Tag: youtube channel

  • Village cooking grandpa Periyathambi is admitted in hospital due to heart disease in now safe

    Village cooking grandpa Periyathambi is admitted in hospital due to heart disease in now safe


    யூடியூப் சேனல் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. பலருக்கும் ஒரு ஏணி படியாய் இருந்து வரும் யூடியூப் மூலம் மூலை முடுக்கில் இருப்பவர்கள் கூட அவர்களுக்கு இருக்கும் தனித்திறமையை இந்த உலகம் அறியும் வகையில் வெளிக்காட்ட ஒரு சிறந்த பிளாட்ஃபார்மாக இருந்து வருகிறது.
     
    அந்த வகையில் வயக்காட்டை சமையல்காட்டாக மாற்றி லட்சக்கணக்கான சப்ஸ்கரைபர்களை பெற்று டைமண்ட் ப்ளே பட்டனை பெற்று சாதனை படைத்துள்ள யூடியூப் சேனல் ‘வில்லேஜ் குக்கிங்’. 
     
    தாத்தாவும் பேரன்களும் இணைந்து உருவாக்கிய இந்த யூடியூப் சேனல் மூலம் வீட்டுக்குள் அடைபட்டு கிடந்த சமையலை வயக்காட்டுக்கு எடுத்து வந்து புதிதாக முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டனர். இந்த வித்தியாசமான முயற்சி ஏராளமானோரின் கவனம் ஈர்த்து ரசிகர் பட்டாளத்தை எகிற வைத்தது. 
     

     
    சமையல் கலைஞரான பெரியதம்பி தலைமையில் இந்த யூ டியூப் சேனலில் காய்கறிகளை வெட்டுவதில் இருந்து அவர்கள் சமைப்பதற்காக இடத்தை தேர்ந்து எடுப்பது என அனைத்திலுமே தனித்துவம் இருக்கும். கிட்டத்தட்ட 100 பேர் சாப்பிடும் அளவுக்கு சமைத்து அதை முதியோர் இல்லம் மற்றும் ஊர்க்காரர்களுக்கு உணவளிப்பார்கள். இவர்களின் வீடியோ சமையலை பற்றி மட்டுமல்லாது கிராமத்து வாழ்க்கையையும், சுற்றுப்புறங்களையும் பதிவு செய்வது பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் கவர்ந்தது. அதுவே இந்த ‘வில்லேஜ் குக்கிங்’ யூடியூப் சேனலின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.  
     
    இந்த குக்கிங் சேனலின் மூல காரணமான தாத்தா பெரியதம்பி இருதய நோய் சம்பந்தமான பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதை அறிந்த அவரின் ரசிகர்கள் மற்றும் சப்ஸ்கரைபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது அவர் நலமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் பெருவிரல் காட்டி நன்றாக இருக்கிறேன் எனக் காட்டுவது போன்ற புகைப்படம் ஒன்றை ‘வில்லேஜ் குக்கிங்’ சேனலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அக்கறையும் ஆதரவும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர் இந்த யூடியூப் சேனல் உரிமையாளர்கள். 
     
    விரைவில் தாத்தா பெரிய தம்பி, நலம் பெற்று வீடு திரும்பி புதிய உத்வேகத்துடன் சமையல் வீடியோக்களை போட வேண்டும் என அவரின் தீவிர ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வாழ்த்தி வருகிறார்கள். 
     

    மேலும் காண

    Source link

  • Tamil Nadu Government conducts a three day training camp on YouTube Channel Creation | Digital Marketing Training: டிஜிட்டல் மார்க்கெட்டிங் தெரியணுமா? தமிழ்நாடு அரசின் 3 நாள் பயிற்சி முகாம்

    Tamil Nadu Government conducts a three day training camp on YouTube Channel Creation | Digital Marketing Training: டிஜிட்டல் மார்க்கெட்டிங் தெரியணுமா? தமிழ்நாடு அரசின் 3 நாள் பயிற்சி முகாம்


    Youtube Channel Training: தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது. 
    சென்னையில் 3 நாள் பயிற்சி:
    செல்போன் வைத்திருக்கும் பலரும் தங்களுக்கு என்று தனி யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதையே வேலையாக வைத்து சம்பாதிக்கும் சூழல் இன்று உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் தான் இதில் அதிகமான யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர்.
    இது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் கை கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறிந்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்தி வருகிறது. ஏற்கனவே பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஒரு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
    இந்த நிலையில், இந்த மாதத்தில் இரண்டாவது கட்ட பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அதேபோல, தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக அழகுக்கலை பயிற்சியும் (பியூட்டிஷியன்-மேக்கப்) நடைபெற உள்ளது. 
    எப்போது, எங்கே நடைபெறுகிறது?
    தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் மற்றும் அழகுக்கலை குறித்த பயிற்சி வரும் 21.02.2024 முதல் 23.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    முக்கியத்துவம் என்ன?
    இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி? வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு – ஆன்லைன் மார்க்கெட்டிங் – மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    விண்ணப்பிப்பது எப்படி?
    இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
    தொடர்புக்கு:
    தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
    சிட்கோ தொழிற்பேட்டை,
    பார்த்தசாரதி கோயில் தெரு,
    இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல்,
    சென்னை – 600 032
    44-22252081/22252082, 8668102600 / 86681 00181 / 7010143022  என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க
    AIADMK – BJP: தங்கமணி – வானதி சீனிவாசன் சந்திப்புக்கு காரணம் என்ன? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    மேலும் காண

    Source link

  • Three days Create your own Youtube Channel and Marketing february 10 to 12 tn goverment | Youtube Channel:யூ ட்யூப் சேனல்.. சந்தைப்படுத்துதல் : வருமானம் பார்ப்பது எப்படி? தமிழக அரசு வழங்கும் பயிற்சி

    Three days Create your own Youtube Channel and Marketing february 10 to 12 tn goverment | Youtube Channel:யூ ட்யூப் சேனல்.. சந்தைப்படுத்துதல் : வருமானம் பார்ப்பது எப்படி? தமிழக அரசு வழங்கும் பயிற்சி


    Create own Youtube Channel: தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது. 
    சென்னையில் மூன்று நாள் பயிற்சி:
    செல்போன் வைத்திருக்கு எல்லோரும் தங்களுக்கு என்று தனி யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதையே வேலையாக வைத்து சம்பாதிக்கும் சூழல் இன்று உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் தான் இதில் அதிகமான யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர்.
     இது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் கைக் கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறிந்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்தி வருகிறது. ஏற்கனவே, டிசம்பர் மாதத்தில் இருந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த மாதத்திலும் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. 
    எப்போது, எங்கே நடைபெறுகிறது?
    தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 10.02.2024 முதல் 12.02.2024 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    முக்கியத்துவம் என்ன?
    இப்பயிற்சியில் தொழில் முனைவோர் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு – ஆன்லைன் மார்க்கெட்டிங் – மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    விண்ணப்பிப்பது எப்படி?
    இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். 
    தொடர்புக்கு:
    தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
    சிட்கோ தொழிற்பேட்டை,
    பார்த்தசாரதி கோயில் தெரு,
    இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல்,
    சென்னை – 600 032
    44-22252081/22252082, 8668102600 / 86681 00181 / 7010143022  என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க
    RPF SI Recruitment 2024: ரயில்வே துறையில் 2,250 பணியிடங்கள் – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
    TNPSC Group-2 Counselling: வெளியானது குரூப் 2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதி – விவரம்!
     
     

    மேலும் காண

    Source link

  • Entrepreneurship Development And Innovation Institute Three Days Create Your Own Youtube Channel Tn Goverment | Youtube Channel Training : யூடியூப் சேனல் தொடங்க ஆசையா? 3 நாள் பயிற்சி முகாம் நடத்தும் தமிழக அரசு

    Entrepreneurship Development And Innovation Institute Three Days Create Your Own Youtube Channel Tn Goverment | Youtube Channel Training : யூடியூப் சேனல் தொடங்க ஆசையா? 3 நாள் பயிற்சி முகாம் நடத்தும் தமிழக அரசு

    Create Youtube Channel: தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது. 
    சென்னையில் மூன்று நாள் பயிற்சி:
    செல்போன் வைத்திருக்கு எல்லோரும் தங்களுக்கு என்று தனி யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதையே வேலையாக வைத்து சம்பாதிக்கும் சூழல் இன்று உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் தான் இதில் அதிகமான யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர்.
     இது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் கைக் கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறிந்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்தி வருகிறது
    ஏற்கனவே கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடத்தியது. இந்த நிலையில், இந்த மாதத்தில் இரண்டாவது கட்ட பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. 
    எப்போது, எங்கே நடைபெறுகிறது?
    தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 29.01.2024 முதல் 31.01.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    முக்கியத்துவம் என்ன?
    இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு – ஆன்லைன் மார்க்கெட்டிங் – மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    விண்ணப்பிப்பது எப்படி?
    இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். 
    தொடர்புக்கு:
    தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
    சிட்கோ தொழிற்பேட்டை,
    பார்த்தசாரதி கோயில் தெரு,
    இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல்,
    சென்னை – 600 032
    44-22252081/22252082, 8668102600 / 86681 00181 / 7010143022  என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் படிக்க
    IIT Recruitment: சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை; மாதம் ரூ.80,000 ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
    TNHRCE Recruitment: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!

    Source link