TN Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..
<p>தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p> <p>2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை முதல் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.</p> <p>கடந்த 13 மற்றும் 14 ஆம் தேதிகளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான…
