Tag: Surya

  • Suriya 44: கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செ அப்டேட்

    Suriya 44: கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செ அப்டேட்


    Suriya 44:  சூர்யாவுடன் முதல் முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கைகோர்த்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 
    அடுத்தடுத்த படங்களில் கமிடாகும் சூர்யா:
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு எதற்கு துணிந்தவன் படம் வெளியானது. அதன்பிறகு சிறப்பு தோற்றத்தில் விக்ரம், ராக்கெட்ரி ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஹீரோவாக நடித்த படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்து விட்டது.  
    சூர்யா தற்போது தனது 42வது படமான கங்குவா படத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் திஷா பதானி நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 
    மேலும் இப்படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் கங்குவா படத்தில் இணைந்துள்ளனர். அண்மையில் இப்படத்தில் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 
    கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா:
    இப்படத்தை தொடர்ந்து, சுதா கொங்கரா இயத்தில் தனது 43வது படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இப்படத்தில் டேக் லைன் உடன் அறிவிப்பு வெளியானது.
    ஏற்கனவே, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தை சூர்யா தன் கைவசத்தில் வைத்துள்ளார். இப்படி பிசியாக சூர்யா இருக்கும் நிலையில், இவரின் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது, சூர்யாவின் 44வது படமாக உருவாகும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    My Next Film is with the Ever-Awesome@Suriya_offl sir 💥💥🤗So Pumped up for this #Suriya44 👊👊#LoveLaughterWar#AKarthikSubbarajPadam@2D_ENTPVTLTD @stonebenchers @rajsekarpandian @kaarthekeyens pic.twitter.com/DBLlRD9Reh
    — karthik subbaraj (@karthiksubbaraj) March 28, 2024

    சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. படத்திற்குரிய போஸ்டருடன் தனது எக்ஸ் தளத்தில் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருக்கிறார். Love Laughter war என்ற  டேக் லைனுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். 
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்  நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த நிலையில், முதன்முறையாக சூர்யாவுடன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கைகோர்த்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  

    மேலும் காண

    Source link

  • vanangaan Teaser Out Arun Vijay Starring Vanangaan Teaser Released Watch

    vanangaan Teaser Out Arun Vijay Starring Vanangaan Teaser Released Watch


    சூர்யா விலகியதைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
    வணங்கான்
    பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த படம் வணங்கான். சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட இந்தப் படத்தில் இருந்து விலகினார் சூர்யா. தற்போது நடிகர் அருண் விஜய்  நடித்து முடித்துள்ள திரைப்படம் வணங்கான். பாலாவின் தயரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ்  இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

    THE Director #Bala ‘s #Vanangaan teaser Out Now!https://t.co/3iH18hjPPJ@arunvijayno1@gvprakash@roshni.prakash@i_am_samuthirakani@directormysskin@sureshkamatchi@silva_stunt@gurudhev_rb@artdirectornagu@sathishsuriyaofficial@rithuzzzzz@a._john_pro@memsundaram… pic.twitter.com/gHjcYzmsq1
    — G.V.Prakash Kumar (@gvprakash) February 19, 2024

    முன்னதாக கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் வெளியாகிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. ஒரு கையில் பெரியார், மறு கையில் பிள்ளையார் என நாயகன் அருண் விஜய் வைத்திருக்கும் வகையிலான போஸ்டர் ஆதிக்கம் நாத்திகம் பேசும்  இரு தரப்பினரிடமும் கவனம் ஈர்த்தது. பாலா இப்படத்தில் சமூகப் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையை கையில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 

    இந்நிலையில் இன்று  வணங்கான் படத்தின் டீசர் வெளியாகி  உள்ளது. முன்னதாக  அருண் விஜய் ஒரு கையில் பிள்ளையார் மறு கையில் பெரியாரின் சிலையை சாக்கடையில் இருந்து எடுப்பது போல் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. கடவுள் என்றாலும் கடவுளை மறுத்த ஒருவர் என்றாலும் இரண்டையும் அரசியல் லாபத்திற்காக ஒவ்வொவர் தங்களது சுய லாபத்திற்காக எப்படி பயன்படுத்திக் கொளிகிறார்கள் என்பது இதன் அர்த்தமாக புரிந்துகொள்ளலாம். தற்போது வெளியாகியுள்ள டீசரின் மூலம் வெளிப்படுவதும் அதுவே. ஆன்மிகவாதிகளாக, அரசியல் தலைவர்களாக வேஷம் போட்டிருக்கும் பலர் இந்த டீசரில் காட்டப் படுகிறார்கள். கதாநாயகனான அருண் விஜய் தலைமுடியிலும் கடைசி ஷாட்டிலும் பிதாமகன் படத்தில் விக்ரமை நினைவு படுத்துகிறார்.  பாலாவின் வணங்கான் தற்போதை அரசியல் சூழலில் ஒரு தனிநபரின் வாழ்க்கை எப்படி பாதிக்கப் படுகிறது அதை எதிர்த்து அவன் என்ன செய்கிறான் என்பதை மைய கதையாக  கொண்டிருப்பதன் சாத்தியங்களை அதிகம் கொண்டிருக்கிறது. ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை வழக்கம் போல்  மிரட்டலான ஒரு உணர்ச்சியை அளிக்கிறது.

    மேலும் படிக்க ; 24 Years of Mugavaree: 24 ஆண்டுகளை கடந்த முகவரி .. நெகிழ்ச்சியாக பதிவிட்ட இயக்குநர் வி.இசட்.துரை!
    Siragadikka Aasai: கடனை திருப்பி செலுத்த 3 நாள் கெடுவைத்த சிட்டி: சிறகடிக்க ஆசையில் இன்று!

    மேலும் காண

    Source link

  • Surya bollwood entry karna movie janhvi kapoor is to act as draupati shooting to start soon

    Surya bollwood entry karna movie janhvi kapoor is to act as draupati shooting to start soon


    தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகரான நடிகர் சூர்யா சமீப காலமாக மிகவும் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தான் நடிக்கும் படங்களுக்காக மிகவும் சிரமத்தை எடுத்து கொள்ளும் சூர்யா நடிப்பில், தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’.
    பீரியட் ஜானரில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த பேண்டஸி படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
     

    புறநானூறு கேரக்டர் :
    அதன் தொடர்ச்சியாக ‘ஜெய்பீம்’ திரைப்படம் மூலம் கூட்டணி சேர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா – நடிகர் சூர்யா, மீண்டும் ‘புறநானூறு’ படம் மூலம் இணைகிறார்கள். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். நடிகர் சூர்யா இப்படத்தில் ஒரு கல்லூரி மாணவன் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதால் அதற்கு தகுந்த கெட்டப்பில் வலம் வருகிறார். 
    பாலிவுட் அறிமுகம் :
    தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் சூர்யா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் பல மாதங்களாகவே சோசியல் மீடியாவில் பரவி வந்தன. அந்த வகையில் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் மகாபாரத கதையின் பின்னணியில் உருவாகும் ‘கர்ணா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் நடிகர் சூர்யா. 
     

    சூர்யாவின் ஜோடி யார் ?
    மிகவும் பிரமாண்டமாக 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது என கூறப்படுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ரவிவர்மன் மேற்கொள்ள போகிறார் என்பது படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.  இப்படத்தில் நடிகர் சூர்யா ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார் என்ற தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வைரலானது.
    ஆனால் இப்படத்தில் நடிகை ஜான்வி கபூர், திரௌபதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும், அதற்கான ஸ்க்ரீனிங் டெஸ்ட் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டது என்றும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஜான்வி கபூர் திரௌபதியாக நடிக்க உள்ளார் என்றால் நடிகர் சூர்யாவின் ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
    பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் கர்ணா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் இணையும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மேலும் காண

    Source link

  • kanguva karna purananooru vaadivaasal surya historical movie line ups

    kanguva karna purananooru vaadivaasal surya historical movie line ups


    வரலாற்று கதைகளை மையமாக வைத்து அடுத்தடுத்து சூர்யா நடிப்பில் உருவாகும் நான்கு படங்களைப் பார்க்கலாம்
    சூர்யா
     நடிகர் சூர்யா தற்போது  பயங்கர பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நடிக்க வேண்டிய படங்கள்  வரிசையில் இருக்கின்றன. இதில் மிக முக்கியமாக நான்கு படங்கள் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப் படுகின்றன. இந்த நான்கு படங்களும் வரலாற்று ரீதியிலான கதைகளை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கின்றன, இந்த நான்கு படங்களைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
    கங்குவா

    A Destiny Stronger Than Time ⏳ The past, present and future.All echo one name! #Kanguva 🦅Here is the #KanguvaSecondLook ⚔️@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @GnanavelrajaKe @UV_Creations @KvnProductions @NehaGnanavel @saregamasouth pic.twitter.com/9iwoiZuiOq
    — Studio Green (@StudioGreen2) January 16, 2024

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் கங்குவா. பாலிவுட் நடிகை திஷா பதானி, நடிகர் பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கற்பனையான சரித்திர கதையாக உருவாகி வரும் கங்குவா படத்தை சூர்யா ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபோஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதில் சூர்யா இப்படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளது தெரியவந்தது ரசிகர்களை உற்சாகப் படுத்தியது
    புறநானூறு
    கங்குவா படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் படம் புறநானூறு. சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்காராவுடன் இரண்டாவது முறையாக இணைகிறார் சூர்யா. இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் , நஸ்ரியா நஸிம் , விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் நடிக்க இருக்கிறார்கள். 1900 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சூர்யா கல்லூரி மாணவனாக நடிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு  இசையமைக்கிறார். இது அவரது 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கர்ணா

    ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படம் கர்ணா. எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி வருகிறார். சரித்திர கதையை மையமாக வைத்து இரண்டு பாகங்களாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புறநானூறு படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து சூர்யா இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    வாடிவாசல்
    வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக இருந்த இந்தப் படம் சில வருடங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் இயக்கப் போகும் படம் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால் சுதா கொங்காராவுடனான படத்தைத் தொடர்ந்து சூர்யா இந்தப் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    மேலும் காண

    Source link

  • Kanguva Last Day : "இது முடிவு அல்ல தொடக்கம்…" கங்குவா படப்பிடிப்பை முடித்த சூர்யா நெகிழ்ச்சி!

    Kanguva Last Day : "இது முடிவு அல்ல தொடக்கம்…" கங்குவா படப்பிடிப்பை முடித்த சூர்யா நெகிழ்ச்சி!


    Kanguva Last Day : “இது முடிவு அல்ல தொடக்கம்…” கங்குவா படப்பிடிப்பை முடித்த சூர்யா நெகிழ்ச்சி!

    Source link