Tag: Today

  • If BJP comes back to power, the country will be a prison VCK election manifesto release Today’s headlines | Todays Headlines:பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடே சிறைச்சாலையாகும்..விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு

    If BJP comes back to power, the country will be a prison VCK election manifesto release Today’s headlines | Todays Headlines:பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடே சிறைச்சாலையாகும்..விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு


    VCK Manifesto: மக்களவை தேர்தல் 2024: வி.சி.க தேர்தல் அறிக்கை வெளியீடு.. சிறப்பம்சம் என்ன?
    மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமல்படுத்தும் திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்.சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் படிக்க
    Latest Gold Silver Rate: ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம்..
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து  ரூ. 53,360 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.10 அதிகரித்து ரூ.6,670  விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க
    நான் பெற்று வந்த திட்டங்களுக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கின்றனர் – அன்புமணி
    தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியாவை ஆதரித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.  முனைவர் சௌமியாவை பார்த்து வாக்களியுங்கள். சின்னத்தை பார்த்து வாக்களித்தீர், சாதி, கட்சி பாரத்து வாக்களித்தீர்கள். ஆனால் வேட்பாளரை பார்த்து வாக்களியுங்கள். கடந்த தேர்தலில் நீங்கள் செந்தில்குமாரை தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் அவர் எந்த திட்டத்தையும் இந்த தொகுதிக்கு கொண்டு வரவில்லை. நான் கொண்டு வந்த திட்டங்களுக்கு, அவர் ஸ்டிக்கர் ஓட்டுகிறார்”. இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.மேலும் படிக்க
    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடே சிறைச்சாலையாக மாறும் – கி.வீரமணி
    சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி ஆதரித்து நடைபெற்ற பாஜகவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உறையாற்றிய கீ. வீரமணி பேசியதாவது, கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் ஜனநாயகம் என்பது தீவிர சிகிச்சை பிரிவில் சென்றுவிட்டதாகவும், பாஜகவை எதிர்ப்பவர்களை வருமான வரித்துறை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ற திரிசூலத்தின் மூலமாக பழிவாங்கி வருவதாக குற்றம் சாட்டினார்.மேலும் படிக்க
    பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன் மனைவி – புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி
    புதுச்சேரியின் பிரபல தாதா மர்டர் மணிகண்டனின் மனைவி பதமாவதி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மர்டர் மணிகண்டன் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு நடந்த கொலை சம்பவத்தால் கைது செய்யப்பட்ட மணிகண்டன் ஏனாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க

    மேலும் காண

    Source link

  • Agricultural Budget; Crop Insurance Scheme Special Budget Announcement for Farmers- Today’s Headlines | Today’s Headlines: வேளாண் பட்ஜெட்; பயிர் காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு சிறப்பு பட்ஜெட் அறிவிப்பு

    Agricultural Budget; Crop Insurance Scheme Special Budget Announcement for Farmers- Today’s Headlines | Today’s Headlines: வேளாண் பட்ஜெட்; பயிர் காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு சிறப்பு பட்ஜெட் அறிவிப்பு


    Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் போட்டி- விசிக அறிவிப்பு
    தொல் திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டதை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட பானை சின்னத்தையே ஒதுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் விசிக, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, கட்நாடகா, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது”. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் படிக்க
    TN Agriculture Budget 2024: விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகள் – வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு
    மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணைய்வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-2025-فا ஆண்டிலும் இத்திட்டத்திற்காக 55 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியானது. மேலும் படிக்க
    TN Agriculture Budget 2024: கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு திட்டம் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
    2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்
    2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உள்ளிட்ட அறிவிப்புகள் இன்று வெளியானது. மேலும் படிக்க
    நீதிபதியாக தேர்வான கூலி தொழிலாளி மகன்; காண பெற்றோர் இல்லை..கலங்கிய கண்கள்
    மயிலாடுதுறை அருகே தாய், தந்தையருடன் பள்ளி பருவம் முதல்  கூலி தொழிலாளியாக பணிபுரிந்து கடும் வறுமையில் நீதிபதியாக இளைஞர்  சாதித்துக் காட்டியுள்ளார்.மேலும் படிக்க
    Sterlite Reopen : ’ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் கடும் முயற்சி’ சிறப்பு சட்டம் இயற்ற அரசுக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்..!
    தூத்துக்குடி என்றால் கடல், உப்பு, முத்து, துறைமுகம் என்ற அடையாளங்களும் பாரதியார், வ.உ.சி., கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களும் திருச்செந்தூர் முருகன் கோயிலும் மக்கள் மனதில் உதிக்கும். ஆனால், இப்போதெல்லாம் தூத்துக்குடி என்றாலே ஸ்டெர்லைட் ஆலையும் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும்தான் நினைவுகளில் நிழலாடுகிறது. 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட காரணமாக இருந்தது ஸ்டெர்லைட் ஆலை. அதுமட்டுமில்லாமல், எண்ணற்றோர் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். சுற்றுச் சூழல் மீட்டுருவாக்கம் செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது.  அப்படிப்பட்ட, ஆலையை கடந்த 2018ல் பூட்டி சீல் வைத்தது தமிழ்நாடு அரசு.மேலும் படிக்க
     

    மேலும் காண

    Source link

  • Deputy Chief Ministers Post For Udayanidhi MK Stalin Explanation Amil Nadu MPs Met Amit Shah Today’s Headlines | Headlines: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி -மு.க.ஸ்டாலின் விளக்கம்…அமித்ஷாவை சந்தித்த தமிழக எம்பிக்கள்

    Deputy Chief Ministers Post For Udayanidhi MK Stalin Explanation Amil Nadu MPs Met Amit Shah Today’s Headlines | Headlines: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி -மு.க.ஸ்டாலின் விளக்கம்…அமித்ஷாவை சந்தித்த தமிழக எம்பிக்கள்


    Pongal Wishes: ‘உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்’ – பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி..
    பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “ உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
    Pongal 2024: ஒரே நாளில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை; எட்டயபுரம் சந்தையில் விற்பனை அமோகம்
    பொங்கல் பண்டிகையையொட்டி இன்று அதிகாலை முதல் ஆட்டுச்சந்தை களைகட்டியது. தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக வந்த நிலையில் இன்று சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
    வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனையானது. தொடர் மழையினால் கடந்த இரண்டு வாரங்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில் இன்று பொங்கல் பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருந்ததாகவும், ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது மட்டுமின்றி வெளியில் சற்று அதிகமாக விற்பனையானதாகவும், வளர்ப்பு ஆடுகள் விற்பனை குறைவாக காணப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.மேலும்,  கறிக்காக வாங்கும் மாடுகள் விற்பனை அதிகமாக காணப்பட்டதாகவும், ஏழு கோடி ரூபாய் வரைக்கும் இந்த பொங்கல் பண்டிகைக்கு விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.மேலும் படிக்க
    தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழுவினர் மீண்டும் ஆய்வு – சேத மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் சமர்பிப்பு
    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18-ந் தேதிகளில் அதி கனமழை பெய்தது. இதனால் ஏராளமான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். சாலைகள், பாலங்கள், அரசு அலுவலக கட்டிடங்கள் என பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொது சொத்துக்களும், தனிநபர் சொத்துக்களும் சேதமடைந்து உள்ளன. இந்த மழை வெள்ள சேதம் குறித்து கடந்த மாதம் 20-ந் தேதி 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் தேங்கி நின்றதால் சேத மதிப்பை சரியான முறையில் கணக்கிட முடியவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மத்திய குழுவினர் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் தூத்துக்குடி வந்தனர். மத்திய குழு அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் படிக்க
    Tamilnadu Mps – Amit Shah: கிடைக்குமா வெள்ள நிவாரணம்? – உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த தமிழக எம்.பிக்கள்!
    தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதியை வழங்க கோரிக்கை வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்துள்ளனர்.மேலும் படிக்க

    Source link