Tag: அதிதி

  • cinema headlines today march 28th tamil cinema news today Siddharth Aditi Rao engaged goat life movie release | Cinema Headlines: வெளியானது ஆடு ஜீவிதம் படம்; சித்தார்த்-அதிதி ராவ் நிச்சயதார்த்தம்

    cinema headlines today march 28th tamil cinema news today Siddharth Aditi Rao engaged goat life movie release | Cinema Headlines: வெளியானது ஆடு ஜீவிதம் படம்; சித்தார்த்-அதிதி ராவ் நிச்சயதார்த்தம்



    Village Cooking : ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ தாத்தாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி… ரசிகர்கள் வருத்தம்…

    யூடியூப் சேனல் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. பலருக்கும் ஒரு ஏணி படியாய் இருந்து வரும் யூடியூப் மூலம் மூலை முடுக்கில் இருப்பவர்கள் கூட அவர்களுக்கு இருக்கும் தனித்திறமையை இந்த உலகம் அறியும் வகையில் வெளிக்காட்ட ஒரு சிறந்த பிளாட்ஃபார்மாக இருந்து வருகிறது. மேலும் படிக்க
     


    Siddharth – Aditi Engaged: “நடந்தது நிச்சயதார்த்தம்.. திருமணம் அல்ல” – சஸ்பென்ஸ் உடைத்த நடிகர் சித்தார்த்!

    நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் நேற்று ரகசியத் திருமணம் செய்து கொண்டனர் என்றும், தங்களின் திருமண அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் சோசியல் மீடியா எங்கும் காட்டுத்தீ போல பரவி வந்தன. மேலும் படிக்க

    Robo Shankar : மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் மட்டுமல்ல… ஊருக்கே ராஜ விருந்து வைத்து அசத்திய ரோபோ ஷங்கர்!

    மாப்பிள்ளைக்கும் மருமகளுக்கும் தடபுடலாக மதுரையில் விருந்து வைத்து அசத்தியுள்ளார் ரோபோ ஷங்கர். ஊருக்கே கிடா விருந்து வைத்து அசத்திய ரோபோ ஷங்கர் விருந்தில் மட்டன் பிரியாணி, மட்டன் ப்ரை, மட்டன் சுக்கா, மீன் ப்ரை, சிக்கன் 65, குடல், கோலா உருண்டை, சிக்கன் குழம்பு, ஈரல் வறுவல் என வகைவகையாக விருந்தளித்து அதகளம் செய்து இருந்தார் ரோபோ ஷங்கர். ஊரே ரோபோ ஷங்கர் வைத்த விருந்தை பார்த்து அசந்து போனது. மேலும் படிக்க

    Clever trailer launch: புதுசா இருக்கே! இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள ‘கிளவர்’ திரைப்படம் – ட்ரெயிலர் ரிலீஸ்

    கார்த்திகேயன் பிரதர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் திப்பம்மாள் இப்படத்தை தயாரிக்க படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் செந்தில்குமார் சுப்ரமணியன். இப்படத்திற்கு ‘கிளவர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றதில் தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் படிக்க

    AaduJeevitham Twitter Review: பிருத்விராஜ் என்ன ஒரு நடிப்பு.. படம் மாஸ்டர்பீஸ்.. ஆடுஜீவிதம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

    இயக்குநர் ப்ளெஸ்ஸி இயக்கத்தில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம் – தி கோட் லைஃப். அமலா பால் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உலகப் புகழ்பெற்ற நாவலான ஆடுஜீவிதம் நாவலை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ளது. மேலும் படிக்க
     

    மேலும் காண

    Source link

  • siddharth aditi rao hydari wedding confirmed in heeramandi series netflix event details | Siddharth Aditi Rao: சித்தார்த்

    siddharth aditi rao hydari wedding confirmed in heeramandi series netflix event details | Siddharth Aditi Rao: சித்தார்த்


    தன் திருமணம் காரணமாக ஹீராமண்டி சீரிஸ் விழாவில் அதிதி கலந்துகொள்ளாததாக நேற்று அக்குழு உறுதி செய்துள்ளது.
    தெலங்கானாவில் திருமணம்
    காதல் பறவைகளாக கடந்த சில ஆண்டுகளாக வலம் வந்த பிரபல நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ் ஹைதாரிக்கும் நேற்று தெலங்கானா மாநிலத்தில் நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்று முடிந்ததாகத் தகவல் வெளியானது.
    ‘மகா சமுத்திரம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தது முதல் சித்தார்த்தும் அதிதியும் டேட்டிங் செய்து வந்த நிலையில், இருவரும் தங்கள் காதல் பற்றி ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தொடர்ந்து தங்கள் சோஷியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்ந்து “இருக்கா, இல்லையா” என தங்கள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வந்தனர்.
    வாழ்த்திய சீரிஸ் குழு
    இந்நிலையில், தெலங்கானா மாநிலம், வனபர்தி மாவட்டம், ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் இருவருக்கும் ரகசியமாக திருமணம் நேற்று நடைபெற்று முடிந்ததாக டோலிவுட் சினிமா வட்டாரம் தொடங்கி இணையம் முழுவதும் தகவல் தீயாய் பரவத் தொடங்கியது.
    நேற்று மாலை இருவரும் திருமணப் புகைப்படங்களுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், அப்படியான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று நடைபெற்ற, அதிதி நடிப்பில் வெளியாக இருக்கும் ஹீராமண்டி சீரிஸின் விழாவில் அதிதிக்கு திருமணம் நடைபெற்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
    பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், அதிதி நடித்துள்ள ‘ஹீராமண்டி’ நெட்ஃப்ளிக்ஸ் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விரைவில் வெளியாக உள்ளது. பிரபல நடிகைகள் மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோருடன் அதிதியும் முக்கியக் கதாபாத்திரத்தில் இத்தொடரில் நடித்துள்ளார்.
    இந்நிலையில் இத்தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு விழா நேற்று நடைபெற்றது. மே 1ஆம் தேதி இத்தொடர் வெளியாக உள்ள நிலையில், அதிதி தவிர அனைத்து நட்சத்திரங்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்நிலையில் “அதிதிக்கு இன்று திருமணம் என்பதால் அவர் இந்த விழாவில் இன்று கலந்துகொள்ளவில்லை, நாம் அனைவரும் அவரை வாழ்த்துவோம்” என விழா நெறியாளர் மேடையில் அறிவிக்க, படக்குழுவினர் கைதட்டி அவரை வாழ்த்தினர்.
     

    Aditi Rao Hydari skipped the date announcement event of her Netflix show ‘Heeramandi: The Diamond Bazaar’ and the host confirmed that she couldn’t be present at the launch because of her wedding with Siddharth.#AditiRaoHydari #Siddharth #Heeramandi Watch here:… pic.twitter.com/dfaFUM9Iz0
    — editorji (@editorji) March 28, 2024

    முன்னதாக அதிதி – சித்தார்த்துக்கு திருமணம் உண்மையில் நடைபெற்றதா என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், இந்த வீடியோவால் தற்போது இவர்களது திருமணத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இருவரையும் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.
     

    மேலும் காண

    Source link