தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் 3 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை :

இன்றும் நாளையும் (பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆம் தேதி) தென்தமிழகம் மற்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரொட்டில் 38.4 டிகிரி செல்சியஸும் மதுரையிலும் 37 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 32.4 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 33.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் வெயில் காலம் தொடங்காத நிலையில் தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

29.02.2024: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Tag: Tamil Nadu Rain

TN Weather Update: மண்டையை பிளக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. தவிக்கும் மக்கள்..

TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்? வெயில் எப்படி இருக்கும்? இன்றைய வானிலை நிலவரம்..

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

28 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாலுமுக்கு (திருநெல்வேலி) 1 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரொட்டில் 37 டிகிரி செல்சியஸும் மதுரையிலும் 37 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 32.1 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 32.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் வெயில் காலம் தொடங்காத நிலையில் தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

27.02.2024 மற்றும் 28.02.2024: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

TN Rain Alert: மீண்டும் மழை.. காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த இடங்களில் ?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமாநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் மிதமான முட்தல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் நாளை வரை ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், உள்தமிழகத்தில் அதிக வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கமும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

26.02.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

TN Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு – சென்னையில் எப்படி? இன்றைய நிலவரம்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

அதன்படி இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

நாளை, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

வறண்ட வானிலை:

26 ஆம் தேதி முதல் 28 தேதி வரை, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 29 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மிமிசல் (புதுக்கோட்டை) 2, எச்சன்விடுதி (தஞ்சாவூர்) 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

27.02.2024 மற்றும் 28.02.2024:

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

TN Weather Update: 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப்பகுதிகள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூரில் 38.5 டிகிரி செல்சியஸும் ஈரோட்டில் 38.2 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 32.6 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 34.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் வெயில் காலம் தொடங்காத நிலையில் தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

ஆயிக்குடி (தென்காசி) 2, கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி ) 1 செ.மீ பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Weather Update: ஒருபக்கம் சூடு கிளப்பும் சூரியன்.. மறுபக்கம் மழைக்கு வாய்ப்பு.. வானிலை சொல்லும் தகவல் என்ன?

தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாலை மறுநாள் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 23 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் 24 மற்றும் 25 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 32.5 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 33.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் வெயில் காலம் தொடங்காத நிலையில் தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

TN Weather Update: தமிழ்நாட்டில் சுட்டெரிக்கப்போகும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் வெப்பநிலை..

வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

22 ஆம் தேதி, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

23 ஆம் தேதி, வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் 24 மற்றும் 25 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 26 ஆம் தேதி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 32.4 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 33.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் வெயில் காலம் தொடங்காத நிலையில் தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

TN Weather Update: மண்டையை பிளக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..

தமிழ்நாட்டில் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதி தமிழ்நாட்டில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் பிப்ரவரி 25 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 31.8 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 32.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் வெயில் காலம் தொடங்காத நிலையில் தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

TN Weather Update: 24 ஆம் தேதி கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. மற்ற நாட்களில் எப்படி?

தமிழ்நாட்டில் அதிகாலை நேரத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் வரும் 24 ஆம் தேதி, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 31.4 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 33.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

18.02.2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

TN Weather Update: மீண்டும் மழை.. வடகடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இதோ..

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி, வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். வட உள்தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதனை தொடர்ந்து 11 ஆம் தேதியும் 12 ஆம் தேதியும், வட தமிழக மாவட்டங்களில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பிப்ரவரி 13 மற்றும் 14 ஆம் தேதி, கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களி லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather Update: 12-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. அதிகாலையில் பனிக்கு வாய்ப்பு..

தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

அதனை தொடர்ந்து, 8 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதியும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

10.02.2024 மற்றும் 11.02.2024: தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

12.02.2024: தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 31.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதேபோல், குறைந்தபட்சமாக கொடைக்காணலில் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அடுத்து வரும் நாட்களில் வறண்ட வானிலையே இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: மாறி வரும் பருவநிலை.. நாளை முதல் வறண்ட வானிலையே இருக்கும்.. இன்றைய நிலவரம் என்ன?

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் 4 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில தினங்களாக வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. ஆனால் நாளை முதல் வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை அண்ணா நகர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மாறாக பனிப்பொழிவு இல்லாமல் வறண்ட வானிலையே இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பதிவாகி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்) தலா 2, கோடநாடு (நீலகிரி) 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை.. சென்னையில் குறையும் வெயிலின் தாக்கம்..

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

அதனை தொடர்ந்து 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னையில் காலை முதல் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

வெம்பக்கோட்டை (விருதுநகர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 5, கடம்பூர் (தூத்துக்குடி, கழுகுமலை (தூத்துக்குடி), கயத்தார் (தூத்துக்குடி) தலா 4, பவானிசாகர் (ஈரோடு), ராஜபாளையம் (விருதுநகர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 3, புத்தன் அணை (கன்னியாகுமரி), கோவில்பட்டி (தூத்துக்குடி), சத்தியமங்கலம் (ஈரோடு) தலா 2, பாளையம்கோட்டை (திருநெல்வேலி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), பாலமோர் (கன்னியாகுமரி), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

TN Rain Alert: தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 3 நாட்களுக்கு மழை இருக்கு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

வரும் 3 ஆம் தேதி, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதனை தொடர்ந்து 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

தூத்துக்குடி (தூத்துக்குடி) 5, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 4, சிவகாசி (விருதுநகர்), ஆயிக்குடி (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 3, பாளையம்கோட்டை (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 2, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), வத்திராயிருப்பு (விருதுநகர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), ராஜபாளையம் (விருதுநகர்), சிற்றாறு-I (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

TN Rain Alert: 3 நாட்களுக்கு லேசான மழை இருக்கும்.. எந்தெந்த பகுதிகளில்? இன்றைய நிலவரம்..

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

அதேபோல் வரும் 2 ஆம் தேதி, தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை:

31.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Rain Weather Jan 21 2024 Update Next 3 Hours Rain In 7 Districts Including Madurai Pudukottai
தமிழ்நாட்டில் அடுத்த சில மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
pic.twitter.com/a8ekcF4stc
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 21, 2024இனி வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..?
”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 21.01.2024: தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
22.01.2024 முதல் 26.01.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 48 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 3, ஊத்து (திருநெல்வேலி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 2, வட்டானம் (ராமநாதபுரம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கோடியக்கரை (மயிலாடுதுறை), காக்காச்சி (திருநெல்வேலி), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), மண்டபம் (ராமநாதபுரம்), திருவாடானை (ராமநாதபுரம்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), மாஞ்சோலை (திருநெல்வேலி), மணமேல்குடி (புதுக்கோட்டை) தலா 1.
pic.twitter.com/qWYJrN0Dwm
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 20, 2024மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Rain Alert: தமிழ்நாட்டை விட்டு விலகும் வடகிழக்கு பருவமழை.. அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும்..

வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

பின் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

13.01.2024: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Tamil Nadu MPs To Meet Home Minister Amit Shah – Will They Get The Requested Flood Relief? | Tamilnadu Mps – Amit Shah: கிடைக்குமா வெள்ள நிவாரணம்?
Tamilnadu Mps – Amit Shah: வெள்ள நிவாரண நிதியாக கோரிய 37 ஆயிரத்து 907 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்திக்க உள்ளனர்.
கொட்டி தீர்த்த கனமழை:
கடந்த டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. வரலாறு காணாத அளவில் கொட்டிய கனமழையால் வடமாவட்டங்களில் வெள்ளத்தில் தத்தளித்தன. மாநில அரசின் தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு, பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீள தொடங்கின. இந்த பிரச்னை முழுமையாக முடிவுக்கு வரும் முன்பே, தென்மாவட்டங்களிலும் இதுவரை இல்லாத அளவில் பேய்மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் நிவாரணப் பொருட்களுடன், உதவித்தொகையாக ஆறாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையும், ஆய்வும்:
வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். வெள்ள பாதிப்புகளுக்கான இடைக்கால நிவாரணம் மற்றும் நிரந்தர மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, மாநில அரசின் குழு பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மாநில அரசு மேற்கொண்ண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் பாதிப்பு தவிர்கப்பட்டுள்ளதாகவும் பாராட்டினர். இதைதொடர்ந்து, டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்த்த்து தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிப்பதோடு, நிவாரண நிதியாக 37 ஆயிரத்து 907 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினார். ஆனால், தம்ழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உள்துறை அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள்:
மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் நேரம் கேட்டிருந்தனர். அதன்படி இன்று நடைபெற உள்ள சந்திப்பில் மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரண நிதியை வழங்கக் கோரிக்கை வைக்க உள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்த உள்ளனர்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி குழு.. என்ன மேட்டர்?
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேசுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி குழு, நாளை மறுநாள் (ஜனவரி 13) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளது.
தென் மாவட்டங்களை திருப்பிப்போட்ட மழை வெள்ளம்:
குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. 24 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்து மறுகால் பாய்ந்தது.
முன்னெச்சரிக்கையாக 5 அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வரலாறு காணாத கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழப்பட்டதால் மீட்பு பணிகள் நடப்பதிலும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.
பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் 5 முதல் 6 நாள் வரை மின்சாரம் இல்லாத நிலை இருந்தது. பலரும் தங்களது வீடுகளை இழந்து உண்ண உணவும், தங்குவதற்கான இடமும் இல்லாமல் அடிப்படை வாழ்வாதரத்தை கூட இழந்து தவித்தனர். தமிழ்நாடு அரசு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
தமிழ்நாட்டின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறை, இந்திய ராணுவம், காவல் துறை என பலரும் ஒன்றிணைந்து பணியாற்றினர். தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதுமட்டுமின்றி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மேலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருடகளையும் அரசு வழங்கியது. தமிழ்நாடு அரசு மட்டுமின்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு நிவாரணம் வழங்கியது.
இப்படிப்பட்ட சூழலில், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய மத்திய அரசு, போதுமான நிதியை ஒதுக்கவில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு சரியாகச் செயல்படவில்லை” என்றார்.
இந்த நிலையில், வெள்ள பாதிப்பு குறித்து பேசுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி குழு, நாளை மறுநாள் (ஜனவரி 13) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளது. இந்த சந்திப்பின்போது, வெள்ளபாதிப்புக்கு தேவையான நிவாரணத்தை வழங்கும்படி அனைத்துக்கட்சி குழு கோரிக்கை விடுக்க உள்ளது.
Rain Will Continue In Tamil Nadu For The Next 7 Days And Heavy Rain May Occur In Tirunelveli District Today 11 Jan 2024
கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனை தொடர்ந்து 17 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
நாலுமுக்கு (திருநெல்வேலி) 15, ஊத்து (திருநெல்வேலி) 13, காக்காச்சி (திருநெல்வேலி) 12, மாஞ்சோலை (திருநெல்வேலி) 9, ராதாபுரம் (திருநெல்வேலி) 4, கொட்டாரம் (கன்னியாகுமரி) 3, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 2, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), நம்பியாறு அணை (திருநெல்வேலி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), அடையாமடை (கன்னியாகுமரி), கடனா அணை (தென்காசி), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
11.01.2024: மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12.01.2024: குமரிக்கடல் பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
13.01.2024: தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14.01.2024: தென்மேற்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
Tamil Nadu Rain Weather Update Jan 11 2024 Next 3 Hours 4 Districts Moderate Rain Including Kanyakumari Thoothukudi Tenkasi
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
pic.twitter.com/Es6kWh3TVI
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 10, 2024இனி வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..?
கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ஜனவரி 11 (இன்று) மற்றும் 12 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனை தொடர்ந்து 16 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
11.01.2024: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12.01.2024: குமரிக்கடல் பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
TN Rain Alert: அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதனை தொடர்ந்து 16 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

அமராவதி அணை (திருப்பூர்) 12, பழனி (திண்டுக்கல்) 11, திருமூர்த்தி IB (திருப்பூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 10, திண்டுக்கல் (திண்டுக்கல்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்) தலா 9, நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி) தலா 8, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 7, பாம்பன் (ராமநாதபுரம்) 6, பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), உப்பாறு அணை (திருப்பூர்), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா 5, ஆழியார் (கோயம்புத்தூர்), கடலாடி (ராமநாதபுரம்), கின்னக்கோரை (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்) தலா 4, கொடைக்கானல் (திண்டுக்கல்), குன்னூர் PTO (நீலகிரி), கமுதி (ராமநாதபுரம்), பெரியகுளம் (தேனி), மஞ்சளாறு (தேனி), தாராபுரம் (திருப்பூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), வெள்ளக்கோயில் (திருப்பூர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), திருப்பூர் PWD (திருப்பூர்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), சோத்துப்பாறை (தேனி), நிலக்கோட்டை (சென்னை), கோடநாடு (நீலகிரி), விராலிமலை (புதுக்கோட்டை), கமுதி ARG (ராமநாதபுரம்), பரமக்குடி (ராமநாதபுரம்), குன்னூர் (நீலகிரி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), தேக்கடி (தேனி), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

10.01.2024 மற்றும் 11.01.2024: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12.01.2024: குமரிக்கடல் பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Northeast Monsoon: முடிவுக்கு வருகிறதா வடகிழக்கு பருவமழை? இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?

ஜனவரி மாதம் தொடங்கியும் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராமல் இருப்பதால் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் அதிக மழை கொடுப்பது வடகிழக்கு பருவமழைதான். இருப்பினும் தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்தால் மட்டுமே பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கும். இந்த தென்மேற்கு பருவ மழை பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை கொடுப்பது தென்மேற்கு பருவ மழைதான். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. சராசரியான மழை பதிவானது.

வடகிழக்கு பருவமழை:

அதேபோல் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் சற்று தாமதமாக தொடங்கியது. அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களுகு மிதமான மழை மட்டுமே பதிவானது. சுமார் 33% குறைவாக பதிவானது. நவம்பர் மாதம் இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியது. குறிப்பாக டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயக் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பதிவானது. சுமார் 24 மணி நேரத்தில் 40 செ.மீ கடந்து மழை பதிவானது. இதனால் இந்த மாவட்டங்கள் மழை வெள்ளக்காடாய் மாறியது.

அதேபோல், டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக வரலாறு காணாத மழை பதிவானது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவானது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முடிவுக்கு வரும். ஆனால் தற்போது மார்கழி மாதம் முடிவுக்கு வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடர்கிறது. இதனால் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பதிவாகி வருகிறது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. விழுப்புரத்திலும் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் மரக்காணத்தில் அதிகபட்சமாக 19 செ.மீ மழை பதிவானது. அதனை தொடர்ந்து செய்யூரில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஜனவரி மாத்திலும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் நிலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்கிறது.

இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், “ கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்திலும் தொடர்கிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பதிவாகி வருகிறது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழை மேற்கு நோக்கி நகரும். தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், மதுரை, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் வியாழன் முதல் மழை அளவு படிப்படியாக குறைந்து வரண்ட வானிலை நிலவும்” என தெரிவித்துள்ளார். வரும் நாட்களிலும் பரவலாக மழைபெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இது அரிதான நிகழ்வு இல்லை. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் வடகிழக்குப் பருவமழை இதுபோல தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Orange Alert For Very Heavy Rain Has Been Issued For 4 Districts In Tamil Nadu Today 9 Jan 2024
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பொங்கல் வரை அதாவது 13 முதல் 15 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மரக்காணம் (விழுப்புரம்) 19, செய்யூர் (செங்கல்பட்டு) 13, மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு) 12, திண்டிவனம் (விழுப்புரம்) 9, செஞ்சி (விழுப்புரம்) 7, வானூர் (விழுப்புரம்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
09.01.2024: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், லட்சதீவு பகுதிகளை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.01.2024: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11.01.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12.01.2024: குமரிக்கடல் பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
13.01.2024: தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
TN Rain Alert: இன்று மதியம்வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு எப்படி?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திண்டுக்கல், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 21 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை கனமழை இருந்தாலும் இன்று மதியம் வரை மழை பெய்ய வாய்ப்பு குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (செண்டிமீட்டரில்):

மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) 19, செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) 13, மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) 12, திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) 9, செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) 7, வானூர் (விழுப்புரம் மாவட்டம்), செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்), கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம் மாவட்டம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) தலா 6, ஆனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்), வல்லம் (விழுப்புரம் மாவட்டம்), செங்கல்பட்டு, உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்), நெமூர் (விழுப்புரம் மாவட்டம்), வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) தலா 5, திருப்பூண்டி (நாகப்பட்டினம் மாவட்டம்), பெரியாறு அணை (விருதுநகர் மாவட்டம்), குன்னூர் (நீலகிரி மாவட்டம்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை மாவட்டம்), முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்), கீழ அணைக்கட்டு (தஞ்சாவூர் மாவட்டம்), காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டம், மயிலாடுதுறை, சேத்பேட்டை (திருவண்ணாமலை மாவட்டம்), வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்), பணப்பாக்கம் (இராணிப்பேட்டை மாவட்டம்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்), காரைக்கால் (காரைக்கால் மாவட்டம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர் மாவட்டம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்), அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்), திருப்போரூர் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இன்று 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. அடுத்த சிலநாட்களுக்கு இப்படி தான் இருக்கும்..
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் இயக்குனர் பாலசந்திரன் சொல்வது என்ன?
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆயுவு மையம் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன், “தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுகிறது மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மற்றும் ஒரு வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. ஐந்து இடங்களில் அதிக கனமழையும் 17 இடங்களில் மிக கனமழையும் 55 இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சீர்காழி 24 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வானிலை முன்னறிவிப்பு பொறுத்தவரையில் அடுத்த வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் நாளை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கனமழைக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில் அடுத்த வரும் 24 மணி நேரத்தில் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை செங்கல்பட்டு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் தூத்துக்குடி விருதுநகர் நெல்லை தஞ்சை கள்ளக்குறிச்சி சேலம் வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். நாளை குமரி நெல்லை தூத்துக்குடி இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
நாளை, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்
ஜனவரி 10 ஆம் தேதி, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும்.
11 முதல் 13 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான – கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
08.01.2024 முதல் 10.01.2024 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11.01.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12.01.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
Tn Rainfall For 8-1-24 Tamilnadu Heavy Rains Predicted Chennai Chengalpattu Imd 8 Jan 2024
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர் மழை இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்திலும் தொடரும் காரணத்தால் இந்த மழை பதிவாகி வருகிறது.
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் சொல்வது என்ன?இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை என தனியார் வானியர் ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், “ டெல்டா மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பதிவானது. திருவாரூர், சீர்காழி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 200 மி.மீ வரை பதிவானது. இந்நிலையில் இன்று சென்னைக்கு மிக மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை. இருப்பினும் கனமழை இருக்கக்கூடும். மேகக்கூட்டங்கள் டெல்டா மற்றும் பாண்டிச்சேரி அருகே நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
விழுப்புரம் மாவட்டம் அருகே இருக்கும் மேகக்கூட்டங்கள் மெதுவாக நகர்ந்து செங்கல்பட்டு மற்றும் தென் சென்னை பகுதியை நோக்கி நகரும். இருப்பினும் சென்னைக்கு மிக மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும். அதேபோல், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பதிவாகும்” என தெரிவித்துள்ளார். அதேபோல் வரும் வியாழன் வரை இந்த மழை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: (மில்லிமீட்டர்)
நாகப்பட்டினம் 167.0, காரைக்கால் 122.0, புதுச்சேரி 96.0, கடலூர் 93.0, மீனம்பாக்கம் (சென்னை) 43.7, நுங்கம்பாக்கம் (சென்னை) 40.3, எண்ணூர் (சென்னை) 92.0, வி.ஐ.டி (செங்கல்பட்டு) 53.5, விருத்தாசலம் (கடலூர்) 50.5, சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 70.5, தரமணி (சென்னை) 47.0, கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) 46.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 10 ஆம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Rain Alert: உஷாரா இருந்துக்காங்க மக்களே! காலையிலேயே எச்சரித்த வானிலை மையம்; 29 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு]]>