Tag: sundeep kishan
• dhanush d50 movie raayan movie cast and crew details
dhanush d50 movie raayan movie cast and crew details
தனுஷின் 50ஆவது படமான ராயன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் படக்குழுவில் யார் யார் இணைந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
ராயன்
தனுஷ் இயக்கி நடித்திருக்கும்  D50 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரின் முடிவடைந்தது. தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி அதில் நடித்துள்ளார் தனுஷ்.
இப்படத்தில் தனுஷூடன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.  சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளும், ஒளிப்பதிவு ஓம் பிரகாஷூம் , கலை இயக்குநராக ஜாக்கியும் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள். தனுஷ் முன்னதாக இயக்கிய பவர் பாண்டி படம் ஒரு ஃபீல் குட் படமாக இருந்த நிலையில், இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கிறது. தமிழ். தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
#D50 is #Raayan 🔥🎬 Written & Directed by @dhanushkraja 🎵 Music by @arrahman Releasing in Tamil | Telugu | Hindi@omdop @editor_prasanna @kalidas700 @sundeepkishan @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas @RIAZtheboss #D50FirstLook pic.twitter.com/vfemOIRKIX
— Sun Pictures (@sunpictures) February 19, 2024
கதை என்னவாக இருக்கலாம்?
வடசென்னையைச் சேர்ந்த மூன்று சகோதரர்களின் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ராயன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்  இதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தனுஷூடன் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்து நடித்த சந்தீப் கிஷன் மற்றும் நடிகர் காளிதாஸ் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக தனுஷ் படம் என்றால் அதற்கு அனிருத் இசையமைப்பது வழக்கம். ஆனால் தனுஷ் இயக்கும் இரண்டு படங்களுக்கு அனிருத் இசையமைக்காதது தனுஷின் முடிவாக இருக்கலாம். தனுஷ்ம்முன்னதாக நடித்த மரியான் மற்றும் இந்தியில் வெளியான ராஞ்சனா உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களில்  அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. தற்போது இப்படத்திற்கு ரஹ்மானின் இசை கூடுதல் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் வளர்ந்து வரும் நடிகர்களான காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் இப்படத்தில் நடித்துள்ளதும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க : 24 Years of Mugavaree: 24 ஆண்டுகளை கடந்த முகவரி .. நெகிழ்ச்சியாக பதிவிட்ட இயக்குநர் வி.இசட்.துரை!
Lover Deleted Scene: காதலை சொன்ன நடிகர் மணிகண்டன்.. லவ்வர் படத்தின் டெலிட்டட் காட்சி வெளியீடு!
மேலும் காண
Source link
• Sundeep Kishan : படம் சரியா வரலன்னு இயக்குநர்கிட்ட சொன்னேன்.. கேப்டன் மில்லரை விமர்சித்த கேப்டன் மில்லர் நடிகர்..
Sundeep Kishan : படம் சரியா வரலன்னு இயக்குநர்கிட்ட சொன்னேன்.. கேப்டன் மில்லரை விமர்சித்த கேப்டன் மில்லர் நடிகர்..
தான் நடித்த மைக்கேல் படம் தனக்கு திருப்திகரமானதாக இல்லை என்று நடிகர் சந்தீப் கிஷன் கூறியுள்ளார்.
சந்தீப் கிஷன்
’யாருடா மகேஷ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சந்தீப் கிஷன். பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சந்தீப்புக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் ஒரு நல்ல ஓப்பனிங்காக அமைந்தது. இதனைத் தொடர்ந்து மாயவன் , கசடதபர உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் சந்தீப் நடித்திருந்தார்.
மைக்கேல்
இப்படத்தின் தோல்வியைத் தொடர்ந்து நடிகர் சந்தீப் கிஷன் தனது எக்ஸ் பக்கத்தில் இப்படி பதிவிட்டிருந்தார். “ ஒரு நேர்மையான முயற்சி ஆனால் அது சரியாக வழங்கப்படவில்லை.  நாங்கள் இன்னும் கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.
படம் சரியாக வரவில்லை என்று எனக்கு முன்னமே தெரியும்
மைக்கேல் படம் வெளியாகி ஓராண்டு காலம் முடிவடைந்துள்ள நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் அப்படம் சரியாக வரவில்லை என்று தனக்கு முன்னதாகவே தெரியும் என்றும், தான் அதை இயக்குநரிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். சந்தீப் தற்போது தெலுங்கில் நடித்துள்ள ‘ஊரு பேரு பைரவகோனா’ படத்திற்கான ப்ரோமோஷன்களை செய்து வருகிறார். அப்போது மைக்கேல் படத்தின் தோல்வி குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இதோ “ ஆமாம் வசூல் ரீதியாக பார்த்தால் மைக்கேல் படம் சரியாக ஓடவில்லைதான் அந்தப் படத்தை மூன்று தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்தார்கள். அதில் இருவர் படம் நிச்சயம் ப்ளாக்பஸ்டர் ஆகும் என்று நம்பினார்கள். ஒருவர் மட்டும் படம் சரியாக வரவில்லை என்று ரிலீஸுக்கு 12  நாள் முன்பு என்னிடம் சொன்னார். அந்த நேரத்தில் அவ்வளவு பெரிய பிரஷரை நான் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை அதனால் நான் அது தொடர்பாக எதுவும் செய்யவில்லை. படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் நான் படம் பார்த்தேன். படம் சரியாக வரவில்லை என்று எனக்கு தெரிந்தது. தொழில்நுட்ப ரீதியாக மைக்கேல் ஒரு நல்ல படம். ஆனால் நாங்கள் கதைக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட்டோம். சரியாக சொல்லப் பட்டிருந்தால் மைக்கேல் ஒரு அற்புதமான படமாக வந்திருக்கும் . நாங்கள் நினைத்தது வரவில்லை என்பது ரிலீஸுக்கு முன்பாகவே எனக்கு தெரிந்தது இன்னும் சிரமமானதாக இருந்தது.” என்றார்
Source link
• Captain Miller Who Correctly Identified Actor Vijay As The Villain Of The Film – Thalapathy Fans Are Excited | Thalapathy Vijay: நடிகர் விஜயை சரியாக அடையாளம் காட்டிய கேப்டன் மில்லர் படத்தின் வில்லன்
Captain Miller Who Correctly Identified Actor Vijay As The Villain Of The Film – Thalapathy Fans Are Excited | Thalapathy Vijay: நடிகர் விஜயை சரியாக அடையாளம் காட்டிய கேப்டன் மில்லர் படத்தின் வில்லன்
ராக்கி , சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் படம் கேப்டன் மில்லர். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் இதுவரை பார்த்திராத தோற்றத்தில் காணப்படுகிறார். 1930களில் நடக்கும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகின்ற  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி கேப்டன் மில்லர் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தில் வெளிநாட்டு நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் மெயின் வில்லனாக நடித்துள்ள எட்வர்டு ஷெனின்பிளிக் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமா நடிகர்களின் புகைப்படங்கள் அவருக்கு காட்டப்பட்டுள்ளது. அதில் அவருக்கு நடிகர்கள் அஜித், சூர்யா மற்றும் விஜய் புகைப்படங்கள் காண்பித்து அவர்களின் பெயர்கள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் அஜித்தின் புகைப்படத்தினைப் பார்த்து கமல்ஹாசன் என கூறியுள்ளார். இதற்கடுத்து அவருக்கு சூர்யா புகைப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை. இதற்கடுத்து நடிகர் விஜய் படத்தினைக் காட்டியபோது “ இது விஜய்” என பதில் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையதளத்தினை ஆக்கிரமித்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் இந்த தகவல் தொடர்பான பதிவுகளுக்கு விஜய் ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனை ஆக்கிரமித்து ஃபையர் விட்டு வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு நடிகர்களுக்கெல்லாம் தங்களின் அபிமான நடிகர் யார் எனத் தெரிந்துள்ளது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Source link