cm mk stalin replied to edappadi palanisamy on kilambakkam bus stand issue
பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை சரிசெய்து தான் திறந்து வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூ: தென் மாவட்ட மக்களுக்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறந்து வைத்திருக்கிறீர்கள். அங்கிருந்து நகருக்குள் வருவதற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இப்பிரச்சினையில் முதலமைச்சர், போக்குவரத்து மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்…
