Tag: Tamil Thalaivas vs Haryana Steelers

  • Tamil Thalaivas vs Haryana Steelers LIVE Updates Pro Kabaddi League 2023-24 PKLSeason10

    Tamil Thalaivas vs Haryana Steelers LIVE Updates Pro Kabaddi League 2023-24 PKLSeason10


    ப்ரோ கபடி:
    10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இதில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தமிழ் தலைவாஸ் அணி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி உ.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான போட்டியில், 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்கியது தமிழ் தலைவாஸ் அணி.
     
    அந்த வகையில் உ.பி.யோத்தாஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் பர்தீப் நார்வாலை சுமார் எட்டு முறை தடுப்பாட்டம் மூலம் அவுட் செய்து அசத்தி இருந்தது தமிழ் தலைவாஸ் அணி. மேலும், தமிழ் தலைவாஸ் அணியின் முக்கிய ரெய்டரான நரேந்தர் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை அள்ளினார். அந்த வகையில் உ.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் 11 ரெய்டுகள் சென்ற அவர் 3 போனஸ் புள்ளிகளுடன் 14 புள்ளிகளை பெற்று அசத்தி இருந்தார்.
    அதேபோல், சாகர் 6 டேக்கில் மற்றும் ஷாஹில் சிங் 5 டேக்கில் என எடுத்து அசத்தினார்கள். அஜங்யா பவர் 4 ரெய்டுகள் சென்று 6 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம்தான் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி கணக்கை தொடங்க முடிந்தது. இதனிடையே, 11 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 8 போட்டிகளில் தோல்வி பெற்றிருந்தாலும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 19 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
    பழி தீர்க்குமா தமிழ் தலைவாஸ்?
    தமிழ் தலைவாஸ் அணியின் இந்த வெற்றியின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி கணக்கை தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி இன்று  ஜனவரி 14 ஆம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர் கொள்கிறது. 
     
    முன்னதாக, இதுவரை 11 போட்டிகள் விளையாடியுள்ள ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்திருக்கிறது. அந்த வகையில் 34 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் இருக்கிறது. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியில் டேக்கில் புள்ளிகளை பெறுவதில் ஜெய்தீப் வழுவாக இருக்கிறார். அதேபோல், ரெய்டர் வினய் மற்றும் சித்தார்த் தேசாய் ஆகியோர் அந்த அணியில் வலுவாக இருக்கின்றனர். இதனிடையே, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக தாங்கள் விளையாடிய கடைசி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கும் தமிழ் தலைவாஸ் இன்றைய போட்டியில் பழிக்குபழி தீர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    மேலும் படிக்க: Yuvraj Singh: இந்தியாவுக்கு திறமை இருக்கு; ஆனாலும் தோல்வி ஏன்? – ஆலோசகராக விரும்பும் யுவராஜ் சிங்!
     
    மேலும் படிக்க: Ind vs Afg 2nd T20I: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி… அந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுங்க! ரெய்னா வைத்த கோரிக்கை!
     

    Source link

  • Tamil Thalaivas Vs Haryana Steelers PKL 2023-24 Haryana Steelers Won 36 – 31 Points Differnt

    Tamil Thalaivas Vs Haryana Steelers PKL 2023-24 Haryana Steelers Won 36 – 31 Points Differnt

    ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று அதாவது ஜனவரி 14ஆம் தேதி தமிழ் தலைவாஸ் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இதில் தமிழ் தலைவாஸ் அணியை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 36 – 31 புள்ளிகள் என்ற வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது. 
    போட்டி தொடங்கியதும் தமிழ் தலைவாஸ் அணி ரெய்டில் ஒரு புள்ளியும் டிஃபெண்டிங்கில் ஒரு புள்ளியும் எடுத்தது. இதனால் தமிழ் தலைவாஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. அப்போது ஹரியானா அணி ஒரு புள்ளி கூட எடுக்காமல் இருந்தது. இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டபோது தமிழ் தலைவாஸ் அணியை ஹரியானா அணி அடித்து துவம்சம் செய்தது. அதன் பின்னர் ஹரியானா அணியின் புள்ளி வேட்டையை தமிழ் தலைவாஸ் அணியால் தடுக்கவே முடியவில்லை. தமிழ் தலைவாஸ் அணியின் ரெய்டர்களும் டிஃபெண்டர்களும் தொடந்து சொதப்பினர். இதனால் ஹரியானா அணிக்கு புள்ளிகள் மளமளவென உயர்ந்தது. போட்டியின் முதல் பாதி முடியும்போது ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 22 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகளும் எடுத்து இருந்தது. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியை ஹரியானா அணி ஆல் அவுட் செய்தது. 
    இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்கள் சிறப்பாக விளையாடி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வீரர்களை வெளியேற்றினர். இதனால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளி வித்தியாசம் குறைந்தது மட்டும் இல்லாமல் ஹரியானா அணியை ஆல் அவுட்டும் செய்தது. 

    Final whistle, a difficult defeat. Thalaivas showed grit, and we stand by them in success and challenges. Moving ahead, Thalaiva family.#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #ProKabaddi | #PKLSeason10 | #HSvCHE pic.twitter.com/SHp2M0dJAm
    — Tamil Thalaivas (@tamilthalaivas) January 14, 2024

    இறுதி வரை போராடிய தமிழ் தலைவாஸ் அணி டிஃபெண்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. டிஃபெண்டிங்கில் மட்டும் தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகள் எடுத்து அசத்தியது. தமிழ் தலைவாஸ் அணி ஒரு முறை ஆல் அவுட் ஆனது. அதேபோல் ஹரியானா அணியை தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறை ஆல் அவுட் செய்தது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 20 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணியின் நெகடிவ் புள்ளிகள் அதாவது எதிர்மறைப் புள்ளிகள் 30ஆக உயர்ந்துள்ளது. 
    தமிழ் தலைவாஸ் அணி தனது அடுத்த போட்டியில் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 16ஆம் தேதி பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

    Source link

  • Tamil Thalaivas Vs Haryana Steelers Pkl Season 10

    Tamil Thalaivas Vs Haryana Steelers Pkl Season 10

    ப்ரோ கபடி:
    10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இதில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தமிழ் தலைவாஸ் அணி நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் உ.பி யோத்தாஸ் அணியை 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்து வெற்றி பெற்றது.
    அசத்தும் தமிழ் தலைவாஸ்:
    அந்த வகையில் உ.பி.யோத்தாஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் பர்தீப் நார்வாலை சுமார் எட்டு முறை தடுப்பாட்டம் மூலம் அவுட் செய்து அசத்தி இருந்தது தமிழ் தலைவாஸ் அணி. மேலும், தமிழ் தலைவாஸ் அணியின் முக்கிய ரெய்டரான நரேந்தர் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை அள்ளினார். அந்த வகையில் உ.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் 11 ரெய்டுகள் சென்ற அவர் 3 போனஸ் புள்ளிகளுடன் 14 புள்ளிகளை பெற்று அசத்தி இருந்தார். அதேபோல், சாகர் 6 டேக்கில் மற்றும் ஷாஹில் சிங் 5 டேக்கில் என எடுத்து அசத்தினார்கள். அஜங்யா பவர் 4 ரெய்டுகள் சென்று 6 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம்தான் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி கணக்கை தொடங்க முடிந்தது. இதனிடையே, 11 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 8 போட்டிகளில் தோல்வி பெற்றிருந்தாலும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 19 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
    ரசிகர்களின் நம்பிக்கை:
    தமிழ் தலைவாஸ் அணியின் இந்த வெற்றியின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி கணக்கை தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி வரும் ஜனவரி 14 ஆம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர் கொள்கிறது.  முன்னதாக, இதுவரை 11 போட்டிகள் விளையாடியுள்ள ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்திருக்கிறது. அந்த வகையில் 34 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் இருக்கிறது. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியில் டேக்கில் புள்ளிகளை பெறுவதில் ஜெய்தீப் வழுவாக இருக்கிறார். அதேபோல், ரெய்டர் வினய் மற்றும் சித்தார்த் தேசாய் ஆகியோர் அந்த அணியில் வலுவாக இருக்கின்றனர். இந்நிலையில் தான் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வெற்றிமுனைப்பில் எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ் அணி.
    மேலும் படிக்க: Exclusive: “என்னோட வாழ்வின் பெஸ்ட் மொமண்ட்” மனம் திறந்த தமிழ் தலைவாஸ் வீரர் செல்வமணி!
    மேலும் படிக்க: IND vs AFG: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டி.. விராட் கோலி விலகல்! ட்ராவிட் சொன்ன காரணம்!

    Source link