில் தண்ணியை நிரப்பி இது அப்படியே இருக்கட்டும், மூட வேண்டாம் என விட்டு விட்டார். கிட்டதட்ட ஒருவாரம் அந்த குழியில் குப்பை, பூச்சிகள் என எல்லாம் இருந்தது. என்னிடம் வந்து கார்த்தி அடிப்பான், நீ விழணும் என சொன்னார். நான் நிஜமாகவே அடி வாங்குனேன். இந்த படத்துக்கு டப்பிங் பேசும் போது அமீர் தான் சொல்லி கொடுத்தார். ஆனால் கிளைமேக்ஸ் சீன் டப்பிங் பேச என்னால் முடியவில்லை. அந்த காட்சியை பார்த்து பார்த்து 4 நாட்கள் அழுதேன். அது படத்துக்கான எடிட் கிடையாது. அது ரஃப் எடிட் காட்சிக்கே நான் அப்படி அழுதேன். கடைசியில் அம்மாவும், அமீரும் தான் வேறு வழியில்லை. பண்ணிதான் ஆக வேண்டும். நேரம் வீணாக்க வேண்டாம் என சொல்லியதால் டப்பிங் பேசி முடித்தேன்” என பிரியாமணி கூறியிருந்தார்.

Source link

• Ameer paruthiveeran movie completes 17 Years

Ameer paruthiveeran movie completes 17 Years

பருத்திவீரன்
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் (Paruthiveeran) திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன.

கடந்த 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான படம் பருத்திவீரன். கார்த்தி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பிரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் ஆகியோஎ இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். பருத்தி வீரன் படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன.
நிலம் சார்ந்த மனிதர்கள்
இன்று மலையாளப் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கின்றன. இந்தப் படங்கள் ஏதோ ஒரு வகையில் நிலத்தையும் மனிதர்களையும் தொடர்புபடுத்துகின்றன. இப்படியான படங்கள் இன்று தமிழ் சினிமாவில் வெளியாவது கொஞ்சம் குறைவுதான். பருத்திவீரன் அப்படியான ஒரு படம். நிலத்தையும்  கதாபாத்திரங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத வகையில் இப்படம் தொடர்புபடுத்தியது.

கதையாக பார்க்கையில் இரு குடும்பங்களுக்கு இடையில் நிலவும் பகை மற்றும் இந்த குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காதலிக்கிறார்கள். பருத்திவீரன் படத்தை சுவாரஸ்யமானதாக மாற்றியது கதையை விட அதை சொன்ன விதமே! ஒரு கிராமத்தில் வாழும் மக்கள். அவர்களின் அன்றாடங்களை யதார்த்தமான நிகழ்வுகளை காட்சிபடுத்தியதே படத்தின் மிகப்பெரிய பலம்.
முத்தழகு – வீரன்
பாரதிராஜா காட்டிய கிராமங்களுக்குப் பிறகு பருத்திவீரன் படம் காட்டிய கிராமத்து கதாநாயகன்  – நாயகி இன்னும் ஒரு படி மேலே இருந்தார்கள். அடிதடியைத் தவிர ஹீரோவுக்கான எந்த குணாதிசயமும் கார்த்தியிடம் இருக்காது.  அதே நேரத்தில் ஒரே நேரத்தில் அதீத அன்பு கொண்டவராகவும் அதீத தைரியம் கொண்ட ஒருவராகவும்  பிரியாமணியின் கதாபாத்திரம் அமைந்திருக்கும்.

வெளிநாட்டில் தன் சினிமா சார்ந்த படிப்பை முடித்து வந்து உதவி இயக்குநராகப் பணியாற்றி நவீன யுகத்து இளைஞராக வலம் வந்த நடிகர் கார்த்தியை, அவரது முதல் படத்தில் வீரன் கதாபாத்திரமாகவே மாற்றியதில் இயக்குநர் அமீருக்கு பெரும் பங்கு இருக்கிறது. மேலும் சித்தப்பு சரவணன், முத்தழகின் அம்மா சுஜாதா, பொன்வண்ணன், சம்பத், கஞ்சா கருப்பு என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம்.
இவர்களுடன், படத்தின் காட்சி மொழியுடன் ஒன்றி மற்றுமொரு கதாபாத்திரமாகத் திகழ்ந்து கூடுதல் பலம் சேர்த்தது யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. பின்னணி இசை, பாடல்கள் என மண் சார்ந்த தனித்துவமான இசையைக் கொடுத்த யுவனின் பருத்திவீரன் ஆல்பம் அவரது கரியரின் உச்சம்!
அமீர் Vs ஞானவேல் ராஜா
சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குநர் அமீரின் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தார். அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியவை அனைத்தும் திரிக்கப்பட்டவை என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நடிகர் மற்றும் இயக்குநர்களான சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டவர்கள் பருத்திவீரன் படத்தின்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படப்பிடிப்பின் பாதியில் கைவிட்டுவிட்டதாகவும் தங்களது நண்பர்கள் பலரிடம் இருந்து பணம் கடன் வாங்கியே அமீர் இந்தப் படத்தை வெளியிட்டதாகவும் அவருக்கு ஆதரவுக் குரல்கள் வலுத்தன. சில வாரங்கள் வரை இந்தப் பிரச்னை நீள, சென்ற நவம்பர் மாதம் இறுதியில் தன் பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞான வேல் ராஜா வருத்தம் தெரிவித்தார்.
பருத்திவீரன் படத்தினைச் சுற்றி இப்படி 17 ஆண்டு கால பிரச்னைகள் சுழன்று வந்தாலும், தமிழ் சினிமாவுக்கு பருத்திவீரன் எனும் சிறந்த படைப்பைத் தந்த அமீர் தமிழ் சினிமாவில் காலம் கடந்து என்றென்றும் கொண்டாடப்படுவார்.

மேலும் காண

Source link

• Dance Master Amir Has Answered When He Will Marry Actress Pavni | Pavni – Amir: நாங்கள் சேர பிரியங்கா தான் காரணம்.. பாவ்னியுடன் திருமணம் எப்போது?

Dance Master Amir Has Answered When He Will Marry Actress Pavni | Pavni – Amir: நாங்கள் சேர பிரியங்கா தான் காரணம்.. பாவ்னியுடன் திருமணம் எப்போது?

தானும் பாவ்னியும் ஒன்றாக இருப்பதற்கு காரணம் விஜய் டிவி பிரபலம் பிரியங்கா தேஷ்பாண்டே தான் காரணம் என நடன இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பாவ்னி. இவர் அதே சேனலில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இதனிடையே அவரது காதல் கணவர் தற்கொலை செய்து கொண்டதால் மன அழுத்தத்தில் இருந்த பாவ்னி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டார். இதே சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் நுழைந்த நடன இயக்குநர் அமீர் பாவ்னியை காதலிப்பதாக தெரிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவ்னிக்கு அமீர் முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
அந்நிகழ்ச்சிக்குப் பின் வெளியே வந்து பல்வேறு இடங்களுக்கும் இருவரும் ஒன்றாக பயணம் மேற்கொண்டனர். பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் அமீர்- பாவ்னி ஜோடி கலந்துகொண்டு வெற்றி பெற்றது. இது முடிந்ததும் அமீர் காதலை ஏற்றுக் கொள்வதாக பாவ்னி அறிவித்தார். ஆனால் இருவரும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்படியான நிலையில் சின்னத்திரை தொகுப்பாளினி பிரியங்கா தனது கலைப்பயணத்தில் 15வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இதுதொடர்பாக நடந்த நேர்காணலில் சிறப்பு அழைப்பாளராக அமீர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நான் பிரியங்காவை ஒரு ரசிகனாக தான் ரசித்துக் கொண்டிருக்கிறேன். எங்களுக்குள் அறிமுகம் இருந்தாலும் பெரிதாக பேசிக் கொண்டதில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கள் உறவு என்பது வேறு தளத்திற்கு சென்றுள்ளது. மற்றவர்கள் பிரியங்காவுடன் பேசுவதை பார்த்து கோபப்பட்டுள்ளேன். பிரியங்கா என்றால் ஒரு பிராண்ட். அவர் நிறைய பேருக்கு ரோல் மாடலாக இருக்கிறார் என தெரிவித்தார்.
அப்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற அமீர்- பாவ்னி இருவருமிடையே திருமணம் நடந்தது போன்ற போன்ற புகைப்படம் காட்டப்பட்டது. அதுகுறித்து பேசிய பிரியங்கா, ‘என்னிடம் அக்கா நீதான் அந்த தாலி எடுத்துக் கொடுக்க வேண்டும் என ரிகர்சல் அப்ப சொன்னார்கள். அப்போது எதுவும் தெரியவில்லை. ஸ்டேஜில் பெர்பார்மன்ஸ் பண்ணும்போது ஒரு மாதிரி ஃபீல் ஆகிவிட்டது. கடந்த வாரம் படம் பார்க்க சென்றிருந்தபோது கூட இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி எப்படா கல்யாணம் என கேட்டேன்’ என கூறினார்.
இதற்கு பதிலளித்த அமீர், ‘ரீலில் வந்த மாதிரியே ரியலிலும் பிரியங்கா தான் தாலி எடுத்துக் கொடுப்பார். அவர் தான் என்கூட இருக்கணும். நான் பாவ்னிக்கு ப்ரோபோஸ் பண்ணேன்.ஆனால் அவள் என்னுடன் இருக்க காரணம் பிரியங்கா தான். இவர் இல்லை என்றால் அவள் என்னுடன் இருந்திருக்க மாட்டார். எங்கள் கல்யாணம் இந்த வருடத்தில் நடந்து விடும்” என அமீர் தெரிவித்துள்ளார்.

Source link