”வடக்கு வளர தெற்கு உதவுகிறது..” சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தெற்கு வளர்கிறது, வடக்கு வளரவும் தெற்கு உதவுகிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், “ தமிழும், தமிழ்நாடு நம்மை இயக்கி கொண்டு இருப்பதால்தான் உற்சாகமாக இயங்குகொண்டு இருக்கிறோம். இந்தியாவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை நம் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற உன்னத தலைவர்கள் போட்டு தந்த வழிதடம்தான் காரணம். திராவிட மாடல்…
